டா கில்லி கோட் (புதினம்)
அத்தியாயம் 1
வகுப்பறையில் மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
"மச்சான், நேத்து புதுப்பேட்டை மக்கள்கிட்ட தோத்தது கூட பெரிசில்லடா, அவனுங்க கேவலமா லுக் வுட்டாங்களே அதத்தாண்டா சகிச்சுக்க முடியல"
"அதைப் பத்தியே நெனைக்காதே. இப்போ இண்டர்நேஷ்னல் கில்லி கிங் ராமசாமி லெக்சர் கேளு. அவர்கிட்டே கத்துகிட்டா எப்படியும் அடுத்தமுறை ஜெயிச்சுடலாம்."
ஆசிரியை உள்ளே நுழைகிறார், ராமசாமியுடன்.
"மாணவமணிகளே, ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சன் டிவி காமெடி டைம் உள்ளே வெளியேவில் பேட்டி காணப்பட்டவர். இரண்டு வாரங்களுக்கு முன் சேலம் தினத்தந்தியில் அவரைப்பற்றி வந்திருந்ததைப்படிக்கிறேன், கேளுங்கள்"
"கில்லி விளையாட்டில் சூரர், கில்லி தயாரிப்பதில் மன்னர் ராமசாமி - அவரைப்பேச அழைக்கிறேன்"
ராமசாமி கூச்சத்தில் நெளிந்துகொண்டிருந்தார்.
"கில்லி என்பது ஒரு விளையாட்டு மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. 12 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உருவான கில்லி விளையாட்டையே சற்று மாற்றி கோல்ப் என்றும், கிரிக்கெட் என்றும் வெளிநாட்டவர் விளையாடுகின்றனர்.
கில்லியினுடைய அளவையும், தாண்டலுடைய அளவையும் ஒப்பீடு செய்து பாருங்கள் - உங்கள் மூக்கிறகும் நாக்கிற்கும் உள்ள வித்தியாசமும் அதுவும் ஒன்றாக இருக்கும். இது ஒன்றே போதாதா, கில்லி தெய்வத்தின் விளையாட்டு என்று சொல்ல?
சொல்லிக்கொண்டிருக்கும்போதே, B4 போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வீராச்சாமி உள்ளே நுழைந்தார்.
"ராமசாமி, உங்களுக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டு க்யூரேட்டர் ரங்கனைத் தெரியுமா?"
"நல்லாத் தெரியுமே, இன்னிக்கு ராத்திரி குவார்ட்டர் அடிக்கறதுக்குக் கூட வரச் சொன்னாரு"
"ஒரு அவசரமான விஷயம் - வாங்க கிரவுண்டுக்குப் போகலாம்"
அத்தியாயம் 2
சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டின் பிரபல D ஸ்டேண்டு வழியாக உள்ளே சென்றார்கள்.
"என்ன ஆச்சு சார், ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க"
"உங்க ரங்கனை யாரோ கொன்னுட்டாங்க!"
"இதுல என்ன சார் ஆச்சரியம், அவன் யாரப்பாத்தாலும் கடன் வாங்குவான் - திருப்பிக் கொடுக்க மாட்டான். எவனாச்சும் கடங்காரன் வெறுப்பேறி போட்டுத் தள்ளிட்டிருப்பான்"
"இல்லை - அவன் சாகும்போது பிட்சோட செண்டருக்கு வந்து என்னவோ எழுதியிருக்கான்"
செத்துக்கிடந்த ரங்கனைப்பார்த்தான் ராமசாமி. நாக்கால் மூக்கைத் தொட்டுக்கொண்ட வண்ணம் செத்திருந்தான் - கீழே பிட்சில் எழுதியிருந்தது.
"ரதணி -காலன் - 3 X டூஸ்கொயர் "
"இதுக்கு என்ன அர்த்தம் சார்"
"அதத் தெரியாமதான் உன்னக்கூட்டிவந்திருக்கோம். வேற யாரும் குற்றவாளியா மாட்டலேன்னா, உன்னை லாடம் கட்டி ஒத்துக்க வச்சுடுவோம்"
ராமசாமி பயந்துகொண்டிருந்தபோது, ரங்கனின் பேத்தி கருப்பாயி உள்ளே நுழைந்தாள்.
தொடரும்..
ஐடியாவுக்கு நன்றி: சந்தோஷ் பக்கங்கள் கொடுத்த படம், SK கொடுத்த பின்னூட்டம்
பயப்படாதீர்கள் - இன்னும் ஒன்னோ, ரெண்டோதான்:-)
7 பின்னூட்டங்கள்:
ஒண்ணு வந்துறக்கூடாதே.....
வழக்கம்போல தூள். கிளப்பி விடுங்க:-)))
நன்றி நாகையன்.
டாங்ஸ் அக்கா!
:-))))
நன்றாக இருக்கிறது. என்ன KB சுந்தராம்பாள் ஒன்று, இரண்டு எனப் பாடுவது போல படுவேகமாக செல்கிறது. அதனால் பின்னூட்டமெல்லாம் வரவில்லை என வருத்தப்படாதீர்கள் ;) கோலிவுட் ரைட்ஸ் எல்லாம் வாங்கிவிட்டீர்கள் தானே!
நன்றீ கோபி, மணியன்!
பெனாத்தல் ஆரம்பிச்சாச்சா? சூப்பர்.
நன்றி இலவசம்..
Post a Comment