மோகன் தாஸ் முதல்லே சொன்னாரு; ஜெயிச்சுட்டேன்னு.. அப்போ நான் ட்ரை பண்ணா ஏதோ தப்பா ஆச்சு, அதனால அவர் மேலேயே கோபிச்சுக்கிட்டேன் (அப்புறம் மன்னிப்பு கேட்டுட்டேன்னு வையுங்க!)
அப்பாலே தேசிகனும் ஜெயிச்சுட்டேன்னு சொன்னாரு, எனக்கு 12 ஆவது லெவல்லேயே இருக்கிறதாலே ஒரே தாழ்வு மனப்பான்மை ஆகிப்போச்சு.
சரி ரொம்ப கூச்சம் பாக்கக்கூடாதுன்னு கொஞ்சம் திருட்டு வழியிலே இறங்கினேன் (படுபாவிங்க - ஸ்பாயிலர் கூட ஒழுங்கா புரியற மாதிரி போட மாட்டென்றாங்க) கொஞ்சம் திருட்டு வேலை, கொஞ்சம் சொந்த மூளைன்னு ஒரு வழியா முடிச்சுட்டேன். (என் மூளைய மட்டும் வச்சு நிச்சயமா முடிக்க முடிஞ்சிருக்காது)
என்ன மேட்டர்னு தெரியாம கேக்கரவங்களுக்கு: இது iimi - iris க்ளுலெஸ்னு ஒரு கேம், மூளைக்கு வேலை (ரொம்பவே) - 30 லெவல் முடிச்சாக்க, இதோ கீழே தெரியுதே அப்படி ஒரு கோட்வார்டும், ஈ-மெயில் முகவரியும் கொடுப்பாங்க. மூணு நாள் ஆச்சு எனக்கு!
கூகுளாண்டவருக்கு கூழ் ஊத்தறதா வேண்டுதலை!
Dec 21, 2005
klueless!!
Subscribe to:
Post Comments (Atom)
7 பின்னூட்டங்கள்:
அப்புடி வாங்க வழிக்கு. :-))))
அட பெனாத்தலாரே.. என்ன எல்லாரும் இப்டி முடிச்சு போட்டு தாக்குறீங்க?
நான் இன்னும் 22-லேயே ஒன்றரை நாளா உக்காந்திருக்கேன்.. :((
ஸ்பாய்லர் சைட்டையும் பாத்தேன். அதுலேயும் 22-க்கு விடை சரியா சொல்லித்தொலைக்க மாட்டெங்கறாங்க. :(
சுரேஷ்,
நான் நேத்துதான் ஆரம்பிச்சேன். நண்பர்களின் துணையோடும் கூகுளின் துணையோடும் ஒருவழியா .....
சரி... 82 லெவல் இருக்குதாம், நண்பர்கள் கிட்ட சொன்னவுடனே ஒடுறாங்க . அலுவலக நண்பர்களும் ஒடுறாங்க...
உங்களுக்கு ஏதேனும் ஐடியா இருக்குதா...
அண்ணன் காட்டிய வழி மோகன் தாஸ்!
ராமனாதன், a=z cipher உபயோகபடுத்திப்பாருங்க (source-இலே க்ளூ இருக்கு)
விக்னேஷ், 30 லெவலுக்கே டப்பா டான்ஸ் ஆடிடுச்சி - 82 ஆ, இதோ நானும் ஓடறேன்.
82-லாம் இல்லீங்க.. 30 தானே இருந்தது..
-
செந்தில்/Senthil
ஆஹா, வாழ்த்துக்கள்.
நன்றி யாத்திரீகன், மணியன்!
மணியன் - 82 லெவல் விக்னேஷ் குடுத்த சுட்டியிலே இருக்கு பாருங்க!
Post a Comment