Aug 10, 2005

வன்முறையா அஹிம்சையா - பாஞ்சாலி சபத மோசடி! 09 Aug 05

நல்ல வேளை, பாரதியார் பாஞ்சாலி சபதத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டு விட்டார். அவர் மட்டும் இன்றைய சூழலில் அதை வெளியிட்டிருந்தாரென்றால் - எப்படிப்பட்ட விமர்சனங்களை அவர் சந்தித்திருக்க வேண்டும் - நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

வன்முறையா அஹிம்சையா - பாஞ்சாலி சபத மோசடி!

பிணி (பினாத்தல்களின் சுருக்கம்)

தமிழ் எழுத்துலகின் ஒரு புனித அடையாளம் - பாரதியார்.

அவர் எழுதி இருக்கிற "பாஞ்சாலி சபதம்" வேறு யாரால் எழுதப்பட்டிருந்தாலும் கிழித்து வீசி எறியப் பட்டிருக்கும். ஆனால் எழுதியது பாரதியார் என்பதாலேயே வெண்சாமரங்கள் வீசப்பட்டிருக்கிறது. இன்னும் பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரெஞ்ச் அரசாங்கங்கள் மட்டும்தான் வாழ்த்தவில்லை. இவர் ஆதரவு அவர்களுக்கும் தேவை என்றால் அதுவும் நடந்திருக்கும்.

ரோட்டோரம் பாட்டு பாடுகிறவன் கூட தேச விடுதலையைப் பற்றி பாடல் பாடிக்கொண்டிருக்க, இவர் அந்தக் காலத்து மஹாபாரதக் கதையை 'உல்டா" செய்து வெளியிடுகிறார். எவ்வளவு பொருள் செலவு, வீண் விரயம்?

இதற்கு காந்தீயவாதிகளான சிதம்பரம் பிள்ளை போன்றோர் பெருத்த ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு இதனால் எழக் கூடிய தர்மசங்கடங்களைப் பற்றிப் பார்ப்போம். இவருடைய பாஞ்சாலி சபதத்தில், பாஞ்சாலி அம்மாள் கூறுகிறார் - துரியோதனின் ரத்தத்தை தலையில் பூசிக் குளிப்பாளாம் - எவ்வளவு வன்முறை? அஹிம்சையை போதிக்கும் காந்தி வழிவந்தோர்க்கு இந்த வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா?

பாடல் எழுதப் பட்டாகி விட்டது - அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.

போதக்குறைக்கு இந்த சபதத்தை நாத்திகர்கள் கூட வரவேற்கிறார்கள் - இது மஹாபாரதத்தின் மீது உள்ள அன்பா? பாரதியார் மீது உள்ள அன்பா?

இவர் எழுதிய கதையைப் பற்றிப் பார்ப்போம். மஹாபாரதம் என்பது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்களைப் பற்றிய கதை என்கிறார்கள் கற்றோர். அப்படி பார்த்தால், விக்கிரமாதித்தன் கதையும், விஜயபுரி வீரன் கதையும் கூட பாஞ்சாலி சபதத்துக்கு சமம்தானே?

இவருக்குப் பின்னால் கவி எழுத வந்த பாரதி தாசன் போன்றோருக்கு வரவேற்பு அதிகமாகி வரும் நிலையில் வந்திருக்கிறது இந்த பாஞ்சாலி சபதம். இது பாரதியாரின் ஈகோ வெளிப்பாடே அன்றி வேறு என்ன?

பின்னால் வெளிவந்த ராஜாஜி மற்றும் சின்மயானந்தரின் மகாபாரதத்தில் மொத்த கதபாத்திரங்களைப் பற்றியும் எழுதப் பட்டிருக்க, இவர் மட்டும் கொஞ்சம் பாத்திரங்களைப் பற்றி மட்டுமே எழுதி, முழு பாரதக் கதையையும் எழுதி விட்டதாக பீற்றிக்கொள்கிறார்.

இந்தப் பாடல்கள் எழுதியதற்கு ஃப்ரெஞ்ச் அரசாங்கமும் உறுதுணையாக இருந்திருக்கிறது, அவருக்கு புதுச்சேரியில் வாழ இடம் கொடுத்து!

ஆனால், பாரதியாரின் ஏமாற்றல்களில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை - மஹாபாரதமே ஏமாற்றுக் கதைதானே?

இந்த நிலையில், இவர் மேலும் புராணப் பாடல்களை எழுத வேண்டும் எனவும் ஆத்திகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் யார் யாரை ஏமாற்றப் போகிறாரோ?

15 பின்னூட்டங்கள்:

தகடூர் கோபி(Gopi) said...

இது இந்தக் காலத்துல சமீபத்துல நடந்த (நடந்துக்கிட்டு இருக்கிற) எதோ ஒன்றை ஞாபகப்படுத்துகிறதே ...

:-P

-L-L-D-a-s-u said...

Kalakkals ...

Aarokkiyam உள்ளவன் said...
This comment has been removed by a blog administrator.
G.Ragavan said...

நீங்க பெனாத்துலதுயே இதுதான் சூப்பர். படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.

பினாத்தல் சுரேஷ் said...

கோபி, புரியாதது போல நன்றாக நடிக்கிறீர்கள்:-)

நன்றி எல் எல் தாசு

நன்றி ராகவன்.

ஆரோக்கியம் உள்ளவன், நான் எப்போதாவது உங்கள் வம்பிற்கோ இந்த மதம் சார்ந்த பிரச்சினைகளுக்கோ வந்திருக்கிறேனா? நான் உங்கள் கருத்தை வேண்டா வெறுப்பாகத்தான் அழிக்கிறேன், கருத்து கொஞ்சமாவது ஒட்டி இருந்தால் நீக்கி இருக்க மாட்டேன். என் மின்னஞ்சலில் உங்கள் கருத்து இருக்கிறது, தேவைப்பட்டால் அனுப்புகிறேன்.

Aarokkiyam உள்ளவன் said...

//ஆனால், பாரதியாரின் ஏமாற்றல்களில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை - மஹாபாரதமே ஏமாற்றுக் கதைதானே?

இந்த நிலையில், இவர் மேலும் புராணப் பாடல்களை எழுத வேண்டும் எனவும் ஆத்திகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் யார் யாரை ஏமாற்றப் போகிறாரோ? //

சுரேஷ்,

ஆரிய மாயையை நீங்கள் சொல்லி இருக்கும் போது, ஆரிய புராணங்களின் திராவிட இந்துக்கள் மீதான வக்கிரத்தை சொன்னேன். என் பதிவை நீக்கியது உங்கள் விருப்பம். ஆனால் ஆரிய மாயையை எதிர்த்து தொடர்ந்து எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

ஆரோக்கியம் உள்ளவன்,

இந்தப் பதிவு இப்படித் தவறாகவும்புரிந்துகொள்ளப்படலாம் என நான் நினைக்கவில்லை.

நீங்கள் மேற்கோளிட்ட பகுதிகளை நான் satire / parody ஆக மட்டுமே உபயோகப் படுத்தி உள்ளேன், நான் அவற்றை நம்பவும் இல்லை, பாரதியாரையோ இளையராஜாவையோ மஹாபாரதத்தையோ குறைகாணும் நோக்கமும் எனக்கில்லை. இன்றுள்ள விமர்சனங்களை exaggerate செய்து பார்க்கும் முயற்சியே இப்பதிவு.

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

enRenRum-anbudan.BALA said...

suresh,

கலக்கல் :) ஸ்பீடு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, பத்திரமா இருங்க ;-)

பினாத்தல் சுரேஷ் said...

பாலா, நன்றி.

வேகம்தானே, பாத்துக்கலாம்!

நேரடியா நான் தப்பா எழுதறேன்னு சொன்னா மாத்திக்க கூடியவன் தான் நான். யாரும் தப்பா புரிஞ்சிக்காதவரை பிரச்சினை இருக்காது.

Anand V said...

சூப்பரா பிளாஷ் காட்றிங்க எல்லா பதிவுகளிலும்..
மேகம் அடிக்க்குது
. மின்னல் தெறிக்குது


உண்மை வெளிய சொல்றதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை ..
ஹி ஹி
===

Anand (Alias ) Chinnavan

ஏஜண்ட் NJ said...

Suresh, beware of Anand!

Anand (anti-Alias ) Chinnavan
penathal = ????!

Anand V said...

சுரேஷ்ம் நானும் ஒரே கல்லூரி. அவர் என்னை நம்ப மாட்டாரா என்ன ?

தருமி said...

உங்கள் parody மிகவும் பிடித்தது.

இளையராஜா,ஜெயகாந்தன், M.F.Hussain, ஏன் கமலைக்கூட இதில் சேர்த்துக்கொள்வேன். - இவர்களைப் போன்ற தீவிர படைப்பாளிகளிடமிருந்து வரும் படைப்புகள் மட்டுமே எனக்கு முக்கியமாகப் படுகிறது. அதற்குமேல் தனி மனிதர்களாக - who cares !

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Anand - I really enjoyed your Chinnavan & commenter names galattas. Please continue.

Jnanapitam : you should be beware of me first. Somebody in chinnavan's blog suggestrs jnanapitam = penathal suresh! you stand a high risk of being ignored:=(

thanks Dharumi!

ஏஜண்ட் NJ said...

//Jnanapitam : you should be beware of me first. Somebody in chinnavan's blog suggestrs jnanapitam = penathal suresh! you stand a high risk of being ignored:=(//

Quote
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
Unquote

 

blogger templates | Make Money Online