Sep 6, 2005

மறுபடியும்..

வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னர் எழுதுவது என்பது மிகவும் சுலபமான விஷயம், நேரமின்மை ஒன்றே குறை, நேரம் மட்டும் இருந்தால் எழுதுவது எளிது என்றே நினைத்திருந்தேன்.

எழுதத் தொடங்கியபின்னர்தான் கோர்வையாக ஒரு சிறு கட்டுரையோ கதையோ எழுதுவதில் உள்ள சிக்கல்கள், வார்த்தை தேர்ந்தெடுப்பு, நடை, உள்ளடக்கத்தை மற்றவர் எப்படிப் புரிந்து கொள்வாரோ என்ற சுயம் விலக்கிய பார்வை, ஆங்கில தமிழ் மயக்கங்கள், சந்திப் பிழை தவிர்த்தல் என எவ்வளவோ பிரச்சினைகள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இருந்த போதிலும், சிலருக்கு மட்டும் எழுதுவது என்பது பேசுவதைப் போல சுலபமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.

முன்பெல்லாம் அவ்வாறு எழுதுபவர்களை வரம் பெற்றவர்களாய் கற்பிதம் செய்திருந்தேன்.

இப்போது புரிகிறது, அவர்கள் என் நிலையை வெகு நாட்களுக்கு முன்னாலேயே கடந்து விட்டவர்கள், முறையாக ஆர்வம் செலுத்தி, பயின்று இந்தக் கலையை கைவரப் பெற்றவர்கள் என்று.

ஒரு எழுத்தாளர் உருவாவது இவ்வளவு பயிற்சி தேவைப்படும் நிகழ்வாக இருக்கும்போது, எழுதுபவரை நிறுத்த வைப்பது எவ்வளவு சுல்பமாக இருக்கிறது!

கழிவறைச் சுவற்றில் உள்ள கிறுக்கல்களுக்காகவெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வது எளிது. நேரடியான தாக்குதலை எதிர்கொள்ளும் போதுதான் அதன் வலி தெரியும். ராமச்சந்திரன் உஷாவின் முடிவையும் அதன் பின்னால் உள்ள வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

மற்றவர்களைக் கேவலப்படுத்தி அதில் குளிர் காயும் அநாமதேயரே,
உங்களுக்கு இன்னொரு வெற்றி. அதைக் கொண்டாடும் முன், ஒரு முறை சிந்தியுங்கள் -

உங்களால் இன்னொரு எழுத்தாளரை உருவாக்க முடியுமா?

4 பின்னூட்டங்கள்:

வீ. எம் said...

சரியாக சொல்லியுள்ளீர்கள் சுரேஷ்.. ஆனால், அனாமதேயங்கள் மட்டும் இதற்கு காரணமென்றால், கருத்துப்பெட்டியில் அனாமதேயங்கள் கருத்து போட முடியாமல் செய்துவிட்டால் பிரச்சனை முடிந்துவிடுமே..ஆனால்..
இங்கே ..வலைப்பூவில் உள்ள சிலருக்கே மாற்று கருத்தை நாகரீகமாக போடத்தெரியவில்லையே! என்ன செய்ய??

தாணு said...

எழுதப் பழகுவது எவ்வளவு கடினமோ அதைவிட முக்கியம் எழுத்து நாகரீகத்துடன் எழுதுவது. சரியாகச் சொன்னீர்கள் சுரேஷ்! அனாமதேயத்தால் இன்னோரு எழுத்தளரை உருவாக்க முடியுமா?உஷாவின் முற்றுப்புள்ளி என் போன்ற பெண் பதிவாளர்களுக்கு சின்ன தடைக்கல்தான். ஆனாலும் தயங்கி நின்றேனும் தாண்டுவோம் மறுபடியும்.

ilavanji said...

அர்த்தமுள்ள கேள்வி சுரேஷ்!

Ramya Nageswaran said...

நீங்கள் சொன்னது மிகச் சரி.. இப்படி எல்லாம் கன்னாபின்னாவென்று அனானிமஸாக எழுதி விட்டு ஒரு நல்லவரை போல் பொய் முகம் அணிந்து சமூகத்தில் உலாத்திக் கொண்டிருப்பார்கள்.

 

blogger templates | Make Money Online