Dec 25, 2006

2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 Dec 06)

2006 முடியப்போவுது. சம்பிரதாயப்படி 2006 திரும்பிப் பார்க்கிறேன், முதுகைக்காண்கிறேன்னு ஒரு பதிவு போடலாம்னா அப்படி ஒண்ணும் கிழிச்சுடல! சரி மத்தவங்களையாவது கலாய்க்கலாமேன்னு "என் பார்வையில் 2006 வலைப்பதிவுகள்"னு போட்டா அதையும் கிண்டலடிக்க சில பேர் கிளம்பிட்டாங்க!

யோசிச்சேன். என் பார்வையிலே போட்டாதானே பிரச்சினை? சில பிரபலங்களின் பார்வையிலே கேட்டு வாங்கிப்போட்டா? புதுமைக்கு புதுமையாவும் இருக்கும், யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு பேசவும் முடியாது!

எதை எந்தப்பிரபலம் சொன்னாங்கன்னு சொன்னா உங்களைக் குறைவா மதிப்புப்போடற மாதிரி ஆயிடாது?

---------------------------------

2006இலே வலைப்பதிவுகள் என்ன கிழித்துக்கொண்டு இருந்தது என்று என்னைக்கேட்கிறீர்களே, வயதானவர் ஒருவர் குடுமபத் தொலைக்காட்சியிலே அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கிறாரே அவரைக்கேட்க மாட்டீர்களா? சிக்குன் குனியாவினால் தமிழ்நாடே அலறிக்கொண்டிருந்தபோது இந்த வலைப்பதிவு பிருஹஸ்பதிகள்் என்ன தூங்கிக்கொண்யா இருந்தார்கள்? திட்டியோ வாழ்த்தியோ கலர் டிவிக்கு கொடுத்த விளம்பரத்தில் நூற்றில் ஒரு பங்கேனும் தாயுள்ளத்துடன் நான் அளிக்கத் திட்டமிட்டிருந்த கம்ப்யூட்டருக்குக் கொடுக்காத இவர்களா கம்ப்யூட்டரில் தமிழ் காக்கப்போகிறார்கள்?
மக்கள் - இல்லை இல்லை!

கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒரு ஊரில் ஒரு சிங்கம் இருந்ததாம். அதன் மேல் ஒரு கொசு உட்கார்ந்து இருந்ததாம். கொஞ்சநேரம் கழித்து அந்த கொசு சொல்லியதாம், "நான் உன்மேலின்ருந்து இறங்குகிறேன்" என்று! சிங்கம் கேட்டதாம், நீ என்மேலா இருந்தாய்? என்று.. அப்படி இருக்கிறது இந்தபதிவர்கள் கதை. மக்கள் என் பக்கம் இருக்கும்வரை வலைப்பதிவாளர்கள் என் பக்கம் இருந்தாலென்ன? இல்லாவிட்டால்தான் என்ன?
-----------------------

இதப்பாருங்க, தமிழ்நாட்டுலே மொத்தம் 7 கோடி ஜனங்க இருக்காங்க, அதில ஆம்பல மூணரை கோடி, தாய்க்குலம் மூணரைக்கோடி.. இதிலே கைநாட்டுக்காரங்க 4 கோடி, கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்க.. வெறும் ரெண்டு லட்சம்!

இந்த ரெண்டு லச்சத்திலே பதிவு போடறவங்க வெறும் 2000 பேரு! இவங்க போன வருசத்திலே போட்ட மொத்தப் பதிவுங்க - 4000! இதிலே தேமுதிகவுக்கு ஆதரவா எழுதறவன் - ஒண்ணோ ரெண்டோ கூட இல்ல! ஏன் இல்ல? யோசிச்சுப் பாருங்க! தேமுதிக ஆட்சிக்கு வந்தா தமிலன் அத்தனை பேருக்கும் வலைப்பதிவு நானே திறந்து தருவேன்!

ஏமிரா, எனக்கா வலைப்பதிவப்பத்தித் தெரியாது? நான் என் சொந்தச் செலவிலே கட்சி நடத்துறவன்.. சொந்தச் செலவிலே சூன்யத்த ஆரம்பிச்சவனே நாந்தாண்டா!

உழைக்கிற மக்களுக்காக நாங்க களத்தில இறங்கிப் பாடுபடறோம்.. உதவின்னு சொன்னா வரமாட்டீங்க, உதைக்குதான் பயப்படுவீங்கன்னா அதுக்கும் தயாராத்தான் வந்திருக்கேன்.

ப்ளாக் - எனக்கு இங்கிலிஷ்லே பிடிக்காத ஒரே வார்த்தை!

-----------------------

தண்ணிப்பிரச்சினைன்னா முல்லைப்பெரியாறு..
தமிழனுக்கு ஒரே தந்தை பெரியாரு..
வேர எதுவும் எழுதறதுக்கு இல்ல மேட்டர்!
எனக்கு இலக்கியா ஒரே ஒரு டாட்டர்!
இல்லாட்டிப் பண்ரான் நையாண்டி..
கிடைக்கறதோ ஊருக்கு இளைச்ச இந்த ஒரே ஆண்டி!
அதுவும் இல்லாட்டி மாட்றான் வல்லவன் சிம்பு..
டேய்.. அவன்கிட்ட வச்சுக்காதேடா வம்பு..
அவன் இல்லடா சாதா ஆசாமி..
அவங்கப்பன் இந்த வீராச்சாமி..

அம்மாக்கு இன்னொரு பேர் தாயாரு..
அடுக்குமொழித்தமிழுக்கு என்னிக்கும் இந்த டியாரு!
என்னப்பண்ணாதீங்்கடா கிண்டல்...
ஆகிப்போயிடுவீங்கடா பண்டல்!

ஏ டண்டணக்கா..டணக்கடி டண்டணக்கா!

---------------------------------

என் அன்பு வலைப்பதிவு உடன்பிறப்புகளே!

தம்பி தயாநிதி மாறனின் தொலைநோக்குச் சிந்தனையில் அகலப்பாட்டை கண்ட தமிழ் ஆர்வலர்களே! கணினித் தமிழில் வலைப்பதிவுகளைக்கண்டதும் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது என்பதை உளமாறச்சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. பகுத்தறிவுப்பகலவனின் ஆவி என்னிடம் மட்டுமன்றி பல பதிவர்களிடமும் பேசிவருகிறது என்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன். ஆனால், வள்ளுவப் பெருந்தகயார் சொன்னதுபோல் "நகுதற் பொருட்டன்று நட்பு" அல்லவா? ஓரிரு உள்ளக்குமுறல்களையும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

எதைப்பற்றிப் பேசினாலும் முதலில் என்னை எள்ளி நகையாடுவதில்தான் ஆரம்பிக்கிறார்கள் சில பதிவாளர்கள். போகட்டும்.. பொதுவாழ்விலே இதைப்போன்ற பல முட்பாதைகளைக் கடந்து வந்தவன் தான் இந்தக்கருணாநிதி. ஆனால், ஏகடியம் பேசும் எத்தர்களுக்கு உரிய பதில் அளிப்பதில் நாம் ஏன் குறை வைத்திருக்கிறோம்? "பொறுத்தது போதும், பொங்கியெழு" என்று அன்று நான் மனோகராவிற்கு எழுதிய உரையாடல் இன்றும் பொருந்திவரும் நிலையே இன்று பதிவுகளில் நிலவுகிறது என்றால் அது மிகையாகாது.

பைனரிக்காட்டுக்குள்ளே ஓடும் சிறுநரிகளை அடையாளம் காணத் தாமதியாதே உடன்பிறப்பே.

-----------------------------

தமிழ்ப்பதிவுகளில் கவிதை..

"வா
னில் நட்
சத்திரங்கள்
கண் சிமிட்டுகின்றன"

என
உடைந்து கிடக்கிறது கவிதை..
ஊசி கொண்டு அதைத் தை!

ஏனெனில்
அறிவியல் தமிழுக்கு
அதுவே விதை!

ஆறாம் விரலாய்ப் பேனா
கொண்ட எனக்கும்
இருப்பது இருகை...
உனக்கோபலகை..
தட்டச்சுப் பலகை!

இன்னும் எழுந்து..
மேலும் எழுது..
உனக்குத் தமிழ்ப்பால் கொடுத்த
அன்னைக்குக் கொடு நீ
கவிப்பால்.

---------------------------------

வலைப்பதிவுகளில் சிறுகதைகள் படிக்கிறீர்களா? என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. "கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.


வலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் "எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.

எந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.

இந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை "The Best Stories of 1921" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.


வலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.

இரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.



எ பி ஹை:


குருடன்
பாடுகிறான்
கொட்டாங்கச்சியோடு.

-------------------------------------

போதுமா பிரபலங்களின் கருத்து? இன்னும் வேணுமா?

44 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

சோதிக்கிறேன்,,

யாருங்க, கரெக்டா வகைப்படுத்தியது??

சிறில் அலெக்ஸ் said...

கலக்கல் காமெடி சுரேஷ்.
:)

உலகன் said...

நையாண்டி என்று சிலர் படுத்தி வரும் நிலையில், உங்களுடையது உண்மையில் வெகு சிறப்பாக இருக்கிறது. 'கண்மணி'களே முன்மாதிரிகளை நோட் பண்ணிக்குங்களேன்.

Anonymous said...

சூப்பரப்பு....

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி *****சிறில்*****; இந்த வாரத்தில் உங்களிடமிருந்து சில சூப்பர் டூப்பர்களை எதிர்பார்க்கிறேன்;-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி உலகன், ஆழியூரான். இருவரையுமே முதல் முறையாக என் பதிவின் பின்னூட்டத்தில் சந்திக்கிறேன். நன்றி.

ramachandranusha(உஷா) said...

சான்றோர் வீதியிலே பீடு நடைப்போட்ட சாத்தான் குளத்தாரை
நாளை மலையாள கரையோரம் கவிப்பாடப்போகும் கவிமட தலைவனை
நக்கல் அடிக்கும் பினாத்தலாரை வன்மையாய் கண்டிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

அட நீங்க வேற. எஸ்.கே. பாத்தார்ன்னா கோவிச்சுக்க போறார். தேமுதிகவுக்கு ஆதரவா வலைப்பதிவுகளில் இருக்கும் ஒரே குரல் அவர் குரல் தான்.

அட ஆமாம். சொந்தச் செலவுல சூனியத்தைத் தொடங்குனவங்க மதுரைக்காரய்ங்க தானே. வரவணையான் செந்தில் - என்ன சொல்றீங்க? :-)

இரண்டாவது பைபாஸ் வரை எனக்குத் தாங்காதுன்னு நெனைக்கிறேன். இப்பவே வலைப்பதிவுகளைப் படிக்கிறத நிறுத்தினாத் தான் என் ரத்த அழுத்தம் சீராகும். :-))

பினாத்தல் சுரேஷ் said...

உஷா,

சிண்டு முடியும் ஒரு நாவல் பிரபலத்தை விட்டுவிட்டதை ஞாபகப்படுத்துகிறீர்களா?

என் தலைவர் கற்றுக்கொடுத்த பாதையில் அஞ்சல் நவீனத்துவக்கவிதையை எழுதிய எனக்கு இந்த இழிவெனில் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார் தலைவர். உங்களைப் புகழ்ந்து கவிதை எழுதிவிடுவார்! ஜாக்கிரதை!

பினாத்தல் சுரேஷ் said...

குமரன்.. எஸ்கேவை மட்டும் குறிப்பிட்டு "ஒன்று" என எழுதலாம் என்று நினைத்தபோதுதான் செல்வன் நினைவுக்கு வந்தார்.. அதனால்தான் ஒண்ணோ ரெண்டோ;-))

ரத்த அழுத்தம் சீராக பினாத்தல் பதிவுகளைப்படிக்கவும்;-))

தருமி said...

சிங்கங்களின் சீறல்களோடும், புலிகளின் உறுமல்களோடும் நடந்து நடந்தே பழகியவன் நான். இந்த LG, SAMSUNG இவைகளைக் கண்டு பயப்படாத நான், இந்தப் பதிவாளர்களுக்காகவா பயப்படப் போகிறேன்? ஆயினும் இவர்கள் தமிழர்களாகவே மாற, அவர்கள் பதிவுகளில் அகநானூற்றுப் பாடல்களை மட்டுமின்றி புறநானூற்றுப் பாடல்களையும் எழுத வைப்பதற்காகவே நான் இன்னொரு நடைப்பயணம் நிச்சயமாக சீக்கிரம் ஆரம்பிப்பேன்.

பினாத்தல் சுரேஷ் said...

அப்படிப்போடுங்க தருமி!

டாபிக்கலா அசத்திட்டீங்க;-))

நற்கீரன் said...

:-) நன்று. வழமைபோல, கலக்கல்தான்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நற்கீரன்.

Anonymous said...

சுரேஷ்,
மாய்ஞ்சு மாய்ஞ்சு பதிவெழுதி இருக்கீங்க.. ஆனா, தருமி ஒரு பின்னூட்டத்துல ஓவர்டேக் பண்ணிட்டாரே!! :)))

ஜாலியா இருக்கு...

ramachandranusha(உஷா) said...

தருமி சூப்பர் :-)))))))))))

Anonymous said...

//உனக்குத் தமிழ்ப்பால் கொடுத்த
அன்னைக்குக் கொடு நீ
கவிப்பால்.//

ஆஹா!! கவிதைக்குப் "பாலூற்ற" நினைக்கும் என் எண்ணத்தை கவி வடித்தாய். கண்மணியே வாழ்க!!

//உங்களைப் புகழ்ந்து கவிதை எழுதிவிடுவார்! ஜாக்கிரதை!//

ஓ! நண்பனே!
உனக்கோர் இன்னல் என்றால்
எனக்கோர் பின்னல் என்று
துடிப்பேன் நான்.

ஏ! தோழனே!
ஜன்னல் காற்றுக்கு
யார் போடுவார் திரை?
மின்னல் வெளிச்சத்திற்கு
யாரிங்கிடுவார் தடை?

சாத்தான்குளத்தான்

Unknown said...

தமிழ் பதிவுலகத்துல்ல தமிழ் பாதுகாக்கப் படணும்.. அதுக்காகப் பதிவர்கள் போராடனும்... தமிழில் மட்டுமே எழுதும் பதிவர்களின் வீட்டு இணைய இணைப்புக்களுக்கு கட்டண ரத்து அறிவித்து தமிழக அரசு ஊக்கம் அளிக்க முன் வந்தால் அதை நாங்கள் கண்டிப்பாய் பாராட்டுவோம்...

Anonymous said...

:-))))))))))))))))))

மணியன் said...

வழக்கமான கலக்கல். தருமியின் பக்க வாத்தியம் தூள் :))

கதிர் said...

வகுப்புக்கு
நேரமாச்சு
உணவு
இடைவேளை
வேலு
மணியடிப்பா
கட்சின்னா
ஒரு
ஒழுங்கு
வேணும்ல...

2166ல நிச்சயமா எங்க ஆட்சிதான்...

Hariharan # 03985177737685368452 said...

சுரேஷ் அவர்களே,

அனைத்தும் அருமையான எடுத்தாடல்கள்! பதிவிற்கும் 2007 புத்தாண்டுக்கும் வாழ்த்துக்கள்!

சுரேஷ்காரு,

பாக உந்தண்டி! இந்த மஞ்சிகா ராசிந்துகும், கொத்த வருஷம் 2007க்கும் மீகு மா கிரீட்டிங்ஸண்டி!

சுரேஷ்ஜி,

ஆப் நே ஜோ லிகா ஓ சுந்தர் அவுர் பகுத் அச்சா லஹ்ரஹை ஜி! ஆப்ஹோ ஹமாரி தரஃப் ஸே 2007 நயா ஸால் முபாரக் ஜி!

Suresh,

Well. I thoroughtly enjoyed the post. I wish to register this fact by leaving my feed back comments about your this posting in your posting! Hip hip Hurraey! Have a great flashy, fantastic, fresh New year 2007!

அன்புடன்,

ஹரிஹரன்

தகடூர் கோபி(Gopi) said...

:-)

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ், நன்றி.

உஷா, தருமி சார்பாகவும் நன்றி.

தலைவா! தொண்டனின் மானத்தைக்காத்தவனே.. நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க..

கவிதைக்கு நான் மட்டும் "பால்" கொடுத்துவிட முடியுமா? ஊர்கூடித் தேரிழுக்கவேண்டிய வேலையல்லவா?

பினாத்தல் சுரேஷ் said...

தேவ், தம்பி.. குழலி வர்றாரு.. ஜாக்கிரதை..

ரெண்டு பேருமே கலக்கியிருக்கீங்க;-)) நம்ம மக்களுக்கு கோடு போட்டா ரோடு போட சொல்லியா தரணும்?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பாலபாரதி, மணியன், கோபி.

ஹரிஹரன்.. எல்லா மொழியிலும் நன்றி, உங்களுக்கும் வாழ்த்து. (தெலுங்குல சுபகாங்க்ஷலுன்னு கேள்விப்பட்டிருக்கேன்:-))

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க வாங்க! வராதவங்க எல்லாம் உடனே வாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம்.. பின்னூட்டக்கயமையேதான்!

கிறிஸ்துமஸ் லீவுக்குப் பிறகு திரும்பி வந்த பலர் இன்னும் பார்க்கலை போல இருக்கு:-))

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

happy new year peenaaththal

✪சிந்தாநதி said...

//கிறிஸ்துமஸ் லீவுக்குப் பிறகு திரும்பி வந்த பலர் இன்னும் பார்க்கலை போல இருக்கு:-))//

பார்த்தாச்சு, படிச்சாச்சு

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.....

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கார்த்திகேயன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், வலைப்பதிவர்கள் அனைவருக்கும், உலக மக்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி டேனியல்.

நன்றி சிந்தாநதி. எப்படியெல்லாம் ஆளுங்கள இழுக்க வேண்டி இருக்கு பாருங்க:-))

Geetha Sambasivam said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் சுரேஷ், உங்க பதிவுக்கு வந்து படிச்சுட்டுப் போயிடுவேன், அவ்வளவு பிசி(:D), இது புரியும்னு நினைக்கிறேன்.

Boston Bala said...

:)))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கீதா. நீங்க பின்னூட்டம் போடாததிலேயே தெரிந்தது பிஸி என்று..

பாபா, நன்றி:-)))))))))))))))))))))

இரா. வசந்த குமார். said...

வழமை போலவே அருமை ஐயா..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வசந்த்.

இலவசக்கொத்தனார் said...

லீவு முடிஞ்சி இப்போதான் வரேன். எங்க தலைவர் என்ன சொல்லுவாருன்னு சொல்லவே இல்லையே?

வர்ட்டா?

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நாளாகக் கேட்கணும்னு நினைச்சேன்.மையமாக எப்படி சிரிப்பது?

பெனாத்தலாரே அருமையாப் பெனாத்திட்டீங்க.
இதை விட சூப்பரா யாருமே எழுத முடியாது.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

பின்னூட்டங்களைப்பாத்தீங்க இல்ல? "உங்க" தலைவரைப்பத்தி எதாச்சும் சொல்லனுமுண்ணா நீங்களே சொல்லி நீங்களே ஆப்பு வாங்கிக்கணும் - அதான் ட்ரெண்டு.

ஒரே செட் ஆளுங்க போரடிச்சுப்போயி புது செட் எடுத்ததுலே தலைவர் வுட்டுப்போச்சு!

வாங்க வல்லி சிம்ஹன், முதல் முறையோ?

மையமாச் சிரிக்கறதுன்னா அழுகையைக் கட்டுப்படுத்திக்கறதுன்னு அர்த்தம்:-))

நன்றி.

ஏ.எ.வாலிபன் said...

என்னை கேட்டா வலைப்பதிவு என்கிறதே தப்பு கட்டம் இல்லை கட்டப்பதிவு என்று சொல்லலாம் கணணில பதியிறதால கணணிப்ப்திவு என்று கூட சொல்லலாம்

ஏ.எ.வாலிபன் said...

மையம் என்றால் பிரேதம் என்று ஒரு அர்த்தம் இங்க இலங்கையில் உண்டு

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க rtudhaya.

அதென்ன கட்டப்பதிவு? block-உக்கு தமிழாக்கமா?

மையம்னா அப்படி ஒரு அர்த்தம் இருக்கா? புதிய தகவல். நன்றி.

 

blogger templates | Make Money Online