Oct 11, 2006

கெமிக்கல் லூச்சா!

எனக்குப்பிடித்த ஒரே இந்தி நகைச்சுவைப்படம் "அந்தாஸ் அப்னா அப்னா" இரண்டு தமிழ்ப்படங்களைத் தழுவியிருந்தாலும் (பொம்மலாட்டம், நான்) ஆமிர்கானின் அசத்தல் நடிப்பு குறைகளை மறக்கச் செய்தது. மற்றபடி முழுநீளக்காமெடியை பெரும்பாலும் இந்திக்காரர்கள் முயற்சிப்பதில்லை. ஏனென்று தெரியவில்லை. "பண்டி அவுர் பப்ளி" காமெடிப்படம் என்று என்னிடம் சொன்னவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

முன்னாபாய் பார்க்காமல் வசூல்ராஜா பார்த்ததால், முன்னாபாயில் காமெடி எவ்வளவு எனத் தெரியவில்லை, இருந்தாலும், கமல்-கிரேஸி கூட்டணியிலேயே காமெடி அவ்வளவாக இல்லையென்பதால், முன்னாபாய் மேல் அவ்வளவு நம்பிக்கையில்லை. அதன் இரண்டாம் பாகம் மட்டும் என்ன பெரிசாக இருந்துவிடப்போகிறது என்று அசட்டையாக இருந்தாலும், மோகன் தாஸ் தொடங்கி தம்பி வரையிலான வலைப்பதிவு விமர்சனங்கள், ஓ பக்கத்தில் ஞாநி என்று ஊக்கிக்கொண்டே இருக்கவே கிளம்பியே விட்டேன் - இப்படம் இன்றே கடைசி என்று போர்டு ஒட்டிய நாளில்!

கதையைப் பலர் சொல்லிவிட்டார்கள். காந்தியின் புத்தகங்களைப் படித்த தாதா முன்னாபாயின் கண்ணுக்குள் "கெமிக்கல் லூச்சா" (ஹலூஸினேஷன் -ஆம்) வாக காந்தி தெரிய ஆரம்பித்து, சின்னி ஜெயந்த் போல லவ் சக்ஸஸ் ஆவதற்கு ஐடியா கொடுத்து, லஞ்சம், ஊழல், குப்பை போடல், ந்யூமரலாஜி, செவ்வாய் தோஷம் உள்ளிட்ட எல்லாப்பிரச்சினைகளுக்கும் அஹிம்சைத் தீர்வும் கொடுக்கிறார். அஹிம்சையை போதிப்பது தெரியாமல் உள்ளே நுழைத்த விதமும், பொழுது போவதே தெரியாமல் அழகாகப் பின்னப்பட்ட திரைக்கதையும் படத்துக்குப் பெரிய வலு.

முக்கியமாக குறிப்பிட வேண்டியவை:

1.ஹர்ஷத் வார்சி - கலக்கியிருக்கான் மனுஷன்! ஒவ்வொரு முகபாவமும் சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு சேம்பிள் டயலாக்:

சர்க்யூட் (ஹர்ஷத்) - 116 வீட்டை காலி பண்ணியிருக்கோம், 200 பேர் எலும்பை முறிச்சிருக்கோம் - இதுவரைக்கும் ஒருமுறை கூட ஜெயிலுக்கு வந்தது கிடையாது. அஹிம்சைன்னு ஒரு சாரி சொல்ல ஆரம்பிச்சொம், ஸ்ட்ரெயிட்டா ஜெயிலுக்கு உள்ளே!

முன்னா (சஞ்சய்) - நாம காந்தி மாதிரி ஜெயிலுக்குள்ளே வந்ததால நமக்கு எவ்வளோ ரெப்யுடேஷன் வளரும் தெரியுமா? நாளைக்கு நம்ம பேர்லே ரோட் வைப்பாங்க, முன்னா நகர், சர்க்யூடாபாத்!

ச: நோட்டுலே நம்ப போட்டோ வரும்

மு: ஸ்கூல்லே நம்ம வரலாறு பாடமா வரும்.

ச: நம்ம பொறந்த நாளு ட்ரை டே ஆகும்..

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு..

இருவரும்: வேண்டாம் - ட்ரை டே மட்டும் வேண்டாம்!

2. திவ்யா வித்யா பாலன் - சொல்வதற்கு ஒன்றுமில்லை. திரையில் வந்து நின்றாலே போதும். குட் மாஆஆஆர்னிங் மும்பை!

3. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - குறிப்பாக லகே ரஹோ முன்னா பாய்.. எவ்வளவு ரிச்சாக எடுக்கிறார்கள்!

குறை என்று என் கண்ணில் எதுவும் படவில்லை.

கொஞ்சம் செண்டி காட்சிகள் இருந்தாலும், இழுவை இல்லாததால், இதை முழுநீளக்காமெடியாகவே அங்கீகரித்து, "அந்தாஸ் அப்னா அப்னா" வுடன் லகே ரஹோ முன்னாபாயும் சேர்க்கிறேன்.

இந்தப்படத்தைப் பார்த்து நாட்டில் அஹிம்சை அதிகரித்ததா? இந்தியன் ரமணா வந்த போதும் இதையேதானடா சொன்னீங்க:-)) 100 கோடி பேர் ஒவ்வொருத்தருக்கும் கெமிக்கல் லூச்சா வந்தா ஒரு சான்ஸ் இருக்கு!

குடும்பத்தோடு பார்த்து, ரசிக்க வேண்டிய படம்/

11 பின்னூட்டங்கள்:

Unknown said...

பினாத்தாலரே என் கருத்தும் அதே அதே.. ஞானியின் ஓ பக்கங்களில் இந்தப் படம் தமிழில் எடுக்கப்பட்டால் யார் நடிக்கலாம் என ஒரு பட்டியல் போட்டிருந்தாரே கவனித்தீரா?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

தானைத் தலைவி வித்யா பாலனை திவ்யா பாலன் என்று பெயர் மாற்றிச் சொன்னதால ராம் சாகும் வரை உண்ணாவிரதம் பெங்களூரில் தொடங்கி இருக்கிறார்.

அப்புறம் முதல் முறையா சாரி சொன்னேன் ஜெயிலுக்கு வந்துட்டேன்னு சொன்னா மாதிரி ஞாபகம் முந்தைய சீனில் ஒருவரை அடிக்க முன்னா சர்க்கியூட்டிடம் சாரி சொல்லச் சொல்லுவார்.

எனக்குப் மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் டாப் டென்னில் இடம் பிடித்து விட்ட படம்.

ILA (a) இளா said...

வித்தியாசமானதொரு விமர்சனம்.

//திவ்யா பாலன் //
நம்ம பாலக்காட்டு மாமி பேரு வித்யா பாலனுங்கோ

பினாத்தல் சுரேஷ் said...

தேவ்,

தமிழில் எடுத்தால் நிச்சயம் பிரபு சர்க்யூட்டாக நடிக்கக்கூடதுன்னு ஒரு ஸ்டே வாங்கலாமா?

குமரன் எண்ணம்,

நீங்கள் சுட்டிக்காட்டிய இரண்டையும் திருத்திட்டேன். நீங்கதான் கரெக்ட். உங்கள் விமர்சனமும் நல்லா இருந்துது.

இளா, நன்றி.

இதே சஞ்சய் தத் என்பதை சஞ்ஜீவ் தத் என்று எழுதியிருந்தால் இவ்ளோ பாஸ்ட்டா கமெண்ட் போட்டிருப்பீங்களா?;-))

ILA (a) இளா said...

எனக்கு வித்யா பாலனை புடிச்ச அளவுக்கு அய்யாவை புடிச்சதில்லீங்க. அப்படியே சொல்லிருந்தாலும் கவலைப்படாம போயிருப்போம்ல. இந்த விச்யம் நமக்குள்ளே இருக்கட்டும்

Unknown said...

கண்டிப்பா பினாத்தலாரே.. என்னுடைய சாய்ஸ் கமல்ஹாசன் மாதவன் கூட்டணி.. அந்த லக்கி சிங் வேஷம் நம்ம செல்லம் பிரகாஷ் ராஜ் பின்னிடுவார் இல்ல

கதிர் said...

உங்க ஸ்டைலே தனிதான்!!
விமர்சனம் நல்லா இருக்கு

இராம்/Raam said...

//தானைத் தலைவி வித்யா பாலனை திவ்யா பாலன் என்று பெயர் மாற்றிச் சொன்னதால ராம் சாகும் வரை உண்ணாவிரதம் பெங்களூரில் தொடங்கி இருக்கிறார்.//

அடபாவிகளா எனக்கே இது தெரியாதே...

பினாத்தல் சுரேஷ் said...

இளா,

அதுனாலே என்ன, நமக்குள்ளேயே இருந்துட்டு போகட்டும்;-)

தேவ், மாதவன்? சான்சே இல்லை! சூர்யா ட்ரை பண்ணலாம். அதேபோல கமலுக்கு பதில் அஜீத் மாதிரி ஆளுகூட இருக்கலாம். கமலுக்கென்ன, எல்லா வேஷமும் பண்ணிடுவார்.. இளைய தலைமுறை வளர வேணாம்? பிரகாஷ்ராஜ் ஓகே!

நன்றி தம்பி. எங்கே ரொம்ப நாளா போனே காணோம்? உங்க நம்பர் என்கிட்டெ இருந்து காக்கா போச்சு:-(

ராம், பஜார்லே உஜாரா இல்லேன்னா இப்படித்தான் நிஜாரை உருவிடுவாங்க! கவனமா இருங்க:-))

இராம்/Raam said...

//தேவ், மாதவன்? சான்சே இல்லை! சூர்யா ட்ரை பண்ணலாம். அதேபோல கமலுக்கு பதில் அஜீத் மாதிரி ஆளுகூட இருக்கலாம். கமலுக்கென்ன, எல்லா வேஷமும் பண்ணிடுவார்.. இளைய தலைமுறை வளர வேணாம்? பிரகாஷ்ராஜ் ஓகே!//

என்னாங்க இப்பிடி சொல்லீட்டிங்க..
கமல்தாங்க இந்த கேரக்டருக்கு சரியா வரும்.

அப்புறம் நீங்க இளைய தலைமுறைன்னு சொல்லி இருக்கீங்க.

அதுக்கு விக்ரம் + சூர்யா சரியா வருமா..???

பினாத்தல் சுரேஷ் said...

ராம்,

கமல் எல்லாக் கேரக்டருக்கு சரியா வரும்தான்.. ஆனால், அந்த ஆளையே எல்லாத்துக்கும் தொல்லை பண்ணிக்கிட்டு...

என் ஓட்டும் விக்ரம்-சூர்யாவிற்கே..

 

blogger templates | Make Money Online