Oct 6, 2005

ப ம க வின் போராட்ட அறிவிப்பு 06 oct 05

துபாய், 06 அக்டோபர் 2005

ப ம க

வலைப்பதிவு மக்களின் முன்னேற்றத்தைக் காரணம் காட்டி வெகு வேகமாக வளர்ந்து வரும் கட்சி பச்சோந்தி மக்கள் கட்சி. இதுவரை எந்தத் தேர்தலிலும் பங்கு பெறவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான அறிக்கைகள் வெளியிட்டு, உலகளாவிய முறையில் பல தொண்டர்களையும் பெற்று வரும் கட்சி இது.


போராட்டம்

இதன் மூத்த இணை துணைப் பொதுச் செயலாளர், அஞ்சாசிங்கம், புரட்சிப்பினாத்தலார் அவர்கள் நமது பத்திரிக்கைக்கு அளித்த சிறப்புப் பேட்டி பின் வருமாறு:

கே:நீங்கள் ஏன் திடீரென போராட்டத்தில் குதிக்கிறீர்கள்?ப: ப ம க கொண்ட கொள்கைக்காக உயிர்விடக் கூடிய கோடானு கோடித் தொண்டர்கள் கொண்ட கட்சி என்றாலும், அறவழியிலேயே கட்சி நடாத்தி வந்திருக்கிறோம்.

என்றபோதிலும், நடுநிலையற்ற ஏடுகளும் தொலைக்காட்சிகளும் எங்கள் கட்சியைக் குறித்து செய்திகள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றன.

மயிலிறகை வைத்து மார்ச் மாத சூரியனை மறைத்துவிட முடியுமா?கோழிகள் கூடி கோவிலின் புனிதத்தை குறைத்துவிட முடியுமா?

தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் காக்க எங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க சித்தமாக இருக்கிறோம் என்பதை இந்த உலகிற்கு வெளிக்காட்டவே போராட்டத்தில் குதிக்கிறோம்.

போராட்டம்

கே: எதற்காக இந்தப் போராட்டம்?

ப: தமிழுணர்வு உள்ள எவனும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிடத் துணிந்திட மாட்டான். நீங்கள் ஆங்கிலப் பத்திரிக்கையிலிருந்து வருவதால் விளக்கமாகச் சொல்கிறேன்.

இற்றைத் தினம், சூரியத் தொலைக்காட்சியிலே கோலங்கள் என்ற பெயரிலே ஒரு மெகாத்தொடர் வந்து கொண்டிருக்கிறது. அதில், தீபா வெங்கட் எனும் நடிகை ஏற்கும் கதாபாத்திரம், தன் திருமணத்திற்கு முன்பாகவே சூலுற்றிருப்பதாக கதை சொல்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நாம் கண்டோ கேட்டோ இராத அசிங்கங்கள் இத்தொடர் மூலமாக அள்ளித் தெளிக்கப்படுகின்றன என்றால் அது மிகை ஆகாது.

ஒருத்திக்கு ஒருவன் (கவனிக்கவும் - ஒருவனுக்கு ஒருத்தி அல்ல), கற்புடைப் பெண்டிரைக் கோவிலாகவே கருதி வரும் தமிழ்நாட்டில் இப்படிப் பட்ட அவலங்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?

கோரிக்கைகள்

கே: போராட்டத்தின் கோரிக்கைகள் யாது?

ப: 1. கோலங்கள் தொடரின் பெயரை அலங்கோலங்கள் என மாற்றிவைக்க வேண்டும்.
2. அந்தக் கதாபாத்திரம் இந்தி பேசுவதாக மாற்றவேண்டும்.
3. இன்னும் சில பாகங்களுக்குப் பிறகு அந்தக் கதாபாத்திரத்தை உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி அந்தப் பகுதியை முடித்து வைக்க வேண்டும்.

கொடும்பாவி

கே: இந்தப் போராட்டத்தை எவ்வாறு நடத்தப் போகிறீர்கள்?

ப: முதலில் கொடும்பாவி எரித்தல், இந்தியாவின் எல்லா மூலைகளிலும் உள்ள 275 நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்தல் என அறவழியில் நடத்தவே முயற்சிப்போம்.

அவ்வாறு முடியாத நிலையில், ஸ்பானர்கள், சுத்தி, ஸ்க்ரூ ட்ரைவர்கள் ஆகியவற்றை விகடன் தொலைக் காட்சி நிறுவனத்தின் முன் காட்டி பணியவைப்போம்.

உதிர்வது நாமாக இருப்பினும் வளர்வது தமிழ்ப் பண்பாடாக இருக்கட்டும்.

தலைவர்

கே: போராட்டத்திற்கு தலைவரின் ஒப்புதல் இருக்கிறதா?ப: தலைவருக்கு இப்போராட்டத்தைப் பற்றி இன்னும் தெரியாத நிலையிலும், இதற்கு எதிராகக் கருத்து கூறும் அளவிற்கு தமிழ் உணர்வு இல்லாதவர் அல்ல எங்கள் தலைவர்.

இவ்வாறு புரட்சிப் பினாத்தலார் அறிவித்தார்.

5 பின்னூட்டங்கள்:

முகமூடி said...

ஆஹா.. இப்பத்தான் மாநாடு ஒன்னு நடத்தலாமான்னு ரோசனை பண்ணிகிட்டு இருக்கேன் ரெண்டு நாளா.. அதுக்குள்ள போராட்டமா.. இருக்கட்டும் நம்ம பலத்த பாத்து மாநாட்ட பெரிய அளவுல அசத்திருவோம்..

முகமூடி, பமக நிறுவனத்தலைவர் (இத போட்டு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு... போராட்ட அறிவிப்புல தலைவர் பேரயே போடாம இருட்டடிப்பு செய்றாங்க)

***

இந்த போராட்டம் தூள் பட "தண்ணி ப்ரச்னை" ரேஞ்சுல கட்சிய கைபத்தும் போராட்டம் இல்லியே? உண்மைதான?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முகமூடி.

தலைவர் என்பதைத் தவிர பெயரைக் கூறும் அளவிற்கு தரம் தாழ்ந்து தயாரிக்கப் படவில்லை ப ம க தொண்டர் படை.

மாநாடு எப்போது? வசூல் முடிந்தாகி விட்டதா? மூ.இ.து.பொ.செவிற்கு எவ்வளவு பங்கு தேரும்?

மேலும், இந்த போராட்டத்துக்கு ஆகும் செலவையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

கட்சியை கைப்பற்றுவது தொடர்பாக -

னேற்று நான் ஒரு வாசகன்
இன்று ஒரு வலைப்பதிவாளன்
நாளைக்கு - அதை மக்கள் முடிவு செய்வார்கள்!

புரட்சிப் பினாத்தலார்.

ஏஜண்ட் NJ said...

//வசூல் முடிந்தாகி விட்டதா? மூ.இ.து.பொ.செவிற்கு எவ்வளவு பங்கு தேரும்?//

ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்!

தொ(கு)ண்டர்கள் உசார்!!!

பினாத்தல் சுரேஷ் said...

என்ன ஆச்சு தெரியலையே.. கொஞ்ச நாளா நம்ம பதிவிற்கு பின்னூட்டம் வருவதே குறைந்து விட்டதே! 10000 =கிட்டை நெருங்கும் நேரத்தில் யார் கண்பட்டதோ!

Anonymous said...

naan podaraen pinnottam!

 

blogger templates | Make Money Online