மேற்படி இரண்டு கேரக்டர்களையும் நீங்கள் பினாத்தல்களின் டேக் லைனில் சந்தித்திருக்கலாம். இவர்கள் இருவரும் தரும் தொல்லையால் பாதிக்கப்படுவது சுரேஷ்தான். ஒரு சாம்ப்பிள் பாருங்கள்:
அடங்குடா மவனே: உன்னையெல்லாம் எழுதச்சொல்லி யார் அழுதாங்க? ஏன் நீயும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே?
அனுபவச்சிதறல்கள்: என்னுடைய தீராத இலக்கிய தாகம், இந்த சமுதாயத்துக்கு என் கருத்துக்களைக் கூறியே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள் என்னைத் தள்ளுகிறது. என் எண்ணங்களை எழுத்துக்களாக பதிவு செய்வது என் தார்மீகக் கடமை ஆகிறது..
அ.ம : டேய்.. அடங்க மாட்டே நீ? நான் ஒருத்தன் பக்கத்துலே இருக்கும்போதே இந்த ஆட்டம் ஆடறே. உன்னைத் தனியா விட்டா.. அவ்வளோதான்!
அ.சி: என் வலைப்பதிவை இதுவரை 30000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டிருக்கிறார்கள் தெரியுமா?
அ.ம: என்னது? 30000மா? எதோ படத்துலே "நான் வெட்டினாலும் அறுவா வெட்டும்" நு விஜய் சொன்னா மாதிரி நீயே பாத்துகிட்டாலும் ஹிட் கவுண்ட்டர் ஏறும். உண்மையச் சொல்லு - அதுலே குறைஞ்சது 10000 மாவது நீயே பாத்ததா இருக்காது?
அ.சி: "ஒரு எழுத்தாளர் விடை பெறுகிறார்"- என்று நான் எழுதியபோது எத்தனை பேர் நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்பினார்கள் தெரியுமல்லவா?
அ.ம: அதிலே எத்தனை பேர் இப்போ தன் தலைய அடிச்சுகிட்டிருக்காங்க தெரியுமா?
அ.சி: எழுத ஆரம்பித்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே தமிழ்மணம் நட்சத்திரம் ஆக்கப்பட்டேனே மறந்துவிட்டதா?
அ.ம: நானே இந்தப்பேச்சை எடுக்கணும்னு இருந்தேன்.. அது என்னடா நட்சத்திர வாரம்? 5 கமெண்ட்டு, 10 கமெண்ட்டு - இப்போ எல்லாம் பாரு, எல்லரும் 50, 100ன்னு பின்னறாங்க!
அ.சி: பின்னுட்டத்தின் எண்ணிக்கையை வைத்து பதிவை எடை போட முடியாது.
அ.ம: ஆமாண்டா, கமெண்ட்ட வச்சு சொல்லக்கூடாது, ஹிட்டை வச்சு சொல்லக்கூடாதுன்னா எதை வைச்சுத்தாண்டா சொல்லறது?
அ.சி: எத்தனை பேர் பினாத்தல் என்ற பெயர் இப்பதிவுக்குப் பொருந்தாது என்று அதை மாற்றச்சொல்லி இருக்கிறார்கள்?
அ.ம: ஒரு மூணு பேர் இருக்குமா? நூறு பேர்லே ஒரு மூணு நாலு பேர்..
அ.சி: கவிதையிலே முதலாவதாய் வந்தேனே?
அ.ம: அந்தப்பேரை கவிதைகளைக் கிண்டல் அடிச்சு கெடுத்துகிட்டயே?
அ.சி: சிறுகதையிலும் முதலாவதாய் வந்தேனே?
அ.ம: அதைத்தவிர வேற எந்தக்கதையாவது உருப்படியா, நாலு பேர் படிக்கற மாதிரி எழுதி இருக்கியா?
அ.சி: நான் போட்ட பிளாஷ் நகைச்சுவை யெல்லாம் எவ்வளவு வரவேற்பு பெற்றது.. பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்?
அ.ம: பிளாஷ் உனக்கே சரியாத் தெரியாது.. தெரிஞ்சவங்க - நாராயணன், ஹல்வாசிட்டி விஜய் மாதிரி ஆளுங்க எல்லாம் ரெகுலரா பிளாஷ் போட ஆரம்பிச்சா அப்ப தெரியும் உன் பவிஷு.
அ.சி: அவள் விகடன்லே என் பதிவு வந்ததையுமா மறைக்கத் துடிக்கிறாய்?
அ.ம: தினமலர்லே எல்லார் பேரும் வந்துடிச்சி - உன் பேர் இன்னும் வரலையே அதுக்கு என்ன சொல்லறே?
அ.சி: இந்தப்பதிவு என் நூறாவது பதிவு.
அ.ம: ஆமா, ஏறத்தாழ ஒண்ணரை வருஷத்துலே நூறு பதிவு.. எத்தனையோ பேர் ஒனுன்ரெண்டு மாசத்துலே நூறு போடறாங்க தெரியுமா?
அ.சி: எண்ணிக்கையை வைத்துத் தரத்தை அறிய முடியாது.
அ.ம: இதுதாண்டா லிமிட்! குவான்டிடி கம்மியா இருந்துட்டா, குவாலிட்டி அதிகம்னு ஆடுவியோ? அப்போ கம்மியா எழுதறவனெல்லாம் ஹை குவாலிட்டி, நெறய எழுதறவனெல்லாம் லோ குவாலிட்டின்றயா? உனக்கு கொழுப்பு கொறயவே இல்லடா! நீ அடங்க மாட்டே? ஓடுறா!
இப்படியாக, இன்றைய சண்டையிலும் அடங்குடா மவனே கட்சிதான் வெற்றி பெற்றது.
23 பின்னூட்டங்கள்:
Congrajulations on your 100th post... :)
என்னாங்க இது? உண்மைச் சம்பவமா அல்லது (உண்மை) கனவா?
ஆனாலும் உங்க 'அனுபவச் சிதறல்' ரொம்ப அடக்கமான character-ஆகத்தான் தெரி்யுது.
100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அ.சி: 100-வது பதிவுக்கு வாழ்த்து(க்)கள்!
அ.ம: இன்னும் எத்தினி பதிவு போட்டு உசுர வாங்கறதா உத்தேசம்!
:-)))
மனமார்ந்த வாழ்த்துகள் சுரேஷ்பாபு
மேலும் பல கவனிக்கப்படவேண்டிய பதிவுகள் பதிய வாழ்த்துகள்.
அடங்குடா மவனே&அனுபவச்சிதறல் தொடர்ந்து சர்ச்சை வாக்குவாதம் தொடரணும் ஐநூறாவது பதிவு வரையிலும்.
அந்த சுரேஷ்பாபு இப்ப வர்றதேயில்லையா
அனுபவச்சிதறல் டைடில் கூட நல்லா இருக்கு பெனாத்தலாரே
நன்றி தேவ்.
துபாய்வாசி, கனவா மாறாத முழு உண்மைங்க இது (அப்படி என்ன சந்தேகம்?)
தருமி, அடக்கமான கேரக்டரா இல்லாம இருந்தா இன்னொருத்தர் வாழ வுட்டுடுவாரா?
ஞான்ஸ்.. அ ம உம்ம உண்மைக்குரலா? இருக்காதே.. நம்ப முடியவில்லை! வில்லை வில்லை!
மதுமிதா. - நன்றி. அந்த சுரேஷ் பாபுன்னு யூ கே பார்ட்டிய சொல்லறீஙளா? காணாம போன லிஸ்ட் பெரிசாகிட்டே வருது.. யாராவது ஒருத்தர் கம்ப்பைல் பண்ணனும்..
பிடிங்க நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்.
அடுத்து ஆயிரம் பதிவுகள் போட்டு அபூர்வ பெனாத்தலாராகி விடுங்கள்.
ஹிட்டு படம் ஓட வேண்டிய நாட்களுமே நூறு
படிக்கிறவன் வாங்க வேண்டிய மார்க்கு்களும் நூறு
கிரிக்கெட்டில் பேரெடுக்க போடணம் பல நூறு
பெரியோரும் வாழ்த்திடுவாங்க 'வாழணும் ஆண்டு நூறு
பந்தாவான பதிவிலே வரும் பின்னூட்டம் நூறு
பெனாத்தலார் போட்ட பதிவுமிப்ப நூறு
வாழ்த்துக்கள் சுரேஷ்.
நன்றி மணியன்!!
நன்றி இலவசக்கொத்தனார்!!!!
வாழ்த்துகள் சுரேஷ். இன்னும் நிறைய பெனாத்தி மற்றவர்களை பெனாத்த வைக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். :-)
:-)
வாழ்த்துக்கள் பெனாத்தலாரே. இன்னும் நிறைய பதிவுகள் போட்டு இன்னொரு முறை தமிழ்மண நட்சத்திரமாகி... சரி வாழ்த்துறது வாழ்த்தறோம் பல முறைன்னு சொல்லிட்டுப் போகலாம்...பல முறை தமிழ்மண நட்சத்திரமாகி, தினமலரிலும் விகடனிலும் பல முறை உங்கள் பதிவுகள் பற்றி வந்து, உங்கள் கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் பல முறை முதல் பரிசு பெற்று...அடங்குடா மவனே சீக்கிரம் அடங்கிப் போக வாழ்த்துக்கள்.
பினாத்தலாரே,
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..அடுத்த முறை நட்சத்திரமாகும்போது ஆயிரம் பின்னூட்டங்கள் வாங்கி இலவச கொத்தனாரின் சாதனையை முறியடிப்போம்..கவலைபடாதீங்க...
அதுவரை அடங்குடா மவனை அடங்க சொல்லுங்க(?)..அனுபவ சிதறலை ஊக்கப்படுத்துங்க
அய்யா முத்து,
சந்தடி சாக்குல நம்ம மேல கையை வைக்கறீங்களே.... இது நியாயமா?
பெனாத்தலார் அதெல்லாம் பத்தி கவலைப் பட்டாரா? இந்த மாதிரி ஏத்திவிட்டு வேடிக்கை பாக்கறீங்களே. :)
வாழ்த்துக்கள் சுரேஷ்..
பெனாத்தலாருக்கு வாழ்த்துக்கள்!
நன்றி G.Ragavan,நற்கீரன், குமரன் (Kumaran), முத்து ( தமிழினி), ராம்கி, ஜோ / Joe !
உங்க பினாத்தலே இப்படின்னா...கொஞசம் ஸீரியாசா எழுதுங்களேன், எப்படித்தானிருக்குன்னு பாக்கலாம். வாழ்த்துக்கள், இன்னும் பல நூறு பதிவுகளுக்கு....
vazhthukkal Suresh!
vasikkum pothu manathai lesaga vaippathal unga ezhukku eppavum vasagarkal irupparkal(Naanga ezhutha arambikkatha varaikkum!)
All the best for your century.
As Mr.Hariharans told, why dont you try to write some serious matters as trial?
Note: If 25 comments are not soming then you may stop writing serious matters
நன்றி ஹரிஹரன்ஸ், பாவை.
சீரியஸா எழுதறதா? சட்டியில இருந்தா அகப்பைலே வராதா? Anyway உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.
உங்க ஸ்ப்ளிட் பர்சனாலிடியை எப்படியாச்சும் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிடுங்க. அப்புறம் அடங்குடா மவனே பெருசா வளந்து www.அடங்குடாமவனே.com ஆரம்பிச்சு உங்க பதிவைப் படிக்கறவங்களையெல்லாம் கும்பிபாதம் பண்ணிட போறாரு!
Post a Comment