கலைஞரை எந்த விஷயத்துக்காக பாராட்டுகிறோமோ இல்லையோ, ஒரு விஷயத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது - எப்படித்தான் இடைவிடாது 6 மணிநேரம் தொடரும் முகஸ்துதியை, முகஸ்துதி செய்பவர் நோக்கங்கள் அறிந்தும் (அறியாதவராகவா இருக்கமுடியும்?) கேட்டுக்கொள்ளும் தலையெழுத்தை விரும்புகிறார் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறாரே!
சரி போகட்டும்.. வாழ்த்த என்ன வயசு தேவைன்னு எங்கேயும் தெளிவாச் சொல்லி இருக்கறதா தெரியல.. எனவே என்னுடைய வாழ்த்துகளும் உரித்தாகுக!
இன்னொரு அதிசயிக்கத்தக்க குணம், மக்களின் மறதி மேல் வைத்துள்ள அசையாத நம்பிக்கை! ஹொகேனக்கல் விவகாரத்தில் ஏப்ரலில் (இதே வருடம்தான்) கொடுத்த அறிக்கைக்கும், இப்போது கொடுத்துள்ள அறிக்கைக்கும் அந்த நம்பிக்கையைத் தவிர வேறு காரணமே இருக்க முடியாது. அந்த நம்பிக்கையிலும் பெரிய தவறிருப்பதாகத் தெரியவில்லை - யாருமே கண்டுகொள்ளவில்லையே!
நான் இப்ப ஊகிக்கிறேன்.. அடுத்த பிறந்தநாளுக்குக் கூட ஆந்தைகளும் கழுகுகளும் சொல்ற ஸ்கூப் எதுவும் நடக்காது! எதிர்பார்ப்பும் ஊடகத்துக்குதான், ஏமாற்றமும் அவங்களுக்கு மட்டும்தான் போல :-)
***************
சென்னை என்ற பெயரைத் தவிர வேறெதும் சென்னையாக இல்லாவிட்டாலும், பெயருக்காகவே ஆதரிக்கத் தொடங்கின அணி, தொடர் தோல்வி கண்டதும் கட்சி மாறினதாக அறிவித்தேன். (உள்ளூற இன்னும் சென்னைதான்).. இறுதிப்போட்டியில் எப்படியும் எனக்குத் தோல்வி இல்லை என்ற நிலை :-)
செமிபைனல்கள் பட்சபாதமாக இருந்தாலும் பைனல் பயங்கரம்! கடைசி ஓவர், கடைசிப் பந்து வரை வந்த ஆட்டத்தில் யார் ஜெயித்தாலும் அதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். லீக் போட்டிகளில் முடிசூடாமன்னர்களாய் இருந்த ராஜஸ்தானுக்கு கோப்பையைக் கொடுத்தாலும் நல்லா பெண்டு கழட்டிதான் கொடுத்தாங்க!
மும்பை செமிபைனல் வருவதற்காக பட்டபாடுகளில் பிக்ஸிங் இருந்திருக்கலாம் என்றே சந்தேகிக்கிறேன். அதுவரை கொஞ்சம்கூட ஆடாத ஆட்கள், சச்சின் வந்தவுடன் கலக்குவார்களாம் - நம்பமுடியவில்லை!
*****************
தசாவதாரம் முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என்று தினம் தினம் தியேட்டர்காரனுக்கு போன் செய்துகொண்டிருக்கிறேன்.. வெறி எல்லாம் இல்லாவிட்டாலும் ஆர்வம் இருப்பதும், அதை ட்ரெய்லரும் தினம் தினம் மாறும் ரிலீஸ் தேதியும் தூண்டிவிட்டிருப்பது உண்மை.
தசாவதாரத்தில் என்ன இருந்தால் ஏமாற்றம் அடைய மாட்டேன்?
1. பத்து வேடத்துக்கும் சொல்லிக்கொள்ளும்படியான முக்கியத்துவம்.
2. பத்து வேடங்களும் கமலே ஏற்கவேண்டிய வலுவான காரணம் (ரங்கராஜோட பாட்டி கிருஷ்ணவேணி என்பதுபோல)
3. கிரேஸி ப்ராண்ட் நகைச்சுவை
4. புத்திசாலிகளுக்கு மட்டுமே புரியாமல் என்னைப்போன்றவர்களுக்கும் புரியும் அளவுக்கு நுணுக்கமான காட்சி அமைப்பு
5. அப்பா போரடிக்குது என்று என் பெண்ணை எழுப்பவைக்காத திரைக்கதை
**************************
வீராச்சாமி, மன்னிக்கவும் விஜய டீ ராஜேந்தரின் வீராச்சாமியின் கடைசிக்காட்சி அலுவலகத்தில் இருந்து திரும்ப வந்து அகஸ்மாத்தாக தொலைக்காட்சியைப் போட்டதில் கண்டேன். ஒரு காட்சியிலேயே முழுப்படம் பார்த்த திருப்தியை அடைந்தேன். டீ ஆர் செத்ததும் மும்தாஜும் காலடியிலேயே விழுந்து சாகிறார்..
நிச்சயம் ஸ்பெஷல் எபக்ட்ஸ் உபயோகப்படுத்தியிருக்கவேண்டும்.. சாக்ஸ் நாற்றத்திலிருந்து தப்பமுடியாத தூரத்தில் மூக்கை வைத்துக்கொண்டு செத்தது போன்ற காட்சியில் நடிப்பது என்ன சும்மாவா?
பூவோடு சேர்ந்த நாரும் மணந்தது.. எல்லாப்படத்திலும் தன் வேடத்தைக் கலக்கலாக நடிக்கும் எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு!
*********************
மக்கள் தொலைக்காட்சியுடைய நோக்கம் சரியாகத் தெரியவில்லை. எந்த நேரம் போட்டாலும் எப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரஸ்யமே இல்லாமல் செய்ய வல்ல காம்பியர்கள், நாக்குடைக்கும் தமிழில் பேசி உடனே சேனலை மாற்றவைக்கிறார்கள். சினிமா நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், பொழுதுபோக்கு அம்சம் வேறெதுவும் இல்லாமல் நல்ல பெயரை மட்டும் வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறார்கள்?
*******************
இளாவின் பதிவில் இப்படிக்கு ரோஸ் பார்த்தேன். மூவிங்! வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
********************
இப்படியாக 300ஆம் பதிவு எழுதி முடிக்கப்பட்டது..
Jun 3, 2008
கலைஞர்85-IPL-தசாவதாரம்-மக்கள்-ரோஸ்-300
Subscribe to:
Post Comments (Atom)
45 பின்னூட்டங்கள்:
என்னத்தைச் சொல்ல, இந்தப்பதிவு உங்க பார்வையில வரதுக்கு 24 மணிநேரத்துக்கும் மேலே தவம் செய்யவேண்டியதாப்போச்சு.. நேத்து ராத்திரியே ரெடியா இருந்தாலும் காலையிலே போட்டுக்கலாம்னு அலட்சியமா இருந்து, காலையில இருந்து ப்ளாக்கர் சொதப்போ சொதப்புன்னு சொதப்பி!
மேலான ஆதரவை வழக்கம்போல கோரும்,
வாழ்த்துக்கள் சுரேஷ்.
வாழ்த்துகள் பினாத்தலாரே!
300-க்கு வாழ்த்துக்கள். (வாழ்த்துவதற்கு வயசு மட்டுமல்ல, வாழ்த்தறவங்க எவ்ளோ இடுகைகள் போட்டிருக்கணும்னுகூட எங்கேயும் தெளிவா சொல்லப்படலைதானே!!!).
உப்புமா 95%, மொக்கை 5%ன்னு பதிவு போட்டுகிட்டே வர்றீங்களே, மேல் நோக்கி வீழும் நீர்வீழ்ச்சி போல பதிவுகள் வருமா? இருந்துட்டு போவட்டும், வாழ்த்துக்கள்!
300'க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... :)
Congrats for triple century!
Congrats for triple century!
In Makkal TV, watch Sol vilayattu, tamil pesu thanka kasu
and recommend pattampoochi for your daughter.
They are better than lot of shows and fun to play along.
வாழ்த்துக்கள் சுரேஷ் ..
தசாவதாரத்துக்கு நமக்கும் ஒரு டிக்கெட் :)
முச்சதம் போட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த முன்னூறு சேவாக் அடின்னா அடுத்து உடனே லாரா டெஸ்ட் அடி மற்றும் பர்ஸ்ட் கிளாஸ் அடிக்கு வாழ்த்துக்கள். பின்னூட்டத்தில் பிராட்மேன் ஆவரேஜ் வர வாழ்த்துக்கள்
300 பதிவுகளை எங்களுக்கு படிக்கத் தந்தமைக்கு நன்றியும்,
300-வது பதிவுக்கு எமது வாழ்த்துக்களும்!
இவண்,
ஏஜண்ட்!
ஒங்களுக்கெல்லாம் குத்துப்பாட்டும் அருவி சுற்றும் வச்சு ஆடுனாத்தான் பொழுது போக்கு. இந்த மாதிரி இல்லாம நல்லதா ஏதாச்சும் முயற்சித்தா 'ஒடஞ்ச தமிழ்ல' பேசி என்னத்த கிழிக்க போறாங்கன்னுதான் கத்துவீங்க. வடமொழி/மேற்கு மொழி கலந்து பேசிய/கேட்ட காதுகளுக்கு ஈயத்த காய்ச்சி ஊத்துனது மாதிரித்தான் இருக்கும்.
தொடரட்டும் தங்கள் கருத்தாழமிக்க பதிவுகள். :(
வாழ்த்துக்கள் தலீவா!! :)
தல
300வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
300-க்கு வாழ்த்துகள். இன்று போல் என்றும் பதிவுகள் பல தந்து எங்களைப் போன்றோரின் வாசிப்புக்கு தீனி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
//(ரங்கராஜோட பாட்டி கிருஷ்ணவேணி என்பதுபோல)
//
கிருஷ்ணவேணியோட தாத்தா ரங்கராஜன் இல்லையோ?
விமர்ச்னமே போட்டுடாங்க பாருங்க
பெனாத்தல், 300ஆவது பதிவா!! சபாஷ். வழக்கமா இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் வரிக்கு வரி பின்னூட்டம் போடறது வழக்கம். இப்போ எல்லாம் பஞ்ச் அண்ணா வந்ததால, அதை அவரு கிட்ட அவுட்ஸோர்ஸ் பண்ணியாச்சு. சோ அவர் வருவாரு!! :))
ஒரு திருத்தம். பின்னூட்ட ஆவரேஜ் பிராட்மேன் ஆவரேஜ் ஆக வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
எவ்வளவு தான் மறைத்தாலும் 300வது பதிவிலும் கலைஞர் குறித்த காழ்ப்புணர்ச்சி அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்!!!
amilபெனாத்தலு..
300-வது பதிவுன்னு சொல்றீங்க.. 300 கமெண்ட்ஸ் போடலாம்னு பார்த்தா டேஞ்சரான மேட்டர்ஸையா எழுதி வெச்சிருக்கீங்க..
ஸோ.. வெறும் 1 கமெண்ட்டுலேயே வாழ்த்திர்றேன்..
வாழ்க வளமுடன்..
வாழ்த்துக்கள் சுரேஷ். 300 பதிவு போட்டுட்டீங்களா!!!!!!!
300-வது பதிவுக்கு வாழ்த்துகள்.
பெனாத்தல், பஞ்ச் அண்ணா மின்னஞ்சல் பண்ணி இருக்காரு. இந்தாங்க அவரோட பஞ்ச்.
//கேட்டுக்கொள்ளும் தலையெழுத்தை விரும்புகிறார் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறாரே!//
விரும்பிதான் பாக்கறாருன்னு நேரடியா சொல்ல முடியாம உங்களுக்கு என்ன தோற்றத்தைக் கொடுக்க ஆசையோ! எப்படியோ போங்க.
//சரி போகட்டும்.. வாழ்த்த என்ன வயசு தேவைன்னு எங்கேயும் தெளிவாச் சொல்லி இருக்கறதா தெரியல.. எனவே என்னுடைய வாழ்த்துகளும் உரித்தாகுக!//
வாழ்த்த வயசு எல்லாம் தேவை இல்லை. வெறும் தேவை இருந்தாப் போதும், எல்லாம் காரியத்தை சாதிச்சுக்கத்தானே காலில் விழறாங்க.
//யாருமே கண்டுகொள்ளவில்லையே!//
கண்டுக்கிறது கண்டிக்கிறது தடை செய்யறதுக்கு இது என்ன நெத்தில குங்குமம் வைக்கிற மேட்டரா இல்லை பிள்ளையார் முன்னாடி தோப்புக்கரணம் போடற மேட்டரா? போய்யா போய்யா போ....
//எதிர்பார்ப்பும் ஊடகத்துக்குதான், ஏமாற்றமும் அவங்களுக்கு மட்டும்தான் போல :-)//
மக்களுக்குப் பட்டை நாமம் - எப்பவும் போல!
ஆனா ஒண்ணு. இது இவருக்கு மட்டுமில்லை. அரசியலில் இருக்கும் எல்லாருக்குமே பொருந்தும்.
//அதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்//
//பிக்ஸிங் இருந்திருக்கலாம் என்றே சந்தேகிக்கிறேன்.//
ஒண்ணு அதிர்ஷ்டம், இல்லைன்னா பிக்ஸிங். நல்லா இருங்கண்ணா!! குடுத்த காசுக்கு விரல்நகம் கடிக்கும் அளவுக்கு விளையாடறாங்களா பார்த்தோமான்னு இல்லாம எப்பப் பாரு இப்படி ஒரு பாட்டு. கஷ்டம்டா சாமி..
//தசாவதாரத்தில் என்ன இருந்தால் ஏமாற்றம் அடைய மாட்டேன்?//
நம்ம சக பதிவர் ஒருத்தர் விமர்சனமே எழுதிட்டாரே. http://mohankandasami.blogspot.com/2008/06/blog-post.html
எனக்கென்னவோ நீங்க அதைப் படிச்சுட்டுதான் பதிவே போட்டீங்களோன்னு ஒரு எண்ணம்.....
நீங்க வேணா வீராச்சாமி மேட்டர் எல்லாம் எழுத ஆரம்பிச்சிருக்கலாம். ஆனா அதை விமர்சனம் பண்ணும் அளவுக்கு இந்த பரமசிவம் வரலை.
//மூவிங்! வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.//
ஆமாம் 40 நிமிஷமா மூவிங். அதைப் பார்க்கும் அளவு பொறுமை இல்லை. நோ கமெண்ட்ஸ்.
//இப்படியாக 300ஆம் பதிவு எழுதி முடிக்கப்பட்டது..//
பின்னுட்டம் வாங்க என்னென்னவோ பண்ணிப் பார்த்துட்டீரு. இப்போ இப்படி ஒரு பிட்டைப் போட்டு இருக்கீரு. என்ன ஆகுதோ பார்க்கலாம்!! என்ன இருந்தாலும் 300 பதிவு என்பது ஒரு மைல்கல்தான். வாழ்த்துகள்!
என்னை விட மூமூமூமூத்த்த்த பதிவரா இருந்தும் இப்பத்தான் 300ஆ? ஆஆஆ?!
வாழ்த்துகள் :-)
//சுவாரஸ்யமே இல்லாமல் செய்ய வல்ல காம்பியர்கள், நாக்குடைக்கும் தமிழில் பேசி உடனே சேனலை மாற்றவைக்கிறார்கள்.//
காம்பியரை எதிர்பார்க்கும் உங்களுக்கு நல்ல தமிழில் பேசுவது நாக்குடைப்பதாகத்தான் இருக்கும் :-((
நல்லா இருங்கடே!
இரண்டு அறிக்கைக்கும் மிகப் பெரிய முரண்பாடு இருப்பதாக தெரியலயே பிணாத்தலாரே.. 300 க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
நன்றி சரவணகுமரன்.
நன்றி மாயவரத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் என் முதல் பதிவில் முதல் பின்னூட்டம் போட்ட உங்களைக்கண்டால் நான் உள்ளபடியே பேருவகையும் ஆனந்தமும் அடைகிறேன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்பினால் அது மிகையாகாது என்பதோடு...
நன்றி ச்சின்னப்பையன் - பதிவு எண்ணிக்கையும் வயசு மாதிரிதான்.. ஏறறதால வேற பெரிய மாற்றம் எதுவும் வரதில்லை :-)
இளா.. மொக்கையும் உப்புமாவுமா.. அதையெல்லாம் விட்டுட்டதா இல்ல நெனச்சுக்கிட்டிருக்கேன்!! சிறுகதை எழுதணும்.. வரேன் ஒன்றிரண்டு வாரங்களில்..
நன்றி இராம்.
நன்றி பிரபுராஜா.
நன்றீ அனானிமஸ்.. மக்கள் தொலைக்காட்சி பற்றி இன்னும் சில பின்னூட்டங்கள் கழித்து விளக்குகிறேன்.
நன்றி அய்யனார். நீங்க முதல்லே டிக்கட் புக் பண்ண போனா எனக்கு 3 :-)
நன்றி கிரி.
நன்றி முரளி கண்ணன், ப்ராட்மேன் ஆவரேஜுக்கெல்லாம் வேற ஆளுங்க இருக்காங்க.. எதோ நம்ம ஒரு மஞ்ச் ரேக்கர் விஸ்வநாத், ட்ராவிட் ரேஞ்சுக்கு வந்தாலே போதும் :-)
ஏஜண்ட்.. எல்லாத்தையும் படிக்கிறீருன்னு தெரியுது.. ஆனா ஆளைத்தான் காணோம்..
ஞானி, உங்களுக்கும் பதில் கொஞ்ச நேரம் கழித்து.
நன்றி கப்பி பய.
நன்றி கோபிநாத்.
நன்றி ஸ்ரீதர் வெங்கட். கதையைப் பாத்தா ஏமாறமாட்டேன்னு பட்சி சொல்லுது, பாப்போம்.
வாங்க கொத்தனார்.. கொத்தனார் பின்னூட்டத்தை அவுட்சோர்ஸ் செய்கிறார்ன்றது எவ்ளோ பெரிய ப்ரேக்கிங் நியூஸ்.. அதை இவ்ளோ சிம்பிளா சொல்றீங்க.. பதிவா போட்டிருக்க வேணாமா?
முரளிகண்ணன் (மீண்டும்) நன்றி.
நன்றி ஏலியன்.
நன்றி லக்கிலுக். எனக்கு அப்படியொரு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை என்பது என் நினைப்பு. அதற்குமேல் விளக்கம் கொடுப்பது தேவையில்லை என நினைக்கிறேன் :-)
நன்றி உண்மைத் தமிழன். 300 கமெண்ட் போடமாட்டீங்களா? அப்படியென்ன IPL, தசாவதாரம் எல்லாம் டேஞ்சரஸ் மேட்டர்னு நெனைக்கிறீங்க?
நன்றி ச சங்கர்.
நன்றி கோபி.
பஞ்ச் பரமசிவம்,
//உங்களுக்கு என்ன தோற்றத்தைக் கொடுக்க ஆசையோ!// லக்கி நேரடியாவே கேட்டுட்டார்.. நீங்க பொடி வச்சு.. என் நேரம்!
//இப்போ இப்படி ஒரு பிட்டைப் போட்டு இருக்கீரு. என்ன ஆகுதோ பார்க்கலாம்!! //
சரிதான்! நல்லா இருங்க!
நன்றி ஆசிப் அண்ணாச்சி!
நன்றி முத்து. வித்தியாசம் என நான் நினைப்பது - திட்டத்தை ஒத்திப் போடலாம் என கர்நாடகத் தேர்தலுக்கு முன்பும், திட்டம் தள்ளிப் போடப்படவில்லை என்று தேர்தலுக்குப் பின்னும் சொன்னதை.
மக்கள் தொலைக்காட்சி பற்றிய என் பத்தி என் கருத்தை உள்ளபடி சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அனானி, ஞானி மற்றும் ஆசிப் கத்தியுடன் குத்தக் காத்திருக்கிறார்கள் :-) நான் வேறு கட்சி இல்லை - உங்கள் கட்சியேதான். சொல்லவந்ததை சொதப்பிவிட்டேன் அவ்வளவே.
மக்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் பேசும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் சொல்லாண்மை, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடம் இருந்து மட்டுமே வருவதால், மிகவும் அளவு குறைந்து நாக்குடைக்கும் தமிழாகிவிடுகிறது. உதாரணமாக ஒரு உரையாடல்.. (கற்பனைதான், ஆனால் நிஜத்தில் இருந்து வெகுதூரம் விலகியதல்ல)
"மக்கள் வணக்கம்"
"வணக்கம் நான் கோபியிலிருந்து சண்முகம் பேசறேன்"
"சொல்லுங்க சண்முகம். ஒருஆங்கில வார்த்தையைத் தமிழ்லே சொல்லுங்க - காம்பியர்"
"நிகழ்ச்சித் தொகுப்பாளர்?"
"மன்னிக்கணும் சண்முகம் - சரியான விடை நிகழ்ச்சி வழங்குநர்". அடுத்த நேயர் தொடர்புல இருக்கார்..
தமிழுக்கு அதிகமாக கட்டுப்பாடு போட்டு, அவர்கள் வசம் இருக்கும் சில வார்த்தைகள் மட்டும்தான் தமிழ் என்று சொல்ல வருவது நாக்குடைக்கிறது.
இதே நிலைமைதான் வார்த்தை விளையாட்டு, தமிழ் பேசு தங்கக்காசு போன்ற நிகழ்ச்சிகளிலும்.
அருவி செட் போட்ட நடனக்காட்சிகள் போட்டியாக இருக்கும் நேரத்தில் வேறு எப்படி நிகழ்ச்சிகளை சுவாரஸ்யப்படுத்துவது என்று யோசிக்காமல், தங்கள் தமிழ் மதிப்பீட்டினால், அதற்குக் கொஞ்சம் கீழிருக்கும் அழைப்பாளரையும் இழக்கிறார்கள்.. 90களின் ஆரம்பத்தின் தூர்தர்ஷன் தன் கண்ணை மூடிக்கொண்டு சன் டிவிக்கு வழி விட்டது போல..
நல்ல விஷயங்கள்தான் செய்கிறார்கள் - ஆனால் அதற்கும் பேக்கேஜுங்கும் மார்க்கெட்டிங்கும் தேவை - இதைத்தான் சொல்லவந்தேன்.
வாழ்த்துகள் சுரேஷ்....கூடிய விரைவில் 500 மற்றும் 1000 மாவது பதிவுகளை போட வாழ்த்துக்கள்...ஒரு கேள்வி...முன்பெல்லாம் அடிக்கடி பதிவு போடுவீர்கள்....இப்போதெல்லாம் ஏன் இவளவு நீண்ட இடைவெளி?
சுரேஷ், எனக்கு மொழியைக்குறித்தான எண்ணத்தில் சற்று வேறுபாடு உண்டு.
எந்த மொழியையும் ரொம்பவும் சுத்தமாக பேசுகிறேன் பேர்வழி என்று சொல்லி அதைக்கொல்லவும் முடியும். உதாரணம் ஸமஸ்க்ருதம்.
அதேனேரம் ஆங்கிலம் ,எத்தனையோ மொழிகளின் வார்த்தைகளை தன்னுள்ளே அடக்கிக் கொண்டதால் தான் இன்று பரவி உள்ளது.oxford dictionary பார்த்தால் அதில் எத்தனை வார்த்தைகள் அடுத்த மொழிகளென்று தெரியும்.
எனக்கு காலச்சுவடு போன்ற பத்திரிக்கைகளின் தமிழே புரிவதில்லை.அது ஏன் இத்தனை சிரமபட்டு புரியாதபடி எழுதுவானேன்?
ஒரு முறை சென்னையில் பள்ளி சிறுவர்களிடம் ஏன் தமிழ் பயில் இவ்வளவு கடினம் என்று பார்த்தபோது, அக்குழந்தைகளின் வீட்டில் பேசுமொழி தமிழ் வேறு உருவத்தில் இருந்ததும் ஆசிரியர்களின் தமிழ் குழந்தைகளுக்கு புரியாததுமே ஒரு காரணம் என்று தெரிந்தது.இது பெசந்த் நகரில் அல்ல..வட சென்னையில்
என்னுடய நண்பர்கள் சிலர் பூர்வீகக்குடிமக்களிடம் வேலை செய்பவர்கள், புத்தகங்களை அவரகளுடய மொழியிலும் கலந்து எழுதியுள்ளார்கள்.
இந்தியாவில் snobbery என்பது எல்லா காலத்திலயும் இருக்கும் இப்படி தமிழை வாழவைக்கிறேன் என்று சொல்லி இருப்பதும் ஒருவித exclusivity தான்.மொழி அரசியல் ஆக்கப்ப்பட்டபின் எதுவுமே சற்று கடினம் தான்..மாற்று கருத்துக்கள் கூட....
http://kaladi.blogspot.com/2008/06/blog-post_06.html -- உங்களுக்கு ஒரு மெஸேஜ் இருக்கு.. வாங்க வாங்க
அருண், நன்றி.. இடைவெளிக்குக் காரணம், முன்னே மாதிரி எல்லாவற்றையும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் குறைந்தது மட்டும்தான்.
சீதா,
நீங்கள் சொல்வது //மொழி அரசியல் ஆக்கப்ப்பட்டபின் எதுவுமே சற்று கடினம் தான்..மாற்று கருத்துக்கள் கூட....// மிகவும் உண்மை. மானாட மயிலாடவைக் கிண்டல் அடித்து 3 பதிவுத் தொடர் போட்டபோதுகூட எதிர்வினை வரவில்லை, மக்களைக் கிண்டல் செய்தால் உனக்கு அருவிப்பாட்டுதான் பிடிக்கும் நீ அந்த லெவல் மட்டும்தான் என்று விமர்சனம் வருகிறது..
மற்ற மொழிவார்த்தைகளை நம் மொழியில் ஏற்பது அழிவுக்கு அறிகுறியா ஆக்கத்துக்கு அறிகுறியா என்பது இன்னொரு பட்டிமன்ற சமாசாரம்,,, தனிப்பதிவாக நேரம் இருந்தால் பார்ப்போம்..
ஜீவ்ஸ், ஒரு மெசேஜையும் காணோமே :-)
வாழ்த்துக்கள் சுரேஷ்
மக்கள் ரீவி பத்தி சில விவாதங்கள் வந்ததினால் ஒரு சில எண்ணங்கள்.
- வெகுஜன ரசிப்புதன்மைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை வடிவமைத்து கொடுக்க மொழி ஒரு தடையா? மக்கள் ரீவியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் விஜய் ரீவியில் வரும் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' சில பகுதிகள் பார்த்திருக்கிறேன். அதில் 'தமிழருவி மணியன்' போன்றோரின் பங்களிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங் கொஞ்சம் கடினம்தான். அப்படி பார்த்தால் பல மொக்கை சீரியல்களின் தர வரிசையும் மட்டம்தான். அதற்கு இது நிச்சயமாக நல்ல பொழுது போக்குதான்.
- முன்னர் சித்தார்த்தா பாசுவின் குவிஸ் நிகழ்ச்சிகள் வரும். அதைவிட இராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகள் அதிக நேயர்களை கொண்டிருந்தாலும், உள்ளடக்கத்தில் குவிஸ் நிகழ்ச்சிகள் பல படிகள் முன்னேறியவைதான். அதே சித்தார்த்தா பாசுவின் 'கோன் பனேகா க்ரோர்பதி' நீங்கள் சொல்லும் மார்கெட்டிங் மற்றும் பேக்கேஜிங்கில் மேம்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் உள்ளடக்கத்தில் பல சமரசங்கள் செய்து கொண்டுதான் வந்தார்கள். அவர்கள் அழைத்து வரும் செலிப்ரடி விருந்தினர்கள் எல்லாரும் தாங்களாக விலகும் வரை ஜெயித்து கொண்டே இருப்பார்கள். சொல்லி வைத்த மாதிரி அவர்கள் ஜெயித்த பணம் நன்கொடையாக யாருக்காவது அளிக்கப்படும்.
- மக்கள் ரீவியின் நோக்கம் பாராட்டபட வேண்டியதுதான். குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வர நினைக்கிறார்கள். மெதுவாகத்தான் வர முடியும்.
- 'காலச்சுவட்டின் தமிழ்' 50-களின் ஆனந்த விகடன் / கல்கியின் / விடுதலை / குடியரசு தமிழ் எப்படி இருந்தது? மணிபிரவாளம்தான். 80-களில் சுஜாதா / பிவிஆர் / ராஜேஷ்குமார் கதைகள்? ஆங்கிலம் பிரதானமாக இருக்கும். அதே சுஜாதா மத்யமர் தொடரில் ஆங்கில கலப்பில்லாமல் கதை எழுதினார். இன்றைக்கு பதிவு எழுதும் பலரும் முனைப்பாக தமிழ் வார்த்தைகளை தேடிப்பிடித்து எழுதுவதும் இந்த மாற்றத்தின் தொடர்ச்சியே.
- இன்றைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் மராத்திய மொழிகளை விட தமிழ் தன் சுயத்தை 'அதிகம்' இழக்காமல் இருக்கிறது உண்மைதான். இந்த விசயத்தில் ராமதாஸ் அவர்களின் மக்கள் ரீவி ஒரு நல்ல முன்னோடி என்றுதான் தோன்றுகிறது.
- 'போக்கிரி' படத்தை விட 'வீடு' படத்திற்க்கு மக்களிடம் வரவேற்பு கம்மிதான். ஆனால் நமது அடையாளத்தை எதில் நிறுத்திக் கொள்வது என்பது முக்கியம்.
- colloquial மற்றும் chaste வடிவங்களுக்கு உள்ள வேறுபாடுகள் எல்லா மொழிக்கும் உள்ளவைதான். அதனால் சென்னை தமிழை பாடதிட்டத்தில் வைக்க முடியாது. கறுப்பர்கள் பேசும் ஆங்கிலத்திற்க்கும், ஹிஸ்பானியர்கள் பேசும் ஆங்கிலத்திற்க்கும், ஐரிஷ் பேசும் ஆங்கிலத்திற்க்கும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் ஷெக்ஸ்பியர், வோர்ட்ஸ்வொர்த் வேண்டாம் என்றா சொல்ல முடியும்?
- 'தமிழ் என்பது அடையாளம். தமிழ் மட்டும் தகுதி இல்லை'. அடையாளத்தை தொலைத்து விட்டு தகுதியை வளர்த்து கொள்வதில் என்ன பயன்? இம்மாதிரி சில முயற்சிகள் நமது அடையாளத்தை மீட்டெடுக்கும் சில முயற்சிகள் என்று கொள்ளலாம்.
நன்றி இன்ஷ்ட்ரு கிங்.
ஸ்ரீதர்.. தாமதமாகவாச்சும், ஒரு விவாத மேட்டர் பிக்கப் ஆச்சே :-)
நீங்கள் சொல்லும் பல விஷயங்களில் நான் ஒத்துப்போகிறேன்.
//வெகுஜன ரசிப்புதன்மைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை வடிவமைத்து கொடுக்க மொழி ஒரு தடையா? // மக்கள் அப்படித்தான் செய்கிறது. மொழி என்பதை முன்னிறுத்தி, ரசிப்புத்தன்மையை காவுகொடுக்கிறது. உடனே அருவிடான்ஸ்தான் ரசிப்புத்தன்மை என கட்டம் கட்ட வேண்டாம்.. ஸ்ரீதரே கொடுத்திருக்கும் இன்னொரு அருமையான உதாரணம் - குவிஸ் நிகழ்ச்சிகள் - பிபிஸி மாஸ்டர்மைண்ட்ஸும் கோன் பனேகா குரோர்பதியும் ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருந்தால் நான் கேபிசி ஐஇத் தேர்வு செய்வது தரம் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல- காலச்சுவடும் குமுதமும் அருகருகே இருந்தால் முதலில் குமுதம் லைட்ஸ் ஆனைப் பிரிப்பேன் என்று சுஜாதா போன்றவர்கள் கூடச் சொல்லி இருக்கிறார்கள். அதில் ஒரு தவறும் இருப்பதாய்த் தெரியவில்லை.
//இன்றைக்கு பதிவு எழுதும் பலரும் முனைப்பாக தமிழ் வார்த்தைகளை தேடிப்பிடித்து எழுதுவதும் இந்த மாற்றத்தின் தொடர்ச்சியே. // இதிலும் நடை, வார்த்தைத் தேர்வு என இருக்கிறதல்லவா ஸ்ரீதர்? நண்பர் ஒருவருடன் அரட்டை அடிக்கும்போது, காபி குடிக்கிறாயா என்ற வார்த்தை சிறுகதையில் வரவேண்டுமென்றால் எப்படிச் சொல்வது என்ற விவாதம் ஏற்பட்டது. "கொட்டை வடிநீர் குடிக்கிறாயா?" குளம்பி குடிக்கிறாயா? "காப்பித்தண்ணி குடிக்கிறாயா" போன்ற பல தேர்வுகள் யோசிக்கப்பட்டன.. கடைசியில் சுருக்கமாக "சூடா எதுனாச்சும் குடிக்கிறாயா?" என்று முடித்தோம். இதில் இயல்பும் கெடவில்லை,
நீளமும் அதிகரிக்கவில்லை. கொட்டைவடிநீரா, குளம்பியா எது சரியான தமிழ்வார்த்தை என்ற சர்ச்சையையும் தவிர்த்தது.
இந்தச் சர்ச்சை நிஜமாவே கொஞ்சம் வருத்தமளிப்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் நமக்கு ஆங்கிலமாகவே அறிமுகமாகி, உபயோகத்திலிருந்து பல ஆண்டுகள் கழித்து ஏதேனும் ஒரு ஆர்வலரால்/ அமைப்பால் நுழைக்கப்படும் தமிழாக்கம், சிலரால் ஏற்றுக்கொள்ளப்படலாம், சிலருக்கு நாக்குடைப்பதாகத் தென்படலாம்! இந்தத் தமிழாக்கமே சரி என்பதும் திணிப்பு:-) தான்.
// அடையாளத்தை தொலைத்து விட்டு தகுதியை வளர்த்து கொள்வதில் என்ன பயன்?// இது ஒரு முடிவற்ற விவாதம். தகுதி இல்லாத அடையாளம் என்ன பயன் என நான் கேட்கலாம் :-)
நன்றி ஸ்ரீதர்.
//இது ஒரு முடிவற்ற விவாதம். //
மிகச் சரி :-). நமது புரிதல்களுக்கு நமது பார்வையும் (perceptions) ஒரு முக்கிய காரணம். கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கம் தெரிந்தவருக்கு இராக ஆலாபனைகள். மற்றவருக்கு வெறும் அழுகை. இல்லையா...
உங்கள் ஆதங்கம் புரிகிறது. 'கற்றது தமிழ்' மாதிரி சில சமயம் ஆப்பிள்களும் ஆரஞ்சுகளும் ஒப்பிடப்படுவது அதிகப்படிதான்.
//முதலில் குமுதம் லைட்ஸ் ஆனைப் பிரிப்பேன் என்று சுஜாதா போன்றவர்கள் கூடச் சொல்லி இருக்கிறார்கள். அதில் ஒரு தவறும் இருப்பதாய்த் தெரியவில்லை//
அதோடு நின்றிருந்தால் அவர் பங்களிப்பு பற்றி இன்னமும் நிறைய கேள்விகள் வந்திருக்கும். கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் அவர் லைட்ஸ் ஆனைப் படித்திருக்கவே மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. அத்தனை புத்தகங்கள், கவிதைகள் தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்'ல் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.
கோவிந்த் நிஹ்லானியின் துரோக்கால் / தேவ் போன்ற படங்களுக்கும், ஷங்கரின் (சுஜாதாவின்) சிவாஜி, பாய்ஸுக்கும் உள்ள வித்தியாசம் 'அந்த சமூக பொறுப்புணர்வுதான்'. :-)
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் சுரேஷ்!
வாழ்த்துகள் சுரேஷ்.
நல்ல பதிவுகளே கொடுக்கிறீர்கள் எனக்குத் தெரிந்தவரை.
எனக்கும் முடிந்தவரைத் தமிழில் எழுத ஆசைதான். பழகிய சொற்களை விட முடிவதில்லை.
நண்பர் ஜீவாவின் உந்துதலின் காரணமாக நான் உங்களுக்கு ஒரு துரோகம் செய்து விட்டேன். தயவு செய்து இங்கு வந்து பார்க்கவும்.
Post a Comment