வரிசைக்காய் காத்திருந்து
காலைக்கடன் கழித்து
சைக்கிள் சங்கிலியின்
எண்ணெய்க்கு ஏங்கும்
நாதம் கேட்டு
இரு இஞ்ச் இடைவெளியில்
உள்ளே புகுத்தி
என்னொத்தோர்
உடனுழைக்க
மின்வண்டியில் புகுந்து
ஒரு புள்ளி காலுக்கு,
ஒரு புள்ளி கம்பியில்
தொங்கும் வாருக்கு ஈந்து
பயணச் சர்ச்சையில்
உலகம் அறிந்து
நிறுத்தம் வந்ததும்
சுவாசத்தைத் தொடர்ந்து
எனக்கான கோப்புகளில்
உலகம் மறந்து
மதியப்பசியில்
அவசர ரொட்டி உண்டு
கடிகாரம் பார்த்திருந்து
மீண்டும் ரயிலேறும்
என்னைக்கொல்வதா
உந்தன் வீரம்?
13 பின்னூட்டங்கள்:
:-(
மனதை தைக்கும் வரிகள்.
நிறுத்தனும்... எல்லாத்தையும் நிறுத்தனும்...
எப்ப? எப்படி?
தெரியலையேப்பா...
இப்படி வசதி இல்லாவிட்டாலும் "நிம்மதியாக" இந்தியனே நீ இருப்பது பிடிக்காததே!
இதில் வீரம் என்பதை விட " பொறாமை" அதிகம் சுரேஷ்.
உயிரை துறந்தவர்களுக்கு, ஆதாரம் இழந்தவர்க்கு அனுதாபங்கள்... கோபம் வருகிறது இயலாமையில் என்ன செய்ய..
இதைப் படித்ததுமே சுத்தமாக யோசிக்கவே முடியவில்லை... ரொம்பவும் வலிக்கிறது.... என்னவென்று பின்னூட்டம் இடுவது?
touching suresh
உங்கள் கேள்விக்கு என் பதில்
வருகைக்கு நன்றி கோபி,ஹரிஹரன், லக்கிலுக், கேவிஆர் மற்றும் மணியன்.
உங்கள் கருத்துகளுக்கு வழக்கம்போல நன்றி சொல்லி மகிழ முடியவில்லை. இது போன்ற பதிவுகள் போடும் நிலை என்று ஒழியுமோ?
:(
Touching, i guess this is what a Kashmiri will be thinking about our Jawans too.
இடுப்பாட்டிச்சித்தர் - உங்கள் காஷ்மீர் கனெக்ஷன் புரியவில்லை, இங்கே தேவையும் இல்லை என் நினைக்கிறேன்.
Etho theriyama ezhutheeten, mannichunganna !
பரவாயில்லை விடுங்க hipshaker
இவர்களை கொல்வதா வீரம்?
இவர்களை கொன்றவர்களை கொல்வது வீரம்.
வருகைக்கு நன்றி பா கணேசன்.
Post a Comment