Dec 6, 2006

மறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)

ஒன்று

காலை எட்டரை:

"என்ன சார், வண்டி ஸ்டார்ட் ஆகலியா?"

"என்ன பண்றது? ரெண்டு தூறல் போட்டா இதுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுது"

"வித்துட்டு புது வண்டி வாங்கிக்க வேண்டியதுதானே?"

"காசு?"

"சார் கால்லே அடி பட்டிருக்கு பாருங்க, ரத்தம் வருதே! கொஞ்சம் இருங்க, டிங்சர் கொண்டு வரேன்"

"ஸ்டேண்ட் இடிச்சுடுச்சு போல! பரவாயில்லை, நான் பாத்துக்கறேன்"

காலை பத்தரை:

"என்ன ஞானசகாயம், இன்னும் போர்ஷனை முடிக்கலன்றீங்க?"

"என்ன பண்றது சார், இந்த வகுப்புலே பசங்க கொஞ்சம் மந்தம். படிப்பிலே ஆர்வமே இல்ல"

"இதை நான் இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றவங்க கிட்டே சொல்ல முடியுமா?.. எதோ கடமைக்கு வேகமா நடத்தி முடிங்க கே என்"

"அப்படி நடத்தறது என் தொழிலுக்கு மரியாதை இல்லை சார்"

"ஆமா! தொழிலுக்கு எல்லாம் மரியாதை கொடுங்க! ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க! இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை!"

காலை பதினொன்று:

"எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். யாரு இந்தப்படத்தை வரைஞ்சது?"

"...."

"பாடம் நடத்த முடியலே, சொன்னாப் புரிஞ்சுக்கறதுக்கு துப்பில்லே, வீட்டுப்பாடம் ஒருத்தனும் எழுதலே.. என்னைக் கிண்டல் செய்யறதுக்கும் படம் போடறதுக்கும் மட்டும் தெரியுதா? இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும்!"

"..."

"ராமு.. இங்கே வா.. எனக்கு உம்மேலேதான் சந்தேகம்..என்னடா வாய்லே! இப்படி நாருது? பீடியா?"

"இல்லே சார், கஞ்சா!"

"எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டேயே கூசாம சொல்லுவே! நீட்டுறா கைய"

பிற்பகல் மூன்று:

******குறும்பு*******

பிற்பகல் ஐந்தரை:

"இன்னும் எவ்வளவு நேரம்பா ஆகும்?"

"கார்புரேட்டரை கழட்டி சுத்தம் செய்யணும் சார். டயர் வேற கிழிஞ்சிருக்கு.. சைலெண்சர்லேயும் அடைப்பு இருக்கு.. நீங்க நாளைக்குக் காலையிலே எடுத்துக்கங்க சார்."

____________________________________________

இரண்டு

காலை நாலரை:

"இன்னுமா எழுந்திருக்கலே. எத்தனை முறைதான் எழுப்பறது?"

"இன்னும் ரெண்டு நிமிஷம்மா!"

"ரெண்டு ரெண்டு நிமிஷமாவே அரை மணிநேரம் ஓட்டிட்டே. நாளைக்கு புருஷன் வீட்டிலே போயி இப்படியா தூங்குவே?"

"அதுக்கு இருக்கும்மா இன்னும் பத்து வருஷம்"

"பத்தா! இப்பவே வயித்துலே நெருப்பைக் கட்டிக்கற மாதிரி இருக்கு. சும்மாவா சொன்னாங்க.. பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு"

"அவங்களேதான் சொன்னாங்கம்மா - தாய்க் கண்ணோ பேய்க்கண்ணோன்னும்"

"இதெல்லாம் பேசத் தெரியுது, காலையிலே எழுது வாசல் தெளிச்சு கோலம் போடத் தெரியலே"

காலை ஏழு:

"அம்மா இன்னிக்கு மத்தியானத்துக்கு என்ன?"

"பாம்பே மீல்ஸ் போதுமா? என்னடி இது கேள்வி, தயிர்சாதமும் ஊறுகாயும்தான்"

"அம்மா டிபன் பாக்ஸ் சரியாவே மூட மாட்டேங்குதும்மா. என் காலேஜ் புக்ஸ்லே எல்லாம் உன்னோட ஆவக்காய் வாசம் வீசுது. பசங்க கிண்டல் பண்றாங்கம்மா"

"சரி போயி சாமி விளக்கேத்து"

"இல்லேம்மா, நான் இன்னிக்கு கூடாது"

"சரியாப்போச்சு.. செய்றதே ரெண்டு மூணு வேலை.. அதுக்கும் லீவா? சரி எதையும் தொடாம ஓரமா நட!"

காலை எட்டரை:

"பாப்பா, வரயா, வண்டியிலே காலேஜ் போகலாம்"

"உன் வேலையப் பாத்துகிட்டுப் போடா"

"என்ன ப்ரியா, லேட்டாயிடுச்சி?"

"என்ன பண்ரது சொல்லு. காலையிலே எழுந்து தலைக்குக் குளிச்சு காயப்போடக்கூட நேரம் இல்லே. மண்டை இடிக்குது. வர வழியிலே தயிர் சாதம் மூடி வேற திறந்துகிச்சு. இதுலே டேட்ஸ் வேற! இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை! இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா?"

******குறும்பு*******

காலை பத்து:

"ப்ரியா! எத்தனை முறை கூப்பிடறது? ஒரு சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியலே.. நீங்கள்லாம் காலேஜ் வரைக்கும் எப்படித்தான் வந்துடறீங்களோ!"

"..."

"அழுகை மட்டும் உடனே வந்துடுது!"

_____________________________

மூன்று

மாலை ஐந்து:

"எத்தனை முறைதான் வாசல்லே இருந்தே வேடிக்கை பார்ப்பீங்க? வாங்க உள்ளே போகலாம்"

"விலை அதிகமா இருக்கும்போல இருக்கே"

"தேவைன்னா விலையப் பாத்தா ஆகுமா?"

"சரி 200 ரூபாய்க்கும்தான் குளிர்கண்ணாடி கிடைக்குது"

"அதுவும் இதுவும் ஒண்ணாகுமா? இதுக்கு உள்ள நம்பகம் அதுக்கு வருமா? காசைப் பார்த்து கண்ணைக் கெடுத்துக்காதீங்க"

"சரி இப்ப இருக்கற நெலைமையிலே 3000 ரூபா அதிகமாப் படுதே"

"என்ன நெலைமை? நான் தரேன், வாங்கிக்குங்க"

"உனக்கு ஏது பணம்?" "நான் வாய்க்கட்டி வயித்தக்கட்டி பருப்பு டப்பாவிலே பாதுகாத்து வச்சிருந்தேன்"

"பருப்பு டப்பாவிலே மொளைச்சுதா? அதிக செலவுன்னு என்னை ஏமாத்தித் தானே வச்சிருக்கே?"

"என்னமோ.. நீங்க என்கிட்டே கொடுத்தப்புறம் அது என் பணம்தான். இந்த ப்ரேம் உங்களுக்கு அழகா இருக்கும், எடுத்துக்கங்க"

மாலை ஏழு:

"இந்த வீடுதானா?" "ஆமாம். வாசலே KB100 நிக்குதே, அவருதுதான்"

""சீனிவாசன்.. சீனிவாசன்"

"இது அவர் பிள்ளைதானே?"

"அப்பா! அப்பா யாரோ வந்திருக்காங்க"

"வாங்க சார், உக்காருங்க.. டேய், இது மதுவந்தி அப்பாடா, ஞாபகம் இல்லே? அன்னிக்கு பார்ட்டிக்குப் போயிருந்தோமே! அங்கிளுக்கு ஹாய் சொல்லு"

" ஹாய் அங்கிள்! அப்பாவோட ஆபீஸ்லேதான் வேலை செய்றீங்களா?"

"ஆமாண்டா கண்ணா.. உன் பேர் என்ன?"

"குரு, 3 A. அந்தக் குரங்கு மூஞ்சி மேனேஜர்தான் உங்களுக்கும் மேனேஜரா?"

"பையன் ரொம்பச் சூட்டிகை!"

"ஆமாம் சார்.. அறுந்த வாலு!"

"இதென்ன கண்ணாடி? ரஜினி மாதிரி பண்ணுவீங்களா? நான் பண்ணுவேனே!"

******குறும்பு*******

இரவு பத்து:

"வாரண்டி, கேரண்டி எல்லாம் நீங்க உடைச்சுட்டு வந்தா தர முடியாது சார். வொர்க்மேன்ஷிப்லே டிபக்ட் இருந்தா மட்டும்தான் அப்ளை ஆகும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். இன்னொரு கண்ணாடி எடுத்துக்கங்க, 10% தள்ளுபடி தரேன்.

நீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை!

40 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

இரவு இரண்டு மணி

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு போர் அடித்து சரி என்று தமிழ்மணம் பக்கம் வந்து பெனாத்தலார் பதிவைப் பார்த்து படித்தால்....


******குறும்பு*******

(போங்கண்ணா, கான்செப்ட் பிடிச்சாலும், பார்மாட் பிடிக்கலை. )

Leo Suresh said...

பிணத்தலாரே....என்னய்யா சொல்ல வர்ரே...என் மரமண்டைக்கு ஒன்னும்
புரியல.

லியோ சுரேஷ்

மு.கார்த்திகேயன் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சுரேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

இன்று தரும அடியை நீர் ஆரம்பித்து வைத்தீரா? நன்று!

பார்மட்லே வர்ணனை இல்லாம முயற்சி பண்ணேன்.. சரி இன்னொண்ணு யோசிக்கணுமா?

லியோ,

அதான் நீதிய போல்ட் இடாலிக்லே சொல்லி இருக்கேனே:-)

நன்றி மு கார்த்திகேயன்.

நாமக்கல் சிபி said...

//நீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை!
//

பெனாத்தலாரின் குறும்பு உட்பட!
:))

(எனக்கும் ஒண்ணும் வெளங்கலை!)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சிபி!

ஒரு மார்க்கமாத்தான் கெளம்பி இருக்கீங்க எல்லாரும். என்கிட்டே இருந்து இன்னொரு படைப்பை(?!) வாங்காம விடறதில்லைன்னுதானே?

நாமக்கல் சிபி said...

//என்கிட்டே இருந்து இன்னொரு படைப்பை(?!) வாங்காம விடறதில்லைன்னுதானே?
//

பின்னே!

Anonymous said...

சூப்பர்!

பெனாத்தலாரே கலக்குங்க!

எவ்வளவு அருமையான கருத்துக்களை எளிமையாச் சொல்லி இருக்கீங்க!

(என்ன ஒரு வருத்தம்னா எனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாது!)
:(

பினாத்தல் சுரேஷ் said...

படிக்காத(?!) மேதை(????!!!!!),

மிக்க நன்றி(grrrr...)

பினாத்தல் சுரேஷ் said...

யோவ் கொத்தனார்! உம்மைச்சொல்லணுமய்யா!

காலைலே வந்து போணி பண்ணீங்களே!

Anonymous said...

படிக்காத(?!) --> உம்மைப் போல் எயுதப் படிக்கத் தெரியாத

மேதை(????!!!!!), --> விமர்சனம் செய்யத் தெரியும் அளவுக்கு

பினாத்தல் சுரேஷ் said...

விளக்கத்துக்கு (?!) நன்றி மேதை!

?-ஐயும் !ஐயும் விடறதா இல்லை.

VSK said...

2.02 pm:

******குறும்பு*******

கருத்துக்களங்கள் நன்றாக இருந்தாலும், இவை அனைத்தையும் "குறும்பு" ரகத்தில் சேர்த்ததுதான் பெரிய குறும்பு!!

ம்ம்ம்.... அடுத்த கதை ரெடி பண்ணுங்க, சீக்கிரமா!
************

நீதி: எல்லாக் குறும்புகளும் பெனத்தலாரால், எப்போதும்
ரசிக்கப்படுவதில்லை!

Anonymous said...

இரவு ஒன்றரை

ச்சே (சச்சின்) இந்த தடவை ஏமாத்திட்டாருப்பா

அதான் கடைசி (match)ல நிரூபிச்சாருல

ஆனாலும் (இந்தியா) அநியாயத்துக்கு உதைதானே வாங்குச்சு

கொஞ்சம் வித்தியாசமா முயற்சி பண்ணின உங்களுக்கெல்லாம் புடிக்காதே!!!

Experiment சூப்பர்தான் . ஆனா result???

அதான் அடுத்து வழக்கமா கில்லி மாதிரி துள்ளி வரேன்னு சொல்லியாச்சே .. தூங்குங்கப்பா :)

குறிப்பு: எல்லா பின்னூட்டமும் எல்லாருக்கும் புரிவதில்லை ..

நாமக்கல் சிபி said...

//நீதி: எல்லாக் குறும்புகளும் பெனத்தலாரால், எப்போதும்
ரசிக்கப்படுவதில்லை!
//

எஸ்.கே! இப்போது புரிகிறது!

Anonymous said...

//குறிப்பு: எல்லா பின்னூட்டமும் எல்லாருக்கும் புரிவதில்லை//

:))

(இங்கே பதிவே புரியலைன்னு எலாரும் சொல்லிகிட்டிருக்காங்களாம்....!)

Anonymous said...

எங்களுக்குப் புரிந்தது!

நீங்கள் கலக்குங்க பெனாத்தலாரே!

நாங்க ஓட்டுப் போடுறோம்!

Anonymous said...

எங்கள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துக் கொல்(!?)கிறோம்!

Anonymous said...

நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்!

Anonymous said...

//
காலை எட்டரை:
காலை பத்தரை:
காலை பதினொன்று:
பிற்பகல் மூன்று:
பிற்பகல் ஐந்தரை:
//

ஜாமம்,
நடு ஜாமம்,
பின்னிரவு

போன்றவற்றைத் தவிர்த்த பெனாத்தலாரைக் கண்ணடிக்கிறோம்!
ச்சே .. கண்டிக்கிறோம்!

Anonymous said...

காலை மணி ஏழு.

வானொலியில் தவழ்ந்து வருகிறது பாட்டு...

"ஒன்னுமே புரியல உலகத்துல ..."

இலவசக்கொத்தனார் said...

என்னமோ போங்க. என் கைராசி பதிவு போட்ட உடனே 15 பின்னூட்டம் வந்துடிச்சி. அதனால கைராசிக்காரன், இனி எப்பவுமே நீதான் முதல் பின்னூட்டம் போடணமுன்னு அடம் பிடிக்கக்கூடாது, என்ன!

பொன்ஸ்~~Poorna said...

// எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை! //

பினாத்தலாருடையது உட்பட.... :)))))

இந்தக் கதையை எப்போதோ படித்த நினைவு.. முக்கியமாக இதே பார்மெட்டில் வேறு ஒரு கதை எழுதி இருக்கிறீர்களோ?

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க எஸ்கே.. அவ்ளோ மோசமாவா இருக்கு?

விக்கி, ஆக மொத்தம் என்னைச் சேப்பல் ஆக்கிட்டீங்க:-(

சிபி,, என்ன புரிந்தது? எங்களுக்கும் சொல்றது..

பி பு.. பின்னூட்டம் மட்டுமாவது புரிஞ்சுதே..

ஆஹா, பினாத்தல், உன் கதை மோகினிகளுக்கு புரிஞ்சிடுச்சுடா!

நிபந்தனையில்லாமல் கொல்வதற்கு நன்றி குட்டிச்சாத்தான்களே!

வெளியில் இருந்து ஆதரவு.. சைபர்வெளியா இருந்தா ஓக்கே கொள்ளிவாய்.

ஆவி அம்மணி, கணக்கா இருக்கீங்க.. சரி அடுத்த கதையிலே இரவு நேரத்துக்கும் 33% இட ஒதுக்கீடு பண்ணிடுவோம்:-))

இன்பா.. நல்ல பாட்டு!

கொத்தானார்.. உம்ம ராசியே ராசி! யோவ்! துபாய்ப்பக்கம் வா, பாத்துக்கறேன்!

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ்,

உங்களுக்கும் புரியலையா, பிடிக்கலையா?

கதை எழுதுவதின் எத்தனையோ உத்திக்களில் எனக்கு பிடித்த உத்தி வர்ணனைகள் இன்றி ரேடியோ நாடகம் போல எழுதுவது. நான் எழுதிய பல கதைகளிலும் உரையாடல்கள்தான் அதிகம் இருக்கும். முழுக்க இப்படியே சுனாமி பற்றி ஒரு கதை எழுதினேன். (திறமைக்கு பல முகம்).

அரை பிளேடு said...

என்னாபா பார்மட்டு இது, ஒரு ஓடாத பைக்கு, மெக்கானிக்கு, வாத்தியாரு, கஞ்சா பையன், வீட்டுக்கு அஞ்சா பொண்ணு.. எதுக்கு வர்றாங்க.. எதுக்கு போறாங்க..

ஓ.. பிரியுது.. இவ்ங்க எல்லாம் குறும்பு பண்றாங்க..
ஆனா யாரும் கண்டுக்க மாட்டேன்றாங்க.. கரீக்டா..

அப்பாடா ஒரு வழியா ஏதோ பிரிஞ்ச மாதிரி கீது.. மனுசன் இப்படி நம்பள பெனாத்த வுட்டுட்டாரே...

Unknown said...

தன்னுடைய வண்டி டயரைப் பஞ்சர் பண்ணிய மாணவனின் குறும்பை ஆசிரியரால் ரசிக்க முடியவில்லை!!!

தன்னைக் கேலி,கிண்டல் செய்த டோட் சைட் ரோமியோவின் குறும்பை கல்லூரிப்பெண்ணால் ரசிக்கமுடியவில்லை!!!

தன்னுடையக் கண்ணாடியை நண்பரின் குழந்தை குறும்பு செய்து உடைத்ததை ஒருவரால் ரசிக்கமுடியவில்லை!!!

அப்பாடா எப்படியோ மூனு குறும்பையும் படிச்சுப் புரிஞ்சிக்கிட்டேனே எனக்கு எதாவது பரிசு உண்டா? :)))

பினாத்தல் சுரேஷ் said...

அரை பிளேடு..

என்ன அண்ணாத்தே.. உன்க்கே பிரியலீன்னா யார்க்கு அண்த்தே பிரியும்? சுகுரா இன்னூரு தபா லுக்கு வுடு நைனா!

பினாத்தல் சுரேஷ் said...

அருட்பெருங்கோ, வாசித்ததற்கு நன்றி.

இந்த ஆவிங்க பேச்சையெல்லாம் கேட்டு ஏமாறாதீங்க;-) அப்படி ஒண்ணும் புரியறதுக்குக் கஷ்டமான கதைஎல்லாம் கிடையாது.. இதென்ன பின் நவீனத் துவமா என்ன?

ஜெயஸ்ரீ said...

வர்ணனையே இல்லாத பார்மட் நல்லாத்தான் இருக்கு.

Anonymous said...

உண்மதாங்கோ! எல்லாராலயும் எல்லா குறும்புகளையும் புரிஞ்சிக்க முடியாது.

இப்படி மக்களுக்கு புரியாதபடிக்கு எழுதுனாதான் 'காதலா காதலா' ஆர்ட் ரேஞ்சுக்கு மக்கள் ரசிப்பாங்க.

வாழ்த்துக்கள் பினாத்தலாரே!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜெயஸ்ரீ.

நன்றி ஜி. நீங்க என்ன சொல்ல வரீங்கன்றதுதான் இப்போ எனக்குப் புரியலை:-))

Anonymous said...

//நீங்க என்ன சொல்ல வரீங்கன்றதுதான் இப்போ எனக்குப் புரியலை//

பார்த்தீங்களா! ஜி உங்களுக்குப் புரியாத மாதிரி பின்னூட்டமிட்டதில் உங்களுக்கு எப்படி இருக்கு? அப்படித்தான இந்தக் கதையை படிச்ச எங்களுக்கு இருக்கும்!

Anonymous said...

நல்ல வேளை! அருட்பெருங்கோ அவர்களின் பின்னூட்டம் பார்த்த பிறகு கதை ஓரளவு புரிகிறது!

(நீங்களும் ஏஜெண்டோட ஆளா?)

பினாத்தல் சுரேஷ் said...

ஒன்றுமே புரியாதவன், இப்போது புரிந்தவன் ... எல்லாம் கிளம்பி வந்துடறீங்கபா!

வந்ததுக்கும், நிந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நன்னி.

பினாத்தல் சுரேஷ் said...

வாக்களிக்கபவரின் கவனத்தைக் கவர ஒரு பின்னூட்டக்கயமை

குமரன் (Kumaran) said...

குறும்பின் மறுபக்கம் வால்தனம் நல்லா இருக்குங்க சுரேஷ்.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

கயமையெல்லாம் எனக்கு வேலைக்கு ஆவாது;-(

மாடரேஷன்லே 10 மணிநேரம் இருந்தா எப்படி பி க முடியும் சொல்லுங்க!

எதோ விதிப்படி நாலு பேர் ஓட்டு போட்டிருப்பாங்க!

Anonymous said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்
அத்துடன்
எம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சுந்தரி.. உங்களூக்கும் புத்தாண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

 

blogger templates | Make Money Online