எனக்கு இந்த பட்டியல் போடுவது பிடித்த விஷயமில்லை. இருந்தாலும் சிலர் அழைத்துவிட்டார்களே (தற்செயலாக அண்மைப்பின்னூட்டப் பதிவுகளிலிருந்து எடுத்த கப்பி பய உள்பட இதுவரை நாலைந்து பேர் ஆகிவிட்டது.); சங்கிலித் தொடரை அறுத்த பாவம் என்னை வந்து சேரக்கூடாதே என்று இந்த ஆறுப்பதிவை வலையுலகுக்குச் சமர்ப்பிக்கிறேன். யாருக்கும் பிடிக்க முடியாத ஆறு வரைவதே நோக்கம் என்றாலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தப்பித் தவறி யாருக்காவது பிடித்திருந்தால் சண்டைக்கு வரவேண்டாம்.
நான் புழங்கிய, புழங்கும் இடங்களில் எனக்குப் பிடிக்காத ஆறை எழுதியிருக்கிறேன். இவை தவிர அத்தனையும் எனக்குப் பிடித்ததே என்பதால் தவிர்த்திருக்கிறேன்.
சென்னையில் பிடிக்காத ஆறு:
1. சென்னைக்கு இகழ் சேர்க்கும் கூவத்தின் மணம்
2. மழைக்காலத்தில் ஈருருளி எங்கே உருளும் எனச்சொல்லமுடியாத பாதைகள்
3. எட்டு மணிக்கு மூடப்போகும் ரயில்வே கவுண்டரில் நிற்கும் 100 பேர் வரிசை.
4. எண்ணூர் தாண்டியவுடன் ரயிலிலிருந்து தென்படும் காலைக்கடன் கழிப்பாளர்கள்
5. ஆளைப்பார்த்து ஐம்பதா ஐந்நூறா என முடிவு செய்யும் ஆட்டோ அன்பர்கள்
6. அடுத்தவனைத் திட்டியே நம்மை பயமுறுத்தும் பர்மா பஜார் வியாபாரிகள்
அமீரகத்தில் பிடிக்காத ஆறு:
1. வாழ்க்கை முறையாகவே மாறிவிட்ட சாலை நெரிசல்
2. பத்துநாள் முன் உண்டதையும் வாந்தியெடுக்க வைக்கவல்ல குப்பைத் தொட்டி மணம்
3. உரிமம் வாங்கும்வரை கண்டிப்பு, அதற்குப்பிறகு எப்படியும் ஓட்டலாம் என்ற விசித்திர சிந்தனையுடன் நடத்தப்படும் ஓட்டுநர் உரிமத் தேர்வுகள்
4. சுத்தம் செய்த ஐந்தாம் நிமிடம் தெருவின் நடுவில் நூற்றுக்கணக்கான சிகரெட் பில்டர்கள்
5. யாருக்குமே நல்ல சகுனம் அமையவிடாமல் சுற்றும் தெருப்பூனைகள்
6. நாளொரு மேனியும் பொழுதொர்ரு வண்ணமுமாய் வளரும் வீட்டுவாடகை - ரியல் எஸ்டேட் தொந்தரவுகள்..
வலைப்பதிவுலகில் பிடிக்காத ஆறு:
1. விவாதத்தை திசைதிருப்பும் என்று தெரிந்தே போடப்படும் பின்னூட்டங்கள்
2. அடுத்தவர் வழிமுறைகளை ஏளனம் செய்யவென்றே இடப்படும் பதிவுகள்
3. "அன்று நீ இதைச்சொன்னாயே" என்று Historicalஆக செய்யப்ப்டும் விமர்சனங்கள்
4. போலி செய்ததும் சரி என்று வாதிடும் வழக்கறிஞர்கள்
5. முன்முடிவோடு எடுக்கப்படும் தீர்மானங்கள், கட்டம் கட்டல்கள்
6. குழுவுக்கும் தனிநபருக்கும் வைக்கப்படும் இரட்டை அளவுகோல்கள்
அடுத்து நான் அழைப்பது?
எல்லாரும் ஏற்கனவே அழைக்கப்பட்டுவிட்டனர். தாமதமாக அழைக்கப்பட்டவர்கள் தங்கள் ஆறு பேரை எங்கே தேடுவார்கள் என்ற கவலையும் இருக்கிறது. எனவே, யாரேனும் விடப்பட்டிருந்தால் இதைத் திறந்த அழைப்பாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
32 பின்னூட்டங்கள்:
அவ்வளவு பேர் கூப்பிட்டு விட்டாங்களா? நானும் இப்போதான் உங்களை கூப்பிட்டேன். அதனால் என்ன? உங்களுக்கு பதிலாக எனது மாற்று லிஸ்டில் இருக்கும் ஒருவரைப் போடுகிறேன்.
வித்தியாசமான ஆறு... நன்றாக இருந்தது..
பரவாயில்ல இலவசம், எதோ நம்மையும் ஞாபகம் வச்சிருக்கீங்களேன்னு மகிழ்ச்சிதான்.
நன்றி மனதின் ஓசை.
வேற யாருக்குமேவா பின்னூட்டம் போடத் தோணலே:-((
///வேற யாருக்குமேவா பின்னூட்டம் போடத் தோணலே///
இதோ போட்டுட்டேன்.... பின்னூட்டல் போடலேன்னா நாங்க எல்லாம் உங்க Blogஐ படிக்கிறதில்லேன்னு அர்த்தம் ஆயிடுமா என்ன?
//பின்னூட்டல் போடலேன்னா நாங்க எல்லாம் உங்க Blogஐ படிக்கிறதில்லேன்னு அர்த்தம் ஆயிடுமா என்ன? //
அது சரிதான் லக்கிலுக், மடிப்பாக்கம் ரோடைப்பத்தி:-)) சொன்னாஅலும் கருத்து சொல்லாம காணாமப்போனா எப்படி:-))
//வேற யாருக்குமேவா பின்னூட்டம் போடத் தோணலே:-(( //
கூப்பிட்டா பாவத்துக்காவது நான் போட்டுடறேன்...ஃபீல் பண்ணாதீங்க..
பிரதர் கப்பி பய (ஒரு பெயர் விளக்கம் கொடுத்துடுங்களேன்), ஃபீல் எல்லாம் ஆவுறதில்ல.. பழக்கம் ஆயிடுச்சி! ஆனா, ரெண்டே ரெண்டுன்னு பாத்ததும் உணர்ச்சி வேகத்துலே எழுதிட்டேன் பாஸு!
//ஒரு பெயர் விளக்கம் கொடுத்துடுங்களேன்//
தனியா அறிக்கையே விட்டுடறேன்...
// ஃபீல் எல்லாம் ஆவுறதில்ல.. பழக்கம் ஆயிடுச்சி//
same blood!!!
இப்படித்தான் மிஸ்டர் கப்பி மாதிரி போட்டுத் தாக்கிகிட்டே இருக்கணும்..
நன்றி கப்பி பய.
சும்மா ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணாம அழுதுக்கிட்டே இருந்தா எப்படி? குமரனுக்கு ஒரு மடல் போட்டு ரூல்ஸ் எல்லாம் வாங்கிக்குங்க.
பெனாத்தலாரே. வலைப்பதிவுலகில எனக்கும் பிடிக்காத ஆறுகளைப் பத்திப் போட்டிருக்கீங்களே - அது எனக்குப் புடிச்சிருக்கு. :-)
//5. ராமநவமி - பக்ரீத் என்று மத வேறுபாடின்றி நடக்கும் கலவரங்கள்//
:))
Nice one!
என்ன கொத்ஸ். பெனாத்தலாருக்குத் தெரியாத பின்னூட்ட ரூல்ஸா? அதெல்லாம் பெரிசே இல்லை அவருக்கு. வெங்காயம். :-)
இலவசம், உங்களுக்கு குமரன் பதில் சொல்லிட்டாரு. வழிமொழிகிறேன், வெங்காயம்:-))
குமரன், யாராவது இன்னும் ஸ்ட்ராங்கா எரிச்சல் கிளப்பும் ஆறுன்னு போட்டாலும், இவை அதில் இருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி எஸ்கே.
சரி விடுங்க. வெங்காயம் :)))
என்ன எல்லாரும் வெங்காயம் வெங்காயம்னுகிட்டு.. விடுங்க இந்த விளையாட்டை!
விவாதம்னு சொல்லிட்டு மத்தவங்களைப் பேசவே விடாம, தான் நினைச்சது மட்டும் தான் சரின்னு நிற்கிறதும் எனக்குப் பிடிக்காத ஆறுல வரும்... மத்ததெல்லாம் சரி தான்
How did you manage 6 in Bihar, i thought anyone would stop after the first item 'I don't like Bihar'
பொன்ஸ், நீங்க சொல்றதும் சரிதான். (இல்லாட்டி நான் நினைச்சதே சரின்ற கும்பல்லே என்னையும் சேத்திடுவீங்களே:-)
நன்றி இடுப்பைச்சித்தர். பீஹார்லே ஆறேழுவருஷம் இருந்திருக்கேன், ஆறுகூடவா தேத்தமுடியாது?
ஆஃப்லைன் ஒரு கேள்வி, என்னோட பழைய பதிவையெல்லாம் தேடி எடுத்துப்படிக்கறீங்களே.. ரொம்ப நல்லவர் சார் நீங்க!!
// இல்லாட்டி நான் நினைச்சதே சரின்ற கும்பல்லே என்னையும் சேத்திடுவீங்களே:-) //
சே சே சுரேஷ், உங்களை அப்படிச் சொல்வேனா, நீங்க சொல்றதும் சரிதான்..
(அப்டியே நைஸா என்னை அந்தக் கும்பல்ல சேர்க்கப் பாத்தீங்க தானே?!! :))))
பொன்ஸ்,
இப்பதான் ஒரு வெங்காய விளையாட்டு ஆடி முடிச்சிருக்கோம்.(மேலே பாருங்க!) அடுத்து நீங்க சொல்றதே சரி கேம்-ஆ?
//
வேற யாருக்குமேவா பின்னூட்டம் போடத் தோணலே:-((
//
வந்துட்டோமுல என்னோட வேலையே அதுதானே ......
டா கில்லி கோட் 8 பாகமும் அருமை இதுவும் கூட
//4. எண்ணூர் தாண்டியவுடன் ரயிலிலிருந்து தென்படும் காலைக்கடன் கழிப்பாளர்கள்//
//4. துளியும் விவரமறியாதவனை சிரித்துப்பேசியே ஆக்கிரமிக்கும் படித்தவர்கள் //
// 4. சுத்தம் செய்த ஐந்தாம் நிமிடம் தெருவின் நடுவில் நூற்றுக்கணக்கான சிகரெட் பில்டர்கள் //
//4. போலி செய்ததும் சரி என்று வாதிடும் வழக்கறிஞர்கள் //
நல்ல 4 கள்
நாலு ஆச்சு,. இப்ப ஆறு ஓடுது. அடுத்து எட்டு எட்டாய் பிரிக்க ஆரம்பிக்காதீங்கப்பூ :-(((
ஆமாங்க பெனாத்தலாரே. நீங்க சரியாச் சொல்லறீங்க!
வித்தியாசமான ஆறு.
அப்பாவி தமிழன்,
இந்த மாதிரி சான்ஸ் கிடைக்கும் போது தானே நீங்களும் என்னை இப்படிப் போட்டுப் பார்க்க முடியும்?!! :))
சரி சரி.. இது நான் எல்லாருக்கும் பொதுவா சொன்னது தான்..
இப்படிப் பொதுவா சொல்வதை எல்லாம் ஒருத்தருக்கு மட்டும் சொன்னதா திரிக்கிறது கூட எனக்குப் பிடிக்காத ஆறுல.. சரி பினாத்தலார், சரி, இத்தோட நிறுத்திக்கிறேன் :)
வாங்க வாங்க மின்னல்.. நன்றி..இப்படி எதாவது போட்டாதானே இத்தனை பேரு வராங்க.. நீங்களே பாருங்க, கில்லி கோட ரசிச்சிருக்கீங்க, ஆனா இப்பதான் சொல்லத்தோணுது பாருங்க - அய்யோ தப்பா எல்லாம் நினைக்காதீங்க - குறையா எல்லாம் சொல்லலீங்க..
இலவசம், கரெக்டா பாயிண்ட புடிச்சுட்டீங்களே!
நன்றி கால்கரி சிவா. அது என்ன நாலாவதை மட்டும் தேடிப்பிடிச்சு சொல்றீங்க:-))
உஷா அக்கா - பயமாத்தான் இருக்கு - அடுத்த எட்டை விடுங்க - அடுத்த வருஷதுல வரப்போற 108, 1008 எல்லாத்தையும் யோசிச்சா:-))
அப்பாவித் தமிழன் - நீங்களா அப்பாவி? பெயர் பொருந்தலையே!
நன்றி அந்நியன்.
Suresh,
You’ve misspelled my name both times, here is a little guide to pronounce it, iduppu + aati + chittar = iduppatichittar.
BTW, i couldn't see your animations, it takes forever to load.
மன்னிக்கவும் இடுப்பாட்டிச்சித்தர் அவர்களே.. சிம்ரனின் குருவோ நீர்?
ஃப்ளாஷ் பதிவுகள் பல காலாவதியாகிவிட்டன. என் கணினியிலிருந்து மீள் இணைப்பு கொடுக்கவேண்டும்.. நேரம் பற்றாக்குறை என்ன செய்ய? உங்கள் மெயில் முகவரி கொடுத்தால் அனுப்பி வைக்கிறேன்.
Not Simran, pampattichittar. My mail ID is dandanakka@gmail.com, thanks in advance.
Konjam neram thoongunga sir
நாளைக்குள் மெயில் அனுப்புகிறேன் இடுப்பாட்டிச்சித்தரே.
Post a Comment