Oct 2, 2006

ஐ க்யூ தேர்வு

இணையம் முழுக்க ஐ க்யூ தேர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாக்கேள்விகளும் ஆங்கிலத்தில், ஆங்கில அறிவையும், கணித அறிவையும் உலக அறிவையும் சோதித்து இந்தா பிடி என்று மார்க்கை அள்ளித் தெளிக்கின்றன.

எந்தத் தேர்வாவது, நமக்கு மட்டுமே தெரிந்த கேள்விகளைக் கேட்கின்றனவா? ரஜினிகாந்தின் 100 ஆவது படம் எது? ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான படம் எது? வைகோ 1996 தேர்தலில் எந்தக்கட்சியில் இருந்தார்? அழகி என்ற சொல்லுக்கு விகடனில் என்ன அர்த்தம், தினத்தந்தியில் என்ன அர்த்தம்?.. தமிழுக்கே தமிழகத்துக்கே உரிய எத்தனை கேள்விகள் இருக்கின்றன? யாராவது இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்களா?

எனவே, சோதனை முயற்சியாக, நான் ஒரு தேர்வைத் தயாரித்திருக்கிறேன். 30 கேள்விகள், 6 பிரிவுகளாக. இப்போதைக்கு எல்லாக்கேள்விகளும் பொருத்துக வகை மட்டுமே.

இடப்புறம் உள்ள கேள்விக்கு வலப்புறம் உள்ள தெரிவை பொருத்துங்கள். அந்த நேரத்தில் மறைக்கப்படாமல் தெரியும் தெரிவுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். சொடுக்கியவுடன் அடுத்த இடப்புறத் தெரிவுக்குப் போய்விடும். தவறெனில் முந்தைய கேள்வியை அழுத்தி சரி செய்யலாம்.

ஆறு பிரிவிற்கும் விடைஅளித்தபிறகு உங்கள் மதிப்பெண்ணுக்குத் தகுந்தமாதிரி பட்டம் வழங்கப்படும். (அந்தப்பட்டத்தை மட்டும் பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.)

கருத்துக்களை தயங்காமல் கூறுங்கள்.

63 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Good One!

குமரன் (Kumaran) said...

நான் ஒரு மிடில் கிளாஸ் மாதவன்.

நாகை சிவா said...

நான் ஒரு மிடில் கிளாஸ் மாதவன் என்று சொல்லுது.

வீட்டுக்கு போகும் அவரசத்தில் உள்ளேன். நாளை வந்து மீண்டும் முயற்சிக்கின்றேன்

மொத்தில் பதிவு சூப்பர்

சரவணகுமார் said...

தல...

உண்மையிலேயே கலக்கிட்ட போ

one of the middle class mathavan :))

மதி said...

நான் ஒரு மிடில் கிளாஸ் மாதவன்ங்கோ
சினிமாவுல 80% (டிஷ்டிங்ஷன்)
அரசியல்ல 40 மார்க் வாங்கி பாசாயிட்டேன்
இலக்கியத் தேர்வுக்கு மெடிக்கல் லீவு போட்டாச்சி.

பெருசு said...

நம்ம மிடில் கிளாஸ் மாதவன்.

முகமூடி said...

நானொரு மிடில் களாஸ் மாதவனாக்கும்...

( ஆனா போட்டி வடிவமைப்பு ஆரம்பத்துல ரொம்ப குழப்பிடுச்சி.. )

பினாத்தல் சுரேஷ் said...

முயற்சித்ததற்கு நன்றி அனானி (குட் ஒன் சொல்றதுக்குக்கூட பேர் சொல்ல மாட்டேன்னு பிடிவாதம்:-)), குமரன், நாகை சிவா, சரவணகுமார், மதி, பெருசு, முகமூடி!

என்ன எல்லாரும் மிடில் கிளாஸ் மாதவன்களாவே இருக்கீங்களே.. சினிமா சிங்காரங்கள், அரசியல் அய்யாச்சமிகள், ஆல் இன் ஆல் அழகுராஜாக்களுக்கு இன்னும் வெயிட் பண்ணனுமா, இல்லை கேள்விகள் ரொம்ப கஷ்டமா?

ஜெயஸ்ரீ said...

நான் ஒரு புத்தகப்புழு (என்று சொல்லுது)

Nakkiran said...

நான் ஒரு 'அப்பாவி அண்ணாசாமி'

கேள்விகள் எனக்கு கஷ்டமாதான் இருந்தது

கப்பி பய said...

மிடில் கிளாஸ் மாதவன்!

சினிமா 100% :D
இலக்கியம் 80%
அரசியல் 50% :(

கலக்கல் பெனாத்தலாரே!

இலவசக்கொத்தனார் said...

வந்துட்டேன், நானொரு சினிமா சிங்காரம். ஹிஹிஹி. அரசியலில் கூட 50 மார்க் வாங்கிட்டேன். ஆனா இப்படி தமிழு, ஆங்கிலம் அப்படின்னு இலக்கியத்தைப் போட்டு படுத்திட்டீரே....

நாமக்கல் சிபி said...

நான் சினிமா சிங்காரம்... சினிமால 100 (கேள்வி ரொம்ப சிம்பிள்)

மத்த ரெண்டுலையும் ஃபெயில் :-)

Anonymous said...

சினிமா சிங்காரம்!!!!

மாப்பூ..... வச்சிட்டான்டா ஆப்பூ....

--
சஹா

சி. சிங்காரம் said...

எனக்கு கிடைத்த பட்டம் சினிமா சிங்காரம். சினிமா 80%, இலக்கியம் 30%, அரசியல் 50%.

ஆனா வேற ஒருத்தர் சினிமால 80% வாங்கி மிடில்கிளாஸ் மாதவன் என்கிறாரே...? நீங்கதான் விளக்கனும்.

நல்ல பதிவு.

Anonymous said...

It says "நான் ஒரு மிடில் கிளாஸ் மாதவன்" - Selva

மனதின் ஓசை said...

சினிமா 30% :D
இலக்கியம் 30%
அரசியல் 60%

மிடில் கிளாஸ் மாதவன்!

கைப்புள்ள said...

சூப்பரா இருந்துச்சுங்க உங்க குவிஸ். நான் ஒரு சினிமா சிங்காரம்.

மிக நல்ல முயற்சி

Satheesh said...

Arasiyal Ayyasamy

Cinema - 80%
Ilaykkiam - 30&
Arasiyal - 80%

Prabu Raja said...

நானும் ஒரு மிடில் கிளாஸ் மேடி தான்.

60%
10%
60%

ஐ. க்யூ போட்டி சூப்பர்

ராசுக்குட்டி said...

நான் சினிமா சிங்காரம்...

நல்ல முயற்சி... கலக்கலா இருந்துச்சு!

Leo Suresh said...

நல்லா இருந்தது சுரேஷ்.நான் ஒரு 'அப்பாவி அண்ணாசாமி'
லியோ சுரேஷ்
துபாய்

லதா said...

சினிமா 80 %
அரசியல் 60 %
இலக்கியம் 70 %

நான் ஒரு மிடில் கிளாஸ் மாதவன் என்று உங்கள் பதிவு சொல்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

ஜெயஸ்ரீ, நக்கீரன், கப்பி பய, இலவசக் கொத்தனார், வெட்டிப்பயல், சஹா, சினிமா சிங்காரம், செல்வா, மனதின் ஓசை, கைப்புள்ள, சதீஷ், பிரபு ராஜா, ராசுக்குட்டி, லியோ சுரேஷ், லதா!

அனைவருக்கும் நன்றி.

முகமூடி, மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளை வடிவமைப்பது சுலபம், பொருத்துக ரொம்பக்கஷ்டம். கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டேன். படுத்தவும் செய்துட்டேன்:-)

சி சிங்காரம், மொத்தத்தில 200க்கு கம்மியா இருந்து, எதாவது ஒரு துறையில மட்டும் 80க்கு மேலே வாங்கினா, அந்தத்துறை எக்ஸ்பர்ட்டுன்னு அல்காரிதம் எழுதியிருக்கேன். மொத்தம் 260க்கு மேலேன்னா ஆல் இன் ஆல் அழகுராஜா, 100க்கு கம்மின்னா அப்பாவி அண்ணாசாமி, மத்தவங்க எல்லாம் மிடில் கிளாஸ் மாதவன். அதான் கணக்கு. ஓக்கே?

பினாத்தல் சுரேஷ் said...

பின்னூட்டக் கயமைக்கு ஒரு சோதனை!

கீதா சாம்பசிவம் said...

ஹி,ஹி,ஹி, இலக்கியத்தில் 90% எடுத்திருக்கேன், நான் ஒரு புத்தகப்புழுன்னு சரியாவே சொல்லி இருக்கு. அதான் எங்க வீட்டுப்புத்தகம் எல்லாம் அரிச்சுப் போய்ப் பழசா ஆயிடுச்சு?
அது எப்படி நீங்க சங்கத் தலைவலி(வி)க்குத் தெரியாமல் சங்கத்திலே சேர்ந்தீங்க? இந்தப் பின்னூட்டம் எளிமையா இருக்குனு நினைக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

கீதா சாம்பசிவம்,

முயற்சித்ததற்கு நன்றி. இப்போவெல்லாம் பரவாயில்லை.. புரியற மாதிரி கமெண்டு போடறீங்களே!

பொன்ஸ்~~Poorna said...

70,50,60, மிடில் கிளாஸ் மாத(வி?)வன் ;)

தேவ் | Dev said...

மிடில் கிளாஸ் மாதவனாம்ங்கோ

சின்னவன் said...

Trivia Quiz க்கும், ஐக்யூ தேர்வுக்கும் என்ன சம்பந்தம் ??

மற்றபடி நல்ல முயற்சி

தம்பி said...

ஹி ஹி ஹி

நான் சினிமா சிங்காரமாம்.. :-)

சினிமா - 100
இலக்கியம் - 40
அரசியல் - 40

நல்ல விளையாட்டு சுரேஷ்ஜி!
கலக்குங்க!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பொன்ஸ், தேவ், தம்பி, சின்னவன்..

சின்னவன்.. இது Trivia தான். சந்தேகமில்லை. அடுத்த கட்டமா I Q எடுத்துட்டு வரலாம்னு ஒரு நெனப்பு.

Dharumi said...

நான் சினிமாவில இவ்வளவு மோசமா, அரசியல்ல இவ்வளவு நல்லா மார்க் எடுப்பேன்னு நினைக்கவே இல்லை'ங்க.
மற்றபடி, நல்ல முயற்சி.ரொம்பவே கஷ்டப்பட்டு செய்வீங்களோ?

சொல்லலியே, நானும் ஒரு மி.கி.மா.

கீதா சாம்பசிவம் said...

grrrrrrrrrrrrrrrrrrrrrrrr, see my today's edition.

மணியன் said...

நான் மி.கி மாது வந்திரிக்கேன். நான் படித்த புத்தகங்கள் நீங்கள் படிப்பதில்லை என்று தெரிகிறது :))

பினாத்தல் சுரேஷ் said...

தருமி, நன்றி.

கேள்விகள் தயாரிப்பது அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லை. (உங்க ஜாதிதானே நானும்:-)) ஆனால் அதை வடிவமைத்து, அல்காரிதம் போடறதுதான் கஷ்டம்.

கீதா, மீண்டும் நன்றி. உங்கள் பதிவில் தலைவலி (தலைவி) என நிரூபித்து விட்டீர்கள்:-))

மணியன்.. நன்றி..அதென்ன புஸ்தகம் நீங்க படிக்கறது? சொன்னீங்கன்னா அடுத்த டெஸ்டுலே போட்டுடலாம்.

நாமக்கல் சிபி said...

நான் மிடில் கிளாஸ் மாதவனாக்கும்.

சினிமா 70%
இலக்கியம் 40%
அரசியல் 40%

(ஆனாலும் எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ்)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாமக்கல் சிபி.

எல்லா மிடில் கிளாஸ் மாதவன்களுக்கும் ஒரு ஓ!

பூங்குழலி said...

நான் சினிமா "சிங்காரி" ஹிஹி

சினிமா - 100% (அதுதானே பார்த்தேன்)
இலக்கியம் - 50% (பண்டை இலக்கியமெல்லாம் கேள்வி கேட்டக்கூடாதா?)
அரசியல் - 40% (நமக்கு வெகு தூரம்)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பூங்குழலி.

பண்டை இலக்கியம் எனக்குத் தெரிந்திருக்க வேணாமா?;-)

Muse (# 5279076) said...

I am an another middle class Madhavan.

My score:

Cinema 40% (unbelievable !! I should have scored 0%)

Ilakkiyam 100 % (looks like that we have read those books)

Arasiyal 60 % (can I call me a Tamilian scoring this low?)

செந்தில் குமரன் said...

சினிமா சிங்காரம்

சினிமா - 80
இலக்கியம் - 40
அரசியல் - 60

பழூர் கார்த்தி said...

நான் 'சினிமா சிங்காரம்' ங்கோவ்....

***

கலக்கல் படைப்பு, பாராட்டுக்கள்

chinnathambi said...

80,30,50 cinema singaaram

ilakkiyam romba tough-nga

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ம்யூஸ். அதே புத்தகங்களா? நன்றி. அரசியல்லே ரொம்ப டப்பா இல்ல கொஸ்டின் செட் பண்ணியிருக்கேன்:-))

குமரன் எண்ணம், மிடில் கிளாஸ் மாதவனுக்கு ரொம்ப க்ளோஸ்தான் நீங்க;-)

நன்றி சோம்பேறிப்பையன். நீங்களுமா சினிமா?

நன்றி சின்னதம்பி. இலக்கியம் அவ்வளோ டப்பா எனக்குப் படலை. அரசியல் அணிதான் டெய்லி பேப்பர் படிக்க வேண்டிய அளவுக்கு டப்;-)

பினாத்தல் சுரேஷ் said...

மீள்பதிவெல்லாம் வேண்டாம்.. பின்னூட்டக்கயமையே போதும்;-))

மா சிவகுமார் said...

சினிமா 30%
இலக்கியம் 70%
அரசியல் 90%

அரசியல் அய்யாச்சாமி

அன்புடன்,

மா சிவகுமார்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மா சிவகுமார்.

முதல் வருகை அல்லவா?

kekkE PikkuNi #25511630 said...

நான் "அப்பாவி அண்ணாசாமி"யாம்!?

எல்லா பெயரையும் ஆண்-பெயராய்க் கொடுத்ததற்கு ஒரு டவுன் - டவுன்! (எனக்கு ஒண்ணுமே தெரியல, பச்சபுள்ளயால்ல இருக்கேன்!)

இப்படிக்கு
அப்பாவி அக்கம்மா,
கெ.பி.

பினாத்தல் சுரேஷ் said...

கெ பி அக்கா!

அப்பாவிங்க ஆம்பளைங்களா மட்டும்தான் இருப்பாங்கன்னு தப்புக்க்கணக்கு போட்டுட்டேன்:-((

மாப்பு கொடுத்துறுங்க!

சிவராமன் கணேசன் said...

100
100
50

me too middle class madhavan

பினாத்தல் சுரேஷ் said...

சிவராமன் கணேசன்.. ஆல் இன் ஆலுக்கு ஒரே ஒரு கேள்விதான் குறைவு. வாழ்த்துக்கள்!

பிரசாத் said...

நான் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா என்று சொல்லிவிடார்கள்

சினிமா 100
இலக்கியம்100
அரசியல் 90

Madhan said...

சினிமா 80% :-D
இலக்கியம் 100%
அரசியல் 50%

மிடில் கிளாஸ் மாதவன்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பிரசாத். நீங்கள்தான் முதல் ஆல் இன் ஆல் அழகுராஜா:-)
வேறு யாரும் சொல்லவில்லை, நான் தான்:-))

நன்றி மதன்.

நிறைய புதுப்பெயராத் தெரியுது, பயமா இருக்கு:-))))))))

சேதுக்கரசி said...

அப்பாவி அண்ணாசாமினி :( சினிமாவே 10% மட்டுந்தான்னா பார்த்துக்கோங்க லட்சணத்தை.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சேதுக்கரசி, முயற்சித்ததற்கு நன்றி.

என்ன இந்த போஸ்ட் செகண்ட் ரிலீஸ்லே ஒரு ரவுண்டு வருது.. கேள்விகளைப் புதுப்பிக்கலாமா?

செந்தில் குமரன் said...

80 60 30

சினிமா சிங்காரம்.

நெல்லை காந்த் said...

சினிமா சிங்காரம்

சினிமா - 100
இலக்கியம் - 40
அரசியல் - 60

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நெல்லை காந்து, செந்தில் குமரன் aka சினிமா சிங்காரங்களா:-))

சென்ஷி said...

//அழகி என்ற சொல்லுக்கு விகடனில் என்ன அர்த்தம், தினத்தந்தியில் என்ன அர்த்தம்?.. தமிழுக்கே தமிழகத்துக்கே உரிய எத்தனை கேள்விகள் இருக்கின்றன? யாராவது இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்களா?//

அட ஆண்டவா?

சென்ஷி

சென்ஷி said...

சினிமா சிங்காரம்

சென்ஷி

பரத் said...

super :))
me the middle class madhavan

 

blogger templates | Make Money Online