இந்தக் கேள்வி விளையாட்டு தேன்கூடு சுடர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது மாட்டவில்லை. என்னடா இது என்னை மட்டும் யாரும் கேள்வி கேக்க மாட்டேங்கறாங்களே? தானே கேள்வி தானே பதில் ஆரம்பிச்சுடவேண்டியதுதானா எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவேளையில் ச சங்கர் அன்புடன் கேள்வி கேட்க, இதோ பதில்கள்.
1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று வெகுண்டு எழுந்தீர்களே இப்போது "சீனியர் வலிப்பதிவர்களில் ஒருவராக"!??? உங்கள் மனநிலை என்ன ?
வலிப்பதிவரா? இதென்ன வலிக்கும்படியான குத்து?
எழுதப்போவதில்லை என்று சொன்னது வாஸ்தவம்தான். ஆனால் அப்போதேகூட, நிரந்தரமான முடிவல்ல என்பதையும் சொல்லியே இருந்தேன். அப்படிச் சொன்னதற்கான முக்கியமான காரணம், வலைப்பதிவுகளைப்பற்றிய அறிதல் எனக்கு அப்போது இருந்திராததே என்பது இப்போது புரிகிறது. "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்பதாக அர்த்தம் எடுத்துக்கொண்டு, நான் எழுதுவது நன்றாக வருவதில்லையே என்ற எண்ணத்தில் விட்ட அறிவிப்பு அது. (வெகுண்டு எல்லாம் எழவில்லை :-)
ஆனால் வலைப்பதிவர்கள் உருப்படியாகத்தான் எழுதியாகவேண்டும் என்ற எந்தக்கட்டாயமும் இல்லை எனப் பலர் வலியுறுத்தியதால் தொடர ஆரம்பித்தேன். காலமும் அதையே நிரூபித்து, உருப்படியாக எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் ஜாலியாகத் தொடர்கிறேன். காலம் உருண்டோடிய காரணத்தால் மட்டுமே சீனியராக இருக்கிறேன்! இன்றும் எழுதுவதை நிறுத்தத் தயாராகவே உள்ளேன் - ஆனால் - "அவனை நிறுத்த சொல்!"
2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு?
பதில் 1: அந்த டீச்சருக்கும் எனக்கும் அதிக வயசு வித்தியாசம்னு சொல்லிட்டாங்க!
பதில் 2: தெரிஞ்சவங்க நாலுபேரு பக்கத்தில இருந்தாங்க.. கொஞ்சம் கிளம்பறீங்களா? என்று பார்வையாலேயே முறைத்ததில் அப்ஸ்காண்ட் ஆனார்கள். நானும் அவளும் தனியே.. தன்னந்தனியே!
உலகத்தில் யாரும் உபயோகப்படுத்தாத முதல் காதல் வார்த்தைகளை அள்ளி வீசவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கேட்டே விட்டேன்!
"ட்ரெயின்லயா ஆபீஸுக்குப் போயிட்டு வரீங்க?"
அதிலும் மயங்கினாள் அவள்.
பிறகென்ன? கண்கள் கலந்தன, கருத்தொருமித்தோம்!
கடைசியில் என்ன ஆச்சா? அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க! மனசைத் திடப்படுத்திக்கங்க - கல்யாணம் ஆயிடுச்சி :-(
3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா?)? அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள்?
இரவு 11 மணிவரை மனைவியின் அருகில் இருந்தேன். வலி எடுக்கவில்லை. எப்போதும் எடுக்கலாம் என்ற நிலை. எனக்கு இருக்கும் குறைபாட்டினால் அங்கே பக்கத்தில் இருக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். காலல 8 :30க்குத்தான் மறுபடி மருத்துவமனைக்கு வந்தேன். வருவதற்கு இரண்டே நிமிடம் முன் குழந்தை பிறந்தது எனத் தெரிவித்தார்கள். வெயில் அதிகமாக இல்லாததால் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி உள்ளறையில் விளக்கொளியில் வைத்து கண்ணாடி ஜன்னலைத் திறந்து காட்டினார்கள் என் தேவதையை!
எண்ணங்களா? முதல் எண்ணம் மனைவி பெத்துப் பிழைச்சு வரணும்ங்கறதுதான். ரெண்டாவதா, ஒண்ணு ரெண்டு மைக்ரோ செகண்டுக்கு, "அப்பாவா ஆகப்போறே, இனியாவது குழந்தைத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கணும்" அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. இன்னி வரைக்கும் அந்த எண்ணத்தை ஜெயிக்க விடலையே! நாமல்லாம் யாரு!
4.பணவீக்கம், விலை வாசி உயர்வு,கச்சா எண்ணை விலை உயர்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் இந்த தருணத்தில் உங்களை முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் பிரதமராக (இந்தியாவிற்கு) ஆக்கினால் நீங்கள் எடுக்கும் ஐந்து முதன்மை முடிவுகள் என்னவாக இருக்கும் ?
ஹலோ பி ஏ.. இப்ப உடனடியா, அடுத்த மூணு நிமிஷத்துக்குள்ள எனக்கு இந்த உத்தரவெல்லாம் டைப் ஆகி வரணும்.
1. பிரதமர் பதவிக்கு இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் பெட்ரோல் கோட்டாவை கொஞ்சம் அதிகப்படுத்தணும்.. ரொம்பவெல்லாம் ஒண்ணுமில்ல.. ஒரு லட்சம் லிட்டர் போதும்.. ஊருக்குப் பக்கத்துல ஒரு பெட்ரோல் ரிசர்வாயர் இருக்கு.. அதை வாடகைக்கு எடுத்து ஊத்தி வச்சுருங்க!
2. சிபிஐயா ரா-வா? யாருய்யா இதுக்கு இன்சார்ஜு? நம்ம உறவுக்கார பசங்கள்லே யாரு யாரு விசுவாசமா இருப்பானுங்க, எவன் எவன் ஏமாத்திட்டு ஓடிப்போயிருவான்னு ஒரு ரிப்போர்ட்டு உடனடியா வேணும்.. எதுக்கா? வேற என்ன? ஒரு 10000 பேரை காப்பாத்த பெட்ரோல் கேஸ் ஏஜன்ஸி கொடுத்துரலாம்.. பின்னால கஷ்டப்படக்கூடாதில்லையா? நான் இல்லைய்யா.. அந்த மக்களைச் சொன்னேன்!
3. அப்புறம்.. ஒரே நாள் பிரதமரா இருந்தாலும் அவருக்கு பென்ஷன் எல்லாம் கரெக்டா வந்துரணும்.. அந்த பென்ஷன் அமவுண்டையும் மாசம் 99 லட்சம்னு ஜி ஓ போட்டு ஒரு லெட்டர் எழுதிக்கொண்டா!
4. ஆமாம், இந்த எம் எஸ் ஓ, கேபிள், டிடிஎச் எல்லாம் யாரு பாத்துக்கறது? அந்த மந்திரிய வரச்சொல்லுப்பா உடனே.. நம்ம பசங்களுக்கு ஒரு தொழில் ஆரம்பிச்சுக் கொடுத்துரலாம்!
5. எல்லாத்தையும் விட முக்கியமா இந்த லெட்டரை ஜனாதிபதிகிட்ட கொடுத்துடணும்! என்ன எழுதியிருக்கேனா? ஒரு நாள்லே என் கடமையெல்லாம் சரியாச் செய்ய முடியல.. இன்னும் 24 மணிநேரத்துக்கு எக்ஸ்டன்ஷன் கொடுங்கன்னு எழுதியிருக்கேன். இந்த லெட்டர்லே டேட் மாத்தி மாத்தி டெய்லி கொடுக்கவேண்டியது உன் கடமை!
என்ன அப்படிப்பாக்கறே? நாட்டுக்கு நல்லதா? அதெல்லாம் 5 வருஷம் மொத்தமா வந்தா யோசிக்கலாம்.. அப்படி வந்தவங்களே யோசிச்சதில்ல! ஒரு நாள்லே என்ன கிழிச்சிறப்போறேன்! வீட்டையாச்சும் கவனிக்கலாமில்ல?
~~~~~~~~~~~~~
அப்பாடா பதில் சொல்லியாச்சு.
இப்போ,
இலவசக்கொத்தனாரை கொஞ்சம் நோண்டலாமா? (இதே கேள்விகளுக்கு பஞ்ச் பரமசிவத்திடமும் பதில் கேட்டு வாங்கிப் போடுங்கள் - அல்லது
கலர் மாற்றி எழுதுங்கள்)
1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?
2. திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க.. நேர்மையாச் சொல்லுங்க.. எந்த ஊர்லே சைட்டடிக்கும்போது தங்கமணிகிட்டே மாட்டினீங்க? அதன் பின் விளைவுகள் என்ன?
3. நுண்ணரசியல்: சாதா பிராண்ட், பி ந பிராண்ட், இன்னும் வேற எதாச்சும் இருந்தா அதைப்பத்தியும் படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் பார்க்கலாம்?
4. பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?
36 பின்னூட்டங்கள்:
//கடைசியில் என்ன ஆச்சா? அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க! மனசைத் திடப்படுத்திக்கங்க - கல்யாணம் ஆயிடுச்சி :-( //
:)))
இதெல்லாம் ரொம்ப ஓவரு :))
அடுத்தது கொத்ஸா.. வெயிட்டீஸ் :))
//உருப்படியாகத்தான் எழுதியாகவேண்டும் என்ற எந்தக்கட்டாயமும் இல்லை எனப் பலர் வலியுறுத்தியதால் தொடர ஆரம்பித்தேன். காலமும் அதையே நிரூபித்து, உருப்படியாக எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் ஜாலியாகத் தொடர்கிறேன்.//
இதயே நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க :((
//பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?//
குமரனின் சங்க இலக்கிய பதிவுகள் தான் பட்டியலில் முதலிடம் பெறுகின்றனன்னு தயங்காம சொல்லுவாரு பாருங்க. :-)
முதல்ல நன்றி.
நான் கேட்ட கேள்விகளை ரெண்டு மூணு தடவை படிச்சுட்டு பதில் எழுதியிருக்கீங்களோ. எனக்கே தட்டுப்படாத "வலி"ப்பதிவெல்லாம் உங்கள் கண்ணுல மாட்டியிருக்கே?:)
இப்ப பதில்களுக்கான மற்றும் இ கொவிற்கான கேள்விகளுக்கு விமர்சனம் அடுத்த பின்னூட்டத்திலிருந்து :).
முதல் கேள்விக்கு பத்திரமா பதில் சொல்லிட்டீங்க.அது சரி "இந்த முடிவினாலதான் உப்புமா கிண்டிக்கிட்டே இருக்கீங்களா?"
இரண்டாவது கேள்விகளில் எங்கே, எப்போது அப்படீங்குற பகுதிக்கு சரியான விளக்கம் அளிக்காததை சுட்டிக் காட்ட கடமைப்பட்டவனாகிறேன்.(டீச்சர்னு சொன்னா நாங்களே ஸ்கூல்ல ,சினவயசுல அப்படீன்னு கற்பனை பண்ணிக்குவோம் அப்படீன்னு எதிர் பாக்காதீங்க :)
//கண்ணாடி ஜன்னலைத் திறந்து காட்டினார்கள் என் தேவதையை! ///
அதுதான்யா உண்மையான ஃபீலிங்ஸு. அதை எந்தக் கொம்பனும் வார்த்தைல சொல்லிட முடியுமா என்ன :))
///என்ன அப்படிப்பாக்கறே? நாட்டுக்கு நல்லதா? அதெல்லாம் 5 வருஷம் மொத்தமா வந்தா யோசிக்கலாம்.. அப்படி வந்தவங்களே யோசிச்சதில்ல! ஒரு நாள்லே என்ன கிழிச்சிறப்போறேன்! வீட்டையாச்சும் கவனிக்கலாமில்ல?///
இப்படி யோசிக்குறதுனாலதான் உங்களையெல்லாம் நாடு கடத்திட்டாங்களா :))
கொத்தனாருக்கு ஒரே ஒரு உப கேள்வி.
////திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க////
அவனா நீயி...?( ரொம்ப மரியாதைக் குறைவா தெரிஞ்சா "அவரா நீங்க" அப்படீன்னு வேணா படிச்சுக்குங்க :)
எல்லா கேள்விக்கும் சீக்கிரம் பப கிட்ட பதில வாங்கிப் போடுங்க. கொத்தனார் பதிலா? வேண்டாம்னு சொன்னாலும் கேக்கவா போரீங்க? பினாத்தல் சொன்ன மாதிரி கலர் கலரா போடுங்க :)
கடைசியில் என்ன ஆச்சா? அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க! மனசைத் திடப்படுத்திக்கங்க - கல்யாணம் ஆயிடுச்சி :-(
:-)))))))))))))))))))
சூப்பர் பதில்கள், சுரேஷ் ! கொத்ஸ் என்ன சொல்றாருன்னு பார்ப்போம் !
முதல் பதிலில் ஒண்ணு சொல்ல மறந்துட்டீங்களே, பாஸ் :)
நீங்க 'depressed' ஆக தமிழ் வலையுலகை விட்டு விலகறேன்னு பகிரங்க அறிவிப்பு விட்டபோது, உங்களுக்கு ஊக்கம் கொடுத்து திரும்ப இழுத்து வந்ததில் என் பங்கும் உண்டு தானே :) (ஒண்ணு கவனிச்சீங்களா ? உங்க அந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் அப்ப பிரபலமான*** பதிவர்கள் (என்னைத் தவிர! இல்லன்னா, சுயதம்பட்டம்-னு யாராவது ஆரம்பிப்பாங்க:))
அப்பறம் நீங்க இண்டி பிளாக்கிஸ் அவார்ட் வாங்கினதெல்லாம் வரலாறு ;-)
பிரபலமான*** = நன்றாக எழுதிக் கொண்டிருந்த
எ.அ.பாலா
இந்த விளையாட்டை எல்லாம் ஆரம்பிக்கறது நீங்கதானா? உங்களதான் தேடிட்டு இருந்தென்.
கேள்வியின் நாயகன் சங்கரா.
சங்கர்+ஆ என்று படிக்கவும். நல்லாத்தான் கேட்டு இருக்காரு.
டீச்சரைக் கல்யாணம் செய்துகிட்டவரா நீங்க.அடுத்த தடவை போனும்போது அவங்க கிட்ட நீங்க போனை கொடுக்கணும்:0
கொத்ஸ் பதிவு எப்போ வரும் சுரேஷ்:)
சூப்பர் பதில்கள்..;)
//அந்த டீச்சருக்கும் எனக்கும் அதிக வயசு வித்தியாசம்னு சொல்லிட்டாங்க! //
காதல்ல வயசு பார்க்க கூடாது கேள்விபட்டேன் இல்லையா....
oh!!adutha wilaiyatta??thats cool.nadakkattum...nadakkattum.....enakku nalla time pass!!!!
என்னய்யா இது? என்னிடம் கேள்வி கேளுங்கன்னு சவுண்ட் (சொ.செ.சூ) விடணும். நாங்க எல்லாரும் வந்து வரிசையா கேள்விக் கேட்போம்.
சரிதானே குமரன்:-)ம் ஆனா இது என்ன புது விளையாட்டு????
என்னய்யா இது? என்னிடம் கேள்வி கேளுங்கன்னு சவுண்ட் (சொ.செ.சூ) விடணும். நாங்க எல்லாரும் வந்து வரிசையா கேள்விக் கேட்போம்.
சரிதானே குமரன்:-)ம் ஆனா இது என்ன புது விளையாட்டு????
அதானே உஷா:)
எத்தனையோ கேள்விகள் இருக்கே!!!
///ramachandranusha(உஷா) said...
என்னய்யா இது? என்னிடம் கேள்வி கேளுங்கன்னு சவுண்ட் (சொ.செ.சூ) விடணும். நாங்க எல்லாரும் வந்து வரிசையா கேள்விக் கேட்போம்.
சரிதானே குமரன்:-)ம் ஆனா இது என்ன புது விளையாட்டு????////
உஷாஜி,
இப்ப சவுண்டு விட்டுடீங்கல்ல. அடுத்து கேள்விகள் உங்களுக்குதான் அப்படீன்னு நெனைக்கிறேன். இல்லை ..இல்லை உங்களுக்கு கேள்விகளை குமரன் மூலியமா கேக்கச் சொல்லணும். சவுண்டு விட்டதுக்கு அவரை இந்த வறு வறுத்துட்டீங்களே!!!கேள்வியிலேயே :))
//"ட்ரெயின்லயா ஆபீஸுக்குப் போயிட்டு வரீங்க?"//
Interesting :-)
அவங்க என்ன பதில் சொன்னாங்களாம்? இப்படிப்பட்ட ரொமாண்டிக் கேள்விக்கப்புறமும் உங்கள அவங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க பாருங்க :-) நீங்க என்னடான்னா wifeology எழுதி ஊரை ஏமாத்தறீங்க. நடத்துங்க சாமி :-)
'அழியாத கோலங்கள்' படத்துல ஒரு காட்சி. டீச்சரைப் பாத்தவுடன என்ன சொல்லனும்னு தயார் பண்ணிகிட்டு போவான். 'இந்த புடவைல நீங்க அழகா இருக்கீங்க'. டீச்சரப் பாத்தவுடன அதயே சொல்வான். ஆனா அன்னிக்குன்னு டீச்சர் தாவணியில இருப்பாங்க :-))))
//இப்போ, இலவசக்கொத்தனாரை கொஞ்சம் நோண்டலாமா? (இதே கேள்விகளுக்கு பஞ்ச் பரமசிவத்திடமும் பதில் கேட்டு வாங்கிப் போடுங்கள் - அல்லது கலர் மாற்றி எழுதுங்கள்)//
சுரேஷ்,
கொத்தனார் மேல் இந்த கொல வெறி ?
விழிபிதுங்கும் கேள்விகள்..... :)
//இன்றும் எழுதுவதை நிறுத்தத் தயாராகவே உள்ளேன் - ஆனால் - "அவனை நிறுத்த சொல்!"//
இதுக்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை!! நிறுத்திட்டுப் போறேன்னு சொல்லறவனே நாளைக்கு நாலு பதிவு போடறான். நீர் என்ன நிறுத்திடுவேன்னு பயம்தானே காட்டினீரு. போனாப் போகட்டும்!!
//கடைசியில் என்ன ஆச்சா? அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க! மனசைத் திடப்படுத்திக்கங்க - கல்யாணம் ஆயிடுச்சி //
இதுக்குத்தான் ரொமாண்டிக்கா எல்லாம் பேசக்கூடாது. அன்னிக்குப் பேசின நாலு வார்த்தை என்ன செஞ்சுது பாருங்க. உங்களை வைப்பாலஜியில் முனைவரா மாத்திருச்சு!!
//"அப்பாவா ஆகப்போறே, இனியாவது குழந்தைத்தனமா இல்லாம பொறுப்பா நடந்துக்கணும்" அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. //
பொறுப்பு என்றால் என்ன? புதசெவி!
//அப்படி வந்தவங்களே யோசிச்சதில்ல! ஒரு நாள்லே என்ன கிழிச்சிறப்போறேன்! வீட்டையாச்சும் கவனிக்கலாமில்ல? //
நான் அடிப்பதில் சரிபாதி என் நண்பன் கொத்ஸுக்கு எனச் சொன்னதை நீங்கள் பொதுவில் சொல்லாமல் விட்டாலும் உங்கள் பெருந்தன்மை உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இதனை வெளிப்படையாக் கூறிக்கொண்டு தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
//இலவசக்கொத்தனாரை கொஞ்சம் நோண்டலாமா? (இதே கேள்விகளுக்கு பஞ்ச் பரமசிவத்திடமும் பதில் கேட்டு வாங்கிப் போடுங்கள் - அல்லது கலர் மாற்றி எழுதுங்கள்) //
உங்கள் கட்டளையைச் சிரமேற்கொண்டு செயல்படுத்தி விட்டேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு அதற்கு ஒரு போஸ்டரும் ஒட்டிக் கொள்கிறேன்.
http://elavasam.blogspot.com/2008/06/blog-post_17.html
சென்ஷி :-)
சொல்றபடி சொன்னா நம்புவாங்க, கவலைப்படாதீங்க :-)
குமரன், ஏறத்தாழ அதையும் டச் பண்ணிட்டாரு :-)
சங்கர், வலிப்பதிவு தெரிந்தே செய்த தவறுன்னுதானே நெனச்சேன், நெனைக்கிறேன்!
முதல் சப் கேள்விக்கு பதில் :- ஆமாம்.
சங்கர்,
//எங்கே, எப்போது // சோகத்தைக் குத்திக் கிளர்றதில அவ்வளோ ஆர்வம்!
//எந்தக் கொம்பனும் வார்த்தைல சொல்லிட முடியுமா என்ன // அப்புறம் எதுக்கு வார்த்தையில சொல்லச் சொல்லிக் கேட்டீங்களாம்?
//இப்படி யோசிக்குறதுனாலதான் உங்களையெல்லாம் நாடு கடத்திட்டாங்களா // இப்படி யோசிக்கறவங்க எல்லாரையும் நாடு கடத்திட்டாதான் தேவலாமே!
// கொத்தனார் பதிலா? வேண்டாம்னு சொன்னாலும் கேக்கவா போரீங்க? பினாத்தல் சொன்ன மாதிரி கலர் கலரா போடுங்க :)// ஏது, பஞ்ச் அண்ணா கொத்தனாரைவிட பிரபலமா ஆயிட்டுகிருக்கார் போல!
திவா, நன்றி..
எ அ பாலா,
//உங்களுக்கு ஊக்கம் கொடுத்து திரும்ப இழுத்து வந்ததில் என் பங்கும் உண்டு தானே // இதனால வரப்போற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை :-)
//என்னைத் தவிர! இல்லன்னா, சுயதம்பட்டம்-னு யாராவது ஆரம்பிப்பாங்க:)//
என்னையும் தவிர.. நானும் பின்னூட்டத்துல பதில் சொன்னேனே :-)
தம்பி, ஆரம்பிக்கறது, நானா? படிக்கவே மாட்டியா? அப்புறம் எதுக்கு பின்னூட்டம்ன்றேன்!
வல்லி சிம்ஹன்,
//டீச்சரைக் கல்யாணம் செய்துகிட்டவரா நீங்க.// சரிதான்.. விடிய விடிய..
டீச்சர் ஒரு பதில், கல்யாணம் அடுத்த பதில்..
நன்றி கோபிநாத்.
விக்னேஸ்வரன், 30 வயசுதான் வித்தியாசம்.. இந்தப் பாழாப்போன சமூகம் பாருங்க!
வாங்க ஜசீலா, ரொம்ப நாளா ஆளைக்காணோம்?
யெக்கோவ்,,
//என்னய்யா இது? என்னிடம் கேள்வி கேளுங்கன்னு சவுண்ட் (சொ.செ.சூ) விடணும். நாங்க எல்லாரும் வந்து வரிசையா கேள்விக் கேட்போம்.//
இது என் ரேஞ்சுக்கெல்லாம் தேவையா? இது உ செ சூ! (உங்க செலவுல)
வல்லி சிம்ஹன்.. என்னதிது பீதியக் கிளப்பறீங்க?
சங்கர்,
//அடுத்து கேள்விகள் உங்களுக்குதான் அப்படீன்னு நெனைக்கிறேன்.// ஆமாமாம்.. தொடரை எங்கயாவது உடச்சாவது கேட்டுறலாம்!
ஸ்ரீதர்,
//இப்படிப்பட்ட ரொமாண்டிக் கேள்விக்கப்புறமும் உங்கள அவங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க பாருங்க :-) // ஏன் இந்தக் கேள்விக்கு என்ன ரொமான்ஸ் குறைச்சல்? என்னோட அடுத்த டயலாக்கைக் கேட்டிருந்தீங்கன்னா என்ன சொல்லியிருப்பீங்களோ? -தமிழும் ஹையரா இல்ல லோயரா?
யெப்பா.. கிளம்பிடாதீங்கப்பா.. டைப்ரைட்டிங் பத்திக் கேட்டேன் :-))
கோவி கண்ணன்,
//சுரேஷ்,
கொத்தனார் மேல் இந்த கொல வெறி ?
விழிபிதுங்கும் கேள்விகள்..... :)//
எவ்வளோ அடிச்சாலும் தாங்குவாரு, நல்லவருன்னு சிலர் பேசிகிட்டாங்க.. அதான் :-)
கொத்தனார்,
//நீர் என்ன நிறுத்திடுவேன்னு பயம்தானே காட்டினீரு. போனாப் போகட்டும்!!// அப்ப்பாடா.. அதை பயம்னு சொன்னீங்களே.. ஆசை காட்டினேன்னு சொல்லாம:-)
//உங்களை வைப்பாலஜியில் முனைவரா மாத்திருச்சு//
கஷ்டங்கள்
கவிதை தருமாம்..
மனைவியும்
ஒரு
கவிதைதான்!
(இது முன்னே எழுதின ஹைக்கூ- இங்கே சரியா பொருந்துது:-)
//பொறுப்பு என்றால் என்ன? புதசெவி!//
நம்க்கு இல்லாத மேட்டர்.. தேவைப்படாத மேட்டர்!
//
நான் அடிப்பதில் சரிபாதி என் நண்பன் கொத்ஸுக்கு //
சின்னப்பிழைதான் கொத்ஸ்.. நான் வாங்குவதில் முதல் பாதி கொத்ஸுக்குன்னுதான் சொன்னேன்!
//தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு அதற்கு ஒரு போஸ்டரும் ஒட்டிக் கொள்கிறேன். //
அதானே.. அது இல்லாட்டி என்ன கொத்ஸு!
Vanakkam.
Unga blog padikkaradhukku yedhavadhu font download pannanuma yenna ?
Yedho tamil yezhuthu madhiri thaan theriyudhu, but theliva illai.
Nandri.
Namaji
சுரேஷ்,
இந்த கேள்வி பதில்ல ரொம்ப பிடிச்சது உங்களோட இந்த பதில்தான் :-))))
//டீச்சரைக் கல்யாணம் செய்துகிட்டவரா நீங்க?
டீச்சர் ஒரு பதில், கல்யாணம் அடுத்த பதில்..//
Post a Comment