Oct 13, 2005

மழைக்காலம் 13 Oct 2005

கழுவப்பட்ட மரங்களில்
என் உலுக்கலுக்கான
செயற்கை மழை சேமிப்பு

முழுக்க நனைந்தபின்னே
நினைவு வரும் அம்மாவின் கண்டிப்பு

சேற்றின் ஊடே நான் மட்டும் அறிந்த விரைவுப்பாதை

தேங்கும் நீரின் அளவில்
விடுமுறை கணிக்கும் விஞ்ஞான நண்பன்

வீட்டுள் அடைக்கும்
மின் தடை பிறப்பிக்கும்
விநோத விளையாட்டுக்கள்

*****

நினைவெலாம் அழித்து
கார்மேகக் கூட்டத்தையும்
தூறலின் சுவட்டையும்
வியப்பாக்கிக் காட்டும்
பாலை வாழ்க்கை.

நுனிப்புல்லின்
இந்தப் பதிவு உருவாக்கிய நோஸ்டால்ஜியா!

5 பின்னூட்டங்கள்:

enRenRum-anbudan.BALA said...

Suresh,

Nice 'kavithai' that made me remember those 'good old' days !!!

பினாத்தல் சுரேஷ் said...

Thanks bala!

what happened to others? is there a POTA commenting to Penathal's posts which i am unaware?

ramachandranusha(உஷா) said...

"தேங்கும் நீரின் அளவில் விடுமுறை கணிக்கும் விஞ்ஞான நண்பன்" ஹ¥ம் அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன் நண்ண்ண்பனே!

சின்னவன் said...

தேங்கும் நீரின் அளவில்
விடுமுறை கணிக்கும் விஞ்ஞான நண்பன்


இன்னாபா டெக்னிக்கு இது ?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி உஷா, சின்னவன்.

சின்னவன் - அதுதான் விஞ்ஞான டெக்னிக்! வாய்க்காலில் கால் வைக்கலாம், கால்வாயில் வாய் வைக்கலாமா? இதெல்லாம் அனுபவிக்கணும் - ஆராயக் கூடாது!

 

blogger templates | Make Money Online