Feb 19, 2006

பெரியவங்க தொல்லை (19 Feb 06)

ம்ஹூம்; இந்த பெரியவங்க தொல்லை தாங்க முடியலை!

மனுசனாப் பொறந்தவனுக்கு வேலை இருக்காதா?

எனக்கு வாரம் சனிக்கிழமையிலேதான் ஆரம்பிக்குது. வெள்ளிக்கிழமை லீவுன்னாலும், விட்டுப்போன சில்லறை வேலைகளையெல்லாம் கிடைக்கிற கொஞ்ச கொஞ்ச கேப்லே செஞ்சுகிட்டு கம்ப்யூட்டரை ஆன் கூட செய்ய முடியாம இருந்தேன் நேத்து சாயங்காலம்.

ஆனா பாருங்க இந்த பெரியவங்களை!

ஒருத்தர் என்னடான்ன ராத்திரி மூணு மணிக்கு எழுந்தேன், பதிவு போடறேன்றாரு.

இன்னொருத்தர் அவசரமா, எமோஷனலா பதிவு போடறேன்றாரு..

அப்புறம் நாங்க எல்லாம் எப்பத்தன் "அன்பே சிவம்" பாத்ததைப் பத்தி, அணு அணுவா ரசிச்சதைப்பத்திப் பதிவு போடறதாம்?

அதுக்காக விட்டுட முடியுமா? நான் ரசித்த விஷயங்களைப் பட்டியல் போடுடறேன்.

1. கதாபாத்திரங்களின் பெயர்கள் - (அன்பு)அரசு, (நல்லா) சிவம், (பாலா) (சரஸ்வதி) என்று எல்லாக்கதா பாத்திரங்களுக்கும் இரட்டைப்பெயர், ஒருவருக்குத் தெரிந்த அரைப்பெயர் இன்னொருவருக்குத் தெரியாது என்று இயல்பாக கதையை ஓட்டி இருந்த விதம்!

2. மிகவும் வேறுபடும் கதாபாத்திரங்கள் - ஆனாலும் தினமும் நாம் சந்திக்கும் இயல்பான பாத்திரங்கள் (குடைச்சண்டை போடும், டிஜிடல் காமெராவில் விளையாடும் கம்யூனிஸ்ட்டை விட்டுவிட்டால்:-))

3. பிரசார நெடி வெளிப்படையாகத் தெரியாத புத்திசாலித்தனமான வசனங்கள்.

"தாஜ்மஹால் இடிஞ்சு போச்சின்னா காதல் பண்ணறதை விட்டுடுவீங்களா?" ரஷ்யா உடைந்ததை குத்திக்காட்டும் மாதவனிடம் கமல்.

"பொம்பளைங்களால வீதியிலே நாடகம் மட்டும்தான் போட முடியும்" அவசரமாய் ஜிப் திறக்கும் சகாக்களிடம் பெண் சகாக்கள்

"மனசு மாறிட்டேன், சரி - அதுக்காக கடவுள்னு எல்லாம் சொல்ல்லாதீங்க " -"அப்படி நாத்திகம் பேசக்கூடாது" வெட்ட வந்த சந்தானபாரதியிடம் கமல்.

"என்னுதும் டிஸைனர் ஷூதான் சார், மேட் இன் ஆஸ்பத்திரி" இத்தலிய ஷூவை விற்றுவிட்ட வெறுப்பில் கமலின் ஷூவை மாதவன் வீசிவிட்ட பின்.

"உங்களுக்கு கூடப்பிறந்த பெண்கள் உண்டா" எனக்கேட்கும் ஒரிய ட்ரேன்ஸ்லேட்டர் "You are technically wrong" என்று மாதவனைத் திட்டிக்கொண்டிருக்கும் டாக்ஸி ட்ரைவரிடம்.

"வருத்தப்படாதீங்க அர்ஸ் - பீ பாஸிட்டிவ் - நீங்க AB நெகடிவ்" ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் மாதவனிடம் கமல்.

3. காட்சி அமைப்புகளுக்காக மெனக்கெட்டிருத்தல் -

தண்ணீர் வழிந்தோடும் புவனேஸ்வர் ரயில் நிலையம்,
ஆக்ஸி அஸிட்டிலீன் கட்டிங் செய்யப்படும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டி,
கோழி பறக்கும் ஒரிஸ்ஸா பஸ் கூறை
அந்த இச்சாபுரம் ஸ்டேஷன் மாஸ்டரின் (ஆர் எஸ் சிவாஜி) தெலுங்கு கலந்த ஆங்கிலம்

இவற்றை எல்லாம் நிஜமாகவே பல முறை பார்த்திருக்கிறேன்.. படத்தில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இயல்பு!

இன்னும் நான் ரசித்த ஒவ்வொரு அம்சத்தைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் எனக்கு வேறு வேலை ஓடாது என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.

படத்தை இயக்கியது சுந்தர் சி என்பது கமல் படங்களில் தொடர்ந்து வந்திருக்கும் கேலிக்கூத்து.

திக்கற்ற பார்வதி, நாட்டிய மயூரி போன்ற மெலோட்ராமாக்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாசராவ், கமலோடு மட்டுமே அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் போன்ற படங்களைக்கொடுத்தார்.

மகாநதி, குணா ஆகிய படங்களை "இயக்கிய" சந்தான பாரதி, கமல் இல்லாமல் இயக்கிய படங்களுக்கு ஒரு சாம்ப்பீள் - சின்ன மாப்ளே, ராஜா கைய வெச்சா!

மீரா என்ற சாதாரண காதல் சினிமா, சுஜாதாவின் நல்ல கதையை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய "வானம் வசப்படும்" ஆகிய படங்களுக்கு நடுவில் பி ஸி ஸ்ரீராம் "இயக்கிய" படம் குருதிப்புனல்.

மறுபடி அன்பே சிவம்: இந்தப்படம் தோல்வி அடைந்தது ஒரு சராசரி தமிழ் திரைப்பட ரசிகனாக எனக்கு இழப்பே. தருமியுடன் 100% ஒத்துப்போகிறேன். ஒன்றிரண்டு குறைகள் இருக்கலாம்.. ஒன்றிரண்டு நிறைகளோடு மட்டுமே வரும் படங்கள் கூட பிய்த்துக்கொண்டு ஓடும்போது இது நிராகரிக்கப்பட்டது வருத்தம்தான். இப்படித் தொடர்ச்சியாக நல்ல படங்களைத் தோல்வியுறச்செய்தால், சிவகாசியும் பரமசிவனும்தான் "மக்கள் கேட்கிறார்கள்" என்ற அடைமொழியுடன் பரிமாறப்படும்.

9 பின்னூட்டங்கள்:

manasu said...

///3. பிரசார நெடி வெளிப்படையாகத் தெரியாத புத்திசாலித்தனமான வசனங்கள்./


மிக சரியான வரிகள். அதோடு நல்ல வரிகள் கொண்ட பாடல்கள், anuratha sriram டப்பிங் வாய்ஸ் என நிறைய நல்லவைகள்.

மகாநதியும்,அன்பே சிவமும் அடிப்படை கருத்துக்களில் வேறுபட்டாலும் இரண்டும் மிக நல்ல படங்கள் என்பதில் எந்த வேறுபாடும் இல்லை.

dondu(#11168674346665545885) said...

ரொம்பத்தான் நொந்துவிட்டீர்கள் போலிருக்கிறது? அதான் நான் ஏற்கனவே ஜோசஃபிடம் கூறிவிட்டேனே எங்களைப் போன்ற பெரிசுகள் அடிக்கும் லூட்டியைப் பற்றி.

என்னுடைய கிட்டத்தட்ட அறுபதுவயசில் வெறுமனே கடந்த நான்கு ஆண்டுகள் மட்டுமே கணினியுடன் டச் இருந்திருக்கிறது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லைதான்.

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய, நீங்கள் சுட்டியுள்ள கமல் பதிவிலும் பின்னூட்டமாக இட்டு விடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) said...

உங்களை இப்படியொரு பதிவு போட வைத்த பெருசுகளுக்கு நன்றி சொல்லத்தான் வேணும்.
நீங்கள் வித்தியாசமாய்த் தொட்ட விசயம், கமலின் இயக்குநர்கள்.

ஆனாலும் நீங்கள் சொன்ன படங்களெல்லாம் 'கமல் படங்கள்' தான். யாரும் இயக்குநர்களைப் பற்றிக் கதைப்பதில்லை. பெரும்பான்மையோருக்கு யார் இயக்கியதென்றே தெரியாது. புகழ்ச்சியோ இகழ்ச்சியோ எல்லாம் கமலுக்குத்தான்.

தருமி said...

சந்தான பாரதி (வாசுவோடு) இயக்கிய நல்ல (முதல்..?)படம்: பன்னீர் புஷ்பங்கள். பாவம் அதுக்குப் பிறகு அவருக்கு என்னாச்சுன்னே தெரியலை..

நல்லா கணு கணுவாகவே ரசிச்சிருக்கீங்க...உங்களுக்குக் கரும்பு ருசி தெரிஞ்சிருக்கு :-)

Muthu said...

http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_19.html

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மனசு, டோண்டு, வசந்தன், தருமி & முத்து.

Anonymous said...

Well, the rejuvenation of this film in the blogosphere (and perhaps elsewhere too) due to a SUN TV show is interesting.
Came here thru gilli and read other posts on Anbe Sivam too.

And wasn't "Raja Kaiya Vechaa" by Suresh Kri[sh|ss]na? But the point, anyway, is made! :). Just to add to the anti-list, "Kadamai Ganniyam Kattupaadu" was also by Santhana Bharathi.
But no disrespect to the man who managed to get his name as the director in the credits of two best films of last decade. Definitely not!

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Malathy, Zero (is it poojyapaatha in Tamil?:-)

raja kaiya vecha - I still think it is santhanabarathi! but not so sure.

Krishnan said...

Suresh,

Well written review. Couple of things that you did'nt mention are

1. Songs. Eventhough they are good Are they really essential in this movie? I think the movie would've been more practical without songs. Tamizh padam-na pattu kandippa venduma enna?

2. Kiran. Hey even Kiran can act:-). Her performance was excellent in this movie. It's unfortunate that our movie industry made us to hate her with her later movies. Ofcourse it's her fault to for having choosen vetti roles at later point, hmm Money matters....

 

blogger templates | Make Money Online