Jun 7, 2006

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

மூன்று வருடங்கள் விட்டு விட்டுச் செய்த விடா முயற்சிக்கு இன்று பலன் கிடைத்தது!
 
எந்தப் பரீட்சையிலும் பெயிலாகாமல், கல்லூரியை விட்டுக்கூட அரியர்ஸ் இல்லாமல் வந்தவன் தான்.
 
அதற்குப்பிறகும் கூட, எழுதியபரீட்சைகளில், சென்ற நேர்முகத் தேர்வு எதிலும் தோற்றதில்லை என்ற பெருமையும் அடித்துக்கொண்டவன் தான்.
 
எல்லாப்பெருமைகளும், அமீரகத்தின் ஓட்டுநர் உரிமம் பெறும் முயற்சிகளில் காற்றோடு கரைந்தன.
 
வந்த ஆறு மாதங்களில் இருந்தே முயற்சி செய்ய ஆரம்பித்தேன். தனிப்பட்ட பயிற்சியாளர்களிடம் போய், பணத்தை அழுது, ஒவ்வொரு முறை தோற்கும்போதும் என் கார்க்கனவுகள் இன்னும் இரண்டு மாதம் தள்ளிப்போடப்பட்டு, இரண்டு மாதம் கழித்தும் தோற்று - என இரு வருடங்கள் போயின. இரண்டு மாதத்துக்கொருமுறை காரைத் தொட்டு, ஐந்தே நாட்களில் அவர்கள் எதிர்பார்த்த அசகாயசூரத்தன ஓட்டுநராக மாறமுடியவில்லை!
 
பிறகு அரசாங்க பயிற்சிப்பள்ளியில் இணைந்து, எட்டு மாதங்கள் காத்திருப்பு, பிறகு இரண்டு மாதங்கள் தொடர் பயிற்சிக்குப் பிறகு இரண்டு பரீட்சைகள் - இறுதியாக இன்று வெற்றி.
 
வெளியே சொல்லவே அவமானமாய் இருந்தது - வெறுப்பின் விளிம்பை எத்தனையோ முறை தொட்டிருப்பேன்! தோல்வி என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளவா முடியும்?  இருந்தாலும் வேறு துறைகளில் - இல்லம், அலுவலகம், வலை என்று எல்லா இடங்களிலும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றிருந்தாலும், இந்தத் தோல்விகள் எந்த வெற்றியையுமே முழுமையாகக் கொண்டாட முடியாமல் செய்துவிட்டது.
 
இதை ஒரு அல்ப விஷயமாகக் கருதாதீர்கள்! ஆசீப்பின் பதிவில் நான் மட்டுமின்றி, வளைகுடா நாடுகளில் வாழும் அனைவரும் புலம்பிய புலம்பல்களையும், என்னை அவர் தேற்றியதையும் (குல்லா போட்டுகிட்டுப் போங்க!) படியுங்கள்! குல்லா எதுவும் போடாமலேயே:-) வெற்றி பெற்றுவிட்டேன்!
 

24 பின்னூட்டங்கள்:

Unknown said...

வாழ்த்துக்கள் பினாத்தல்!
(நீங்களும் என்னைப்போலவே மூன்றாவது முயற்சியில்....)

பாதுகாப்பாக வண்டி ஓட்டுங்கள்! புதுக்கார் வாங்க ஏதும் ஐடியா வேண்டுமா? அணுகுங்கள்....

Anonymous said...

வாழ்த்துகள் குழந்தாய்!

கடவுள் சொல்லி நடக்குதோ இல்லையோ 'சாத்தான'குளத்தான் சொன்னால் கட்டாயம் நடந்துவிடும்னு இப்பவாவது புரிஞ்சா சரி.

குல்லா போடாம போனாலும் 'தர்க்க சாஸ்திரப்படி' நீர் இந்து இல்லை என்பதை உணர்ந்து கொண்டதாலேயே அந்த அரபி காவல்காரர் உம்மைத் தேர்வு பெறச் செய்திருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

1) குல்லா போடாமல் போனாலும், இந்துவாக இல்லாமல் இருந்தால் அமீரகத்தில் ஒட்டுனர் உரிமம் கிடைக்கும்.
2) என் பதிவை அரேபிய காவல்காரர்களும் படிக்கிறார்கள்

நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்

Prabu Raja said...

வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!

Prabu Raja said...

மீண்டுமொரு வாழ்த்து.. குல்லா போடாமலே வாங்கியதற்கு.

;)

இலவசக்கொத்தனார் said...

கார் வாங்கியாச்சா. சிவா வேற சொன்னார் அவ்வளவு கஷ்டமாமே. பார்த்து ஓட்டுங்கள்.

சிறில் அலெக்ஸ் said...

ஆசிப் மீரான் அரபிக் காவல் காரரா?
எப்படியொ பாசாயிட்டீங்க. அடுத்து கார் வாங்கிடுவீங்க. வாழ்த்துக்கள்.

லக்கிலுக் said...

பாஸானதற்கு வாழ்த்துக்கள்!

manasu said...

வாழ்த்துக்கள்.

ஒரு வண்டி வாங்குற அளவு பைசா செலவு பண்ணிருப்பிங்களே????

Unknown said...

அமீரகத்திலே இருக்கிறதுலேயே கஷ்டமான காரியத்திலே வெற்றி அடைஞ்சிட்டிங்க, இனி எல்லாம் ஜெயமே (நான் அம்மாவைச் சொல்லலை)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி துபாய்வாசி!

உதவி தேவைப்படும் என்றுதான் நினைக்கிறேன், தொலை பேசுகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

குருவே சரணம்!

போலீஸ்காரனும் படிக்கும் ஒரே வலைப்பூ சாத்தான்குளம் என்று நிரூபித்தமைக்கு!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பிரபு ராஜா!

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம் - கஷ்டமா? understatement!

பெண்டு கழண்டுடுச்சி!

பினாத்தல் சுரேஷ் said...

சிறில்..

ஆசிப் இல்லைங்க காவல்காரர்.. காவல்காரர் ஆசிப்பின் ரசிகர் அவ்வளவுதான்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லக்கிலுக்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மனசு - ஒரு வண்டியா - வயித்தெரிச்சலக் கிளப்பாதீங்க!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கே வி ஆர்! அங்கே எல்லாம் எப்படி?

பொன்ஸ்~~Poorna said...

ஓ.. இதுல தான் பாஸா.. நான் கூட வேற புது தேர்வு, போட்டி எதுலயாவது பாஸ் போலன்னு நினைச்சேன்..

எப்படியோ இனி குழந்தைங்க கிட்ட தைரியமா "இது கூட பாஸ் பண்ணத் தெரியலையா?"ன்னு கேட்கலாம் :)

பை த பை, நான் கூட இங்க லைசன்ஸ் எடுக்கலாமான்னு பார்க்கிறேன்.. அமெரிக்கக் காவல்காரர்கள் படிக்கும் பதிவு எது?? :)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க பொன்ஸக்கா..

அமெரிக்க காவல்காரர்கள் படிக்கும் பதிவு:

பொன்ஸ் பக்கங்கள்!

Unknown said...

Congrajulations Suresh

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தேவ்!

Geetha Sambasivam said...

வாழ்த்துக்கள் சுரேஷ், கொஞ்ச நாளாய்ப் பெனாத்தவில்லையேனு நினச்சேன். பரிக்ஷை மும்முரம். மறுபடியும் வாழ்த்துக்கள். Take care and always be on safe side.

Geetha Sambasivam said...

என்னோட வாழ்த்துப் பின்னூட்டம் வரலியா? இல்லாட்டி இன்னும் பார்க்கலியா? சுறுசுறுப்பே இல்லையே.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கீதா. பிளாக்கர் ஓபன் பண்ரதே ஒரு ஷெட்யூல் போட்டுத்தான்; அதுலே மிஸ் ஆயிடுச்சி, மன்னிக்கவும்!

 

blogger templates | Make Money Online