Oct 2, 2006

சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா வலைப்பதிவுகளை? (02 Oct 06)

தவறி வந்திருந்தால் மன்னிக்க, வலைப்பதிவில் நடக்கும் சண்டைகள், திட்டுகள், கருத்து சுதந்திரம் / வன்முறை பற்றியெல்லாம் இந்தப்பதிவு பேசப்போவதில்லை. இப்படி எழுதுங்கள், இவற்றை எழுதுங்கள் என்னும் அட்வைஸும் கிடையாது.

வேறு என்ன?

வலைப்பதிவுகள் என்பது என்ன?

தனிப்பட்ட நாட்குறிப்பா? ஆமெனில் ஏன் தமிழ்மணம் தேன்கூடு போன்ற திரட்டிகள் தேவைப்படுகின்றன? நாலு பேர் படிக்கத்தானே எழுதுகிறோம்..

நண்பர்களைச் சந்திக்க ஒரு தளமா? எத்தனையோ பாரம்கள், சாட் ரூம்கள் அதற்காக இருக்கின்றனவே..

அச்சு ஊடகங்களின் அடுத்த அவதாரமா? என் கருத்துப்படி ஆமாம்.

ஆனால் அடுத்த அவதாரம் என்று சொல்ல முடியுமா?

ஊடக மாற்றங்கள் ஒவ்வொன்றிலும், புது ஊடகத்தின் தனித்தன்மை வெளிப்படும்போதுதான் புது ஊடகம் நிலைபெறுகிறது.

தெருக்கூத்து போலவே இருந்தவரை நாடகங்களோ, நாடகங்கள் போலவே இருந்தவரை திரைப்படங்களோ, திரைப்படங்களே இருந்தவரை சின்னத்திரையோ பெரும் வளர்ச்சி பெறவில்லை. அரங்க அமைப்புகள் என்ற தனித்தன்மையால் நாடகங்கள் நின்றன, வெளிப்புறப்படப்பிடிப்பு என்ற தனித்தன்மையால் திரைப்படங்கள் நின்றன, உடனடி ஒளிபரப்பு என்பதால் சின்னத்திரை நின்றது.

எனவே, வலைப்பதிவுகள் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டுமானால், அச்சு ஊடகங்களால் முடியாத தனித்தன்மைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.

உடனடியான பின்னூட்டங்கள், ஹைப்பர்லிங் சுட்டிகள் ஆகிய வலைப்பதிவின் தனித்தன்மைகளை ஏறத்தாழ எல்லாரும் பயன்படுத்துகிறோம்.

Podcasting போன்ற விஷயங்களை வைத்து ஒலி வலைப்பதிவுகள் வந்து, வானொலி, அச்சு ஊடகம் இரண்டுக்கும் மாற்றாக, அவற்றைவிட உயர்வாக வரும் பதிவுகள் மிகச்சிலவே உள்ளது வருத்தமே.

குறும்படங்கள், படத்துணுக்குகள் ஆகியவற்றை இணைத்து வரும் பதிவுகளில் பெரும்பாலானவை நமது தயாரிப்பாக இல்லாமல், Forwarded Mail வகையைச் சார்ந்தே இருப்பதால், தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியில் அவற்றைச் சேர்க்க இயலாது.

என்னுடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை ஃப்ளாஷ் மென்பொருள் உதவியோடு நான் செய்யும் முயற்சிகளே.
அதற்கு முக்கிய காரணம், அவற்றின் இடையூடாடும் தன்மை (Interavtivity). அச்சு ஊடகங்களால் முடியாத, கணினிக்கே உரிய தனித் தன்மை.


கொஞ்சம் ஐடியா, கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் யார் வேண்டுமென்றாலும் ஃப்ளாஷ் தயாரித்துவிடலாம். - நான் ஃப்ளாஷ் எந்தப்பள்ளியிலும் படிக்கவில்லை, மென்பொருளை வைத்தே Help Files வழியாகக் கற்றுக்கொண்டது மட்டும்தான். - இத்தனைக்கும் நானே சொல்லியிருக்கும் தேவைகள் இரண்டிலுமே நான் சராசரிக்குக் கீழ்தான்.

இதன் சாத்தியங்கள் வியப்பூட்டுகின்றன. சிவாஜி போல மிமிக்கிரி செய்த நகைச்சுவையும் உள்ளிட முடிகிறது, உங்கள் கருத்துக் கணிப்பு போல கணக்கிட முடிகிறது, பரமபதம் போல நடிகன் அரசியல்கட்சி துவங்குவதைப்பற்றி கிண்டல் செய்ய முடிகிறது, குட்டிக்கதைகளுக்கு Database அமைக்க முடிகிறது.. ஐடியா உருவான 2 - 3 நாட்களிலேயே இவற்றை வடிவமைத்துவிட முடிகிறது.

எனக்குத் தெரிந்ததால் ஃப்ளாஷ் பற்றி விளம்பரம் அளவிற்கு எழுதியுள்ளேன். வேறு ஏதாவது இன்னும் உத்தமமான மென்பொருள் இருந்தால் பின்னூட்டுங்களேன்.

தமிழில் ஒரு ஐக்யூ தேர்வை வடிவமைத்துள்ளேன், நாளை வலையேற்றுகிறேன்.

13 பின்னூட்டங்கள்:

சரவணகுமார் said...

தவறிதான் வந்துவிட்டேன்...இருந்தாலும் மன்னிக்க போவதில்லை..ஏனெனில் பதிவு நல்ல விஷயம் பற்றி பேசுகிறது...

அதாவது (info sharing)

என்ன மூணு சீட்டுல வர்ர ஃப்ளாஷைத்தவிர நீங்க சொல்லியிருக்கும் ஃப்ளாஷ் பத்தியெல்லாம் நமக்கு தெரியாது...

ஐ..க்யு பதிவை வலையேற்றுங்களேன்... ஒருத்தரு இப்பதான் நம்மளை அதி மே"தாவி" அப்படீன்னு சொல்லிகீறார்..கரீட்டா பாத்துறலாம் :))))

பினாத்தல் சுரேஷ் said...

மன்னிக்காததற்கு நன்றி சரவணகுமார்:-))

நாளை ஏற்றிவிடுகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

ஹை!க்யூ தேர்வா? பேஷ் பேஷ். சீக்கிரம் போடுங்கோ.

ஆனா அதைச் சொல்ல ஒரு பதிவா? இது கொஞ்சம் ஓவராத் தெரியலை! :)

பினாத்தல் சுரேஷ் said...

ஐயா இலவசம்,

அதைச் சொல்லவா இந்தப்பதிவு?

மத்ததையும் படிச்சு பாருங்கய்யா!

இலவசக்கொத்தனார் said...

ஹிஹி... புரிஞ்சதைப் பத்தி மட்டும்தானே பேச முடியும்.... :D

ALIF AHAMED said...

நானும் ஃபிளாஷை உங்களை போலவே முணு நாலு ஐந்து நாளுபடிச்சி ச்சிச்சி இந்த பழம் புளிக்கும் அப்படினு விட்டுட்டேன்.

இதோ இப்ப இன்ஸ்டால் பண்ணிட்டேன் விட போவதில்லை இந்த முறை...!!!

நன்றி நன்றி

enRenRum-anbudan.BALA said...

ஐயா சுரேசு,

நல்ல பதிவு ! நீங்க நல்லவரு, ஃப்ளாஷ்-ல வல்லவரு, நமக்கு அவ்ளோ மென்பொருள் அறிவெல்லாம் கெடையாதுங்க :))

Anonymous said...

Dear friend, you missed the point totally! this blogging is not about technology! flash or php or asp or dotnet or vector graphics. it is about expression and creation of content and more than that FREEDOM! So what to creat.. what to share... what to propogate as citizen's journalism... sorry we can not say the possibilities...

பினாத்தல் சுரேஷ் said...

மின்னல்,

விடாதீங்க! ரொம்ப சுலபம்தான், பவர்பாயிண்ட விட சுலபம்தான்.

பாலா,

நானே இதெல்லாம் செய்யும்போது உங்களால முடியாதா என்ன?

இணைய நாடோடி,

நீங்கள் சொல்வது முற்றும் சரி! வலைப்பதிவு என்பது உணர்வுகளை வெளிப்படுத்துதல், சுதந்திரம், எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொள்கிறேன். தொழில்நுட்பத்தை வைத்து அந்த சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கலக்கலாமே என்றுதான் நான் சொல்கிறேன்.

மதி said...

சுரேஷ்,

இந்தப் ப‌திவு technology ப்ப‌த்தி இல்லன்னாலும், flash ப‌த்தி நீங்க தெரிஞ்சுகிட்ட‌த த‌னியா ஒரு ப‌திவு போடுங்க‌. Hellp file பாத்து புரிஞ்சுக்கிறத விட‌, அத முய‌ற்சி செய்ற‌ உங்கள மாதிரி ஆளுங்க சொன்னா, என்ன மாதிரி cut & paste ஆசாமிக‌ளுக்கு கொஞ்சம் ச‌ட்டுன்னு புரியும்.
(ப்ளாக்ஸ்பாட் தடை தாண்டுவது ப‌த்தியெல்லாம் technical லா எழுதிதான் ப‌ழ‌க்கம் உண்டே)

பினாத்தல் சுரேஷ் said...

மதி,

எனக்குத் தெரிஞ்சதைப்போட்டால் இவ்வளவு சின்ன பதிவான்னு கேப்பீங்க!

போட்டுடலாம், ஆனா நான் உப்யோகப்படுத்தற FLASH5 ஐத்தாண்டி டெக்னாலஜி எங்கேயோ போயிடுச்சே:-((

Anonymous said...

naan adikkarathu thaan bloggu...

mathavan ellam beeggu'nu ..

ithai direct'a solli irukkalame neenga?

பினாத்தல் சுரேஷ் said...

அன்புள்ள அனானி,

நான் அப்படிப்பட்ட தொனியில் எழுதியிருப்பதாக நினைத்தால் மன்னிக்கவும். மற்றவர்களைக் குறை கூறி என்னைப்பெருமைப்படுத்திக் கொள்ளவேண்டிய அளவுக்கு "அடங்குடா மவனே"க்கு எந்த அவசியமும் இல்லை:-))

 

blogger templates | Make Money Online