நாங்களும் இந்த முறை கொலு வைத்திருக்கிறோம். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
கொலுவிற்கு முன்னேற்பாடாக ஊரிலிருந்து பொம்மையே கொண்டு வராத காரணத்தால், இங்கேயே கிடைத்த சைனா பொம்மைகளை வைத்து மூன்று படி ஒப்பேற்றி இருக்கிறோம்.
படி வாரி விவரங்கள்
முதல் படி - சாமிகளும் ஆசாமிகளும் - அம்மன் கலசம், நேயர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான வினாயகர், ஒட்டகம் மேய்த்த களைப்பாறும் பெடோ, நமது சின்னம் "வாத்து"க்கள்
இரண்டாம் படி - உலகம் பெரியது -கரடிகள், சைனப் பேரழகி, ஈஃபில் டவர், உலக உருண்டை
மூன்றாம் படி - வயிற்றுக்கும் சிறிது - பழங்களும் சில மிருகங்களும்..
இந்தப் படத்தில் அதிகப்படியாக உள்ள இரு பொம்மைகளின் விருப்பத்திற்காகவே கொலு!
பி கு சில நாட்களாகவே என் பதிவுக்கு வழக்கமான அளவிற்கு பின்னூட்டங்கள் வருவதில்லை. ப்ளாக்கர் பின்னூட்டத்தில் ஏதும் பிரச்சினை இருந்தால் உங்கள் கருத்துக்களை sudamini at gmail dot com க்கு எழுதவும்
Oct 8, 2005
எங்கள் வீட்டுக் கொலு
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
11 பின்னூட்டங்கள்:
மற்றெல்லா பொம்மைகளை விடவும் கடைசி படத்தில் நிற்கும் இரு பொம்மைகளும் கொள்ளை அழகு. (அம்மா ஜாடை போல) ...
suresh,
today i saw your kavithai..its simply great..but i could not see your story...
சுரேஷ்,
அந்த ரெண்டு பொம்மைகளோட பேரைச் சொல்லலியே(-:
கொலு நல்லா இருக்குன்னு சொல்லுங்க.
அடுத்தவருஷம் இன்னும் கலக்கலாஇருக்கப் போகுது.
பிள்ளைகளுக்கு ஆசிகள்.
நன்றி முகமூடி, முத்து மற்றும் துளசி அக்கா.
முகமூடி - நீங்க சொன்னதை (ஜாடை) ஒத்துகிடறதுதான் என் உடம்புக்கு நல்லது:-)
முத்து - மெயில் அனுப்பி இருக்கேன், படியுங்க.
துளசி அக்கா, ஆசிக்கு நன்றி. பெரியவள் பேரு தாமினி (மின்னல்), முதல் வகுப்பு.
இரண்டாவது ரோஷ்ணி (ஒளி மழை), ஸ்கூலுக்கு போகும் வயசு வராத ஒரே காரணத்தால அம்மாவை துவம்சம் செய்துகிட்டு இருக்கிறாள்.
சுரேஷ், என்ன உங்க கை வண்ணத்திலே உருவான play doh பொம்மைகளைக் காணோம்??
மூணாவது பிறந்தா பேர் ரெடியா? இடி!! :-))
இரண்டு குட்டி தேவதைகளுக்கும் வாழ்த்துக்கள்!
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள். ரம்யா மூன்றவது பிள்ளையாய் இருந்தால் வருண்...:)கொலுவும் அழகு. இங்கே பாட்டெல்லாம் கிடையாதா
ரம்யா, முதல் படியிலேயே பிரபல play-doh பிள்ளையார் இருக்கிறாரே.. கவனிக்கவில்லையா? மேலும் ஒரு நடராஜர் செய்தேன் - க்யூபிஸம் முறைப்படி ஆகிவிட்டது:-)
மூன்றாவதா? இரண்டே தாங்க முடியவில்லை:-)
தேன் துளி - பாடலாமே, இங்கேயிருந்தும் சுண்டல் ஈ-மெயில் செய்யப்படும்:-)
துளசி, ரம்யா, பத்மா! திருமதி. சுரேஷ் கொலுவுக்கு அழைத்தும், இன்னும் உடம்பில் மஞ்சள் நிறம் இருப்பதால் போக முடியவில்லை. சின்னது படா வாலு. போனில் பேசும் போது பின்னால் சைரன் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. போட்டோவில் பூனை மாதிரி நிற்கிறதைப் பார்க்க சிரிப்பாய் வருது. நேரில் பார்க்க வேண்டும்.
உஷா
உடம்பு குணமானதும் நீங்களே எங்க சார்பா போய் பாட்டு பாடி சுண்டல் வாங்கி வந்திடுங்க. கொலு முடிஞ்சா என்ன, ஒரு வார இறுதி போய் விசாரிச்சுட்டு வாங்க (rain check). என்ன சுரேஷ் சரிதானே
நன்றி உஷா, தேன் துளி (மறுபடியும்)
சின்னது நிச்சயமாக படா வாலுதான். உங்கள் கமெண்ட்டை என் மனைவியிடம் காண்பித்ததற்கு "உங்கள் வாயில் சர்க்கரை போட வேண்டும் " என்று முன்மொழிந்தாள்.
வாங்க, உடல் சரியான உடனே.
இந்த ப்ராக்ஸி வேலையெல்லாம் இங்கேயுமா தேன் துளி?
தமிழ்மணத்தின் பிரதிநிதிகளை முதல்படியில் வை(வா)த்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி! :)
கலக்கலா இருக்குங்க கொழு... குட்டீஸ்களுக்கு வாழ்த்துக்கள்!
Post a Comment