Apr 25, 2007

இன்னும் ஒரு பட்டை

பட்டை போடுவது பேஷனாகிவிட்ட இக்காலத்தில் இசைவண்டியில் எகிறிக்குதிக்கும் முகமாக (Jumping the Bandwagon:-))பெனாத்தலார் இந்தப்பட்டையை வழங்குகிறார்.
உங்களுக்குத் தேவையான நிறங்கள், பின் வண்ணங்களிலும் வழங்கப்படும்.
தேவையான நிறத்தைப் பின்னூட்டமிட்டு, வாங்கிக் கொள்ளுங்கள்.
உபயோகப்படுத்துகிறவர்கள் ஒரு பின்னூட்டம் தண்டம் கட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

26 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

பட்டை அடிக்காதவர்களுக்கு நாமமா?

இலவசக்கொத்தனார் said...

வேண்டும் வண்ணங்களில் தருவதாகச் சொன்ன நீங்கள் வேண்டிய வார்த்தைகளைப் போட்டு தருவதாகச் சொல்லாதது ஏன்?

இலவசக்கொத்தனார் said...

//உபயோகப்படுத்துகிறவர்கள் ஒரு பின்னூட்டம் தண்டம் //

படுத்தாதவர்கள் மூணு பின்னூட்டம் தண்டம். கணக்கு சரிதானே? :-D

குமரன் (Kumaran) said...

பினாத்தலாரே. பட்டையில என்ன எழுதியிருக்குன்னே தெரியலையே.

நானும் ஒரு பட்டை போடணும் ஆனா சொற்களை நானே எழுதிக்கிறேன். என்ன வழின்னு சொல்லுங்க.

gulf-tamilan said...

:)))

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தண்ணா, மூணு பின்னூட்டம் இல்ல, 300 போட்டாக்கூட பட்டை போடாம தப்பிக்க முடியாது. உப்புமாவுக்கு நீங்க கூட ஆதரவு தராட்டி எப்படி?

பினாத்தல் சுரேஷ் said...

குமரன், நெஜமாவா தெரியல? எனக்கும் சரியா சிலசமயம் தெரியலை. கொத்ஸ், உமக்கு தெரியுதா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கல்ப் தமிழன்.. கல்ப்லே எங்கே?

இலவசக்கொத்தனார் said...

ஒண்ணுமே தெரியலை பட்டையிலே எனப் பாட வந்த என்னைத் தடுத்தாட்கொண்டு பட்டையில் ரகசியத்தை புட்டுப் புட்டு வைத்த பெனாத்தலாரே, நீவிர் 'வால்'க. உம் 'குற்றம்' வளர்க.

gulf-tamilan said...

jeddah!!!

ஏஜண்ட் NJ said...

@\/@
.|.
656!
*_*

:-))

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

//வேண்டும் வண்ணங்களில் தருவதாகச் சொன்ன நீங்கள் வேண்டிய வார்த்தைகளைப் போட்டு தருவதாகச் சொல்லாதது ஏன்? //

இப்ப சொல்லிடறேன் ;-)

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம் அகைன்,

//ஒண்ணுமே தெரியலை பட்டையிலே எனப் பாட வந்த என்னைத் தடுத்தாட்கொண்டு பட்டையில் ரகசியத்தை புட்டுப் புட்டு வைத்த பெனாத்தலாரே, நீவிர் 'வால்'க. உம் 'குற்றம்' வளர்க.//

பட்டையிலே முதல்லெ அப்லோடிங் ப்ராப்ளம். gif அனிமேஷன் ஸ்டார்ட்டிங்லேயே நிக்குது. இப்ப சரியாப்போச்சு.

அது சரி, இதெல்லாம் ஒரு குற்றமா? நீர் சரியில்லை சாமி!

பினாத்தல் சுரேஷ் said...

மீள்வருகைக்கு நன்றி கல்ப்-தமிழன். நான் துபாய்.

பினாத்தல் சுரேஷ் said...

ஞான்ஸ்,

லாங் டைம் நோ சீ!

கஷ்டப்பட்டுதான் என்னவோ எழுதியிருக்கீங்க, என்னன்னுதான் புரியலை! ஒரு கோனார் நோட்ஸ் பிளீஸ்!

SurveySan said...

அடடா, லேட்டா வந்துட்டீங்களே. சர்வேல சேக்க முடியாம போயிடுத்தே..

நல்ல பட்டை.

ILA (a) இளா said...

சே, நீங்களும் ஏமாத்திட்டீங்களே. ஒருத்தர் கூட நான் நினைக்கிற பட்டயை போடலே. அது எவ்வளவு ருசி தெரிய்ங்களா? பட்டை, கிராம்பு, சோம்பு கசகசா

பினாத்தல் சுரேஷ் said...

சர்வேசன்,

இப்ப இன்னொரு கருத்துக்கணிப்பு நடாத்துவதைத் தடைசெய்வது உம் பாஸிசப் போக்குதானே?

இளா,

அந்தப் பட்டை போட்டுதான் நாங்க உப்புமாவே பண்றது ;-)

Anonymous said...

அய்யோ பாவம். பிச்சை எடுத்து அவார்டு வாங்குனதுக்கு அப்புறம் பின்னூட்டங்களே வர்றது இல்லையாமே உங்களுக்கு

பினாத்தல் சுரேஷ் said...

அனானி, உங்களை மாதிரி ஆளுங்க தயவு இருக்க வரை பின்னூட்டத்துக்கு என்னன்னா பஞ்சம்!

rv said...

பட்டையடித்த படைத்தலைவ!
தான் மட்டுமே தனியே அடிக்காமல் தார்மீக காரணங்களுக்காக தங்களின் குடும்பச் சூழல்களும் வேலைத்தொல்லைகளுக்குமிடையிலும், அடிப்பொடிகளுக்கும் கொடுக்கவேண்டுமென நினைத்து விரும்பி கொடுத்த இந்தப்பட்டையை: தங்களின் தன்னிகரில்லாத சேவையை எண்ணி வாயடைத்து உங்கள் குண்டர் படையில் என்னையும் இணைத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்த வகையில் இனி வெறும் உப்புமாவே போட்டு வருகின்ற என்னை நீங்கள் படையிலிருந்து துரத்தவேண்டிய துரதிருஷ்ட நிலை வராமல் இருக்க தவசதானியம் தர சம்மதமில்லையென்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

இராமநாதன்,

என்னய்யா கமெண்டு இது? அடி நுனி எதுவும் புரியல!

பட்டை வேணுமா வேணாமா?

rv said...

யாருய்யா அது? பெனாத்தலாருக்கு கமெண்ட் வரதில்லேனு சீண்டறது? கொலைப்படை, டுபாக்கூர் கடையெல்லாம் கட்டி தனக்குத்தானே சொறிந்துகொள்ள எங்கள் தன்மானச் சிங்கமென்ன ...... என்றா நினைத்தீர்களா?

பின்னூட்டப்பெட்டகமென இலவசத்தை நியமித்துள்ளார் பெனாத்தலார்.. தெரிஞ்சிக்கோங்க...

Radha Sriram said...

என்ன பட்டைய போடரதுன்னு யோசிச்சு யோசிச்சு நாங்கள்ளாம் சொட்டையாயிட்டா??

உங்களூக்கெல்லாம் கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்வு இருக்கான்னு இந்த இடத்துல நான் ஒரு கேள்விய முன்வைக்கரேன்?!
:):):)

பினாத்தல் சுரேஷ் said...

ராம்ஸு, நன்னி :-)

//பின்னூட்டப்பெட்டகமென இலவசத்தை நியமித்துள்ளார் பெனாத்தலார்//.. முதல்ல உம்மைத்தான நியமிச்சேன்.. நீருதான் டைவர்ட்டு பண்ணிட்டீர்.

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

 

blogger templates | Make Money Online