Sep 14, 2005

ட்வெல்வ்த் மேன் Vs ட்வெல்வ்த் மேன் 14 Sep 05

இந்திய அணியில் ட்வெல்வ்த் மேனாக களமிறங்கி கடைசி வரை ஒரு மேட்சு ஆடாமலே ரிட்டயர் ஆன மாடசாமியையும், எல்லாக்கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் ஒரு பதவியையும் பெற முடியாத குல்போன்ஸா முன்னேற்றக்கழகத் தலைவர் குப்புசாமியையும் முன்வைத்து ஓர் ஒப்பு நோக்குப் பார்வை:-)

1. மாடசாமி தன் விளையாட்டை 1982ல் பந்து பொறுக்கிப் போடுவதன் மூலம் தொடங்கினார். இப்போது வரை அந்த நிலை மாறாமல், பழையதை மறக்காமல் உள்ளார். குப்புசாமி எலெக்ஷன் ஏஜண்ட்டாக 50 ரூபாய் சம்பளத்துக்கு தன் பொதுவாழ்வைத் தொடங்கினார் - காலம் இன்றுவரை அவருடைய பழைய வாழ்க்கையை மறக்கவிடவில்லை:-)

2. ஒருவர் கிரிக்கெட்டில் சச்சினுக்கு நேர்மாறு, இன்னொருவர் எம்ஜிஆருக்கு நேர்மாறு.

3. மாடசாமி பாலை மீட்டுவந்த சுந்தர பாண்டியன், குப்புசாமி ஓட்டு வாங்காத உன்னத புருஷன்.

4. மாடசாமி தண்ணீர் கொண்டு வருவதோடு தகவலும் கொண்டு வந்து புரட்சி செய்தவர். குப்புசாமி, தன்னைச் சேர்ந்தவர்கள் டெபாஸிட்டையும் இழக்க வைக்கும் கைராசி கொண்டவர்.

5. மாடசாமி விளையாட வரும்போது இளையவர், குப்புசாமியோ நுழையும்போதே தாத்தா!

6. மாடசாமியின் பெரிய பலம், அவர் யார் திட்டினாலும் முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொள்வார். குப்புசாமி யாரைத் திட்டினாலும் அவர்கள் மறுநாளே அவரை விட்டு ஓடிவிடுவார்கள்!

7. மாடசாமி தன்னுடைய ஸ்பான்ஸர் கொடுத்த சட்டைகளை அழுக்குப் படாமல் காப்பதில் வல்லவர். குப்புசாமி தன் சொற்பொழிவின் போது அனைவரையும் தூங்க வைப்பதில் வல்லவர்.

8. இருவருக்குமே தங்கள் கைமேல் நிறைய நம்பிக்கை கொண்டவர்கள் (மாடசாமி ஏவல் செய்வதற்கு, குப்புசாமி மைக் பிடிப்பதற்கு). ஆனால் தன் கையே தனக்குதவி என்பது அவர்களை பொறுத்த வரை பொய்த்துப் போனது.

9. இருவருக்குமே உணர்வு மிக உண்டு. இருவருமே எந்த உழைப்புமே செய்யாமல் தோற்றூப்போனவர்கள்.

10. எந்தத் தொடர்பும் இவர்களுக்கு உதவியதும் இல்லை, ஊறு செய்ததும் இல்லை.

11. மாடாசாமி மற்றவர்களின் பெரிய 'கிட்'களைத் தூக்கிவர திணறுவார், குப்புசாமி மக்களைப் பார்த்தாலே திணறுவார்.

12. இருவரும் சமயத்துக்கு தகுந்தவாறு நடிப்பதில் வல்லவர்கள்.

இப்போது வலையுலகில் ஃபேஷன் - ஆன மற்றவர் பதிவைக் கிண்டல் அடிப்பதை நான் மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்?

சின்னவன் - காப்பிரைட் பிரச்சினை ஒன்றும் இல்லையே?

6 பின்னூட்டங்கள்:

enRenRum-anbudan.BALA said...

என்னங்க சுரேஷ், கிட்டத்தட்ட ஒரே மாதிரி think பண்ணி தொலைச்சிருக்கோம் ;-)

என் பதிவோட (http://balaji_ammu.blogspot.com/2005/09/vs.html) மவுசு உங்களால
இப்ப குறைஞ்சு போச்சு, பாருங்க :))

என்றென்றும் அன்புடன்
பாலா

குமரேஸ் said...

கழகம் என்றால் ஊழல், ஊழல் என்றால் கழகம் இன்னொரு கழகமா?

எதற்காக முற்போக்கு?
எதற்காக திராவிடம்?

சின்னவன் said...

ஒரிஜினல் எதுங்க ?

பினாத்தல் சுரேஷ் said...

chinnavan --ஒரிஜினல்??

Just on top!

http://balaji_ammu.blogspot.com/2005/09/vs.html

சின்னவன் said...

சுரேஷ்
முதலில் எது என்று தெரியவில்லை, அப்புறம் கண்டுபிடிச்சிட்டேன்..

மத்த எல்லாத்திலும் பரிசு வாங்கினது பத்தாமா இதிலயும் கையை வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா ?

பினாத்தல் சுரேஷ் said...

பாலா -- think பண்றதா? முகவரி தவறு!

குமரேஸ் - நேற்று www.vijayakant.com தயவில் சில நிமிடங்கள் மானாட்டு உரையை கவனித்தேன் - பேர் மட்டுமல்ல - பேச்சும் கழகங்கள் மாதிரித்தான் இருக்கு!

சின்னவன் - எல் போர்டைப் பார்த்து சீனியர் பேடண்ட் ஹோல்டர்கள் பயப்படலாமா?

 

blogger templates | Make Money Online