Apr 26, 2007

வ வா சங்க ஆப்புரேசல்

ஆப்புரேசல் பேரு வச்சுகிட்டு எல்லாரும் புகழ்ந்துட்டுப் போறாங்க!
சிறுபிள்ளத் தனமால்ல இருக்கு? அவிங்க எப்படியாப்பட்ட ஆளுங்க? இந்த ஊரிலே தல அடிவாங்காத இடமே கிடையாது, தெரியுமா?

ஆப்பு வைக்காம அரவணைச்சுப்போனா சங்கத்துச் சிங்கங்கள் பங்கமாயிப்
போயிடுமேன்றதுக்காக நான் ஆப்பே வைக்கிறேன்.

(எனது மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான் இந்த முடிவெடுத்திருக்கிறேன்
என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை)

SWOT அனாலிஸிஸ் ஆவே பண்ணிடறேன். ஆனா, வரிசைப்படி இல்லாம.

முதல்ல வீக்னஸ் Weaknesses (பெசிமிஸ்டிக் பெனாத்தலார் ;-)

சீரியஸான குறைகளை முதல்ல சொல்லிடறேன்.

1. நகைச்சுவைக்கு எவ்வளவோ ஸ்கோப் (அரசியலைக் கிண்டலடிக்கிறது, சினிமாவைக் கிண்டலடிக்கிறது எட்ஸெட்ரா) இருந்தாலும், சங்கத்துச் சிங்கங்களோட கேரக்டரை மட்டுமே வச்சு காமடி பண்றது, பாதுகாப்பான விளையாட்டா இருக்கலாம், ஆனா சீக்கிரமே அலுத்துப்போய்விடும். (இதுவரை இல்லைன்றதையும் ஆறுதல் பரிசா சொல்லி வைக்கிறேன்:-)

2. நகைச்சுவையை வெளிப்படுத்த எத்தனையோ மீடியங்கள் இருந்தாலும்
(போட்டோஷாப் கிம்மிக், வாய்ஸ் ஓவர் விடியோ, மசாலா மிக்ஸ், ப்ளாஷ்
அனிமேஷன்) பெரும்பாலான வ வா சங்க படைப்புகள் நாடகம் போலவே
அமைந்திருக்கிறதும் ஒரு குறை. (மைண்ட் வாய்ஸிலே பாதிக்குப் பாதி வருவதும் அதிகமாகப்போனால் அலுத்துவிடும். லக்கிலுக் அட்லஸா சில போட்டோஷாப் பண்ணாரு, நான் அட்லஸா இருந்தப்ப சிவாஜி ரீ-ரிலீஸ் பண்ணேன்.. இதெல்லாம் விதிவிலக்குகள்தான்.

3. அனுபவ நகைச்சுவை, பொதுமைப்படுத்தப்பட்ட கேரக்டர்கள் என்ற இரு
பாகங்களிலேயே ஏறத்தாழ எல்லா பதிவுகளையும் வகைப்படுத்திவிடலாம். கவிதை,
கட்டுரை, டங் ஆப் ஸ்லிப், ஸ்லாப்ஸ்டிக், அடுத்தவன் செலவிலே சிரிக்கறது..
இதெல்லாம் தேடினாலும் கிடைக்கவில்லை.

ஆக, சுருக்கமாச் சொல்லப்போனா ஒரு பிராண்டு நகைச்சுவை மட்டும்தான் கிடைக்குது. ஆனா,

எண்ணிக் க்ளிக்க பதிவை - க்ளிக்கிட்டு
எண்ணுவம் என்பது டூலேட்டு.

என்ற இணைய வள்ளுவரின் வாக்கினிற்கேற்ப, க்ளிக்கியவன் மனம் கோணாமல், சிரிக்கவைப்பதில் வெற்றிபெறும்வரை ஒரு பிராண்டா இருந்தா என்ன, வெர்ஸடாலிட்டி கிடைக்காட்டாதான் என்ன? மெக்டொனால்ட்ஸ்லே மைசூர் போண்டா கிடைக்குதா? கே எப் சிலேதான் இடியாப்பம்-பாயா கிடைக்குதா?

அடுத்ததா ஸ்ட்ரெங்த் (Strengths):

நிறைகளைச் சொல்லபோனால் சொல்லிக்கொண்டே போகலாம்.

1. நகைச்சுவைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது. காண்ட்ரவர்ஸி
தவிர்த்த நகைச்சுவை வேண்டும் என்பதற்காகவே பொதுவாழ்வில் உள்ள யாரையும் பிடிக்காமல், தனிநபர் தாக்குதலை அறவே தவிர்த்து, சின்ன க்ரவுண்டா இருந்தாலும் அதுலே பீல்ட் அழகா செட் பண்ணி விளையாடுறது.

2. எழுதறவங்களுக்கே பொதுவா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ப்ளாக் வந்துடும், கை ஓடாது. அதிலும் காமடி எழுதறவங்களுக்கு இன்னுமே அடிக்கடி இந்த ப்ளாக் வரும். மூடு, சூழ்நிலை, நேரம் எல்லாம் வாஸ்துப்பிரகாரம் அமைஞ்சிருந்தாலே நகைச்சுவை எழுத்து வர்றது கஷ்டம்.

இந்தப் பிரச்சினைக்கு இவங்க கண்டிருக்க தீர்வு சிம்பிள் ஆனா எபக்டிவ்.
ஒரு ஆளை மட்டும் நம்பாதே - கூட்டத்தை வளைச்சுப்போட்டுக்க. முதல் ஆளுக்கு ப்ளாக் வரும்போது மூணாவது ஆள் பாத்துப்பான், அவனுக்கு வந்தா அடுத்த ஆளுன்னு காமடி எழுதறதுக்குப் பஞ்சமே இல்லாத கூட்டம்

3. ஏற்கனவே இவங்களுக்கு நல்ல கூட்டம் இருந்தாலும், வெளியே போற
சிரிப்புமூட்டிகளையும் மாசத்துக்கு ஒருத்தரா சேத்து விளையாடறதால வர
புதுமை, ப்ரஷ்னெஸ்.

4. நல்ல நிர்வாகம். சீரா பதிவுகள் வருவது கவனத்தில் நிற்க ரொம்ப
முக்கியம். ஆரம்பிச்ச ஜோர்லே எல்லாரும் பங்களிப்பாங்க. கொஞ்ச நாள்
கழிச்சு இங்க ஆணி, அங்க ஸ்க்ரூன்னு ஸ்க்ரூட்ரைவர் அடிக்கக்
கிளம்பிடுவாங்க. எல்லாத்தையும் அரவணைச்சு ஒரு குழுப்பதிவை நடத்தறது எவ்ளோ கஷ்டம்ங்கறது விக்கிக்கு கஷ்டப்படற கொத்தனாரைப் பாத்தபிறகுதான் புரிஞ்சுகிட்டேன். பெரிய இடைவெளி விழாம பதிவுகள் வருவதே நிர்வாகத்தின் திறனைக் காட்டுகிறது.

அடுத்ததா த்ரெட்ஸ் (Threats):

1. ஒரே மாதிரியான பதிவுகளே திரும்பத் திரும்ப வரும் வாய்ப்புகள். வெற்றி
அடையும் பதிவுகள் என்பது பின்னூட்டம் வாயிலாக மட்டுமே கணக்கிடப்படும் நிலையில், இப்படிப் பதிவிட்டால் பின்னூட்டம் வரும் என்று தெரிந்து அடைபட்ட சுழற்சியாக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடலாம்.

2. பின்னூட்டங்களில் நான் தான் பர்ஸ்ட், இப்போதைக்கு அட்டண்டண்ஸ்,
அப்புறம் படிச்சிட்டு வரேன் போன்ற ஒத்தை வரிப் பின்னூட்டங்கள், இது எதோ ஒரு தனிக்குழுவோட டிஸ்கஷன் போர்டு போலத் தோன்றக்கூடியவை. புதியவரை விலக்கிவிடும் அபாயம் கொண்டவை.

கடைசியா ஆப்பர்சூனிட்டீஸ் (Opputunities):

1. புதிது புதிதான பதிவர்களை - நகைச்சுவையாளர்களை உள்ளே இழுக்கலாம்.

2. புதிது புதிதான பார்மட்களில் நகைச்சுவை முயலலாம்.

3. போட்டி என்று வைக்கும்போது சில விதிமுறைகளை அதிகப்படுத்தலாம் -
போட்டிக்கான தலைப்பு அல்லது தீம் போல!

4. தினம் ஒரு ஜோக் மாற்றலாம் - ட்ராபிக் தினமும் இருக்கும்.

ஆக, மொத்தமாக நான் சொல்வதெல்லாம், இன்றுபோல் என்றும் வாழ்க - இல்லை, இன்றைவிடவும் சிறப்பாக என்றும் வாழ்கதான்.

ஆப்பு பந்தத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல அண்ணன் சாத்தான்குளத்தானை அழைக்கிறேன்.

22 பின்னூட்டங்கள்:

நாகை சிவா said...

உண்மையான ஆப்புரேசல் செய்த பினாத்தாலாருக்கு எங்கள் நன்றிகள்.

நீங்கள் கூறிய அனைத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

கடோத்கஜன் said...

ஆப்புரேசல்-ஆ! நா என்னவே, ஆப்பம்-னு நினைச்சு வந்திட்டேன். ஹி..ஹி..

ILA (a) இளா said...

மொதல்ல ஒரு நன்றி! எதுக்குன்னா.. ஆப்புரைசல்ல Appraisal'a பண்ணி இருக்கீங்க. நீங்க சொன்ன கருத்துகளை கவனமா எடுத்துக்கிறோம், பரிசீலிக்கிறோம். இயன்றவரையில் நிறுவி பார்க்கிறோம்.

நன்றியுடன் இளா.

அது சரி அந்த "1" மேட்டரை மறந்துட்டீங்களா?

மனதின் ஓசை said...

நிறை குறைகளை அழகாக அலசி ஆராய்ந்த பதிவு. இது போன்ற பதிவுகள் சங்கத்து சிங்கங்கள் தங்கள் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும்..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகை சிவா..

பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், மற்றவர்கள் இந்த விஷயங்களைத் தொடாததால் நான் எழுதவேண்டியதாகிவிட்டது :-)

கடோத்கஜன், வழி மாறிதான் வந்தீங்க சரி, இந்த மேட்டர் பத்தி எதும் பேசி இருக்கலாமே?

நன்றி இளா.

அந்த 1 மேட்டர் போடுவதற்கான கால தேய வர்த்தமானங்கள் இன்னும் கூடி வரவில்லை (இந்த வார்த்தையை எங்கேயாவது யூஸ் பண்ணிடனும்னு நெனைச்சேன், பண்ணிட்டேன்:-))

நன்றி மனதின் ஓசை.

நாகை சிவா said...

//நன்றி நாகை சிவா..

பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், மற்றவர்கள் இந்த விஷயங்களைத் தொடாததால் நான் எழுதவேண்டியதாகிவிட்டது :-)//

ரொம்ப நல்லது பினாத்தல், சிலர் ஆப்புரைச்சல் எழுதுகிறேன் என கூறிக் கொண்டு சுய புராணம் பாடும் நேரத்தில் ஆப்புரைசலை அழகான அப்ரைசல்....

ALIF AHAMED said...

உண்மையிலே "லைட்டா" போரடிக்குற மாதிரிதான் இருக்கு சங்கத்து பதிவு"கள்"...!!!!

பின்னுட்டமும் குறைவே...!!!

என்னைய போல் உள்ளவனுக்கு தினமும் ஒரு ஜோக்ஸ் அருமையான தீர்வு..!

ஒரு வாரம் முடிஞ்சதும் சென்ற வார ஜோக்ஸ்னு ஒரு பதிவு போடலாம்..

பின்னுட்டங்களை போட்டுட்டு அதுக்கு பப்ளிஸ் பண்ண நிறைய நேரம் எடுக்குது (சங்கத்து சிங்கள் யாராவது ஒரு ஆள் நெட்டுல இருக்காங்க அவுங்க பதிவுக்கு பதில் போடும் போதும் அடுத்தவங்க பதிவுக்கு பதில் போடும் போதும் நான் கண்டவை}பதில் வருதானு refresh பண்ணி பண்ணி ஹும்...


மத்தபடி என்னை பொருத்த வரை ஆணி புடுங்குற இடத்தில் உள்ள மனஅழுதத்தை குறைக்கவே ஜாலியா உள்ள காமெடி, கும்மி, மொக்கை பதிவுகள் படிக்குறேன்.

எனது ஆப்புரேசலையும் சங்கம் கண்சல்ட் பண்ணனும் சொல்லிபுட்டேன் ஆமா...::)))

இலவசக்கொத்தனார் said...

அன்பு பெனாத்தலாருக்கு,

உங்கள் ஆப்புரேசல் கண்டேன். அதனைப் பற்றிய என் கருத்துக்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டுமென்பதால் பின்னூட்டமாகப் பதியத் தொடங்கினேன்.

ஆனால் அது ஒரு பதிவு அளவு நீண்டுவிட்டதால், உப்புமா / மொக்கைப் பதிவு போடும் சந்தர்ப்பம் வந்தால் விடக் கூடதென்ற நம் கொள்கையின் படி அதனை ஒரு பதிவாகவே போட்டுள்ளேன்.

தயவு கூர்ந்து அவ்விடம் வந்து, படித்து, தங்கள் கருத்துக்களை கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
அன்பன் கொத்ஸ்.

(மக்கள்களா, கும்மி அங்க. அதனால எல்லாம் பேக்கப் பண்ணிட்டு அங்க வாங்கலே)

Unknown said...

வந்தேன்! படித்தேன்! சென்றேன்!

பினாத்தல் சுரேஷ் said...

மீண்டும் தாங்க்ஸ் நாகை சிவா.

மின்னுது மின்னல், நன்றி. சொல்லிட்டீங்க இல்ல, அவங்க பாத்துப்பாங்க.

கொத்துஸ், மதுரைக்கு மல்லி விற்கும் உமது ஆசையைக் கண்டோம். விரிவான பதில் பின்னர் வரும். முதலில் என் சிஷ்யர்கள் உம்மைத் துவைத்துக் காயபோடட்டும் ;-)

எனக்கு வர்றதே ஒரு 10-20 கமெண்டு, அதுகூட பொறுக்காம அதை டைவர்ட் செய்துகொள்ளும் உம் திறமையை மட்டும் இப்போதைக்கு பாராட்டுகிறேன்.

டாக்குட்டர்,

வந்தாய் சரி, படித்தாய் சரி, ஏன் சென்றாய்?

இராம்/Raam said...

அண்ணே,

ஆணி அதிகம்.... கொஞ்சநேரத்திலே வாறேன்:))))

வெட்டிப்பயல் said...

ரொம்ப அருமையா விமர்சனம் செஞ்சிருக்கீங்க.. ரொம்ப நன்றி...

வெட்டிப்பயல் said...

நீங்க சொன்னது எல்லாம் ஓரளாவு சரியே!!!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ராயல், வெயிட்டிங்!

நன்றி வெட்டிப்பயல்.

பொதுவாவே குறை சொல்லணும் னு உக்காந்து யோசிக்கறது இல்லை. அப்பப்ப மனசில படறதைச் சொல்றதுக்கு ஒரு சந்தர்ப்பமாவும், எல்லாத்துக்கும் மேலே, சொல்லப்படறவங்க இதைத் தப்பா எடுத்துக்கமாட்டாங்கன்ற நம்பிக்கையும் இருந்ததாலதான் இதை எழுதினேன். வந்திருக்க பின்னூட்டங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. குறை மட்டுமே சொல்லவில்லையே ;)

இராம்/Raam said...

/ஆப்புரேசல் பேரு வச்சுகிட்டு எல்லாரும் புகழ்ந்துட்டுப் போறாங்க!
சிறுபிள்ளத் தனமால்ல இருக்கு? அவிங்க எப்படியாப்பட்ட ஆளுங்க? இந்த ஊரிலே தல அடிவாங்காத இடமே கிடையாது, தெரியுமா? ஆப்பு வைக்காம அரவணைச்சுப்போனா சங்கத்துச் சிங்கங்கள் பங்கமாயிப்
போயிடுமேன்றதுக்காக நான் ஆப்பே வைக்கிறேன். (எனது மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான் இந்த முடிவெடுத்திருக்கிறேன்
என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை)///

ஆஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே???

//1. நகைச்சுவைக்கு எவ்வளவோ ஸ்கோப் (அரசியலைக் கிண்டலடிக்கிறது, சினிமாவைக் கிண்டலடிக்கிறது எட்ஸெட்ரா) இருந்தாலும், சங்கத்துச் சிங்கங்களோட கேரக்டரை மட்டுமே வச்சு காமடி பண்றது, பாதுகாப்பான விளையாட்டா இருக்கலாம், ஆனா சீக்கிரமே அலுத்துப்போய்விடும். (இதுவரை இல்லைன்றதையும் ஆறுதல் பரிசா சொல்லி வைக்கிறேன்:-)//

அந்த பாணியை விட்டு கொஞ்சம் வெளியே வரணுமின்னு தான் டெவில்ஷோ, டவுசர் பாண்டி'ன்னு போயிட்டு இருக்கு... பார்க்கலாம் இன்னும் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களை நகைச்சுவையில் எழுதலாமின்னு ஐடியா இருக்கு... :)

//2. நகைச்சுவையை வெளிப்படுத்த எத்தனையோ மீடியங்கள் இருந்தாலும்
(போட்டோஷாப் கிம்மிக், வாய்ஸ் ஓவர் விடியோ, மசாலா மிக்ஸ், ப்ளாஷ்
அனிமேஷன்) பெரும்பாலான வ வா சங்க படைப்புகள் நாடகம் போலவே
அமைந்திருக்கிறதும் ஒரு குறை. (மைண்ட் வாய்ஸிலே பாதிக்குப் பாதி வருவதும் அதிகமாகப்போனால் அலுத்துவிடும். லக்கிலுக் அட்லஸா சில போட்டோஷாப் பண்ணாரு, நான் அட்லஸா இருந்தப்ப சிவாஜி ரீ-ரிலீஸ் பண்ணேன்.. இதெல்லாம் விதிவிலக்குகள்தான்.///

இதையும் மைண்ட்'லே வைச்சுக்கிறோம் :)

//ஆக, சுருக்கமாச் சொல்லப்போனா ஒரு பிராண்டு நகைச்சுவை மட்டும்தான் கிடைக்குது.///

வெரையட்டி கொடுக்கலாமே :)

இராம்/Raam said...

//அடுத்ததா ஸ்ட்ரெங்த் (Strengths): நிறைகளைச் சொல்லபோனால் சொல்லிக்கொண்டே போகலாம்.//


ஆஹா... :)) ரொம்ப நன்றிண்ணே :)

//1. நகைச்சுவைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது. காண்ட்ரவர்ஸி
தவிர்த்த நகைச்சுவை வேண்டும் என்பதற்காகவே பொதுவாழ்வில் உள்ள யாரையும் பிடிக்காமல், தனிநபர் தாக்குதலை அறவே தவிர்த்து, சின்ன க்ரவுண்டா இருந்தாலும் அதுலே பீல்ட் அழகா செட் பண்ணி விளையாடுறது. //நாமே எப்பவும் சேப் சைட்'லே இருக்கனுமின்னு சொல்லுவாங்க.... அங்க இருந்துட்டு தான் அதெல்லாம் இதை செய்யுறோம் :)

//2. எழுதறவங்களுக்கே பொதுவா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ப்ளாக் வந்துடும், கை ஓடாது. அதிலும் காமடி எழுதறவங்களுக்கு இன்னுமே அடிக்கடி இந்த ப்ளாக் வரும். மூடு, சூழ்நிலை, நேரம் எல்லாம் வாஸ்துப்பிரகாரம் அமைஞ்சிருந்தாலே நகைச்சுவை எழுத்து வர்றது கஷ்டம். இந்தப் பிரச்சினைக்கு இவங்க கண்டிருக்க தீர்வு சிம்பிள் ஆனா எபக்டிவ்.
ஒரு ஆளை மட்டும் நம்பாதே - கூட்டத்தை வளைச்சுப்போட்டுக்க. முதல் ஆளுக்கு ப்ளாக் வரும்போது மூணாவது ஆள் பாத்துப்பான், அவனுக்கு வந்தா அடுத்த ஆளுன்னு காமடி எழுதறதுக்குப் பஞ்சமே இல்லாத கூட்டம//


அடடா உண்மை தெரிஞ்சுப் போச்சா??? :)

//3. ஏற்கனவே இவங்களுக்கு நல்ல கூட்டம் இருந்தாலும், வெளியே போற
சிரிப்புமூட்டிகளையும் மாசத்துக்கு ஒருத்தரா சேத்து விளையாடறதால வர
புதுமை, ப்ரஷ்னெஸ்.//

ஹி ஹி அடுத்த மாசத்து அ.வா :))))))

//4. நல்ல நிர்வாகம். சீரா பதிவுகள் வருவது கவனத்தில் நிற்க ரொம்ப
முக்கியம். ஆரம்பிச்ச ஜோர்லே எல்லாரும் பங்களிப்பாங்க. கொஞ்ச நாள்
கழிச்சு இங்க ஆணி, அங்க ஸ்க்ரூன்னு ஸ்க்ரூட்ரைவர் அடிக்கக்
கிளம்பிடுவாங்க. எல்லாத்தையும் அரவணைச்சு ஒரு குழுப்பதிவை நடத்தறது எவ்ளோ கஷ்டம்ங்கறது விக்கிக்கு கஷ்டப்படற கொத்தனாரைப் பாத்தபிறகுதான் புரிஞ்சுகிட்டேன். பெரிய இடைவெளி விழாம பதிவுகள் வருவதே நிர்வாகத்தின் திறனைக் காட்டுகிறது.//

நன்றி! நன்றி!

இராம்/Raam said...

//அடுத்ததா த்ரெட்ஸ் (Threats): 1. ஒரே மாதிரியான பதிவுகளே திரும்பத் திரும்ப வரும் வாய்ப்புகள். வெற்றி
அடையும் பதிவுகள் என்பது பின்னூட்டம் வாயிலாக மட்டுமே கணக்கிடப்படும் நிலையில், இப்படிப் பதிவிட்டால் பின்னூட்டம் வரும் என்று தெரிந்து அடைபட்ட சுழற்சியாக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடலாம்.//


உண்மைதான்.....

//2. பின்னூட்டங்களில் நான் தான் பர்ஸ்ட், இப்போதைக்கு அட்டண்டண்ஸ்,
அப்புறம் படிச்சிட்டு வரேன் போன்ற ஒத்தை வரிப் பின்னூட்டங்கள், இது எதோ ஒரு தனிக்குழுவோட டிஸ்கஷன் போர்டு போலத் தோன்றக்கூடியவை. புதியவரை விலக்கிவிடும் அபாயம் கொண்டவை//

கட்டாயம் வருங்காலங்களில் அந்த அபாயத்தை தவிர்க்க முயல்கிறோம் :)

இராம்/Raam said...

//ஆப்பர்சூனிட்டீஸ் (Opputunities): 1. புதிது புதிதான பதிவர்களை - நகைச்சுவையாளர்களை உள்ளே இழுக்கலாம்.//

இழுந்தாச்சு இழுந்தாச்சு..... அதை பற்றிய விபரமான பதிவு விரைவில் :)

//2. புதிது புதிதான பார்மட்களில் நகைச்சுவை முயலலாம்.//

கண்டிப்பாக பண்ணலாம் :)

//3. போட்டி என்று வைக்கும்போது சில விதிமுறைகளை அதிகப்படுத்தலாம் -
போட்டிக்கான தலைப்பு அல்லது தீம் போல!//

நல்ல யோசனை :)

//4. தினம் ஒரு ஜோக் மாற்றலாம் - ட்ராபிக் தினமும் இருக்கும்.//

சீக்கிரமே செஞ்சுருவோம் :)

//ஆக, மொத்தமாக நான் சொல்வதெல்லாம், இன்றுபோல் என்றும் வாழ்க - இல்லை, இன்றைவிடவும் சிறப்பாக என்றும் வாழ்கதான்.//


நன்றி! நன்றி!!

// ஆப்பு பந்தத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல அண்ணன் சாத்தான்குளத்தானை அழைக்கிறேன்.//

வாங்க அண்ணாச்சி.. உங்க ஆப்புரைசலுக்கு நாங்கெல்லாம் வெயிட்டிங் :))

பினாத்தல் சுரேஷ் said...

வரிக்கு வரி பதில் சொல்லியிருக்கும் ராம், நன்றி :-)

ALIF AHAMED said...

வவாச பதிவுகளை வெளியிடும் சிங்கங்கள்
சிறப்பு குறியீடை பயன் படுத்தலாம்

எடுத்துகாட்டாக
"வவா சங்க ஆப்புரேசல்"
வவாச டெவில் ஷோ
வவாச புட்சுக்கோ, ஒரு வயசு கொயந்தை பரிசு குடுக்குது

இப்படி முன்னாடி வவாச சேர்க்கும் போது அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் தலைப்பை பாத்து நேரா வந்துடுவேன்..:)

(யாரு பதிவு போடுறாங்கலோ அவுங்க பேரு அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் தெரிவதால் இதுல எங்க (வவாச) கமெடி இருக்க போவுதுனு நெறையா படிக்காம வுட்டுபுட்டேன்:( )

இராம்/Raam said...

/வரிக்கு வரி பதில் சொல்லியிருக்கும் ராம், நன்றி :-)//

ஒரே வரியிலே நன்றி சொன்ன உங்களுக்கும் மீண்டும் நன்றிகள்
:)

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

 

blogger templates | Make Money Online