தொழில் ரீதியாக சில வினாத்தாள்களைத் தயார் செய்ய வேண்டி இருந்தது.
வினாத்தாள் தயாரிக்கும் முறைகளைப்பற்றி பலவிதமான வழிகாட்டுதல்களும், எப்படி வினாக்களை அமைக்கக் கூடாது என்பதற்கும் பல சித்தாந்தங்கள் நிலவுகின்றன, அவைபற்றி பல வலைத்தளங்களும் உள்ளன.
எதேச்சையாக, நேற்று, ஹார்மிங்ஹாம் பலகலைக்கழகத்தின் வலைத்தளத்துக்குள் நுழைந்தேன். தங்கச்சுரங்கத்தைக் கண்டவன் போல குதூகலப்பட்டேன்.
தொழில்நுட்பக் கேள்விகளில் இருந்து, மனோதத்துவக் கேள்விகள் வரை.. அரசியல் கேள்விகளிலிருந்து, தனி மனிதக் கேள்விகள் வரை.. எல்லா விதமான சோதனைகளும் உள்ளன.
நான் பார்த்தவைகளில் வியந்தது, மனோதத்துவக்கேள்விகள்தான்.
வழக்கமாக, மனோதத்துவக் கேள்விகளுக்கு விடை அளிப்பது மிகவும் சுலபம். என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக்கணிப்பது பெரும்பாலான நேரங்களில் சாத்தியமே, எனவே முடிவில் வரும் ஆரூடம் நம் பொய் சொல்லும் திறனுக்கு ஏற்பவே அமையும்.
ஆனால், ஹார்மிங்ஹாம் பலகலைக்கழகத்தின் கேள்விகளில் தனிச்சிறப்பு என்னவென்றால், நம் பதிலைக் கொண்டு விடை வருவதில்லை. கேள்வியைப்படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம், மவுஸ் பாயிண்ட்டரின் அலைபாய்தல், பதிலளிக்க எடுக்கும் அவகாசம் ஆகியவையும் சேர்த்து மதிப்பிடப்படுகின்றன. நான் முயற்சி செய்த பல சோதனைகளிலும், சரியான விடையே வந்தது. ஏறத்தாழ இது ஒரு மனோதத்துவச்சோதனை போலத்தான்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கேள்வித்தாள்களை நாமேவும் உருவாக்க முடியும். கேள்விகளை அளித்து, பதில்களுக்கான வெயிட்டஜையும் கொடுத்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் நம் பர்ஸனலிஸ்டு கேள்விக்கான flash தயாராகிவிடுகிறது. (கட்டணச்சேவை - எனவே லிங்க் கொடுக்கவில்லை)
தற்போதைய வலைப்பதிவு சண்டைகளில் பெரிதும் அடிபடும் நேர்மையைப்பற்றி நான் ஒரு சோதனைக் கேள்வித்தாள் தயாரித்தேன்..
முயற்சித்துப் பாருங்கள்!
Feb 8, 2006
சுய பரிசோதனை - உங்கள் நேர்மை பற்றி Flash (08 Feb 06)
Subscribe to:
Post Comments (Atom)
27 பின்னூட்டங்கள்:
யோவ் பெனாத்தல் வெளிய வா ஒன்ன கவனிச்சுக்கிறேன்..
:) சரியாக ஏமாந்துபோனேன்...
என்னையே நான் திரும்பிப்பார்பதுப் போல இருக்கிறது. இவ்வளவு சரியாய் என் நேர்மையின் அளவை கணித்து சொன்ன நீவீர் வாழ்க! வாழ்க!
சுரேஷ்
என்னது நேர்மை 100% வந்திட்டுது? நான் பாதி பொய்தான் சொன்னேன்! இது உங்க சொந்தக் கைவண்ணம்தானே?
மிக அருமையான பிளாஷ் வடிவமைப்பு மற்றும் கருத்துரு. இப்படி நிறைய பண்ணி பட்டாசாய் கொளுத்துங்கள்.
இணைய இணைப்பில் தொடர்ந்து பிரச்சினை உள்ளதால் பின்னூட்ட மட்டுறுத்தல் சற்றுத் தாமதப்படும். அதற்காக தங்கள் பின்னூட்டங்களை இடாமல் சென்று விடாதீர்கள்.
I got the result in 72 digits!
:-)
ஹார்வார்டை மிஞ்சும் அளவு உட்பொருளுடன் நேர்மையாக என்னைக் கணித்து சொன்னதற்கு நன்றி :-D
ஹார்வார்டை மிஞ்சும் அளவு உட்பொருளுடன் நேர்மையாக என்னைக் கணித்து சொன்னதற்கு நன்றி :-D
பெனாத்தலாரே,
டூ மச்!
எந்தப் பரிசோதனையும் செய்யவில்லை...!!!
மட்டுறுத்தலில் மீண்டும் பிரச்சினை.. சில பின்னூட்டங்களை இப்போது இட முடியவில்லை. போராடிக்கொண்டிருக்கிறேன். உங்கள் புரிதல் இருக்கும் என்பதால் முன்கூட்டிய நன்றிகள்.
கொஞ்சம் வெற்றி.. இன்னும் சில பின்னூட்டங்கள் பாக்கி. சிறில் அலெக்ஸ், ராமனாதன், ஒளியினிலே மற்றும் தாணுவின் பின்னூட்ட்ங்கள் விடுபட்டுள்ளன.
முயற்சித்துப் பார்த்த அனைவருக்கும் நன்றி.
உஷா, பாபா, நன்றியை ஹார்மிங்ஹாம் பல்கலைக்குச் சொல்லுங்கள்.
ஞான்ஸ், ஏதோ தப்பு செய்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது:-))
நன்றி தமிழ்பயணி.
சிறில் அலெக்ஸ், ராமனாதன், ஒளியினிலே மற்றும் தாணுவுக்கும் நன்றி.. அவர்கள் பின்னூட்டங்கள் விரைவில் பதிப்பிக்கப்படும்.
Hey this is not fair, it's not even April 1st. :-(
சும்மா ஜாலிக்குத்தான் கிருஷ்ணன்.. ஏப்ரல் ஒன்னு மட்டுமா Fools day?
satheesh, why not? I am sure you will get a right result also
பின்னூட்டங்களே சொல்லிடுச்சு ஏதோ வில்லங்கம்னு! ஆனாலும் சும்மாவா போக முடியுது?!
இது எப்படி 'பதிவர் வட்டம்' ஆகும்? இதுவும் 'நகைச்சுவை/நையாண்டி' என்றல்லவா இருக்க வேண்டும்?
தமிழ்மணத்திற்கு யாரவது " நக்கல் " என்ற புதிய பிரிவை உருவாக்க சொல்லக் கூடாதா? தாங்க முடிய வில்லையே?
ஷங்கர்
(உங்கள் ஊர் தான்)
நிர்மலா, நன்றி.. இதுக்குத்தான் கொஞ்சம் பின்னூட்டங்களை ஹோல்ட் பண்ணி வச்சிருந்தேன். அப்புறம் அது தப்புன்னு பப்ளிஷ் பண்ணிட்டேன். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
துபாய்வாசி, நன்றி. நகைச்சுவை / நையாண்டின்னு போட்டிருந்தா உஷார் ஆயிட்ட்ருக்க மாட்டீங்களா? (எங்கள் ஊர்னா - வேலூரா, துபாயா?, sudamini at gmail dot comக்கு ஒரு மின்னஞ்சல் போன் நம்பருடன் அனுப்புங்க, பேசலாம்)
உண்மை, நன்றி.
யோவ்! உமரு இம்சைக்கு அளவே இல்லையா?
ஆமா, ஏன் உங்க பதிவில் பின்னூட்டங்கள் மட்டும் டப்பா டப்பாவா வருது? கொஞ்சம் பார்த்து சரி பண்ணுங்க. நிறைய பேர் இன்னும் என்னை மாதிரி பழைய 98தான் உபயோகப் படுத்தறாங்க.
யோசிப்பவர், நன்றி. (இந்த மாதிரி கமெண்ட்ட எதிர்பார்த்துதானே பதிவே போடறேன்!)
என்ன பிரச்சினை தெரியலையே.. எதை மாத்தணும்னு யாராச்சும் சொன்னீங்கன்னா செஞ்சிட்டுப் போவேன்..
:-))
வரலாறுக்கு அப்றம் கணக்கியலா[Acccounting]? (இல்ல சோதனையியலா [Testing])
தப்புதான்! தப்புதான்!!
இனிமே இந்தப் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டேன்...
பிச்சிட்டிங்க... ரிலாக்சாயிட்டேன்...
சும்மா பாத்துட்டு போயிடலாம்-னு தான் வந்தேன்.
சின்ன நப்பாசை.
கை துறு துறுங்க
100% கிடைச்சாச்சு.
நம்பிக்கையில்லாமையா வந்தோம்.
ஏதோ போட்டுப் பாக்கலாமேன்னா
கேள்வி கேக்கிறது நியாயமாய்யா சுரேஷூஊஉ
நூற்றுக்கு நூறு சரி.
( Smiley போடவேண்டுமென்று தெரிகிறது, எதை என்று போடுவது ... :)) , :(( நற.நற..)
Thanks Gopi, Santhippu, mathumithaa & Manian
ayyo...kannai katuthe...:))))))
vittil flash illai..athan late...
eppidiya ithallam?
Post a Comment