அத்தியாயம் 9
இன்ஸ்பெக்டர் வீராச்சாமி மஃப்டியில் வீட்டு மொட்டை மாடியில் போன் பேசிக்கொண்டிருக்கிறார்.
"அந்தக் கருப்பாயிய எங்க பாத்தாலும் விடாதீங்க. எனக்கே பேதி மாத்திரை கொடுக்கறான்னா எவ்வளவு கொழுப்பு இருக்கும்? அப்புறம் அந்த ராமசாமி. அமுக்குணி மாதிரி இருக்கான். அவன் தான் நமக்கேத்த ஆளு. எல்லா ஸ்டேஷனுக்கும் அலர்ட் அனுப்பிடுங்க.. இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு கால் பண்ரீங்களா?"
மறுபடியும் அவசரமாக டாய்லெட்டை நோக்கி ஓடினார்.
திரும்பி வரும்போது அவர் மனைவி மகனைத் திட்டிக்கொண்டிருந்தாள்.
"எங்கே போனான்னே தெரியல. நானும் பாக்கறேன், கோச்சிங் கிளாஸுக்கு லேட்டாவுதேன்னு பயமே இல்லாம தெருவில விளையாடறான். அவனக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க."
"அப்படி என்ன விளையாடறான்?"
"அதுவா, தெருப்பசங்க கூடச் சேர்ந்து கில்லி விளையாடறான்."
வீராச்சாமிக்கு கோபம் தலைக்கேறியது.
"எவ்வளவு திமிர் இருந்தா நான் அத்தனை முறை சொல்லியும் கில்லி விளையாடுவான்? பணத்தைக் கொட்டி கிரிக்கெட் கோச்சிங் கிளாஸ்லே சேத்து இருக்கேன். அதை வேஸ்ட் பண்றதும் இல்லாம?"
வீராச்சாமியின் இளம்பருவத்தில் கில்லியால் அடிபட்டவர். அதில் இருந்தே அவருக்கு கில்லி சம்மந்தப்ப்ட்ட விஷயங்கள் எல்லாவற்றின் மேலும் வெறுப்பு. ஆனால் தீவிர கிரிக்கெட் ரசிகர். கில்லி ராமசாமி ஞாபகம் மறுபடியும் வந்து போனை எடுத்தார்.
B4ல் சப் இன்ஸ்பெக்டர் இல்லை.
"யோவ் ரைட்டர், சப் இன்ஸ்பெக்டர் வந்தா உடனே கால் பண்ணச்சொல்லு. இப்போதான் தெரியுது, 3 X டூஸ்கொயர்னா 12 - 12 ஆம் நம்பர் சாராயக்கடையிலே விசாரிக்கச்சொல்லு - எங்கே போனாலும் அந்த ராமசாமியையும் கருப்பாயியையும் ரவுண்ட் பண்ணைடச்சொல்லு."
அத்தியாயம் 10
"இப்போ எதுக்கு கிரிக்கெட் சீனிவாசன் வீட்டுக்கு போவணும்?" என்றாள் கருப்பாயி.
"என்ன விளையாடறியா? ஏற்கனவே கதையிலே விறுவிறுப்பு இல்லேன்றாங்க. ரெண்டு கேரக்டர் அதிகமானாத்தானே யார் வில்லன்னு சஸ்பென்ஸ் அதிகமாகும்?"
"சரி புனித கில்லின்னா என்ன?"
"அதை சீனிவாசனும் நானும் சேந்து சொல்றோம். அதையே ஏன் திரும்பத் திரும்பக் கேக்கறே?
"இல்லன்னா படிக்கறவங்க மறந்துற மாட்டங்களா?"
"முதல்லே, உங்க தாத்தா வீட்டுக்குப் போயி, எதாவது க்ளூ வச்சிருக்காரா பாத்துடலாம்"
"நான் வரலைய்யா இந்த விளையாட்டுக்கு. எதோ ஒரு புதிர்னு சொல்லுவே, அதுக்கு யாருக்கும் புரியாத ஒரு வியாக்கியானம் கொடுப்பே - இப்படியே கதைய இழு இழுன்னு இழுப்பே - அதானே உன் ஐடியா?"
"அத்த விடு. நீ உங்க தாத்தா கில்லி விளையாடனதப் பாத்தேன்னு சொன்னியே, அப்போ அவர் பேண்ட் போட்டிருந்தாரா, லுங்கி கட்டி இருந்தாரா?"
"ரெண்டுமே இல்ல"
"ரெண்டுமே இல்லையா? அய்யோ, அசிங்கமாவா?"
"புத்தி போவுது பாரு! பட்டாபட்டி அண்டிராயர் போட்டிருந்தாரு"
"என்ன பட்டா பட்டி அண்டிராயரா? பச்சைக்கோடு போட்டதா? சிவப்புக்கோடு போட்டதா?"
"சிவப்புக்கோடுதான், ஏன்?"
"அப்போ கன்பார்ம். உங்க தாத்தாதான் கில்லி சங்கத்தோட இப்பத்திய தலைவன்! - கிளம்பு அவர் வீட்டுக்கு போலாம்"
ஓடத் தொடங்கினார்கள் - பின்னால் சைரன் ஒலிக்கத் தொடங்கியது.
அத்தியாயம் 11
"குருவே சரணம்"
"சிஷ்யனே சரணம்"
"அய்யா, நான் ஏஜண்ட் 144. ராமசாமியையும் கருப்பாயியையும் பாத்துட்டேன். ரங்கன் வீட்டுக்குதான் போறாங்க."
"சரி. அவங்களையே பாலோ பண்ணித் தகவல் கொடு"
"ரங்கனைப் போட்டுத் தள்ளின மாதிரி இவங்களையும் தீத்துடலாமா?"
"முட்டாள் - ரங்கனை என்ன பண்ணிடா கொன்னே? அவன் என்ன என்னவோ எழுதி வச்சுட்டு செத்துப் போயிருக்கான். சுறுசுறுப்பா கொலை பண்ணத் தெரியாத எல் போர்டெல்லாம் எனக்கு சிஷ்யன்! தூ!"
"மன்னிச்சுக்குங்க குரு. இவங்களை என்ன பண்ணலாம்?"
"நான் சரியான நேரம் சொல்றேன், அப்ப தீத்துக்கட்டிடலாம்!"
"சரி குரு. ஓவர் அண்ட் அவுட்"
"இது என்னடா புதுசா?"
"ஒரு இங்கிலீஷ் சினிமாலே பாத்தேன் குரு. அதான் சொல்லிப்பாத்தேன்!"
அத்தியாயம் 12
ரங்கன் வீட்டில் பழைய குப்பை, லாட்டரி டிக்கெட்டுகள், ரேஸ் புத்தகங்கள் இறந்து கிடந்தன. கருப்பாயி அவசர அவசரமாக அதை ஒரு துணி போட்டு மூடினாள்.
"ஏன் இதயெல்லாம் மூடறே?"
"பின்னே, எங்க தாத்தா பூட்டான் லாட்டரி வாங்கியிருப்பாரு. நீ எதையோ புரிஞ்சுகினு, கிளம்பு பூட்டானுக்கு, ரகசியம் அங்கேதான் இருக்குன்னுவே. தேவையா எனக்கு?"
"ஆ-- இதோ ஒரு 40 பேஜ் நோட்டு"
"அது எங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு வந்த மொய் நோட்டுய்யா"
"சொல்ல முடியாது - அதுலே கூட க்ளூ இருக்கலாம்"
அந்த் நோட்டின் பின் பக்கத்தில் எழுதியிருந்தது.
தொட்டனைத்தூறும் மணற்கேணிட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்
சீறி அடிச்சா கில்லி பறக்கும்
லாலாக்கு டோல்டப்பி மாஅண்ணா நாமம் வாழ்க!
"இதுலேதான் க்ளூ இருக்கு. உடனே இத எடுத்துக்க. போலீஸ் வரதுக்குள்ளே ஓடிடணும்"
"ஆமா, போலீஸ் வரவா போவுது? முன்னால கூட ஒரு சைரனப்பாத்து பயந்த அது ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்"
சரி சீனிவாசன் வீட்டுக்கு ஓடலாம் வா"
தொடரும்..
8 பின்னூட்டங்கள்:
//ஏற்கனவே கதையிலே விறுவிறுப்பு இல்லேன்றாங்க. ரெண்டு கேரக்டர் அதிகமானாத்தானே யார் வில்லன்னு சஸ்பென்ஸ் அதிகமாகும்?//
:O)
சுரேஷ், அலுவலகத்துலே ஒரு மாதிரியாப் பாக்குறாங்க. சிரிப்புத் தாளல.
அடுத்த பகுதி எப்ப? (இந்த, வேண்டுகோள் கொடுத்தா வாசகரையும் வைச்சுக் கதை எழுதுவாங்களே, அதுமாதிரி ஏதாவது உங்க கதையிலும் கிடைக்குமா??{ஆமான்னா நாந்தான் முதலாவது!!} சந்தடி சாக்குலே..ன்னு ஏதோ சொல்வாங்களே..Esc. ;O))
:-))) அப்றம் என்னாச்சிங்க...
//"ஏன் இதயெல்லாம் மூடறே?" "பின்னே, எங்க தாத்தா பூட்டான் லாட்டரி வாங்கியிருப்பாரு. நீ எதையோ புரிஞ்சுகினு, கிளம்பு பூட்டானுக்கு, ரகசியம் அங்கேதான் இருக்குன்னுவே. தேவையா எனக்கு?" //
i like Ramasamy's Non-stop nonsense & karuppaayi's comedy.i can't control laughing.Very Funny. :-)))
நன்றி ஷ்ரேயா.
கதாபாத்திரமா சேக்கலாம், ஆனா இந்தக்கதையிலே லிமிடட் கேரகடர்கள்தான்:-((
நன்றி கோபி.. அதுதான் இன்னும் ரெண்டு பாகம் இன்னிக்கே விட்டுட்டேனே!
நன்றி குரு.
முதல் பதிவு போடும் போது இன்னும் ஒண்ணோ ரெண்டோன்னு சொன்னீங்க ஆனா இனிமேலேர்ந்து தினமும் ரெண்டு பதிவுன்னு புரியாம போச்சே. :)
இலவசம், என்ன பண்றது.. கதை தன்னைத் தானே எழுதிக்கொண்டது:-))
//"நான் வரலைய்யா இந்த விளையாட்டுக்கு. எதோ ஒரு புதிர்னு சொல்லுவே, அதுக்கு யாருக்கும் புரியாத ஒரு வியாக்கியானம் கொடுப்பே - இப்படியே கதைய இழு இழுன்னு இழுப்பே - அதானே உன் ஐடியா?"//
//கதை தன்னைத் தானே எழுதிக்கொண்டது:-))//
:))))))))
//கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது//
இதில் என்ன சந்தேகம் பொன்ஸ்? வேணும்னா இப்படிப்படிச்சுக்குங்க:
// கதை தன்னைத் தானே இழுத்துக்கொண்டது//
Post a Comment