Jul 20, 2006

பயோரியா பல்பொடியும் தமிழின் எதிர்காலமும்(20 Jul 06)

சிதம்பரம் சர்ச்சை, பிளாக்ஸ்பாட் தடை, 23ம் புலிகேசி போன்ற பெருஞ்சுழல்களுக்குள் ஒரு சின்னக்குழந்தை தவழ்ந்து வருவது யாருக்கும் தெரியவில்லையா?

ஆம், 2006 ஆம் வருடத்தின் ஜூலை மாதம் 20 தேதிகளைக் கடந்துவிட்டது.

ஆச்சரியம் ஆனால் உண்மை!

நாளைக்காலை.. ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..

எதிர்பார்த்திருப்பீர்களா என்று தெரியாது.

குறைந்தபட்சம் 76 பேரின் எதிர்காலம் நாளை முதல் நிச்சயிக்கப்படும் என்பதை பலர் மறந்திருக்கலாம்; பினாத்தலாரும் மறக்க முடியுமா?

ஆம் தோழர்களே.. நாளைக்காலை ஜூலை 21 தேதி ஆகிவிடும்.

தேன்கூடு - தமிழோவியம் போட்டியின் வாக்கெடுப்பு நாளை ஆரம்பிக்கிறது. (இதுக்குதான் இவ்ளோ பில்ட்-அப்பா?)

போனமுறை மூன்றாவது கண் போட்டிக்கு வந்த படைப்புகளை அழகாக விமர்சித்திருந்தார்கள். இந்த முறை ஜகா வாங்கிவிட்டார்கள்.

எனக்கு நேரமும் பொறுமையும் (வெட்டிதானே!) இருந்ததாலும், 36 படைப்புகள் மட்டும்தான் என்பதாலும் அறிமுகம் கொடுக்க முடிந்தது.

இளவஞ்சிக்கு நிச்சயம் கஷ்டமாகத்தான் இருக்கும் - தற்போதுவரை 76 படைப்புக்கள்! இன்னும் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, என் படைப்புகளுக்கு மட்டும் நானே அறிமுகம் கொடுக்க முடிவெடுத்துவிட்டேன். இதர படைப்பாளிகளும் இதைத் தொடரலாம்.

14. சீட்டு மாளிகை - நண்பன் மரணச்செய்தி கிடைத்தும் அதை வேறெங்கும் அறிவிக்க முடியாதவனின் மன ஓட்டம்.

42. அசைவு - என் முதல் சரித்திரக்கதை. மெழுகு பொம்மைகளில் பிரபலமான மேடம் துஸ்ஸாட் (தூஸே என்பதுதான் உச்சரிப்பாம்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில ரத்தப்பக்கங்கள்.

படித்துப்பார்த்து ஓட்டளிக்க மறவாதீர்கள். (லிங்க் தவறாக இருந்தால், பின்னர் சரி செய்துவிடுகிறேன்)

பிகு 14 -31 தான் பயோரியா பல்பொடி.. நமக்கு ரொம்பக்கிட்ட 14-42 வந்துட்டதாலே அதைப்போட்டேன். இங்கே எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆரம்ப எழுத்தாளர்கள்தானே, அவர்களை ஊக்குவித்தால் தமிழின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமில்லையா? (டேய் பினாத்தல் - கைக்கு வந்ததை எழுதிட்டு அதை நியாயம் வேறு படுத்தறயா?)

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஹி, ஹி இம்முறை வாக்களர்களைவிட படைப்புகள் அதிகமுங்கோ, அதனால என்னத்த செய்வது என்று முழித்துக்கொண்டு இருக்கிறேன்.

Anonymous said...

ஜூன் 21? ஜூலை 21??

இலவசக்கொத்தனார் said...

நாங்க எல்லாம் பேஸ்ட்தான் உபயோகப்படுத்தறோம். பயோரியா பல்பொடியின் எதிர்காலம் என்னன்னு ஒரு பதிவு போடுங்க.

துளசி கோபால் said...

பினாத்தலாரே,

மயக்கம் கூடிருச்சா? அதென்ன ஜூன் ஜூன்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க.
கண்ணைத்திறந்து பாரும். இப்ப நடக்கறது ஜூலை.

Anonymous said...

Is it june or july in your post ? jUST THE TYPO HERE..20 ஜூலை 2006
பயோரியா பல்பொடியும் தமிழின் எதிர்காலமும்(20 Jun 06)
சிதம்பரம் சர்ச்சை, பிளாக்ஸ்பாட் தடை, 23ம் புலிகேசி போன்ற பெருஞ்சுழல்களுக்குள் ஒரு சின்னக்குழந்தை தவழ்ந்து வருவது யாருக்கும் தெரியவில்லையா?

ஆம், 2006 ஆம் வருடத்தின் ஜூன் மாதம் 20 தேதிகளைக் கடந்துவிட்டது.

பினாத்தல் சுரேஷ் said...

எழுத்துப்பிழைய விட்டுத்தள்ளுங்க.. (சரி பண்ணிட்டேன்)

போயி உடனடியா ஓட்டுப்போடுட்டு வாங்க எல்லாரும்.

அனானி1 சொல்றதென்னவோ சரிதான்:-(

பயோரியா பல்பொடியின் எதிர்காலம் - ஒரு புதிர்காலம் கொத்தனாரே! ஒரு திறனாய்வு செய்துவிடலாம். ஆனால் வேறு வேலைகள் இருப்பதால் ஒத்திப்போடலாம்!

துளசி அக்கா, கண்ணில விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தப்புக் கண்டுபிடித்தீர்களே.. கதைகளைப் படித்தீர்களா? கருத்தே சொல்லவில்லையே..

manasu said...

இதுல நீங்க இரண்டு படைப்பு வேற... கொத்ஸ் சொன்ன மாதிரி பயோரியா பல்பொடி பதிவு போடும் போது இந்தியா,இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கோபல் (துளசியக்கா கூட எழுதலாமே)பல்பொடி பத்தியும் எழுதுங்க..

பினாத்தல் சுரேஷ் said...

manasu,

நன்றி. கோபால் பல்பொடியப் பத்தி எழுதினா துளசி அக்க கோவிச்சுக்க மாட்டாங்க?:-)

 

blogger templates | Make Money Online