Jun 13, 2008

தசாவதாரம் - முதல்கை (Warning - May contain Spoilers)

கண்டேன் சீதையை பாணியில் முதல்வரி சொல்லிவிடுகிறேன் : படம் பிரமாதம், அவசியம் தியேட்டரில் பார்க்கவேண்டும்.

முதலில் பாராட்ட வேண்டியது திரைக்கதையை. வாஷிங்டன் டோக்கியோ சிதம்பரம் பாண்டிச்சேரி வேளாங்கண்ணி சென்னை என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் பயணிக்கும் ஒரே மெகா துரத்தல்தான் கதை என்றாலும் அதை எந்த விலகலும் இல்லாமல் சுவாரஸ்யம் குறையாமல் எந்த லாஜிக் சம்மந்தப்பட்ட கேள்விகளும் இல்லாமல் ஓடும் திரைக்கதை.

இரண்டாவது ஒளிப்பதிவு. நடுக்கடலில் தொடங்கி நேரு ஸ்டேடியம் வரை மெரினா செண்ட்ரல் வழியாக வந்து கோயிலின் எல்லா நிலைகள் மேல் ஏறி கீழ் இறங்கி சோழன் மந்திரியின் தாடிவரை தடையில்லாமல் ஒரே ஷாட்! பாதி கிராபிக்ஸாக இருக்கலாம் - அது தெரியாமல் செய்திருக்கும் டெக்னாலஜி.

மூன்றாவது கமல்! ஒவ்வொரு ப்ரேமிலும் குறைந்தபட்சம் 3 கமலாவது இருக்கிறார்கள் - வழக்கமான டபுள் ஆக்ஷன் படங்கள் போல மரியாதையான தூரத்தில் அல்ல - ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, துவைத்துக்கொண்டு, துரத்திக்கொண்டு. எந்த நேரத்திலும் மெயின் கேரக்டர் தவிர வேறு யாரும் கமல்தான் என்ற எண்ணம் வராமல் இருப்பது பெரிய ஆச்சரியம். ஜார்ஜ் புஷ்ஷின் மரியாதைப்பட்ட ஆங்கிலம், ப்ளெட்சரின் அலட்சிய ஆங்கிலம், பல்ராம் நாயுடுவின் தெலுங்கு வாடை குப்பென்று அடிக்கும் தமிழ், மலையாளம் கலந்த பூவராகன் தமிழ், அக்ரஹாரத்து பாட்டி தமிழ், ஏன் ஜப்பானிஸ் கூட :-) ஒவ்வொரு வேடத்துக்கும் மேக்கப் மட்டுமின்றி உடல்மொழி, நுணுக்கமான விவரங்கள்.. முகத்தில் மாஸ்க் ஒட்டுவது மட்டும் வேடம் போடுவது அல்ல!

அடுத்து வசனங்கள்..
நண்பனின் மனைவி - life has to go on - நான் ஹிரோஷிமாவால் பாதிக்கப்பட்டவள் - வாழ்க்கையைத் தொடராமலா விட்டேன்?-
ஜார்ஜ் புஷ் கேட்கிறார் - நியூகிளியர் வெப்பன் போட்டால் பிரச்சினை தீருமா?
நான் கடவுள் இல்லைன்னா சொன்னேன்? இருந்திருக்கக்கூடாதான்னுதான் சொன்னேன்!
போடா.. கருத்துட்டான்றதுனால என் மகனா இல்லாம போயிடுவானா?

டெக்னாலஜியை முழுமையாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் - பலநேரங்களில் தமிழ்ப்படம் பார்க்கும் நினைப்பே இல்லை.

என் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லைதான். 10 வேடங்கள் இருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை. அதாவது, கமலே நடித்தாக வேண்டிய வேடங்கள் என்று இல்லாமல், முக்கியமான எல்லாப் பாத்திரங்களிலும் அவரே வியாபித்திருக்கிறார். ஜார்ஜ் புஷ் ஆகவும், சி ஐ ஏ முன்னாள் ஏஜண்ட் ஆகவும் ஜப்பானிய கராத்தே மாஸ்டர் ஆகவும் நடிக்கவேண்டிய எந்த அவசியமும் தெரியவில்லை. மேக்கப் சில வேடங்களுக்கு கடுப்பேற்றுகிறது. 7 அடி கைஃப் உல்லாவும் ஜார்ஜ் புஷ்ஷும் பொம்மை போலத்தான் நடமாடுகிறார்கள்!

பல காட்சிகளின் மொழி, மாஸுக்குப் பிடிபடாமல் போகும் சாத்தியம் இருக்கிறது!

ரங்கராஜன் நம்பி காட்சிகள் மெகா மிரட்டலாக இருந்தாலும், அதற்கும் மற்ற காட்சிகளுக்கும் என்ன சம்மந்தம் என்றே தெரியவில்லை!

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஒரு தீவிர ரசிகர், கேஎஸ்ரவிகுமார் டச்சே இல்லியே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். தெரிந்த ஆளாயிருந்தால் சொல்லி இருப்பேன், நான் மகிழ்ச்சி அடையறதே அதுக்குதான் சார் என்று :-)

சுரேகா எழுதி இருந்தார் - எந்த முன்முடிவும் இல்லாமல் போனால், 3 மணிநேரம் மெகா எண்டர்டெயின்மெண்ட் என்று - அதை நிச்சயம் வழிமொழிகிறேன்.

44 பின்னூட்டங்கள்:

பிரேம்ஜி said...

மிக்க நன்றி. சுரேஷ்.

Sridhar Narayanan said...

ப்ரெஷ்ஷா இருக்கு.

முதல் பாதி படிச்சா படம் பார்க்க ஆவல் இருக்கு. இரண்டாவது பாதில வாரு வாருன்னு வாரிட்டீங்க போல.

கே எஸ் ரவிக்குமார் டச் இல்லையா? அப்ப படம் ஜனரஞ்சகமா இல்லையோ?

கப்பி பய said...

சுடச்சுடவா...சூப்பர்!!

இங்கிட்டு ரிலீஸாக இன்னும் 26 மணி நேரம் இருக்கே :(.. :))

சிறில் அலெக்ஸ் said...

இன்னும் படிக்கல. டைம் ஜோன்ல முந்திட்டீங்க. நான் இன்று மாலை எங்க நேரம் 8:30க்கு பார்க்கப் போறேன்.

விமர்சனம் படிக்கல. :(

rapp said...

சூப்பரான, தெளிவான விமர்சனம். ரொம்ப நன்றி. எனக்கும் ஆரம்பத்துலேருந்தே அதே சந்தேகம்தான், இப்டி சம்பந்தம் இன்றியமாது அமையவேண்டும் என்றில்லாதபோது எதற்காக அவ்ளவு செலவு செய்து தானே நடிக்க வேண்டும் என்று. எப்படியோ ஒரு நல்ல பொழுதுப்போக்குகிரிய படம் அதுவும் உலகப் படங்களுக்கு நிகரான பிரம்மாண்டாத்தை காட்டி எடுத்திருக்கும்போது சின்ன சின்ன குறைகள் சுட்டி, விட்டுக்கொடுக்க மனசே வரவில்லை.

முகமூடி said...

// ஜார்ஜ் புஷ்ஷின் மரியாதைப்பட்ட ஆங்கிலம் //

tag start: strike மரியாதைப்பட்ட tag end: end strike

வெட்டிப்பயல் said...

இதெல்லாம் நொம்ப ஓவர்...
இன்னும் இங்க ரிலீஸே ஆகலை :-(

இன்னும் 2 மணி நேரமிருக்கு ஷோவுக்கு...

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி சுரேஷ். உங்க புரொஃபைல் படமும் சூப்பர்

கோபிநாத் said...

தல

நன்றி ;))

எதுக்குன்னு மட்டும் கேட்காதிங்க...! ;)

குமரன் (Kumaran) said...

என்னங்க இது. திரையரங்குல போயி தான் பாக்கணுமா? வீட்டுல உக்காந்து நிம்மதியா பாக்கலாம்ன்னு இருக்கேன் நான். கூடாதா? :-(

வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல்ன்னா என்னாங்கோ? புரியலையே?

VIKNESHWARAN said...

என்க்கு இன்னிக்கு டிக்கட் கிடைக்குதானு போய் பாக்குறேன்...

இலவசக்கொத்தனார் said...

இப்ப பார்த்து ஊரில் இல்லை. இந்த வார இறுதியில் முடியுதான்னு பார்க்கலாம்.

லக்கிலுக் said...

தசாவதாரம் கமலுக்கு மேக்கப் போட்டவர் தான் உங்களுக்கும் போட்டாரோ? ப்ரொபைல் படம் சூப்பரப்பு!!!!

லக்கிலுக் said...

BTW, டோண்டு சார் ஸ்டைலில் ஒரு கமெண்டு

“சமீபத்தில் 1981ல் இருந்து கமல்ஹாசனின் தீவிர ரசிகனாக இருக்கும் லக்கிலுக்கு முதல்நாளே இந்த படத்தை பார்க்காமல் இருப்பானா? இன்னைக்கு நைட் ஷோ யார் கையில் காலில் விழுந்தாவது படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதி மொக்கை போடுவான்!”

ஜோ / Joe said...

பினாத்தலாரே,
நம்மவருக்கு வசூல் ரீதியாக மற்றுமொரு சூப்பர் ஹிட் என்று சொல்லலாமா?

siva said...

Ticket Rate are sold in blak too much RS.40 Ticket sold RS 350/-

any one give loan to me??

puduvai siva.

OSAI Chella said...

அட.. எனது விமரிசனத்தோடு 80 சதவிகிதம் ஒத்துப்போகிற்ரிர்கள் போல!

மங்களூர் சிவா said...

/
பல காட்சிகளின் மொழி, மாஸுக்குப் பிடிபடாமல் போகும் சாத்தியம் இருக்கிறது!
/

ஐயய்யோ இந்த படமுமா??????/
சுரேகா எழுதி இருந்தார் - எந்த முன்முடிவும் இல்லாமல் போனால், 3 மணிநேரம் மெகா எண்டர்டெயின்மெண்ட் என்று - அதை நிச்சயம் வழிமொழிகிறேன்.
/

இதை நம்பித்தான் படத்துக்கு போறேன்!!

பாப்போம்.

அதிஷா said...

நன்றி சுரேஷ்

மங்களூர் சிவா said...

படம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.

மங்களூர் சிவா said...

பெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.

:)))

மங்களூர் சிவா said...

பெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
:((

மங்களூர் சிவா said...

சந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!? (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.

நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது

:)))))))))

மங்களூர் சிவா said...

நல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.

டெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது
:((

மங்களூர் சிவா said...

/
பல காட்சிகளின் மொழி, மாஸுக்குப் பிடிபடாமல் போகும் சாத்தியம் இருக்கிறது!
/

'மாஸ்'க்கு பிடிக்காத படம் தூசு

:))))

தஞ்சாவூரான் said...

சுடச்சுட ...... நன்றி! சீக்கிரம் பாத்துடலாம் :)

//வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல்ன்னா என்னாங்கோ? புரியலையே?//

ரிப்பீட்டேய்.....

தம்பி said...

சந்தான பாரதியோட சாபமே கற்பழிப்பு சீன்ல அடிவாங்குறதுதான்.

இந்த படத்துல கமலின் உற்ற நண்பர் கூட அதில் மாற்றத்தை செய்யணும்னு தோணல. பத்து வேசம் போட்டார் என்பதைத் தவிர வேறெந்த வித்தியாசமும் இல்லை.

KVR said...

//கண்டேன் சீதையை பாணியில் முதல்வரி சொல்லிவிடுகிறேன் : படம் பிரமாதம்//

பினாத்தலாரே, கண்டேன் சீதையை பாணியிலே சொல்லணும்ன்னா "பிரமாதமான படம்"ன்னுல சொல்லி இருக்கணும்.

சினிமா நிருபர் said...

தசாவதாரம் பற்றி நடிகை அசினின் சிறப்பு பேட்டியை நிருபர் வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். வந்து ஒரு எட்டு பார்த்து படித்து விட்டு செல்லுங்கள் வாசகர்களே...!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பிரேம்ஜி.

ஜனரஞ்சகமா இருக்கு ஸ்ரீதர், ரவிக்குமார்த்தன ஜனரஞ்சகம் இல்லை :-) அதான் நீங்களே பாத்திருப்பீங்களே!

நன்றி கப்பி பய.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிறில். முந்தறதெல்லாம் எப்பவாவதுதான். முதல்நாள் படம் பாக்கறது விபத்தா அமைஞ்ச பீமா தவிர எப்பவுமே செய்யறதே இல்ல :-) என்னவோ இந்தப்படம் அவ்வளவு ஆவலைக் கிளப்பிடுச்சு.

ராப்..//சின்ன சின்ன குறைகள் சுட்டி, விட்டுக்கொடுக்க மனசே வரவில்லை.// அதேதான்.

வாங்க தலை - அபிசியல் மொழின்றதைதான் அப்படி சொல்லவந்தேன். தப்பா? மன்னிச்சிடுங்க!

பினாத்தல் சுரேஷ் said...

வெட்டிப்பயல் வாங்க, உங்க விமர்சனமும் தூள்.

முரளிகண்ணன் நன்றி. அதென்ன எல்லாரும் என் போட்டோவைப்பத்தியே பேசறீங்க?

கோபிநாத்.. எதுக்குன்னு தெரியுமே!

பினாத்தல் சுரேஷ் said...

குமரன்.. சில பிரம்மாண்டங்களை வீட்டில் பார்க்கமுடியாது - 54"LCD ஆக இருந்தாலும்.

வர்ஜ்யா வர்ஜயமில்லாமல் - என்ன சார் இதுக்கெல்லாம் விளக்கம் கேட்டு படுத்தறீங்க :-) ஜல்லி அடிக்கறது, டுபுக்கு விடறது மாதிரி இடத்துக்கு இடம் மாறும் அர்த்தம் சார் :-)

விக்னேஷ்வரன், டிக்கட் கிடைச்சுதா?

கொத்ஸ்.. பாத்துட்டீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

லக்கி -- நீங்கதான் நேர்ல என்னைப் பாத்திருக்கீங்களே - மேக்கப்லே தேறர முகமா அது?

உங்க விமர்சனமும் நல்லா இருந்தது.

ஜோ, வசூல்ரீதியாக எனக்குத் தெரியாது..உண்மையில் அதைப்பற்றிய கவலையும் இல்லை. ஹே ராம் ஊத்திக்கொண்டால் என்ன?அது எனக்கு பிடித்த பெஸ்ட் தமிழ் படம்.. அந்த வகையில் இதுவும் எனக்குப் பிடித்த படம். அவ்வளவே.

சிவா, லோன் எல்லாம் வேணாம்.. அடுத்த வாரம் பாருங்க :-)

நன்றி ஓசை செல்லா..

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா.. ஒரே செட் கமெண்டை ஏழெட்டு இடத்துல பாக்கறேன் :-)

நன்றி அதிஷா..

மங்களூர் சிவா, தம்பி.. சந்தானபாரதி மேலே அப்படியென்னப்பா பாசம் உங்க ரெண்டு பேருக்கும்? சர்தார்ஜி ஜோக்தான் ஞாபகம் வருது. டெய்லி படம் போய்ப் பாருங்க!

//ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.// அந்த சீன் எல்லாம் வரும்னா, க்ளைமாக்ஸ் சீனும் வரும் :-)


//டெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது // டெக்னாலஜியை மட்டுமே சூப்பர் என்று நான் சொல்லவில்லை :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தஞ்சாவூரான் - பார்த்துடுங்க..

நன்றி கேவிஆர் :-)

சினிமா நிருபர்.. பாத்துட்டேன் :-)

மங்களூர் சிவா said...

/
மங்களூர் சிவா.. ஒரே செட் கமெண்டை ஏழெட்டு இடத்துல பாக்கறேன் :-)
/

எல்லாம் ஒரே படத்தை பத்திதானே அப்படின்னுதான்
:))))

/
மங்களூர் சிவா, தம்பி.. சந்தானபாரதி மேலே அப்படியென்னப்பா பாசம் உங்க ரெண்டு பேருக்கும்?
/

ஒரு 'உலகத்தர'(!?) படத்துல நாயகியின் கற்பை காப்பாற்ற (உலகத்தரம் இப்ப கோலிவுட் தரத்துக்கு வந்திருச்சி :( )ஒரு ட்ராமா கும்பல் அந்த இடத்தில் வருவது வேடிக்கையாக இல்லை !?

மங்களூர் சிவா said...

//ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.// அந்த சீன் எல்லாம் வரும்னா, க்ளைமாக்ஸ் சீனும் வரும் :-)

க்ளைமேக்ஸ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கணுமா என்ன?????
:)))))))


//
டெக்னாலஜியை மட்டுமே சூப்பர் என்று நான் சொல்லவில்லை :-)
//

அதையும் தாண்டி எதோ நீங்க கண்டுனர்ந்திருக்கிறீர்கள் போல
:))

Aravind said...

நேர்மையான விமர்சனம்.

ச.சங்கர் said...

http://ssankar.blogspot.com/2008/06/blog-post.html..இந்தப் பதிவுல போய் பார்த்து விட்டு பதில் சொல்லிருங்க. பதிவர் பட்டையைக் காணோம் .அதனால தமிழ் மணத்துல இணைக்கலை.சிரமம் பார்க்காமல் போய் படித்து விடுங்கள். :)

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா,

//ஒரு ட்ராமா கும்பல் அந்த இடத்தில் வருவது வேடிக்கையாக இல்லை !?//

வின்சென்ட் பூவராகன் உமக்கு ட்ராமா க்ரூப்பா.. இருக்கட்டும் இருக்கட்டும்.. சப்டிலாக இதே காட்சி டைட்டானிக்கில் இருந்தால் மகிழ்வீர்கள் இல்லையா?

//அதையும் தாண்டி எதோ நீங்க கண்டுனர்ந்திருக்கிறீர்கள் போல
:))//

ஆமாம் :-))

நன்றி அரவிந்த்.

ச சங்கர்.. மாட்டிவிட்டதற்கு நன்றி. கூடிய விரைவில் வருகிறேன்.

மங்களூர் சிவா said...

/
பினாத்தல் சுரேஷ் said...

வின்சென்ட் பூவராகன் உமக்கு ட்ராமா க்ரூப்பா.. இருக்கட்டும் இருக்கட்டும்.
/

ஒரு 'உலகத்தர'(!?) படத்துல நாயகியின் கற்பை காப்பாற்ற (உலகத்தரம் இப்ப கோலிவுட் தரத்துக்கு வந்திருச்சி :( )


மிகச்சரியா இந்த இடத்துல வர்றதாலதான் ட்ராமா குரூப்னு சொன்னேன்.

திரும்ப படத்தை அசைபோட்டு பாருங்க!!

:))

பரிசல்காரன் said...

//படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஒரு தீவிர ரசிகர், கேஎஸ்ரவிகுமார் டச்சே இல்லியே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். தெரிந்த ஆளாயிருந்தால் சொல்லி இருப்பேன், நான் மகிழ்ச்சி அடையறதே அதுக்குதான் சார் என்று//
நான் பல சமயங்களில் தெரியாத ஆளாயிருந்தாலும் பதில் கொடுத்துவிட்டு வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கிறேன்! (ஆனால்.. ஓஹோ சனம் பாடலில் சம்மந்தமே இல்லாமல் ஒரு நொடி ஒரு தொப்புளைக் காட்டிவிடுவார்.. அந்த இடத்தில் கே.எஸ்.ஆர். இருக்கிறார்!)
வசனங்கள் பற்றி என் விமர்சனத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். காலம் அனுமதித்தால் வருகை புரியுங்கள்!

துளசி கோபால் said...

நான் நாலுநாளைக்குமுந்தான் பார்த்தேன்.

படத்துலே குறுக்கும் நெடுக்கும்போற ஆட்களுக்கு ஒரு குளோஸ் அப் இருந்தா அதுவும் கமலாக இருக்குமோன்னு நினைச்சேன்:-)))))

'நகர 'ஆட்களுக்குன்னு எடுத்த படமோன்னு ஒரு சந்தேகம்.

வழக்கம்போல் உங்க பதிவு சூப்பர்!

 

blogger templates | Make Money Online