அம்ருதாஞ்சன், டார்டாய்ஸ் போன்ற பொருள்களின் பெட்டிக்குள்ளே 22 மொழிகளில் ஒரு செயல் விளக்கம் இருக்கும்.. தீவிர புத்தக நேசர்களே தவிர்க்கும் அந்த அச்சடித்த காகிதத்தின் சர்குலேஷன் அம்ருதாஞ்சன் விற்பனைக்கு சமம்!
Fair & Lovely, sachet shampoo போன்ற உள்ளிட்ட பல பொருள்களின் உதவியோடும் சன் TVயின் இடையறாத விளம்பரங்கள் -- சாதித்துவிட்டது - ஒரு மில்லியன் சர்குலேஷன்..
நான் குங்குமம் வாங்கி படித்த யாரையும் நேரில் பார்த்ததில்லை.. நீங்கள் பார்த்ததுண்டா?
தொடரட்டும்-- இவர்களின் இலக்கிய (?!) சேவை!
அடுத்த வாரம் குங்குமம் - Preview:
டாப் டென் ட்ராலி பாய்ஸ் - அவர்கள் வாங்கும் சம்பள விவரம்.
ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பா?
கலைஞர் எழுதும் "மஞ்சள் துண்டு" காவியம்.
குங்குமம் - போயிங் இணைந்து வழங்கும் வாரம் ஒரு எலிகாப்டர்.
இது மட்டுமல்ல-- அரை கிலோ சர்ஃப், சக்தி மசாலா வழங்கும் கங்காரு கறி மசாலா, மற்றும் விண்டோஸ் 3.1 Installation Diskette.
தாங்க முடியலடா சாமி!
*******************************************************************
இந்தப் பதிவு, நான் வலை உலகிற்கு வந்த புதிதில் (20 Oct 2004) பதிந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் - ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பா?
யாருக்கும் தோன்றும் முன்னரே, தெரியும் முன்னரே தன் ஞானக்கண்ணால் கிசுகிசுக்களை அறியும் திறன் படைத்த பி. சுரேஷ் பற்றி தங்கள் கருத்து யாது?
Oct 4, 2005
First.. கண்ணா.. First - republished
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை நக்கல்
Subscribe to:
Post Comments (Atom)
9 பின்னூட்டங்கள்:
super...! கண்ணா..! super...!
Jayam Ravi - Rajini Magal thodarabaannu neenga kelvi ketta neram...dhanush & rajini magal kalyanam...! Super!! Kalakku Kanna Kalakku!
test!
//தீவிர புத்தக நேசர்களே தவிர்க்கும் அந்த அச்சடித்த காகிதத்தின் சர்குலேஷன் அம்ருதாஞ்சன் விற்பனைக்கு சமம்!// குங்குமம் வியாபார சீக்ரெட்டை இப்படியா பப்ளிக்கா ஒடைப்பீங்க?? :)
எல்லாம் எமிரேட்ஸ் வரைக்கும் ஆட்டோ வராதுங்கற தைரியமா?
உங்களுக்கு ஞானக்கண் வாத்தியாரே
SUMMA NACHUNU IRUKKU PENATHAL SURESH!!!
குங்குமத்தை நான் வாங்குவதேயில்லை. சென்னை சென்றிருந்த பொழுது திருத்தணி ரயிலுக்காக காத்திருந்த வேளையில் பொழுது போக்க அதுதான் கிடைத்தது. அந்தப் புத்தகத்தால் கொஞ்சம் பலன் கிடைத்தது. ஆம். அதுதான் சிறிய ஆச்சி கரிமசாலாப் பொடி பாக்கெட். (அது மட்டும்தான் பலன்).
ஒரு தபா அப்பத்தா மசாலா பொடி வாங்கி வர சொல்லோ, நான் போயி மசாலா பாக்கட் கேட்டா அதோட ஒரு ஷாம்பூ பாக்கெட்டும் என்னமோ ஒரு புஸ்தகமும் கொடுத்தாங்க... யோவ் இதெல்லாம் நான் கேட்டனான்னு கேக்க, எல்லாம் மசாலா பாக்கெட்டோட இலவசம் தம்பி, சும்மா எடுத்துட்டு போன்னாரு நம்ம மளிகை முருகன். அந்த புஸ்தகத்த (குங்குமம்னு இருந்திச்சி அட்டையில) கார் ட்ரைவர் தனக்கு வேணும்னு வாங்கிகிட்டாரு, கண்ணாடி துடைக்க மட்ட பேப்பருதான் சிறந்ததாம் துணிய விட...
இப்ப நான் குங்குமத்த காசு கொடுத்து வாங்கினவன்னு கணக்கா? இல்லையா?
கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.
இளவஞ்சி - ஆட்டோ வராவிட்டாலும் வரவெச்சுடுவீங்க போல!
கோ கணேஷ் - என் ஞானக்கண்ணை கண்டுபிடிக்கும் ஞானக்கண் உங்களுக்கு!
வீ எம் - நச்சுன்னு இருக்கு உங்க கமெண்ட்டு!
கோ ராகவன் - மண்டையிலேதான் மசாலா இல்லை - இலவசத்துலயாவது இருக்கட்டுமேன்னு கொடுக்கறாங்க போல!
முகமூடி - குங்குமத்தை பயன் தரும் வகையில் உபயோகித்த ஒரே நபர் உங்க கார் டிரைவர்தான்!
Post a Comment