Dec 16, 2006

சனிக்கிழமை - Promise fulfilled;-)

குறும்புன்னு ஒரு பிளாஷ் தயார் பண்ணா, பிளாக்கரும், பிளாஷும் போட்டோபக்கெட்டும் சேர்ந்து என்கிட்டே அடிச்ச குறும்பு தாங்க முடியல!

பட்டன் வொர்க் ஆகாததையே குறும்புன்னு நெனச்சு சிரிச்ச ஆவிங்க,
வேலைக்கு ஆவலை, சனிக்கிழமை கச்சேரி வச்சுப்போம்னு சொன்ன லக்கிலுக்,
போன் பண்ண ரெடியா இருந்த முத்துகுமரன்
இடைக்கால நிவாரணம் கொடுத்த கோபி, கஷ்டப்பட்டு பார்த்து பாராட்டிய சிறில், பொன்ஸ், நாமக்கல் சிபி,I H மற்றும் பலர்,
வெள்ளெழுத்து வந்துடிச்சான்னு அக்கறைப்பட்ட இ கொ,
எறும்பு ஊருது, ஒண்ணும் தெரியலேன்னு கஷ்டப்பட்ட உஷா,
மார்க்கை சுழிச்சுறவான்னு பயமுறுத்தின தருமி..

எல்லாரும் இப்ப பாருங்க!

முக்கியமான பிரச்சினை என்னன்னா, பிளாஷிலே கறுப்பு பின்புலம் கொடுத்துட்டு, பிளாக்கர்லே ஆரஞ்சு பின்புலம்னு தப்பா கொடுத்துட்டேன். அதனால, ஆரஞ்சு மேலே வெள்ளை என் உள்ளத்தைக் காட்டினாலும், உள்ளதைக்காட்டவில்லை;-))

மின்னஞ்சல் வேணும்னா கேளுங்க!


35 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

இப்போ சரியா இருக்குங்க.

(நானும் இப்போ கண்ணாடியை போட்டுக்கிட்டு பாத்ததுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே?!)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கொத்தனார்.. கண்ணாடியக்கழட்டிட்டு இன்னொரு முறை பாத்து ரெண்டு பி க பண்ணிடுங்க;-)

Anonymous said...

இன்னும் 5 நாட்கள் உள்ளன. இன்னும் எத்தனை முறை மீள் பதிவு செய்வீர்கள்.

தேன்கூடு போட்டியில் பதிவை இணைத்தவுடன் பதிவில் திருத்தங்கள் செய்யக் கூடாது என்னும் விதி உள்ளது.

தென்கூட்டில் தெரியப்படுத்திவிட்டு அவர்கள் அனுமதியுடன்தானெ திருத்தங்கள் செய்கிறீர்கள்?

ஆவி அண்ணாச்சி said...

இந்த முறையும் கொத்தனார்தான் முதல் போணியா?

:-))

முத்துகுமரன் said...

பினாத்தல் நமக்கு வந்தது

//10000000 ஹிட்//

என்னா அர்த்தம் இதுக்கு :-)

இராம்/Raam said...

முணாவது தடவையிலே கெலிச்சிட்டேன்...... :)))

பினாத்தல் சுரேஷ் said...

ஆறாவது அம்பயர்..

நீங்க சொல்றதை ஒத்துக்கறேன். போட்டிக்கான படைப்பில் திருத்தம் கூடாது என்பதை.

ஆனால், என் படைப்பில் (பிளாஷில்) நான் செய்தது ஒரே ஒரு திருத்தம்தான். இரண்டு மு கயமையும் - ஒன்று கோபி கொடுத்த இடைக்கால நிவாரணத்தைத் தெரிவிக்க, இன்னொன்று பேக்கிரவுண்டு கலர் மாற்றியதைத் தெரிவிக்க செய்தேன், இன்று அந்த பட்டனையும் எழுத்துரு திருத்தங்களும் மட்டுமே செய்து இப்போது ஏற்றியிருக்கிறேன்.

இது விதிகளை மீறியதாகாது என்றே கருதுகிறேன்.

நீங்கள் நகைச்சுவைக்காகவே கேட்டிருக்கிறீர்கள் என்று நினைத்தாலும், தன்னிலை விளக்கத்தைத் தூண்டிய உங்கள் கேள்விக்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

ஆவி அண்ணாச்சி.. அவர் சுறுசுறுப்பு உங்களுக்கு வரலையே:-))

பினாத்தல் சுரேஷ் said...

முத்துகுமரன் - விவகாரமான ஆளா இருக்கீங்க! எந்தக்கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியலைன்றத நெனச்சா கோவம் கோவமா வருது.. எழுதுங்க 100 முறை இம்போஸிஷன்.

பினாத்தல் சுரேஷ் said...

ராம் - நன்றி.. மூணு முறை என்னாத்துக்கு.. தமிழ்மணம் ரெகுலரா இருந்த முதல்முறையே க்ளிக் ஆயிடுமே;-))

Anonymous said...

//நீங்கள் நகைச்சுவைக்காகவே கேட்டிருக்கிறீர்கள் என்று நினைத்தாலும், தன்னிலை விளக்கத்தைத் தூண்டிய உங்கள் கேள்விக்கு நன்றி.
//

இதெல்லாம் இருக்கட்டும். நாங்க கண்டுக்கிடாம இருக்க நமக்கு என்ன செய்யப் போறீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

அம்பயர்(n) வரைக்கும் அதே பதில்தான்.

கண்டுக்கதான் எதாவது தரணும். என் பதிவை நீங்க கண்டுக்காம இருப்பீங்க.. அதுக்கு நான் உங்களைக் கண்டுக்கணுமா? சிறுபிள்ளைத்தனமால்ல இருக்கு;-)

Anonymous said...

//கண்டுக்கதான் எதாவது தரணும்//

தன்னிலை விளக்கத்தித் தூண்டியது கண்டுகிட்டதா ஆகுமா? கணுக்கலைன்னு ஆகுமா?

ramachandranusha(உஷா) said...

நல்லா வந்திருக்கு. முதல் பரிசு பெற வாழ்த்துகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

மிஸ்டர் எட்டு, வருகைக்கு நன்றி! கண்டுகிட்டதுக்கும் கூட ரொம்ப நன்றி.

Anonymous said...

//கண்டுகிட்டதுக்கும் கூட //

கண்டு கொள்கிறோம் என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி!

அப்படியே ஏதாச்சும் பாத்து போட்டுக் குடுங்க! (விவேக் மாதிரி அல்ல)
பண்டிகையெல்லாம் வருது!

பினாத்தல் சுரேஷ் said...

அம்பயருங்களா ..

என்னதான் எதிர்பார்க்கறீங்க? என்கிட்டே ஒண்ணும் பேராதுன்னு இன்னுமா தெரியல?

பினாத்தல் சுரேஷ் said...

தாங்க்ஸ் உஷா..

Anonymous said...

//என்னதான் எதிர்பார்க்கறீங்க? என்கிட்டே ஒண்ணும் பேராதுன்னு இன்னுமா தெரியல? //

உங்களையே தூக்கிட்டுப் போலாம்னு பிளான் பண்ணிகிட்டிருக்கோம்!

Anonymous said...

மூணாவது முயற்சியில் முழு மதிப்பெண் பெற்றேன்!

பினாத்தல் சுரேஷ் said...

மோகினி.. தூக்கிட்டே போனாலும் என்ன பேரும்னு நெனைக்கறீங்க;-)

அனான், நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

குறும்பு போட்டிக்கான தங்களது படைப்பினுள்ளே எனக்கும் கொஞ்சம் ஃப்ளாஷ் அடிச்சதுல கண்கூசி பெத்தடின் ஊசி குத்தியதில் மெல்லிய புகழ் போதை ஏறுவது தெரிந்தாலும் அடங்குடா மவனேன்னு சொல்லியவாறே பின்னூட்டுகிறேன்:-))

Hariharan # 03985177737685368452 said...

வாழ்த்துக்கள் பெனாத்தலாரே,

கலக்கலா வந்திருக்கு. ரெண்டுதரம் தடுமாறி ஜெயிச்சேன்! உங்க புண்ணியத்துல குரோர்பதி விளையாட்டை விளையாட முடிந்தது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஹரிஹரன்.. இங்கேயும் பெத்தடின்னா?

இலவசக்கொத்தனார் said...

// நன்றி கொத்தனார்.. கண்ணாடியக்கழட்டிட்டு இன்னொரு முறை பாத்து ரெண்டு பி க பண்ணிடுங்க;-)//

பி.க. நம்பர் 1

(ஐயய்யோ, கண்ணாடியைக் கழட்ட மறந்து போச்சே!!)

இலவசக்கொத்தனார் said...

பி.க. 1 - கண்ணாடியைக் கழட்டிய பின்!

இலவசக்கொத்தனார் said...

நீங்க கேட்ட ரெண்டு பி.க. வந்தாச்சா? :))

இலவசக்கொத்தனார் said...

Promise fulfilled - ஆனா இன்னிக்கு சனிக்கிழமை இல்லை ;-)

பினாத்தல் சுரேஷ் said...

இ கொ,

உண்மையாச் சொல்லுங்க, உங்களுக்கு பி கன்னா என்னன்னு தெரியுமா தெரியாதா?

மூணு நாளா தமிழ்மணம் முகப்பிலேயே இந்தப்பதிவு இல்லை.. அதைச் சரிசெஞ்சிருக்க வாணாம்? ஹரிஹரன் பின்னூட்டம் (நேர்மையான) பதிப்பிச்ச பிறகு நீங்க போடறது பி க வா?

இலவசக்கொத்தனார் said...

சரி, ஒரு வாரம் கழிச்சி இன்னும் ரெண்டு போட்டு மீண்டும் முகப்பில் வர வைக்கிறேன். போதுமா?

(என்ன செஞ்சாலும் அதுல குத்தம் கண்டுபிடிக்கிறது, என்ன மனுசனோ, இதுல என்ன பண்ணினாலும் திருப்தியே கிடையாது. ) - எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? :-D

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கொத்ஸ்..

நாளைக்கு ஓட்டுப்பதிவு ஆரம்பம்..

அனைத்துத் தோழர்களே! மறவாதீர்.. பினாத்தலாரின் இரு படைப்புகள் களமிறங்கியுள்ளன.

ஓட்டுப்போடுங்கள் - எனக்கு அல்லது எனக்கும்.

இலவசக்கொத்தனார் said...

டிசெம்பர் 20 பின்னாடி இந்த பதிவு தமிழ்மண முகப்பில் வரலையே. அதுக்காக பி.க. 1

இலவசக்கொத்தனார் said...

பி.க. நம்பெர் 2!!

இலவசக்கொத்தனார் said...

சொன்னபடி செஞ்சாச்சு தலைவா. இன்னிக்கு சனிக்கிழமை, பிராமிஸ் புல்பில்ட்!

Anonymous said...

i won two crores(true!) ithought u would give something really nice. u disappointed me!

 

blogger templates | Make Money Online