Dec 14, 2006

ஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006? (குறும்பு - தேன்கூடு)(Repair version 2:-))

வலைப்பதிவர் ஆவதற்கு பெரிய கணினி அறிவு தேவையில்லை என்பதற்கு என் போன்றவர்களே உதாரணம். வலைப்பதிவை நடத்தவும் பெரிய விஷயஞானமோ ஆழ்ந்த சிந்தனையோ தேவையில்லை என்பதும் நான் அடிக்கடி நிரூபித்து வந்திருக்கும் விஷயமே.

ஆனால், எந்தத் துறைக்குச் சென்றாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு, அத்துறைக்கே உரித்தான கலைச்சொற்கள் (Jargon) தெரியாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. தமிழ் வலைப்பதிவர் சூழலில் பிரசித்தமான சில வார்த்தைகளை பொதுவில் பேசினால் நம் மனநலன் கேள்விக்குள்ளாவது திண்ணம்!

இதற்குத்தான் கௌன் பனேகா கரோர்பதி ஸ்டைலில் ஒரு பிளாஷ் வடிவமைத்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவராக உள்ளவரும், படிப்பவரும் மட்டுமே விடையளிக்கக்கூடிய 15 கேள்விகள்..இக்கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தவர்தான் வலைப்பதிவர் 2006!

விளையாடுங்கள்.

பி கு 1: சில பதிவர் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் - தவறான உள்நோக்கத்தோடோ அவதூறு நோக்கத்தோடோ இல்லை என்பது சொல்லாமலே தெரியும். இருந்தாலும் யார் மனமாவது புண்பட்டால், பெயர்களை மாற்றிவிடத் தயாராக இருக்கிறேன் - எனக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்கள்.

பி கு 2: KBC இன் பார்மட்டை முழுதுமாகக் கொள்ளவில்லை - எனவே காபிரைட் பிரச்சினை வரக்கூடாது.

பி கு 3: தேன்கூடு போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கதை கட்டுரை தவிர்த்த வேறு வடிவமும் கொடுக்கலாம் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள் - இதுவரை யாரும் (நானும்) வேறு வடிவங்களில் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பது உறுத்தவே இதைத் தயாரித்தேன். இதை வெற்றிப்பெறச்செய்வது வேறு வடிவங்களிலும் முயற்சி செய்வதை ஊக்குவிக்கும்:-))

பி கு 4: கிடைத்த பரிசை பின்னூட்டமாகப் போட்டுச்செல்லுங்கள், ஆவன செய்வோம்.

பி கு 5: உபயோகப்படுத்தியுள்ள எழுத்துருக்கள்: TSCu_paranar, TSCVerdana.

பி கு 6: பிளாஷ் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால நிவாரணம்:
கோபிக்கு நன்றி நன்றி நன்றியுடன்..

மக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..பிளாஷ் வந்து "தொடர இங்கே அழுத்தவும்" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன். அவ்வளோதான்.



55 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

மக்களே, எனக்கே தெரியலை ப்ளாஷ்..

உங்களுக்குத் தெரியுதா?

மிட் டெர்ம், யூரின், ப்ளட், கிரிக்கெட் - எல்லா டெஸ்ட்டும் இந்த மெஸ்ஸேஜிலே இருக்கு;-))

லக்கிலுக் said...

வேலைக்கு ஆவலையே அண்ணாத்தே :-(

பினாத்தல் சுரேஷ் said...

மன்னிச்சுக்கோ வாத்தியார்!

சனிக்கிழமைதான் ரிப்பேர் பண்ண முடியும்:-((

மீள்பதிவுதான்! என்ன பண்ண?

பொன்ஸ்~~Poorna said...

error வருது :(
படம் மட்டும் தான் தெரியுது..

சுரேஷ், இந்த மாதிரி ஒரு ஐட்டம் தான் குறும்புக்கு நானும் யோசித்து வைத்திருந்தேன்.. flashஐப் பணம் கொடுத்து வாங்க வேண்டுமே என்று கஞ்சத்தனத்துடன்... ;)

Anonymous said...

தலீவா, அந்த மொத பின்னூட்டம் தான் குறும்பா?

I.H

ஆவி அண்ணாச்சி said...

ஐயா! நான் ஜெயிச்சுட்டேன்!
15/15!

Anonymous said...

ஆஹா! இந்தக் குறும்பு நல்லாப் புரிஞ்சுதுங்கோ!

Anonymous said...

இப்படி சொதப்பிகிட்டே இருக்கீறே உம்மை என்னதான் செய்யுறது?

வீடு கட்டி அடிப்பவன்.
(கொத்தனார் அல்ல)

Anonymous said...

ஹைய்யா! இந்த வெளாட்டு நல்லா இருந்ததே!

நாங்க வாங்குனது 18/15!

தகடூர் கோபி(Gopi) said...

பினாத்தலாரே,

எனக்கு ஃப்ளாஷ் தெரியுது. "தொடங்க இங்கே அழுத்துங்கள்" வேலை செய்யலை. வலது சொடுக்கி "Play" செய்தால் தொடர முடிகிறது.

:-)

சரி எவ்வளவு எடுத்தேன்னு கேக்கறீங்களா... "ஐயா/அம்மா நீர் தலைவர்" :-P

இப்பெல்லாம் நான் எழுத்தறது கொறைஞ்சி போச்சா (ஆமா அப்படியே எழுதிட்டாலும்...) அதனால மொதல் கேள்வியிலேயே வெளிய போனா வர்ற அளவு கூட என் வலைப்பதிவுக்கு வருகையாளர் கிடையாதுங்க. சரி அதனால என்ன இன்னைக்கு இங்கே என்ன நடக்குதுங்கற அறிவாவது இருக்கே.

Anonymous said...

நாங்கதான் அதிகம்!

23/15!

ஆவி அண்ணாச்சி said...

ஹெல்ப் லைன் யூஸ் பண்ணி அதிக பதில்களுக்கு விடை சொல்றீங்க! இது செல்லாது!

கழுத்தைக் கடிச்சிடுவேன்!

Anonymous said...

இந்த கோன் பனேகா செல்லாது!

Anonymous said...

நான் இங்கயே தொங்கிக்கிறேன்! நீங்க எல்லாரும் போயிட்டு சனிக்கிழமை வாங்க! இன்னொரு ரவுண்டு விளையாடலாம்!

ஆவி அண்ணாச்சி said...

ஏ! வேதாளம்! நாங்க போனப்புறம் நீ மட்டும் பெனாத்தல் 65 போட்டு சாப்பிடலாம்னு பார்க்குறியா? விடமாட்டோம்!

முத்துகுமரன் said...

நல்லவேளை

பின்னூட்டத்தை படிச்சதால் ஒரு போன் கால் செலவு மிச்சம் :-)

G.Ragavan said...

ஒன்னும் வரலையேய்யா!

லக்கிலுக் said...

:-(

சரி... சனிக்கிழமை வெச்சுக்கலாம் கச்சேரிய....

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா, யார் யாரெல்லாம் வந்திருக்காங்கடா!

நன்றி ராகவன், முத்துகுமரன், லக்கிலுக், ஆவிகள், கோபி பொன்ஸ்

ப்ளாஷ்லே லோடிங்லே கோளாறு, பட்டன்லெயும் ஒரு கோளாறு.

சரி செய்யறதுக்கு மெயின் பைல்லே கை வைக்கணும். அது ஆபீஸ்லே மாட்டிகிட்டிருக்கு. இப்ப வீக்கெண்ட். அதாலேதான் சனிக்கிழமை வரை வாய்தா.

இது இல்ல ஆவிங்களா குறும்பு. இது வேற.. என்ன பண்ணாலும் ஏமாத்தறதயே எதிர்பார்க்கிறாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

கோபி! நன்றி நன்றி நன்றி...

இப்போ தெரிஞ்சிடுச்சி என்ன பிரச்சினைன்னு. பட்டன் ஒண்ணை காபி பேஸ்ட் பண்ணேன், ஈவண்ட் அஸ்ஸைன் பண்ணலை.. நீங்க ஒரு பெரிய டிரபுள்ஷூட்டரா இருக்கீங்களே.. முன்னே ஒருமுறையும் இப்படித்தான் கரெக்டா பிடிச்சிச் சொன்னீங்க! வாத்தியாரா இருக்கீங்களோ?

மக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..

பிளாஷ் வந்து "தொடர இங்கே அழுத்தவும்" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.

பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன்.

நாமக்கல் சிபி said...

கேள்வியும், விடைகளும் சரியாகத் தெரியும் வண்ணம் வண்ணங்களை மாற்றலாமே!

பேக்ரவுண்ட் கலர்ல ஒண்ணுமே தெரியலை! அப்புறம் எப்படி கேள்வியைப் படிச்சி விடை சொல்றதாம்?

தகடூர் கோபி(Gopi) said...

//வாத்தியாரா இருக்கீங்களோ?//

(ரஜினி ஸ்டைலில் படிக்க): ஹூ...ஹா...ஹா... கண்ணா! நான் முதல்லே வாத்தியார். இப்ப மேஸ்திரி (ஆள் மேய்க்கறவங்கல்லாம் மேஸ்திரி தானுங்களே..) ஆனா எப்பவுமே வாத்தியார் வீட்டுப் பிள்ளை. புரிஞ்சதா... புரியறது புரியாம இருக்காது.. புரியாதது எப்பவுமே புரியாது... வர்ட்டா...

நாமக்கல் சிபி said...

கோபி! நீங்கள் துபாயிலா இருக்கிறீர்கள்?

நாமக்கல் சிபி said...

இப்பதிவை ஆன்மீகம்/இலக்கியம் என்று வகைப்படுத்திய குறும்பு என்னைச் சாரும்!

:-)

Anonymous said...

சுரேஷ்,

ஒரு வழியா இரண்டு மூணு லைப் லைன் யூஸ் பண்ணி கடைசி வரைக்கும் எட்டி பார்த்துட்டேன்.

Gud Work :)

Boston Bala said...

---கேள்வியும், விடைகளும் சரியாகத் தெரியும் வண்ணம் வண்ணங்களை மாற்றலாமே!---

I have the same problem

ramachandranusha(உஷா) said...

என்ன கொடுமை சுரெஷ் இது! தெரியுது ஆனா தெரியலை. ஆரஞ்சு பாக்ரவுண்டுல எறும்பு ஊர்ரா மாதிரி வெள்ளைகலரூ எழுத்து. கண்ணு
வலிக்குது.

சிறில் அலெக்ஸ் said...

குறும்பு தாங்கல சாமியோவ்.

எப்டீங்க இந்த கலக்கு கலக்குறீங்க.
எப்படியும் இந்த முறையும் பரிசு வாங்கிடுவீங்க. மூன்றுமுறை பரிசுபெற்ற போட்டியாளராக வாழ்த்துக்கள்.

:)

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, நீங்க சொன்ன இடத்துல கிளிக்கினா ஒண்ணும் ஆவலை. ஆனா கோபி சொன்னா மாதிரி ரைட் கிளிக் பண்ணி ப்ளே போட்டா தெரியுது. ஆனா அந்த வெள்ளை எழுத்து ஒண்ணு போட்டு இருக்கீங்களே அதுதான் சொதப்பல்ஸ்.

ஆமா உங்களுக்கு 40 வயசாயிடுச்சு. அதனால வெள்ளெழுத்து வந்தாச்சு. அதைச் சொல்லத்தானே இந்த பதிவு?!!!

ரொம்ப குறும்புங்க!!!

பினாத்தல் சுரேஷ் said...

நாமக்க்கல்லார், பாபா, உஷா, கொத்தனார்..

வண்ணங்கள் என் எண்ணங்களை, KBC ஐ காபியடிக்கும் என் எண்ணத்தைக் காட்டுகிறது.

ஆரஞ்ச் பேக்கிரவுண்ட் வரக்கூடாதே.. பிளாக் பேக்கிரவுண்ட்டில் வெள்ளை எழுத்துதானே டிசைன்.. ஒழுங்காக லோட் ஆகவில்லை போலும்?

சனிக்கிழமை எப்படியும் ரிப்பீட்ட் உண்டுதானே? அதுக்குள்ளே சரிசெஞ்சுடுவோம்.

கோபி.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவது வாத்தியார்களின் பரம்பரை வழக்கமல்லவா? (பிகு - நானும் வாத்தியார்)

இலவசக்கொத்தனார் said...

அடுத்தது ஒரு ப்ரோகிராம் எழுதி எனக்கு 2,00,00,000 ஹிட்ஸ் வரதுக்கு வழி பண்ணுங்க ஐயா! கடைசி கேள்விக்கு மட்டும்தான் தடுமாறிட்டேன். ஆனா கடைசியில் அதையும் அடிச்சிட்டோமில்ல!! 24 மணி நேரமும் தமிழ்மணத்துலயே இருந்து இது கூட தெரியலைன்னா எப்படி?

இலவசக்கொத்தனார் said...

//இப்படி சொதப்பிகிட்டே இருக்கீறே உம்மை என்னதான் செய்யுறது?

வீடு கட்டி அடிப்பவன்.
(கொத்தனார் அல்ல)//

நல்ல வேளை கொத்தனார் இல்லைன்னு சொன்னப்பூ ஏற்கனவே இந்த ஆள் என்னைப் பாக்கற விதம் சரி இல்லை.....

பினாத்தல் சுரேஷ் said...

சிபி - ஆன்மீகம் சரியில்லாம இருக்கலாம் - இது இலக்கியம்னு சொல்றது சரிதானே.. எப்படி குறும்பாகும்?

விக்கி, 2 கோடி வச்சுகிட்டு என்ன பண்ணப்போறீங்க;-))

நன்றி சிறில்.

இலவசம் - 40 வயசு ஆக இன்னும் ஏறத்தாழ 38 வருஷம் இருக்கே.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம், டவுட்டு தீரலைன்றத மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.

2000000 கோடி வேணும்னா பாலபாரதி ஒரு கவுண்ட்டர் போட்டாரே அதைப் போட்டுக் கொள்ளுங்கள்;-)).

கதிர் said...

போராடி சரி விட்டுறலாம்னு பாத்தேன். பின்னூட்டத்தை படிக்கும்போதுதான் சூட்சுமமே புரிஞ்சது.
இந்த ப்ளாஷ் என்ன சொல்ல வருதுன்னா?
வலைப்பதிவுகள தொடர்ந்து படிக்கலன்னா இந்த ப்ளாஷ்ல கெலிக்க முடியாது (நான் சொல்றது ரெண்டு மூணு முயற்சிகளில்)

குறும்புல சேர்த்தாச்சில்ல..

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி..

நன்றி. பரிசே அதானே.. ஆக வேண்டுமா வலைப்பதிவர்தானே.

Anonymous said...

Great! I got the "VAAZTHTHUKAL"
No confusion of Dollars/Rupees as expected.

I.H

பொன்ஸ்~~Poorna said...

20000000 - கடைசி கேள்வி மட்டும் சரியாத் தெரியலை.. சனிக்கிழமை மீண்டும் வரேன்...

தருமி said...

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவது வாத்தியார்களின் பரம்பரை வழக்கமல்லவா..//

எழுத்தே கண்டுபிடிக்க முடியாதபடி எழுதற பசங்களுக்கு நான் 'முட்டை'தான் போடுறது. இங்க வசதி எப்படி? ஒண்ணுமே படிக்க முடியலையே.. கொஞ்சம் 'வயசு கேசுகளுக்கும்' தெரியுறது மாதிரி மாத்துங்க..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி I H, பொன்ஸ், தருமி.

பொன்ஸ், வாங்க, மீண்டும். அப்போ ஒரு முன்னூட்டக்கயமை பண்ணிட்டா போகுது;-)

தருமி - வயது (மட்டும்) சார்ந்து எந்தச் சலுகையும் அளிக்கக்கூடாது என்பது என் கொள்கை;-) இருந்தாலும் பலரும் இதையே சொல்லியிருப்பதால், பேக்கிரவுண்ட் மற்றும் எழுத்தை மாற்றி விடுகிறேன். சனிக்கிழமை ரிலீஸ்.

Anonymous said...

//ஏற்கனவே இந்த ஆள் என்னைப் பாக்கற விதம் சரி இல்லை.....
//

கொத்தனார் உமது முந்தைய போட்டிப் பதிவில் முதல் பின்னூட்டம் இட்டதைத்தானே சொல்கிறீர்?

:))

கொத்தனாரே! பார்த்துக்குங்க!

அறிஞர். அ said...

பகடையா வந்தால் நன்றாய் இருக்கும், கயமைத்தனம் பண்ண முடியாதுல்ல. அத்துடன் ip சோதித்து அடுத்த முறை விளையாட அலோ பண்ண கூடாது.

குட் முயற்சி....கீப் இட் அப்.....

பினாத்தல் சுரேஷ் said...

கலகம் புரிபவன்,

இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?

நன்றி மாஹிர்.

பகடை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? Random Order -ஐயா?
அதற்கு குறைந்தது 30 கேள்விகள் செட் செய்யவேண்டும். 15க்கே தாவு தீந்துடுது..

இலவசக்கொத்தனார் said...

//அத்துடன் ip சோதித்து அடுத்த முறை விளையாட அலோ பண்ண கூடாது.//

அதெல்லாம் சோதிக்காமலேயே ஒரு 10 பின்னூட்டம் வரலை அப்படின்னு அழறாரு. இந்த தடவைதான் எதோ 50 அடிக்கிறாரு.

நீங்க வேற இந்த மாதிர் எல்லாம் தடாலடியா எதாவது சொல்லி பெனாத்தலாரை அழ விடாதீங்க. ஆமாம்.

Anonymous said...

//இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?
//

இல்லையே! :(

நீங்களே ஏதேனும் ஒரு இடம் பார்த்துக் கொடுங்களேன்.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம், ஏற்கனவெ கனத்த மனதுடன் ஆப்பு அனுப்பித்திருந்த விளம்பரப்பின்னூட்டத்தை நிராகரிக்கவேண்டியதை எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறேன்!குத்தியா காட்டுறீர்? சரி, குறைந்த பட்சம் அம்பதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க:-)

Mr.கலகம், வேறு இடமெல்லாம் பார்க்க வேண்டாம்.. என்சாய்!

Anonymous said...

//ஏற்கனவெ கனத்த மனதுடன் ஆப்பு அனுப்பித்திருந்த//

உங்களுக்குப் பின்னூட்டம் அனுப்ப அவரோட மனசு ஏன் கனக்கணும்?

பினாத்தல் சுரேஷ் said...

Mr.கலகம்.. புரியாதவனுக்கு விளக்கலாம் - உங்களுக்கு??

இன்னொரு முன்னூட்டக் கயமை - பேக் கிரவுண்டு கலரை மாத்தியிருக்கேன், லெட்டரிங் & கலர் சரியா வருதான்னு சொல்லுங்க. பட்டனை நாளைக்கு சரியா செய்துடறேன்.

இலவசக்கொத்தனார் said...

இப்போ தெரியுது. ஆனா அந்த ஆப்ஷன்ஸோட சைஸ் சின்னதா இருக்கு. முடிஞ்சா கொஞ்சம் பெரிசு பண்ணுங்க.

இலவசக்கொத்தனார் said...

இதுதானே 50?!!!

வாக்கு குடுத்தா காப்பாத்துவான் இந்த இ.கொ.

ஹா ஹா ஹா

பினாத்தல் சுரேஷ் said...

ஆப்ஷன்ஸோட பாண்ட் சைஸையா சொல்றீங்க கொத்ஸ்.. அது கஷ்டமாச்சே!

வாக்கு கொடுத்து, காப்பாத்தறதுக்குள்ளே 3 முறை மு க பண்ணவேண்டியதா ஆயிடுச்சி (முன்னூட்டக் கயமை! வேற அர்த்தம் எல்லாம் எடுத்துக்காதீங்க).. (இன்னும் ஒருமுறை நிச்சயமா பண்ணுவேன்).

எனிஹவ், நன்றி கொத்தனார். 100லேயும் சந்திக்கலாம்

பினாத்தல் சுரேஷ் said...

வோட்டளிப்பவரின் கவனத்தைக் கவர் ஒரு பின்னூட்டக்கயமை!

Anonymous said...

கொலசாமி பெருந்தெய்வங்களையும் மதிப்பளித்தமைக்கு நன்றி!
;-)

ரவி said...

அன்பு சுரேஷ்..

நான் இப்போது எடுத்திருக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவு வேண்டும்...அட்லீஸ்ட் ஒரு கயமை பின்னூட்டம்.....நீங்கள் எல்லாம் உதவி செய்யலைன்னா எப்படி சாதிக்க முடியும் சொல்லுங்க...

அன்புடன்,
ரவி

பினாத்தல் சுரேஷ் said...

பாலபாரதி.. முதல் முறை பின்னூட்டமா? நன்றி. கொலசாமிங்களை விலக்கி தமிழ் பதிவுகளைப்பற்றி யோசிக்கவும் முடியுமா;-))

செந்தழல் ரவி, உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். பின்னூட்டக்கயமையிலே என்ன குறைஞ்சிடப்போறேன்!

 

blogger templates | Make Money Online