Apr 12, 2007

போக்கிரி - பேக்கரி - சிவகாசி

துபாயில் கேபிள் தொலைக்காட்சி வழங்கும் ஈ-விஷன், புதன் கிழமைகளில் ஒரு
தமிழ்ப்படத்தைக்காட்டுகிறது, கடந்த சில வாரங்களாக. சந்திரமுகி, காக்க
காக்கவை தாமதமாகச் செய்தி தெரிந்ததால் தவறவிட்டதால், அடுத்ததையாவது
விடக்கூடாது என்ற ஆர்வத்தில் நேற்றைய படத்தை முழுவதும் பார்த்தேன்,
தூக்கத்தைத் தொலைத்தேன்!

பேரரசு கதை வசனம் திரைக்கதை பாடல்கள் இயக்கத்தோடு பஞ்ச் டயலாக்
ஆரம்பத்தோடும் வந்து அசத்தியிருந்தார். (களைப்பை ஏற்படுத்தினார்
என்பதற்கும் இதைத்தானே சொல்லவேண்டும்?)

கமர்ஷியல் படங்களுக்கு நான் எதிரியல்ல என்பதை முதலிலேயே
சொல்லிவிடுகிறேன். சண்டை போட்டு எதிரி பறப்பது, வேகமான குத்தாட்டம்,
அம்மா தங்கை செண்டிமெண்ட் எல்லாவற்றையும் ரசிப்பேன். கில்லி, பாட்ஷா,
முதல்வன், இந்தியன், வரலாறு, நாட்டாமை -- இது போன்ற படங்களை மோசம் என்று
நிச்சயம் சொல்லமாட்டேன்.

ஆனால், சிவகாசி! பார்ப்பவனுக்கு மூளை கிடையாது, வெறும் பேக்கிரவுண்டு
சத்தத்தையும் மாறி மாறிப்பேசும் சவசவ வசனங்களையும் வைத்தே
முழுப்படத்தையும் ஓட்டிவிடலாம் என்ற பெரும் தைரியம் பேரரசுவுக்கு!

லாஜிக் என்ற விஷயம், படத்துக்குப் படம் மாறுபடும். வாயாலே மட்டும்
சுவாசிப்பவன் என ஒரு குணாதிசயத்தை ஒரு பாத்திரத்துக்கு முதல் காட்சியில்
சொல்லிவிட்டால், அதை நாம் ஏற்றுக்கொண்டு, அவன் மூக்கால் சுவாசிப்பதாகக்
காட்டினால் லாஜிக் ஓட்டை என்போம். விண்வெளியில் நடக்கும் படத்தில்
கிராவிட்டி காட்டினால் லாஜிக் ஓட்டை - இல்லையா..

இந்தப்படத்தில் ஒரு கேரக்டருக்கும் குணாதிசயம் ஒன்றுமே கிடையாது. பெண்கள்
முழுதாக ஆடை அணிந்திருக்கவேண்டும் என்று நடுத்தெருவில் அறிவுறுத்துவார்
ஹீரோ. அடுத்த காட்சியில் தாவணி அணிந்து வருபவளையும் கிண்டல். காதல் இல்லை
- நீ போ என்று ஒரு காட்சி. என் காதலியை என்னுடன் அனுப்பு என
அரிவாள்சகிதம் பெண்வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சி (இரண்டுக்கும் இடையே
இடைவெளி, மனம் மாறக்காரணம் ஒரு எழவும் கிடையாது!), இவ்வளவு கோபமாக என்னை
அடிக்க வருகிறானென்றால் அவன் தான் உலகிலேயே பெஸ்ட் மாப்பிள்ளை என்னும்
பணக்காரத் தந்தை, சகோதரர்கள்..

அனுதாப ஓட்டு வாங்க தங்கை புருஷன் இறந்ததாக நாடகமாம், ஓட்டு எண்ணிக்கை
முடிந்த கையோடு அவன் வீடு திரும்புகிறானாம் - ஊரில் உள்ள பொதுமக்கள்,
பார்க்கும் பொதுமக்கள் எவனுக்கும் சிந்திக்கச் சக்தி கிடையாது என்ற
எண்ணம்!

ஆச்சரியமான ஒற்றுமை, இந்தப்படத்துக்கும் வெயிலுக்கும்.

இரண்டிலும் தகப்பன் அடிக்க பையன் ஊரை விட்டு ஓடுகிறான், பத்துப்
பதினைந்து வருடம் கழித்து திரும்பிவருகிறான். ஊரில் உள்ள சகோதரன்
பணக்காரனாய் இருக்கிறான்.

ஆனால் ஒற்றுமை அங்கேயே முடிகிறது. இந்த ஒற்றுமை எப்படிப்பட்டதென்றால்,
சைக்கிளிலும் பால்பேரிங் இருக்கிறது, ஏரோப்ளேனிலும் பால்பேரிங்
இருக்கிறது என்பதைப்போல!

சரி ஒழிந்து போகட்டும், உதவாத படத்தை உருப்படாத நேரத்தில் பார்த்து
உணர்ச்சிகளைக் கொந்தளிக்கவைத்துக்கொண்டது என் தவறு, இதை ஏன் பதிவாகப்போட
வேண்டும்?

போக்கிரி என்ற அடுத்த மகா டுபாக்கூர் படத்தையும் பார்த்து விமர்சனமும்
எழுதியிருந்தது என் ரசிகக்கண்மணிகளுக்கு நினைவிருக்கலாம்.

http://penathal.blogspot.com/2007/01/blog-post_21.html

லொள்ளு சபாவில் லேட்டஸ்ட்டாக அந்தப்படத்தைக் கிண்டலடித்திருந்தார்கள்.
நானும் பார்த்தேன். அருமையான கிண்டல்.

1 - http://www.youtube.com/watch?v=h8bOpkqJAPA
2 - http://www.youtube.com/watch?v=_pNK9jT2NWc
3 - http://www.youtube.com/watch?v=ffqh8uAdqhA
4 - http://www.youtube.com/watch?v=HClK_rmyRt8

மிகவும் ரசித்துச் சிரிக்க முடிந்தது - அடிக்கத் துரத்துபவர்களை நிறுத்தி
ஆர அமற பஞ்ச் டயலாக் பேசுவது, சண்டை-காதல்-சண்டை-காதல் எனத் திரைக்கதையை
கிண்டலடித்திருந்தது, ஆடியன்ஸ் ரியாக்ஷன் என ஒவ்வொரு சீனும் சிரிப்பை
வரவழைத்த சடையர்!

அதற்கு திடீரென பொதுமக்களிடம் (?) இருந்து எதிர்ப்பு வந்ததாம், விஜய்
டிவி மன்னிப்புக் கேட்டிருக்கிறது!

http://bharathi-kannamma.blogspot.com/2007/04/blog-post_11.html

கிண்டல் அடிக்கக் கூட உரிமை இல்லையா இந்த நாட்டில்? இந்த லொள்ளு சபா
எபிஸோட் படத்தைத் தான் கிண்டல் அடித்திருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில்
விஜய் மீது தாக்குதல் செய்திருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.

எத்தனையோ நல்ல படங்களையும் ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்களையும்
கிண்டல் செய்தபோது எழாத பொதுமக்கள் எதிர்ப்பு இப்போது
எழுந்திருக்கிறதென்றால், அது காபி வித் தயாநிதி மாறனின் விட்டகுறை
தொட்டகுறை போலத்தான் தெரிகிறது - நல்லதுக்கில்லை!!

22 பின்னூட்டங்கள்:

Ayyanar Viswanath said...

சுரேஷ்

முழுப்படத்தையும் பார்த்த உங்க தீரத்த பாராட்டியே ஆகனும் :) பேரரசு மாதிரி ஆளுங்க தமிழ் சினிமா வோட சாபம் னு தான் சொல்லனும்.ஒரு எச்சரிக்கை திருப்பதி ன்னு ஒரு படம் இருக்கு அத கொசு விசன் ல ஃப்ரீயா காமிச்சா கூட பாத்திராதிங்க :)

கார்த்திக் பிரபு said...

chk my latets post abiut vijay

மு.கார்த்திகேயன் said...

பெனத்தலாரே, லொள்ளு சபா டைரக்டரிலிருந்து எல்லோரையும் வீட்டிற்கு அழைத்து வந்து, மிரட்டி மன்னிப்பு கேட்கச் சொன்னாராம், விஜயின் தந்தை Sஆ சந்திரசேகர்.. இதெல்லாம் உதவுற காரியாமா?

Boston Bala said...

போக்கிரி படத்துக்கு என்ன குறைச்சல் ;)

rv said...

என்னய்யா அக்கிரமமா இருக்கு...

விஜய்க்கும் அவரோட ரசிகர்களுக்கும் பிடிக்கலேன்னா டிவியில வரக்கூடாதா?

எனக்குக்கூடத்தான் நிறைய பிடிக்கல. பத்து வேலையத்த தடியன்கள வேலைக்கு வச்சுகிட்டா நாமளும் இனிமே நம்ம கிண்டல் செய்றவங்கள மிரட்டலாமா?

இதெல்லாம் இந்தியால அதுவும் தமிழ்நாட்டுல நடக்குதுன்னு கேக்கவே கேவலமா இருக்கு. நகைச்சுவை உணர்வு ரொம்பவேதான் குறைஞ்சுகிட்டு வருது.

rv said...

அதுக்கு முன்னாடி ஒரு டவுட்,

இது நிஜமாவே நடந்துச்சா இல்ல எதுனாச்சும் இமெயில் பார்வர்ட் ஆர்வமா?

விஜய்டிவி லெட்டரப் பாத்தா சந்தேகமா இருக்கே?

யாராவது கன்பர்ம் பண்றவரைக்கும் என் போன பின்னூட்டத்தில் "விஜய்" என்பதை மாற்றி "பெரிய மனிதர்களுக்கு"னு வச்சுக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

யோவ் அடுத்து என்ன படத்தப் பத்தி எழுதப் போறீரு? திருமலை தென்குமரி?

அதான் நம்ம மக்களால விமர்சனமே தாங்கிக்க முடியாதே. இதைத்தான் தினமும் பாக்கறோமே. இப்போ என்ன புதுசா?

பினாத்தல் சுரேஷ் said...

அய்யனார்,

எச்சரிக்கைக்கு நன்றி. ஆனா கொஞ்சம் லேட்டு:-(

அதைப்பாத்துத் தொலைச்சுட்டேன். வெளியே தெரிஞ்சா வெக்கக்கேடுன்னு மனசுக்குள்ள போட்டு பூட்டிவச்சுகிட்டு இருந்தேன்!

பினாத்தல் சுரேஷ் said...

கார்த்திக் பிரபு,

பாத்துட்டுதானே லிங்க்கே கொடுத்திருக்கேன்.

பினாத்தல் சுரேஷ் said...

மு கார்த்திகேயன்,

அப்படியா மேட்டர்! இவனுங்களுக்கெல்லாம் மக்கள் பெரிசா வைப்பாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

பாபா:

//போக்கிரி படத்துக்கு என்ன குறைச்சல் ;) //

என்ன ஆச்சு உங்களுக்கு?

பினாத்தல் சுரேஷ் said...

ராம்ஸு,

//எனக்குக்கூடத்தான் நிறைய பிடிக்கல. பத்து வேலையத்த தடியன்கள வேலைக்கு வச்சுகிட்டா நாமளும் இனிமே நம்ம கிண்டல் செய்றவங்கள மிரட்டலாமா?//

அந்த மாதிரி எதாச்சும் ஐடியா வந்தா முதல் ஆட்டோ அமீரகத்துக்குதான் அனுப்புவே, அதாலே, வேண்டாம்:-))

பினாத்தல் சுரேஷ் said...

//இது நிஜமாவே நடந்துச்சா இல்ல எதுனாச்சும் இமெயில் பார்வர்ட் ஆர்வமா?//

இந்தப்பதிவுல வந்த பேக்ட்ஸ்:

1. சிவகாசி படம் பண்டல் :-)
2. போக்கிரியைக் கிண்டலடிச்ச பேக்கரி லொள்ளு சபா சூப்பர், ஆணிய சரியா அடிச்சிருந்தது.
3.விஜய் டிவி மன்னிப்பு கேட்டது டிவியில வந்தது.
4. லொள்ளு சபா ஹிட் நிகழ்ச்சி. சன் டிவி கண்ணில் உறுத்தக்கூடிய அளவுக்கு

இந்த உண்மைகளின் வரிகளுக்கு இடையிலும் படிக்கலாம்:-)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு,

அடுத்த படம் "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி".. உங்களை மையமா வச்சு.

மாறன் said...

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். எனது கருத்தும் இதுதான்.

Raga said...

'Sivagasi'yai USD 40 kaasu kuduthu cab vachchu poi parthuttu vandhom!! :-(. idhu nadandthu kitathatta 1.5 varusham irukkum (Seattle). Andha padam parthuttu inime Vijay padamey paarkka koodadhunnu sabadham eduthurukken! :-)
'Perarasu' aatkalai cinema edukkave vidakkoodadhu.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மாறன்.

நன்றி ராகா.. பேரரசுக்கு ஒரு ஸ்டே ஆர்டர் வாங்கினாக்கூட சரிதான் :-)

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

Geetha Sambasivam said...

adathu "bore" adichalum vidathu padathai parthathil onnum kuraichal illai! ithile vimarisanam vereya? :P

Geetha Sambasivam said...

he he he M.Karthik appadithan solluvaru, Agith rasikarache avar!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கீதா, லாங் டைம் நோ ஸீ?

எந்த கண்ராவிப்படமா இருந்தாலும் எயுத்து போடறவரைக்கும் பாத்துத் தீக்கற பாரம்பரியம் நம்முது!

கார்த்திக் என்ன தப்பா சொல்லிட்டாரு?

//மிரட்டி மன்னிப்பு கேட்கச் சொன்னாராம், விஜயின் தந்தை Sஆ சந்திரசேகர்.. இதெல்லாம் உதவுற காரியாமா? //

இதைச் சொல்லறதுக்கு அஜீத் ரசிகனா இருக்கணும்ன்ற அவசியம் இல்லை!

Anonymous said...

haiyaa.. entha padaththaiyum naan pakkaliyE paakkaliyE ...:D vayiru eriyattum ungalukku...


" paakkaama thappichchathu thambiraan punniyam "

 

blogger templates | Make Money Online