பொது வாழ்விலிருந்து விலகுகிறார் பினாத்தலார்.
புரட்சிப்பினாத்தலார் தன் தொழிலான பினாத்துவதை விட்டுத் துறவறம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். காரணம் கேட்டதற்கு, கீழ்க்கண்ட செய்திகளைக் காண்பித்தார்.
- தமிழ் கலாசாரத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக நடிகை குஷ்புக்கு தமிழக முழுவதும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்தன. பல்வேறு கோர்ட்டுகளில்வழக்கும் தொடரபட்டன.
- குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது: பா.ம.க.
- தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு பேசிய கருத்துகள் சரியே என
அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகை சுஹாசினிக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.- "குஷ்பு-சுஹாசினி ஆகிய 2 பேர் வீட்டின் முன்பும் துடைப்பம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்று தமிழர் பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கூறியிருக்கிறார்.
- மனோரமா: முதல்வரும் ஒரு நடிகையாக இருந்தவர்தான். அவரே குஷ்பு கூறியது தவறு என்று கூறியிருக்கிறார். முடிந்த விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். நான் படித்தவள் இல்லை. அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.
- தயாரிப்பாளர் கேயார்: குஷ்பு, சுஹாசினி ஆகியோரின் பேச்சு அவர்களுக்கு
வேண்டுமானால் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை ஏற்கமுடியாது. இது கண்ணகி வாழ்ந்த நாடு. விளம்பரம் இல்லாமல் இருப்பதை விட இப்படித் தவறான விஷயங்களைப் பேசி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.- இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக சுஹாசினி மன்னிப்பு கேட்கவேண்டும்.
- கவிஞர் மேத்தா: குஷ்பு விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி கூரையின் மேல் விழுந்து கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சமயத்தில் அதை அணைக்கப் பார்ப்பதுதான் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது.
- தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேச சிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு கொம்பு முளைத்திருப்பது உண்மைதான்.
- இல.கணேசன்: தமிழர்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாகப் பேசுவதா என்று ஆவேசப்படும் தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்புவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சுஹாசினி பேசியுள்ளதாகவே கருதுகிறேன்.
- வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பு, சுஹாசினி போன்றவர்கள் தயாராகிவிட்டனர். இவர்களைத் திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதைக் காட்டினால் அதை இவர்களால் தாங்கமுடியாது.
- திருமாவளவன்: என்னைக் கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்று
குஷ்புவைக் கண்டித்தவர்களைத்தான் சுஹாசினி கூறியுள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கேட்க இவர் யார்? தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டுமாம்.- "என் மீது நீங்கள் குற்றம் சாட்டினால் உங்களையும், உங்கள் தலைவரையும்
கோர்ட்டில் சந்திப்பேன்'' - சுஹாசினி எஸ்.எம்.எஸ்.- எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் - நடிகை சுஹாசினிக்கு சரத்குமார் கண்டனம்
- செயற்குழுவை கூட்டி குஷ்பு மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
இட்லி வடைக்கு (கருத்துக்களை சேகரித்து வைத்தமைக்காக) நன்றி.
3 பின்னூட்டங்கள்:
:)) LOL
வாழ்த்துகள்
there are too many crackpots around so what can you do :)
Post a Comment