ஒரு வருடமாகிறது.. நான் எழுதியவையையும் பதிக்க ஒரு தளம், படிக்க சில மனிதர்கள், உதவிட, ஊக்கிட, வாழ்த்திட பல நெஞ்சங்களின் அறிமுகம், தொலை பேசி இலக்கியம் கதைக்கும் அளவிற்கு சில நண்பர்கள், என் வாழ்வின் முதல் முறையாக அடுத்தடுத்து இரு போட்டிகளில் முதல் பரிசுகள், நட்சத்திர அந்தஸ்து ஒரு வாரத்திற்கு, என் வாழ்வின் முதல் பல ஆண்டுகள் சாதிக்காதவற்றை இந்த ஒரு ஆண்டில் சாதித்ததாக ஒரு பிரமை!
என்னை மேம்படுத்த இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
சிலருக்கு( குழலி ஆனந்த் பின்னூட்டத்திலேயே கூறியபடி) காரணமாக இந்த கருத்துக் கணிப்பு சரிவரத் தெரியாததால், பதிவுக்குள்ளே இருந்த கருத்துக் கணிப்பை வெளியே தள்ளி விட்டேன்.
இப்போது, இங்கே க்ளிக்கினால், நீங்கள் கருத்துக் கணிப்பில் பங்கு பெற இயலும்.
Click Here to take the survey
13 பின்னூட்டங்கள்:
இந்தப் பதிவிற்கு + வாக்குகள் அளித்து ஒரு வாரம் நிலை நிறுத்தி பலரை இந்த கணிப்பில் பங்கு பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்க நினைத்திருந்தேன்.. கூச்சம் காரணமாக விட்டுவிட்டேன்.. ஆனால் அதற்குள் யாரோ இரு தெய்வங்கள் -ல் குத்தி மேலெழும்ப முடியாதவாறு செய்து விட்டார்களே:-(
+ வாக்கு அளித்து பதிலும் அளித்திருக்கிறேன் சுரேஷ்
எனது எண் 168028 என்று வந்தது.
தொடருங்கள் உங்கள் பணியினை
மென்மேலும் வளர்ச்சி நிச்சயம்
வாழ்த்துக்கள்
ஆஹா! சபாஷ் மது!
தாமதமாக வராமல் முதல் பின்னூட்டம்
வாழ்த்துகள்,
ஜாவா ஸ்கிரிப்ட் பிழை காண்பிக்கின்றதே, UNICODEல் உள்ளவற்றை தவிர வேறெதுவும் படிக்கமுடியவில்லையே...
Suresh
There is a lot of blank space. Anyway, I took the survey
Congrats !
I couldnt take the survey. its all blank !
:-(
நான் சர்வேயில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறேன்.
நான் பாஸா பெயிலா சுரேஷ்?
நன்றி மதுமிதா, தேன் துளி, முகமூடி.
குழலி, ஆனந்த்: ஸ்பானரில் விளையாடுபவன் கையில் மௌஸைக் கொடுத்தால் வரும் சங்கடங்களே அவை. இப்போது திருத்தி உள்ளேன். பாருங்கள், பங்கு பெறுங்கள்.
முகமூடி - நீங்கள் பாஸா பெயிலா என்பது என்ன விடை அளித்தீர்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது:-))
சுரேஷ், எல்லாம் நல்லா தெரியுது! ஆனா "பினாத்தலைப் பற்றி உங்கள் மேலான கருத்து என்ன?" என்பதை கிளிக்கினால்
வெறும் ??????????? இப்படிதாங்க வருது. அடுத்து "பினாத்தலில் பிடித்த வகையும்" இதே லட்சணத்தில் தான் இருக்கு.
நான் சாளரம் 98 டை பாவிக்கிறேன். வேறு யாருக்காவது இந்த பிரச்சனை இருந்ததா?
இன்னும் நன்றாக பினாத்தவேணுமென்று வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்,
துளசி.
பரிட்சையில் எல்லாக் கேள்விக்கும் 'ஒழுங்காக'பதில் எழுதியிருக்கின்றேன்.
நன்றி உஷா, துளசி அக்கா..
உஷா, வேற யாருக்கும் பிரச்சினை இருக்கிற மாதிரி தெரியலை - 98லேயே இருந்தா எப்படி? அந்த சாளரத்தை மூடுங்கள் - வைரஸ் போகட்டும்! (கதவைத் திற காற்று வரட்டும்னு யாரோ சொல்லி இருக்காங்களே!)
இதுவரை 56 பேர் கணிப்பிலே பங்கு பெற்று இருக்கிறார்கள்.. இன்னும் மக்களை எதிர்பார்க்கிறேன்.
நான் participate பண்ணியாச்சு. இதே மாதிரி உங்க மாணவர்கள் கிட்டேயும் சர்வே நடத்தியிருக்கீங்களா?:-)
எப்படி கொலுலே நம்ம play doh பிள்ளையாரை கவனிக்காம விட்டேன். என் சார்பா ஒரு 'மன்னிசுக்கபா' சொல்லிடுங்க அவர் கிட்டே..
ஏதோ என் பங்குக்கு ஒரு - போட்டாச்சு. சர்வேயும் முடிச்சாச்சு!
//உங்களுக்கு என் பதிவுகளில் பிடித்த், பிடிக்காத அம்சங்களைப்பற்றி இரண்டு வரி - ஆங்கிலத்திலோ, தங்கிலீஷிலோ, யூனிகோட் தமிழிலோ//
சும்மால்லாம் ஸ்லோகன் எழுதச்சொன்னா எப்படி? பரிசு என்னன்னு சொல்லிட்டு, அப்புறம் இந்த போட்டியெல்லாம் வையுங்க...
நன்றி ரம்யா, ராமனாதன்.
ரம்யா - பிள்ளையார் ரொம்ப ஃப்ரெண்ட்லி கடவுள்தான். கண்டுக்க மாட்டார் கவலைப்படாதீங்க!
ராமநாதன் - நாங்க என்ன ஹமாம் சோப்பா விக்கிறோம்?
Post a Comment