நம்ம மக்களுக்கு, கமல்ஹாசனைத் தெரியுது, டாக்டர் விஜய் ஐத் தெரியுது ஏன் வாட்டாள் நாகராஜைக்கூடத் தெரியுது - ஆனா பொது ஜனத்தைத் தெரியலைங்க! என்னாதான் மாசத்துக்கு லட்சத்துக்கு நூறு இருநூறு கம்மியா வாங்கற பொட்டி தட்டற தொழில்லே இருந்தாலும் இப்படியா? மறுகாலனீய ஏகாதிபத்திய சிந்தனாமுறையின் இருத்தலியல் சாராக் கற்பனாவாதம் முத்திப்போச்சு போல!
சரி சரி எங்கேயும் போயிடாதீங்க.. மேட்டருக்கு வந்துடறேன்!
குவிஸ் வைச்சா ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கும்னு தெரிஞ்சதுதான்னாலும், இவ்வளவு சூப்பர் ரெஸ்பான்ஸை நானே எதிர்பார்க்கலை - அதுவும் அடல்ட்ஸ் ஒன்லி கதைகள் எல்லாப்பக்கமும் இருந்து கொட்டிக்கிட்டிருக்கும் வேளையில!
4000 ஹிட்டுக்களை விடுங்க! 130 பின்னூட்டங்களை விடுங்க! 118 முழுசா முடிச்சு அனுப்பிய விடைகளையும் விடுங்க! எனக்கு நிஜமான ஆச்சரியம் இத்தனை பேரும் இந்தப்போட்டிக்காக செலவழிச்சிருக்க நேரம்! 500லிருந்து 1000 நொடி!
கோட்னு ஒண்ணு கொடுத்ததால, சுலபமா காபி பேஸ்ட் பண்ணிட்டாங்கன்னாலும், யாருமே ரிப்பீட்டேய் போடலைன்றது ஒரு சந்தோஷம்தான்! உடனே கண்டுபிடிச்சுருவேனே :-)
இன்னொரு ஓ போடவேண்டிய சமாச்சாரம்! விடை அனுப்பியவங்களுக்கு சராசரியாக 72 சதவீதம் மதிப்பெண் கிடைச்சிருக்கு!
சரி..விடைகளைச் சொல்ல வேண்டிய நேரம்! பாஸ்டன் பாலா கேட்ட புள்ளிவிவரங்களுடன்!
வெற்றி பெற்றவர்களைப் பற்றிய அறிவிப்புலதான் ரொம்பவே குழம்பிட்டேன். நேரம் மற்றும் குறிப்புகளை வைத்து வரிசைப்படுத்தலாம் னு நெனச்சேன். ஆனால், அது நியாயமானதா இருக்காது - சிலர் திறந்துட்டு வேற ஜன்னலைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம். சிலர் இரண்டாவது மூன்றாவது முறையாக முயற்சித்ததில் குறைந்த நேரத்தில் குறைந்த குறிப்புகளுடன் முடித்திருக்கலாம் - என்பதால் அப்படி வரிசைப்படுத்தாமல், எனக்கு பின்னூட்டம் / மின்னஞ்சல் வந்த நேரப்படி வரிசைப்படுத்தி இருக்கிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஓ!
ஆனா மக்களே! கும்மிக்கும் மொக்கைக்கும் நடுவுல அப்பப்ப இந்த மாதிரி எதாவது செஞ்சே தீரணும்னு எனக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்துட்டீங்களே! எப்பல்லாம் முடியுதோ அப்பல்லாம் இப்படி ஒரு இம்சையைக் கொடுத்தே தீருவேனே! பாவம் நீங்க!
Jun 30, 2008
பொதுஜனத்தை மறந்த பொதுஜனம்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை அனுபவம், பதிவர், புதிர், போட்டி, விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
18 பின்னூட்டங்கள்:
அப்பாடா, இனிமே எதாவது ஒரு உப்புமா போஸ்ட் போட்டுட்டு எனக்கு மட்டும் பின்னூட்டமே வர மாட்டேங்குதுன்னு அழ மாட்டீரு. இனி அப்படி ஆச்சுன்னா அடுத்தது இந்த மாதிரி ஒரு "படத்தைப் பார்த்து கருத்தைச் சொல்லு" போஸ்ட் போட்டுடுவீரு. இப்படி மகிழ்ச்சி சோகம் அப்படின்னு உம்மளோட கருத்துக்களை வலுக்கட்டாயமா தன் மேல திணிக்கறீரு என்பதைக் கூட உணராத கூட்டம் அங்க வந்து பின்னூட்டமும் போடும். நல்லா இருங்கடே!
புகழ்ச்சி கூடத்துல என் பெயரைக் காணலை. சரி விடுங்க... பின்னூட்ட வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தான்.
என் ஒரே சிபாரிசு - இந்த வெளிச்ச அசைபடத்தை (flash movie-தாங்க) அடிக்கடி நீங்கள் உபயோகப் படுத்தலாம். அந்தந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி கேள்விகள் / துப்புகள் மாற்றி.
//இப்படி மகிழ்ச்சி சோகம் அப்படின்னு உம்மளோட கருத்துக்களை வலுக்கட்டாயமா தன் மேல திணிக்கறீரு //
இப்படித்தாங்க இவர் தன்னோட குதர்க்கவாதத்தை (கேட்டா நுண்ணரசியல்ம்பார்) நம்ம மேல திணிக்கிறாரு. இதுக்கு ஒரு நிவாரணம் இல்லையா? :-))
புகழ்ச்சி கூடத்துல என் பெயரைக் காணலை. சரி விடுங்க... பின்னூட்ட வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தான்.
என் ஒரே சிபாரிசு - இந்த வெளிச்ச அசைபடத்தை (flash movie-தாங்க) அடிக்கடி நீங்கள் உபயோகப் படுத்தலாம். அந்தந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி கேள்விகள் / துப்புகள் மாற்றி.
//இப்படி மகிழ்ச்சி சோகம் அப்படின்னு உம்மளோட கருத்துக்களை வலுக்கட்டாயமா தன் மேல திணிக்கறீரு //
இப்படித்தாங்க இவர் தன்னோட குதர்க்கவாதத்தை (கேட்டா நுண்ணரசியல்ம்பார்) நம்ம மேல திணிக்கிறாரு. இதுக்கு ஒரு நிவாரணம் இல்லையா? :-))
புள்ளிவிவரங்களுக்கு போட்டிக்கும் நன்றி :)
பெனாத்தலார் தன் கருத்துக்களை திணிக்கிறார் என்ற கருத்தை நான் திணிப்பதாகக் கூறும் அதே சமயத்தில் பெனாத்தல் திணிக்கவில்லை என்று கூறி நான் சொன்னதை மறுக்காமல் போகும் பொழுதே நீர் உண்மை அனைத்தும் அறிந்தவர் என்ற பேருண்மை எனக்குப் புரிகிறது. அதன் காரணமாக, நீர் என் கருத்தை நான் திணிப்பதாக கூறும் உம் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பதை மன்னிக்கிறேன், மறக்கிறேன்.
ஆஹா! டிஸ்கி விட்டுப் போச்சே!!
டிஸ்கி: நம்ம பதிவுக்கு தொடர்ந்து வந்து ஆதரவு குடுக்கும் ஒரே பார்ட்டி. உம்மையும் பகைச்சுக்கிட்டா அப்புறம் என் கதி என்ன ஆகறது. அதான் இப்படி நீர் என்ன செஞ்சாலும் மறப்பதும் மன்னிப்பதுமா இருக்கு என் நிலமை!
பினாத்த்ஸ் எல்லாம் சரி..தயவு செய்து இந்த "flash"ன்ற வார்த்தையை வுட்டுட்டு வேற ஏதாவது வார்த்தை கண்டுபிடியுங்களேன்..ஒரு நண்பர் சொன்ன மாதிரி "வெளிச்ச அசைபடத்தை "கூட தேவலாம்.
நல்ல போட்டி சுரெஷ்....இதுபோல் நிறைய போட்டிகளை எதிர்பார்கிறேன்.
இந்த போட்டியில் ஜெயித்தவர்களுக்கு பரிசு ஒன்றும் கிடையாதா :)
நன்றி,
அருண்
இந்த விளையாட்ட நீங்க அப்பப்ப வேற வேற பிரபலங்களோட நடத்தலாம்... நல்ல கான்செப்ட்....
அப்புறம் புகழ்ச்சி கூடம்'னா என்னங்க?
//ஒரு நண்பர் சொன்ன மாதிரி "வெளிச்ச அசைபடத்தை "கூட தேவலாம்.//
ஐயய்யோ... நான் சும்மாவாச்சுக்கும் சொன்னேன். சிரிப்பான் போட விட்டுப் போச்சுப் போல :-))
flexi எப்படி தமிழ்ப் படுத்தறதுன்னு யோசிக்கிறேன் இப்ப :-)
வாரும் பொதுஜனப்பிள்ளாய்,
இவ்வாறே கொத்ஸும், பினாத்சும், நாராயணரும், மற்றும் பிறரும், உம்மீது திணிக்கும், தங்கள் சொந்த கருத்துகளை செவிமடுத்து வாளா இருந்ததினால், அய்யகோ, உன்னை மறந்தார்களாம் உம்மக்கள். அதுவும் அவர் கருத்தே!!!!!
அடங்கொக்க மக்கா
வந்து பாக்குறதுக்குள்ள பரிட்சையும் முடின்சு ரிஸல்டும் போட்டுட்டாங்க :(
நெறைய பேர் பின்னூட்டத்துல சொன்ன மாதிரி " இதன் பின்னான் உங்கள் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது "
( அடைப்புக் குறிக்குள் உள்ளதின் உண்மையான அர்த்தம்.."ஆபிஸிலையும் , வீட்டுலியும் வேற வேலை இல்லாம இந்த வேலைல இவ்வளவு நேரம் செலவழிக்கிறீங்களே..எப்படீங்க ? ":)
\\ஒரு இம்சையைக் கொடுத்தே தீருவேனே! பாவம் நீங்க!
\\
இதை நீங்க பாவம்ன்னு நினைச்சா..அடிக்கடி இந்த பாவத்தை செய்யுங்கள் ;))
தாமதமான மணநாள் வாழ்த்துகள் பெனாத்தல்,
குறைந்த பட்சம் இந்தக் கமெண்டாவது புரியுதுனு சொல்லுவீங்கனு நம்பறேன்! :P
//தாமதமான மணநாள் வாழ்த்துகள் பெனாத்தல்,//
மறுக்கா ஒரு வாழ்த்து!
இல்லறத்தியல் இயற்றிய இனியவரே
நல்லறம் நடத்தி வாழியப் பல்லாண்டு
//கோட்னு ஒண்ணு கொடுத்ததால, சுலபமா காபி பேஸ்ட் பண்ணிட்டாங்கன்னாலும், யாருமே ரிப்பீட்டேய் போடலைன்றது ஒரு சந்தோஷம்தான்! உடனே கண்டுபிடிச்சுருவேனே :-)
//
:)))
ரிப்பீட்டே நான் போடாதது எவ்வளவு நல்லதா போச்சு..
//தாமதமான மணநாள் வாழ்த்துகள் பெனாத்தல்,//
மறுக்கா ஒரு வாழ்த்து!//
மறுக்கா மறுக்கா இன்னொரு வாழ்த்து..
இதுக்க்கும் நான் ரிப்பீட்டே போடல :)
அடடா, நானும் தாமசமா வந்துட்டேனே? நமக்குப் புடிச்ச ஏரியா (பொது அறிவு/நடப்பு நிகழ்ச்சிகள்).
சரி விடுங்க.... அடுத்த முறை சீக்கிரம் வந்துடறேன்!
சரி.. சாட் பேருக்கு பின்னே/முன்னே, வாட்டாள் நாகராஜ் மாதிரி ஒருத்தர் 'பசுப்பையன்' தொப்பியிலே இருக்காரே, நீங்கதானா 'அது'?? :)
hi
Iam regular reader of dubukku,u & idly vadai..
but now not able to view idly vadai
i think it needs some invitaion.
can u pls pass me idly vadai's mail id for me to request for an invitaion.
Thnx
Post a Comment