தீபாவளி- 1978
என்னப்பா பத்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்கே? கோபி வீட்டிலே நூறு ரூபாய்க்கு வாங்கி இருக்காங்களாம் தெரியுமா?ஒரு பாக்கெட் கூட ராக்கெட், ட்ரெயின் இல்லையே - எல்லாம் நமுத்துப்போன ஒத்த வெடியா இருக்கு?
அய்யோ தூறல் போடுது - காய வெச்ச பட்டாசெல்லாம் நனைஞ்சிடும் - ஒடு..
அவன் தான்மா நான் பாக்காத நேரத்திலே லக்ஷ்மி வெடி வெச்சுட்டான். புதுச்சட்டை வீணாப்போச்சு, விரலை மடக்கவே முடியலை அம்மாஆஆஆஅ!
தீபாவளி - 1986
ஏன்டா தீபாவளியும் அதுவுமா தியேட்டர் வாசல்லே தேவுடு காக்கறீங்க?
அதுசரி - நாளைக்குப் பார்த்தா உனக்கும் எனக்கும் (ரசிகனுக்கும்) என்ன வித்தியாசம்?
பட்டாசு வெடிக்கலையா?
அதெல்லாம் கார்த்திகை தீபத்துக்கு பார்த்துக்கலாம். தலைவர் படம் பேரெல்லாம் சேர்த்து ஒரு கவிதை(?!) எழுதித் தரச் சொன்னேனே - செஞ்சியா?
தீபாவளி - 1994
இங்க பாரு -When I say no, it is NO! சைட்லே இருக்கறதே நீ ஒரு ஆளு. உனக்கு 10 நாள் லீவு எல்லாம் கொடுக்க முடியாது.
நான் தீபாவளிக்கா சார் லீவு கேக்கறேன்? என் பாட்டி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க சார். அவங்களுக்கு என் மேலே உயிர்! நான் போகலேன்ன ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க சார்.
கஸ்டமர் கிட்டே எல்லாம் சொல்லிட்டேன் சார். எல்லா மெஷினும் இப்போ கண்டிஷன்லேதான் இருக்கு. எதாவது ப்ராப்ளம் ஆனாலும், மேட்டரை பெரிசா ஆக்க மாட்டாங்க சார். ப்ளீஈஈஈஈஈஸ் சார்!
தீபாவளி - 1999
ஏண்டி ஒரு மனுஷன் எவ்வளவுதான் ஸ்வீட் சாப்புடுவான்? ஒரு சோதனைச் சுண்டெலி மாட்டினா போதுமே? ஊர்லே எல்லார்கிட்டே இருந்து வந்த பட்சணத்தை எல்லாம் டெஸ்ட் பண்ணிடுவீங்களே!
இதப்பாரு, நான் சரம் மட்டும்தான் வெடிப்பேன் - இந்த புஸ்வாணம், சக்கரம் எல்லாம் லேடீஸ் மேட்டர்.
நிச்சயமா முடியாது. தீபாவளி அன்னிக்கு சினிமா போறதில்லைன்னு ஒரு பிரின்சிப்பிள்ளே வச்சிருக்கேன். அடுத்த வாரம் ட்ரை பன்னறேன் - உறுதியா சொல்ல முடியாது.
தீபாவளி - 2005
சரியாப்போச்சு போ! தீபாவளி அன்னிக்கு எனக்கு க்ளாஸ் இருக்கு. புது ட்ரெஸ் எல்லாம் போட முடியாது. யூனிஃபார்ம் நிச்சயம் போட்டே ஆகணும்.
பட்டாசா? எந்த ஊர்லே இருக்கே தெரியுமா? ஜெயில்லதான் தீபாவளி கொண்டாடறதுன்னு முடிவு பண்ணிட்டயா? நீயும் பொங்கல் ரிலீஸ்தான் ஞாபகம் வெச்சுக்க!
சாஸ்திரத்துக்கு ஒரு ஸ்வீட் பண்ணு போதும். சுகர் எற்கனவே கச்சா முச்சான்னு இருக்கு!
Oct 27, 2005
என் பரிணாம வளர்ச்சியில் தீபாவளி
Subscribe to:
Post Comments (Atom)
23 பின்னூட்டங்கள்:
சூப்பர் பினாத்தல் :)) சுரேஷ்!
கலக்கல் பதிவு சுரேஷ்,
சமீபத்துல கட்சியிலேர்ந்து வெளிநடப்பு செஞ்சு பாயசமெல்லாம் கொடுத்துட்டு இப்ப என்ன, திடீர்னு சுகர், வியாசர்னு பயம் காட்டறீங்க?
:-)
:-)
என்ன சுரேஷ் சுகர் பேஷண்ட் யாரோ "-" குத்தறாங்க போல.....
நான் இன்னும் பட்டாசு தான் வெடிச்சிட்டிருக்கேன் :-)
பாசிடிவ் ராமருக்கும், அழிச்சு எழுதிய ரஷ்ய அறிஞருக்கும், ரெண்டு முறை சிரிச்ச ரம்யாவுக்கும், சுகரைக் குத்திக்காட்டிச் சிரிச்ச கணேஷுக்கும் ஓஓஓஓ!
மரத்தடி பத்தி சொல்ல ஒண்ணுமில்லை!
:) Nice
ரசித்தேன். எனக்கு தெரிந்த பெரும்பாலோரின் நிலை (except sugar, no fat )இதுவே என்று நினைக்கிறேன்.
நல்ல நடையில் சொல்லிருக்கீங்க. நல்லாருக்கு
Thanks Sudharsan, thEn thuLi and siva purANam.
பினாத்திக்கிட்டே இருந்ததுலே உண்மை வெளியே வந்துருச்சு :-)))))
நன்றி துளசி அக்கா. ஆமாம், என்ன உண்மை வெளியே வந்தது?
உண்மைதானே நான் சொல்கிறேன், நான் சொல்கிறேன்.
சுரேஷ், படிக்கிறார் படிக்கிறார் படித்துக் கொண்டே இருக்கிறார். பாருங்க ஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டுக்கிட்டுப் போகிறார். ஆனால் கல்யாணம் ஆகி பிள்ளை குட்டிகள் உண்டு ?????????
//சரியாப்போச்சு போ! தீபாவளி அன்னிக்கு எனக்கு க்ளாஸ் இருக்கு. புது ட்ரெஸ் எல்லாம் போட முடியாது. யூனிஃபார்ம் நிச்சயம் போட்டே ஆகணும்.//
என்ன உண்மையா?
சுகருக்கும் கொழுப்புக்கும் பயந்து வாழறது.
அப்புறம் காலப் போக்கிலே குழந்தைஉள்ளம் போய் நாமும் ஒரு இயந்திரமா மாறிடறது(-:
அந்த uniform பற்றி மட்டும் கொஞ்சம் சொல்லுங்களேன். யாசர் அராஃப்த் தலையில ஒருhead dress இருக்குமே அது மாதிரி ஏதும் உண்டா?
உஷா - எப்படி இப்படி கரெக்டா வீக் பாயிண்ட்ட புடிக்கறீங்க! இந்த பாழாப்போன எட்டங்கிளாஸ் பாஸ் பண்ணித் தொலைச்சா ஒரு ESLC கிராஜுவேட்டுன்னு சொல்லிக்கலாம்னு பாத்தா:-((
துளசி அக்கா - எனக்கும் அதுதான் தோணிச்சு. பட்டாசு மேல, புதுத்துணி மேல உள்ள ஆர்வம் எல்லாம் காணாம போறதை விட, குழந்தைத்தனம் காணாம போறதுதான் பெரும் இழப்பு - இல்லையா?
நன்றாக இருந்தது பதிவு. வருடங்களின் ஊடே வளர்ச்சி தெரியும்படி எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது. தேன் துளி சொல்வது போல் பெரும்பாலோருக்கு இது இப்படித்தான் ஆகிவிடுகிறது.
தருமி சார், மன்னிச்சுக்கோங்க.. ப்ளாக்கர் என் ஒரு பின்னூட்டத்தை ஏற்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, அதையே நானும் மூன்று முறை போட, இடைப்பட்ட நேரத்தில் உங்கள் கமெண்ட்டை கவனியாமல் விட்டுவிட்டேன்.
ஹெட் ட்ரெஸ்ஸா? சரியாப்போச்சு போங்க.. நேத்துத்தான் குண்டக்க மண்டக்க படத்தில் அந்த ஹெட் ட்ர்ஸ்ஸுக்கு பார்த்திபன் அடித்த கமெண்ட்டை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன் (ஊறுகாய் ஜாடியை கட்டி வச்சாப்புல என்ன இது தலையிலே) - நல்லவேளை என் யூனிபார்ம் சாதாரண ட்ரெஸ்தான்:-)
நன்றி ராம்கி.
ஆகா! நாலு தீபாவளியிலேயே ஒங்க வாழ்க்கைல இது வரைக்கும் நடந்தத புட்டுப் புட்டு வச்சிட்டீங்களே. அது சரி. அந்த யூனிபார்மப் பத்தி வெளக்கமா வெளக்குங்களேன்.
// பாயசமெல்லாம் கொடுத்துட்டு இப்ப என்ன, திடீர்னு சுகர், வியாசர்னு பயம் காட்டறீங்க? //
இராமநாதன்...கலக்கல்.
Post a Comment