Jun 11, 2008

ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும் இன்னபிற பிரபலங்களும் (11 Jun 2008)

அடர்கானகத்தில் திறந்திருக்கும் வாய்
 
மரத்தின் வெளியே
வெளிச்சம் மறைக்கும் தழைகள்.
சத்தம் உணர்த்தும் சருகுகள்.
எங்கோ ஓடிச்செல்லும் முயலின் ஈன ஒலி.
சிங்கங்கள் துரத்தலாம்
மான்கள் மருளலாம்
இக்காட்டின் ஏதோ ஓர் மூலையில்.
அலுத்துக் காத்திருக்கும்புலிக்கு
நேற்று அருந்திய பியர் போத்தல்
எட்டி உதைக்கும் பொம்மை ஆகலாம்.
பசித்திருக்கும் வயிறுகளும் உண்டு.
சிவாஜிக்கு மட்டும்தானா?
இவ்வாய்க்கும் ஜிலேபிகள் தரப்படலாம்.
அதை இலவசமென்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் நீங்கள்.
 
***********************

சிவாஜி வாயிலே ஜிலேபி..

"இதான் க்ளூவா?" இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் தன் சட்டைப்பையினின்றும் எடுத்த கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தவண்ணம் கேட்டார்.

"ஆமாம் சார். அந்த யங் சாப் அப்படித்தான் தன் கையிலே பச்சை குத்தியிருந்தான்" சொன்னார் சிலம்பரசன் ஐ பி எஸ்.. சத்தியிலிருந்து மாற்றலாகி வந்திருந்தார். புது ரெக்ரூட்மெண்ட்.

"இறந்தவர் பேரு என்ன?"

"வாகீசன் சார். ஆர் எஸ் புரத்துல தங்கி இருக்கார். இண்டஸ்ட்ரிஸ்ட்"

"எப்படி இறந்தார்?"

"பாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் ரிசல்ட் இன்னும் வரலை.. ஆனா உடம்பெல்லாம் நீலம் பாரிச்சிருந்தது சார்"

"லாஸ்ட் வீக் இதே ஏரியாவுல ஒரு கொலை நடந்ததே.. அதுல இறந்தவர் பேர் என்ன?"

"ஜியா மொகித்தீன் சார்.. அவரும் புட் பாய்சனிங் தானாம் சார்"

".. ம்" கோகுல்நாத் இன்னும் விவேக்கைக் கூப்பிட முடிவெடுக்கவில்லை..

"ஸ்வீட் சாப்பிடறீங்களா சார்.. பக்கத்துக் கடையில ஆனிவர்ஸரியாம்.. அதுக்காகக் கொடுத்துட்டுப் போனாங்க.."

கோகுல்நாத் துல்லியமாக அதிர்ந்தார்..

"சிலம்பரசன்.. அந்த ஜிலேபியச் சாப்பிடாதீங்க..

இன்னுமா உங்களுக்கு க்ளூ புரியல?

சிலம்பரசன் - வாகீசன் - ஜியா மொகித்தீன் -மூணு பேரையும் ஜிலேபி கொடுத்து கொல்லறதா ப்ளான் போட்டிருக்கான் அந்த ப்ளாகாட்!"
 
*******************
ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும்
 
கவுஜயிலே இருக்கற வகைங்களே போதும்னு பொறவிக்கவிஞனான நானும் நினைச்சுப்புட்டா, அண்ணாச்சிக்கு சரக்கு தீந்து போச்சுன்னு அபுதாபிக் கடைங்கள்லே சரக்கை வாங்கி அனுப்புவான் வளர்ந்துவரும் இலக்கியவாதி.. இருக்கற சோகம் போதாதுன்னு இதையும் ஒரு சோகமாக்கி அய்யனார் சோக கீதம் பாடுவான். கோட்டிக்காரங்க அப்படித்தான் பண்ணுவாங்கன்னு விட்டுத் தொலைக்கலாம்  சவத்தைன்னு விட முடியுதா? நம்ம மனசாட்சி நம்மளைக் கேள்வி கேக்காது?  அப்புறம் ஜெமோவுக்கும் சாத்தான்குளத்தானுக்கும் என்ன வித்தியாசம்?
 
இந்தப் புது வகைக் கவுஜைக்கு சரி ரியலிஸம்னு பேரு..எதைச் சொன்னாலும் சரி இருக்கற ஆளுங்கதானே நம்ம ஊர்லே பெரும்பான்மை.. அந்த ஒடுக்கப்பட்ட இனத்துக்காக பாடுபடும் கவுஜை இது!
 
சிவா
ஜி
வாயி
லேஜி
லே
பி.
 
இந்தக் கவுஜைய எவனாச்சும் திறனாய்வு செஞ்சு பின்னூட்டம் போட்டா வெளியிடவே மாட்டேன்.. ஆமாம் சொல்லிபுட்டேன்.
 
************************
அவனுக்கென்று ஒரு ஜிலேபி
 
'மட சாம்பிராணி.. ஒரு பெண்ணை இந்த இடத்திலா நிற்க வைப்பது? ' போவோர் வருவோர் பார்வையெல்லாம் தன்னையே துளைப்பதாக எண்ணிக் குன்றிப்போனாள் ரம்யா. போர்ட்டர் ஒருவன் இடிக்க வந்தபோது இயலாமைச் சினத்தில் துடித்தாள்.

காலையில் அப்பா சொன்னாரே..'என் பெண் சமத்து. எந்த இடத்திலும் தன்னிலை உணர்ந்து நடந்து கொள்வாள்' இங்கே அதெல்லாம் முடியாது என பெருமூச்செறிந்தாள்.

வாயிலுக்குச் செல்லலாம். அங்கேயாவது இந்த அருண் ராஸ்கல் வந்திருக்கிறானா என்று பார்க்கலாம்.

டிக்கட் கேட்ட பரிசோதகரிடம் சீசன் டிக்கட்டைக் காட்டி வெளியே வந்தாள். சி எஸ் டி டெர்மினல் வாசல் ஆட்டோக்காரர்கள் 'வரீங்களா அம்மா' என்று கேட்டதற்கு தலையசைத்துவிட்டு முன்னேறினாள்.

அருண் வேகமாக வந்தான். "டார்லிங், நம் கஷ்டம் எல்லாம் தீந்துது.. இந்தா இனிப்பு சாப்பிடு" என்று வாயிலே ஒரு இனிப்பையும் திணித்தான்.

'என்னது இது.. நான்குபேர் போகிற வருகிற இடத்திலா சாப்பிடுவது?'

' அதனால் என்ன சிவாஜி (டெர்மினஸ்) வாயில்லே ஜிலேபி' என்று ஜோக்கடித்தான் அருண்.

 
***********************
பி கு 1: இந்த சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தொடர் விளையாட்டை ஆரம்பித்து வைத்த புண்ணியவானை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். இன்ஷ்யூர் செய்துகொண்டு வரவும்.
 
பி கு 2: இலவசக்கொத்தனாருக்கும் இன்ஷ்யூரன்ஸ் பரிந்துரைக்கிறேன்.
 
பி கு 3: ராஜேஷ்குமாரும் ரமணி சந்திரனும் கோவிச்சுக்க மாட்டாங்க.. மத்தவங்க கோவிச்சுக்கிட்டாலும் கவலையில்லை :-)
 
பி கு 4: இன்னும் மூணு பேரைக் கூப்பிடணுமாமே - சாத்தான்குளத்தான், அடர்கானகப் புலி, வளர்ந்துவரும் இலக்கியவாதின்னு எங்க லோக்கல் லேயே முடிச்சுக்கிறேன்.
 
பி கு 5: ஒரு மெகா ப்ராஜக்ட் தயாராகி வருகிறது. குவிஸ் மற்றும் பரிசுப்போட்டி. அடுத்த வாரம் ரிலீஸ்.
 
பி கு 6: தசாவதாரம் முதல்நாள் முதல் காட்சிக்கு புக் செய்தாகிவிட்டது. சென்னைப்பதிவர்களுக்கு முன்பே பார்த்துவிடுவேன். (இங்கு 12 ஜூன் ரிலீஸ்)
 

44 பின்னூட்டங்கள்:

ஆயில்யன் said...

சிவா
ஜி
வாயி
லே
ஜி
லே
பி.

திறனாய்வு செய்யவேற வேணுமா???

ஒரு தலைப்புல எத்தனை ஜிலேபி கொடுத்துட்டீங்க சூப்பரு :))

Iyappan Krishnan said...

//பி கு 1: இந்த சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தொடர் விளையாட்டை ஆரம்பித்து வைத்த புண்ணியவானை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். இன்ஷ்யூர் செய்துகொண்டு வரவும்.//

அண்ணே.. டிக்கட் வாங்கி அனுப்புங்க. அங்க வந்து ஆரம்பிச்சது நானில்லைன்னு சொல்லிடறேன்.

( எப்பா எல்லாம் ஒரு மார்கமாத் தான்யா இருக்காய்ங்க )

கதையெல்லாம் சூப்பர்.

இராம்/Raam said...

அவதார் நல்லாயிருக்கு... :)

மோகன் கந்தசாமி said...

////////பி கு 6: தசாவதாரம் முதல்நாள் முதல் காட்சிக்கு புக் செய்தாகிவிட்டது. சென்னைப்பதிவர்களுக்கு முன்பே பார்த்துவிடுவேன். (இங்கு 12 ஜூன் ரிலீஸ்)///
எங்கே? எந்த தியேட்டர்! நான் நூவார்க்கில் பார்க்கவிருக்கிறேன்

துளசி கோபால் said...

:-)))))

Anonymous said...

தசாவதாரம் முதல்நாள் முதல் காட்சிக்கு புக் செய்தாகிவிட்டது. சென்னைப்பதிவர்களுக்கு முன்பே பார்த்துவிடுவேன். (இங்கு 12 ஜூன் ரிலீஸ்) //kuzhanthikal anumathi unda? ponawaram SARKAR RAJ parkappona idathil,under 15 are not allowed as per the rules nnu solli NARNIA paarkka anuppittaanga ...engu book seythirukkireergal?galleria?

கோவி.கண்ணன் said...

பினாத்தலாரே,

புதிய புரொபைல் படத்தில் ஹீரோ (ஜெயம் ரவி) மாதிரி இருக்கிங்க.
:)

யோசிப்பவர் said...

இலக்கிய திறனாய்வு :

"சிவா"
"ஜி"
"வாயி"
"லேஜி"
"லே"
"பி"

பி கு : இந்த இலக்கிய திறனாய்வை புரிஞ்சுகிட்டு பதில் சொன்னா, நான் கண்டிப்பா உங்க பதிவு பக்கம் அப்புறமா எட்டிப் பார்க்க மாட்டேன்.;-)

கதிர் said...

என்ன கொடும இது.
என்ன செய்யணும்னு மொதல்ல சொல்லுங்க.

ambi said...

//சென்னைப்பதிவர்களுக்கு முன்பே பார்த்துவிடுவேன். (இங்கு 12 ஜூன் ரிலீஸ்)
//

அந்த ரீல் பொட்டி வழியிலேயே காணாம போக. :))

ஜிலேபியை அனியாயத்துக்கு புழிஞ்சு இருக்கீங்க. :p

PPattian said...

கலக்
குகல
க்குன்
னுகல
க்கிட்
டீங்க

Anonymous said...

//இக்காட்டின் ஏதோ ஓர் மூலையில்.
அலுத்துக் காத்திருக்கும்//
அடர் சிவப்பில் உதட்டுச்சாயம் போடாத
என் ஜட்டியளவு கூட
ஆடையணியாத அம்மணமாய் திரியும்
//புலிக்கு
நேற்று அருந்திய பியர் போத்தல்
எட்டி உதைக்கும் பொம்மை ஆகலாம்.//


//வளர்ந்துவரும் இலக்கியவாதி..//

ஸ்பெல்லிங் மிஷ்டேக்! எளக்கியவாதி என்று திருத்தி எழுதவும்

சாத்தான்குளத்தான்

பினாத்தல் சுரேஷ் said...

ஆயில்யன்,

திறனாய்வுதான் செய்யக்கூடாதுன்னா சொல்லி இருக்காருல்ல அண்ணாச்சி!

நன்றி.

ஜீவ்ஸ்..

நீங்கதான் அதுன்னு தெரியாதா? இன்ஷ்யூரன்ஸ் ரெடியா?

ராம், அவதாரமாவா இருக்கு :-)

பினாத்தல் சுரேஷ் said...

மோகன் கந்தசாமி,

ஷார்ஜா கன்கார்ட் தியேட்டர், மாலை 07:30ன்னு சொல்லுது டிக்கட். ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகத்துல இருக்கு. நீங்க எங்கேயோ பாரின்லே இருக்கீங்க போல :-)

அக்கா, வாங்க!

அனானி, ஷார்ஜா தான். நேத்து காலையிலதான் புக்கிங் ஓப்பன் னு சொன்னாங்க! படம் U தானாமே.. அதனால பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

கோவி, நானேதான் அது. என்ன ஒரு சிலபல வருஷம் முன்னாடி எடுத்த போட்டோ, இப்ப இன்னுமே அழகா இருக்கேன்.. வெயிட்.வெயிட்.. நீங்க என்னை வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே??

யோசிப்பவர், உங்க திறனாய்வு பத்திய கமெண்ட் அண்ணாச்சியே தரேன்னு சொல்லி இருக்கார்.. வருகைக்கு நன்றி மட்டும்தான் நான் சொல்லணுமாம்.

தம்பி, மேட்டர் ரொம்ப ஜுஜுபி.. எதை வேணும்னாலும் எழுதிட்டு, ஜிலேபின்னு போட்டுடணும் அவ்வளவுதான். ஏன் உன் ஓலைப்பக்கோடா கேட்ட நண்பனை, ஜிலேபி கேட்டவனா மாத்திட்டா மேட்டர் ஓவர் :-)

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல வாழ்த்து அம்பி.. மகாத்மா ரஜினிகாந்த் சொன்ன ஒரு பழமொழியை நினைவு படுத்த விரும்புகிறேன் :-) நன்றி.

புபட்டியன், அப்படிதான் ஷார்ப்பா இருக்கணும். எவ்வளோ பாஸ்ட்டா கவுஜ பார்மட்டை புடிச்சுக்கிட்டீங்க!

அண்ணாச்சி, எயுத்துப்பியைகலைத் திறுத்தியமைக்கு நன்ரி. உங்களுக்கு இன்னும் ரெண்டு கொஸ்டின் மேலே இருக்கு பாருங்க!

rapp said...

சூப்பருங்க. சஸ்பென்ஸ் திரில்லர் கதை அப்டியே புல்லரிக்க வச்சிடுச்சி.

வல்லிசிம்ஹன் said...

இப்படியெல்லாம் கற்பனையா எழுதிட்டு நல்ல பேரு வாங்கிடுவீங்க. நாங்க மத்திரம் மூணாம் பேஸ்து அடிச்ச மாதிரி பதிவு போட்டுட்டு முழிப்போம்.
என்ன இருந்தாலும் ஜீனியஸ் ஜீனியஸ்தான்:)

இலவசக்கொத்தனார் said...

//சிவா
ஜி
வாயி
லேஜி
லே
பி.//

கடைசி வரியில் இருக்கும் எழுத்துப் பிழையால் இது பிந உவ்வேக்காக கருதப்பட மாட்டாது. மீண்டும் முயற்சி செய்யவும்.

இலவசக்கொத்தனார் said...

கதை சரி.

உவ்வேக் சரி (அதிலும் ஒண்ணுக்கு ரெண்டு)

கட்டுரை எங்க?

சின்னப் பையன் said...

சூப்
ப்
பர்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
:-))))))))))

Sridhar V said...

வரலாறு தெரிந்த காலங்களில் இருந்தே பதிவர் சமூகத்தில் விளையாட்டுகளும், தொடர்களும் நட்பின் அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பதிவர்களின் பதிவுகளில் செலுத்தி வரும் ஆதிக்கத்தை நீங்கள் பின் நவீனத்துவ விளிம்பு தளத்திற்க்கு நகர்த்தி செல்கிறீர்கள்.

இந்த பின்னல் அரசியல் சொல்வது என்ன? ஜிலேபியை தட்டிலிருந்து சிவாஜியின் வாய்க்கு மாற்றியது என்ன? பதிவர் வட்ட அரசியலை ஜிலேபியின் சிக்கலான பின்னலுக்குள் பின்னி சிவாஜியின் வாயை அடைக்கும் இந்த அரசியல் தொடரானது நமக்கும் அறிவிக்கும் அந்தரங்க செய்திகள் ஏராளம்.

சிவாஜி அந்த துர்லப முடிவை எடுத்து தன்னைத் தானே மாய்த்து கொள்ள முனைந்தால் அவருக்கு CPR செய்ய ஜிலேபி இடம் கொடுக்குமா? எம்ஜிஆராக பரினாம வளர்ச்சி எடுக்கும் போது ஜிலேபி ஜாங்கிரியாகுமா? லட்டு மற்றும் காராச்சேவுகள் என்னவாயின? குவார்ட்டர் பிராந்தியும் வாழைப்பழமும் தாண்டி ஜிலேபி என்ன செய்யப் போகிறது?

சிவா செய்த ஜிலேபி
சிவாஜி ப்ராண்ட் லேபிள்
இடையிலே வாயிலே வழியலே
லே! சிவாஜி வாயிலே ஜிலேபிலே!

என்ன அப்படி பாக்குறீங்க? அப்ப கன்பர்ம்டுதானா? :-))

Ayyanar Viswanath said...

சுத்தி சுத்தி எழுதினா ஜிலேபி வந்திரும்தானே :) ..தசாவதாரம் முதல் பதிவு உங்களோடதுதானா ..ஃப்ளாஷ் ஏதாவது கைவசம் இருக்கா? ..

முரளிகண்ணன் said...

தலை விமர்சனத்தை சீக்கிரம் போடுங்க. நல்லாயிருக்கா இல்லையான்னாச்சும் உடனே சொல்லுங்க (கண்டேன் சீதையை பாணியில்). தலை வெடுச்சுடும் போல இருக்கு எனக்கு

அபி அப்பா said...

\\
ஸ்பெல்லிங் மிஷ்டேக்! எளக்கியவாதி என்று திருத்தி எழுதவும்

சாத்தான்குளத்தான்
\\

ஹய்யோ ஹய்யோ, பெனாத்தலாருக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்துடுச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:-))

அபி அப்பா said...

அய்யய்ய்யோ மாத்தி பதில் போட்டுட்டேனா???????????????

கப்பி | Kappi said...

:)))

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் அண்ணே ...

தமிழன்-கறுப்பி... said...

ஆனாலும் ரொம்ப தைரியம் உங்களுக்கு...

தமிழன்-கறுப்பி... said...

///"ஜிலேபியும் மலச்சிக்கல் பதிவர்களும் இன்னபிற பிரபலங்களும்"////

இதுக்கான காரணம் என்ன??? இன்னொருவிதமாக கேட்டால்
உள்குத்து....என்ன???

பரிசல்காரன் said...

))))) (இப்படிப் போடற பின்னோட்டதுக்கு என்னாங்க அர்த்தம்?)

கோபிநாத் said...

\\பி கு 5: ஒரு மெகா ப்ராஜக்ட் தயாராகி வருகிறது. குவிஸ் மற்றும் பரிசுப்போட்டி. அடுத்த வாரம் ரிலீஸ்.

பி கு 6: தசாவதாரம் முதல்நாள் முதல் காட்சிக்கு புக் செய்தாகிவிட்டது. சென்னைப்பதிவர்களுக்கு முன்பே பார்த்துவிடுவேன். (இங்கு 12 ஜூன் ரிலீஸ்)
\\

இந்த ரெண்டு மேட்டருக்கும் வெயிட்டிங்...;;

இலவசக்கொத்தனார் said...

அதானே, கோபி சொல்லற மாதிரி பிகு 5 பிகு 6 - இவை இரண்டிற்கும் இருக்கும் தொடர்பை 100 வார்த்தைகளுக்குக் குறையாமல் விளக்கவும்.

(பிகு அப்படின்னு சொல்லிப் போட்டதுக்கே உயரெல்லை கிட்ட வந்தாச்சு, இதுவே டிஸ்கியா இருந்தா... நினைச்சுப் பாருமய்யா!!)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க rapp! புல்லரிக்க வைக்கறதுதானே நோக்கமே :-)

வல்லி அம்மா.. ரொம்பக்கூசுது :-)

இலவசம், //கடைசி வரியில் இருக்கும் எழுத்துப் பிழையால் // இப்படின்னு நீங்க சொல்றீங்க, எளக்கியவாதின்னு எழுதணும்னு அண்ணாச்சி சொல்ல்றாரு.. இதெல்லாம் பாத்துப்புட்டு அபி அப்பா என்ன கேக்கறாரு பாருங்க!

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

தலைப்பை ஒரு கட்டுரையா எடுத்துக்க கூடாதா?

ச்சின்னப்பையன், கவுஜ பிரமாதம் :-)

ஸ்ரீதர்,

//என்ன அப்படி பாக்குறீங்க? அப்ப கன்பர்ம்டுதானா? :-))//

அதுல என்ன சந்தேகம்?

பினாத்தல் சுரேஷ் said...

அய்யனார்,

சுத்தி சுத்தி எழுதினா ஜிலேபின்னா, நீங்க இதுவரை சுமாரா எத்தனை ஜிலேபி சுட்டுருப்பீங்க? ;-) தசாவதாரம் - விமர்சனம் எழுதும் நோக்கத்தோட பார்க்கும் விருப்பமில்லை. பார்த்துட்டு என்ன தோணுதோ அதை எழுதுவேன் நிச்சயம்.

முரளிகண்ணன்,

அய்யனார்கிட்ட சொன்னதுதான். எப்படியும் கண்டேன் சீதையை ஆவது உண்டு :-)

அபி அப்பா,

உங்ககிட்ட எல்லாம் காம்படிஷனுக்கு வர முடியுமா? ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை!

மாத்தியெல்லாம் போடலை, கவலற்க!

பினாத்தல் சுரேஷ் said...

கப்பி பய, :-))))) (நான் ஒண்ணு அதிகமா போட்டுட்டேன்)

தமிழன், நன்றி.

உள்குத்தா?

ஜிலேபி படும் பாடுதானே பதிவாய் உருவெடுத்திருக்கிறது? மலச்சிக்கல் மகாத்மியத்தை அண்மையில் எழுதிய ஆசிப் அண்ணாச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இரண்டாவது உம், இன்னும் ரெண்டு பேரு இருக்காங்களே அவங்களுக்காக மூணாவது உம் - குறைந்தது மூணு சம்மந்தமில்லாத மேட்டராவது சேராட்டி பி ந வுக்கு குவாலிபை ஆகாது என்பதால்!

பினாத்தல் சுரேஷ் said...

பரிசல்காரன், பின்னூட்டம் போட்டது நீங்க, அதுக்கு அர்த்தம் என்னைக் கேக்கறீங்களா?

சரி சொல்றேன்.

முதல் ): இப்பதிவு அபாரமான பதிவு
இரண்டாம் ): இப்பதிவு அற்புதமான விஷயகனம் கொண்ட பதிவு
மூன்றாம் ) : இப்பதிவு படித்ததில் என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது
நான்காம் ): இதுபோன்ற பதிவுகளை மேலும் மேலும் எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சரிதானே?

கோபிநாத், இருக்கறதைப் பத்தி கமெண்டு காணோமாம், வரப்போறதுக்கு வெயிட்டிங்காம்! ஒண்ணும் சரியில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

//அதானே, கோபி சொல்லற மாதிரி பிகு 5 பிகு 6 - இவை இரண்டிற்கும் இருக்கும் தொடர்பை 100 வார்த்தைகளுக்குக் குறையாமல் விளக்கவும். //

100 வார்த்தை ரொம்பக் கம்மி.. பதிவாவே போட்டுடறேன் :-)

//(பிகு அப்படின்னு சொல்லிப் போட்டதுக்கே உயரெல்லை கிட்ட வந்தாச்சு, இதுவே டிஸ்கியா இருந்தா... நினைச்சுப் பாருமய்யா!!)//

30 வந்தாலே தாங்கலையே உமக்கு!

வெண்ணை(VENNAI) said...

என்ன பினாத்தலாரே ஜிலேய்பிய வச்சே ஒரு பதிவபோட்டு எல்லாருக்கும் ஜிலேபி கொடுதிட்டிங்க ........நல்ல இருங்க...

ஆமா உங்களுக்கு ஆயுள் காப்பீடு இருக்குல்ல .........

Unknown said...

ஜிலேபி என்னய்யா பாவம் பண்ணுச்சு இந்த வாரம்? :)

மங்களூர் சிவா said...

தலைப்பு

"ஜிலேபியும் பதிவர்களும் இன்னபிற பிரபலங்களும் (11 Jun 2008)
மலச்சிக்கலும்
"

இப்பிடி வெச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்
:)

இலவசக்கொத்தனார் said...

இன்னுமா 50 வரலை? நான் ரெண்டு நாள் ஊரில் இல்லாத கஷ்டம் புரியுதா?

Anonymous said...

நல்லாத் தான் இருக்கு...

 

blogger templates | Make Money Online