அத்தியாயம் 13
"குருவே சரணம்"
"போதுண்டா உங்க கோட் வேர்டு தொல்லை. விஷயத்த சொல்லு"
"ராமசாமியும் கருப்பாயியும் கிளம்பிட்டாங்க, நீலாங்கரை பக்கம் போறாங்க."
"உடனே பாலோ பண்ணு,"
B4 போலீஸ் நிலையத்தில்
"சப் இன்ஸ்பெக்டர் வந்தாரா?"
"இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவார் சார்"
"அவர நீலாங்கரைக்கு போகச்சொல்லு. கல்பிரிட்டுங்க அங்கே போறதா இன்பர்மேசன்"
"சரி சார்"
அத்தியாயம் 14
சீனிவாசனுக்கு போன் செய்துவிட்டதால் வாசலுக்கே வந்துவிட்டிருந்தார்.
"என்ன ராமசாமி, எப்படி இருக்கீங்க?"
"எதோ பொழப்பு ஓடுது சார். கில்லி டோர்னமெண்ட் எல்லாம் இப்போ நடக்கறதில்ல. கிரிக்கெட் காரங்க எங்களை வாழ விடறதில்ல; ஒரு போலீஸ்காரன் வேற, கிரிக்கெட் ரசிகன், கில்லிக்கு எதிர்ப்பு, துரத்தறான். என்ன பண்ரது சொல்லுங்க!"
"எல்லாரும் என்ன மாதிரியா இருப்பாங்க? யாரு இது?"
"இது சேப்பாக்கம் கிரவுண்டு க்யூரேட்டர் ரங்கனோட பேத்தி, கருப்பாயி"
"ரங்கன் நல்ல ஆளாச்சே, கில்லி பத்திப் பேசினா இன்னிக்கெல்லாம் பேசுவானே. அவனைக்கூட்டிகிட்டு வரலையா?"
"சரிதான். நீயும் தமிழ்மணம் வாசகர் போலதானா? ஒழுங்கா படிக்கலையா? ரங்கன் செத்துட்டான்"
"அடப்பாவமே. இந்தப்பொண்ணுக்கு கில்லி - கிரிக்கெட் பத்தியெல்லாம் தெரியுமா?"
"தெரியாது. சொல்றதுக்குதான் கூட்டிகிட்டு வந்தேன்"
"ஆமாங்க, எனக்கு ஆர்வமா இருக்கு சொல்லுங்க - இல்லாட்டி மட்டும் சொல்லாமலா விட்டுடப் போறீங்க?"
"கில்லியிலிருந்துதான் கிரிக்கெட் வந்துதுன்னு நெறய பேருக்குத் தெரியாது. ஆனா கொஞ்சம் கண்ணத் திறந்துகிட்டு பாத்தா அதுக்கான ஆதாரம் கோடிக்கணக்குல இருக்கு."
"என்ன ஆதாரம் சொல்லுங்க"
"கில்லியில தண்டா இல்லை தாண்டல்னு சொல்றதத் தான் கிரிக்கெட்லே பேட்னு சொல்றாங்க. கில்லியத்தான் Ball ஆ மாத்தியிருக்காங்க.
இதோ பாரு:
^v - இது கில்லி. () இது கில்லியோட மாறுபட்ட வடிவம். 0 - இந்த மாதிரி காலப்போக்கில மாறி, பின்னால O இப்படி ஆயிடுச்சி.
கில்லியிலே எத்தனை பேரு ஆடலாம்?"
"ஏன் ரெண்டு பேர் மட்டும் கூட ஆடலாமே?"
"கிரிக்கெட்லே?"
"11 பேர்னு நெனைக்கிரேன்"
"ஒண்ணையும் ஒண்ணையும் கூட்டினா என்ன வருது?"
"ரெண்டு"
"இப்போ புரிஞ்சுதா? கில்லியிலிருந்துதான் கிரிக்கெட் வந்ததுன்னு? - அது மட்டும் இல்ல. கில்லி ஆடும்போது உடம்புலே பட்டா கந்துன்னு சொல்வாங்க,. கிரிக்கெட்ல? LBW! நெறய ஆதாரம் இதுமாதிரி இருக்கு"
"இது - ஆதாரம்? யாராவது கேனையன் இருப்பான் அவன்கிட்டே போய் சொல்லு"
"போதாதா? எல்லாம் இவ்ளோ ஆதாரம் போதும்! 12 ஆம் நூற்றாண்டு சோழ ராஜா கிள்ளிவளவனைத் தெரியுமா உனக்கு?"
"யாரு அவன்?"
"அவன் தான் கில்லியைக் கண்டுபிடிச்சவன். உண்மையா அவன் பேரு கில்லிவளவன் தான், பின்னாலே வந்த கிரிக்கெட் வெறியர்கள்தான் அவன் பேரை மாத்திட்டாங்க!"
"அவனுக்கு என்ன?"
"அவன் ஆரம்பிச்ச கில்லி விளையாட்டுலே இருந்த ரூல்ஸையெல்லாம் இப்போ கிரிக்கெட்லே அப்படியே பாக்கலாம். எல்லாத்தையும் அவன் செப்பேட்டுலையும் கல்வெட்டுலேயும் பொறிச்சு வச்சிருந்தான். இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி (13 ஆம் நூற்றாண்டு) கில்லியால பாதிக்கப்பட்டதால, அவன் செப்பேட்டையெல்லாம் உருக்கறதுக்கும், கல்வெட்டையெல்லாம் உடைக்கிறதுக்கும் ஆர்டர் போட்டான்."
"எல்லாம் போச்சா?"
"எல்லாம் போயிருந்தா எப்படி இந்தக்கதை எழுத முடியும்? அப்போதான் கில்லி சங்கம் உருவாச்சு."
"கில்லி சங்கமா?"
"ஆமாம். அவங்களோட முக்கியமான நோக்கமே அந்த செப்பேடு, கல்வெட்டு எல்லாத்தையும் பாதுகாக்கறதுதான். எல்லாத்தையும் விட முக்கியமா, கிள்ளி வளவன் விளையாடுன புனித கில்லியையும், கிள்ளி வளவன் வம்சத்தையும் பாதுகாக்கணும்றது அவங்க நோக்கம்.
15 ஆம் நூற்றண்டுல பொற்கிள்ளின்றவர், 17ஆம் நூற்றாண்டுல நலங்கிள்ளி இவங்க எல்லாம் அந்த சங்கத்து தலைவர்கள்.
சரியான சந்தர்ப்பத்துல அந்த புனித கில்லி, செப்பேடு எல்லாத்தையும் மக்களுக்குத் தெரிவிச்சு, கிரிக்கெட் விளையாட்டத் தடைசெய்து, கில்லி வேர்ல்ட் கப் கொண்டு வர்றதுதான் இந்த கில்லி சங்கத்தோட நோக்கம்."
"அந்த புனித கில்லி இப்போ எங்கே இருக்கு?"
"எனக்குத் தெரியும்" என்றான் ராமசாமி புன்னகையுடன்.
தொடரும்..
10 பின்னூட்டங்கள்:
ஹி...ஹி...மண்டையில என்னய்யா வெச்சிருக்கீரு...கிரியேட்டிவிட்டி?! அருவியா கொட்டுது...
"தொட்டனைத்தூறும் மணற்கேணி
ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்
சீறி அடிச்சா கில்லி பறக்கும்
லாலாக்கு டோல்டப்பி மா
அண்ணா நாமம் வாழ்க!"
...கோட் ஐ எப்போ ஒடப்பீங்க...கதை இப்போ செம விறுவிறுப்பா போவுதுங்கோ...முன்னாடி சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன்.
//^v - இது கில்லி. () இது கில்லியோட மாறுபட்ட வடிவம். 0 - இந்த மாதிரி காலப்போக்கில மாறி, பின்னால O இப்படி ஆயிடுச்சி.
கில்லியிலே எத்தனை பேரு ஆடலாம்?"
"ஏன் ரெண்டு பேர் மட்டும் கூட ஆடலாமே?"
"கிரிக்கெட்லே?"
"11 பேர்னு நெனைக்கிரேன்"
"ஒண்ணையும் ஒண்ணையும் கூட்டினா என்ன வருது?"
"ரெண்டு"
"இப்போ புரிஞ்சுதா? கில்லியிலிருந்துதான் கிரிக்கெட் வந்ததுன்னு? - அது மட்டும் இல்ல. கில்லி ஆடும்போது உடம்புலே பட்டா கந்துன்னு சொல்வாங்க,. கிரிக்கெட்ல? LBW! நெறய ஆதாரம் இதுமாதிரி இருக்கு" //
depth of your reasearch on this subject matter is really great. hatsoff.. adada adada.. :-))))
supereiiiiiiiiiiiiiiii
நன்றீ பொட்டிக்கடை. கோடை ரொம்பப்புகழாதீங்க.. பாகம்6லே உடைச்சுட்டேன். அப்போ என்ன ஜுஜுபிடான்னு திட்டாதீங்க:-)
குரு, நீங்களாவது என் ரிசர்ச்சைப் புகழ்ந்தீங்களே.. இருங்க, பிபிலியொகிராபி வருது:-))
அடா அடா அடா.... என்ன அறிவு.. என்ன கற்பனை...
சூப்பரா போவுதுங்கோவ்...
:-)))
சுரேஷ்...
5 பாகத்தையும் படிச்சுட்டு வரேன்..அதுக்குள்ள ஒரு 'ஆறு' பதிவு போடுங்க...
http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_19.html
கோபி, டான்க்ஸ்.. கொஞ்சம் என் பாஸ் கிட்ட வந்து சொல்லுங்களேன்:-))
கப்பிப்பய, போட்டுறலாம், வெயிட் சம்டைம்:-)
கில்லியை மையமா வெச்சு ஒரு கதையா? அதுக்கு இவ்வளவு பாகமா? கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். வலிக்குதே. அப்போ உண்மைதான்.
நடத்துங்க ராசா.
இலவசம்,
அப்போ நீங்களும் கிள்ளி வளவன் வம்சம்தானோ?
//ஆமாங்க, எனக்கு ஆர்வமா இருக்கு சொல்லுங்க - இல்லாட்டி மட்டும் சொல்லாமலா விட்டுடப் போறீங்க?" //
சுரேஷ், இது என்னவோ எனக்கு சொன்னா மாதிரியே இருக்கு.. இருந்தாலும் தலைவா, எனக்கு ஆர்வம் இருக்கு.. இப்போ சொல்லிக்கிறேன் :)
இப்படித்தான் பொன்ஸ் ஆரவம் ஊட்டறா மாதிரி கதை எழுதணும்:-))
Post a Comment