பாபாவின் இந்தப்பதிவும் , விக்னேஷின் இந்தப்பதிவும், பி கே சிவகுமாரின் இந்தப்பதிவும், ஆறு வார்த்தைக் கதைகளை அறிமுகப்படுத்தி, பின்னூட்டங்களாக பல ஆறு வார்த்தைக் கதைகளும் இருப்பதைப் படித்திருப்பீர்கள்.
வார்த்தைச் சிக்கனத்தில் ஆசை கொண்டவன் நான். (ஆசைன்னுதான் சொன்னேன் - செய்வேன்னு சொன்னேனா?); இந்த புது விதி என்னைக்கவர்ந்தது.
புதிதாக ஆறுவார்த்தைக் கதை எழுதுவதை விட, என்னுடைய பழைய, புதிய சிறுகதைகளில் சிலவற்றை ஆறு வார்த்தைகளுக்குள் சுருக்க முடியுமா என முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்.
என் முதல் சிறுகதை : கடன்வாங்கிக் கல்யாணம், வட்டிகட்ட அருளுவேன், வாருங்கள் திருப்பதி
இரு சம்பவங்கள்: தொழிலில் அடிபட்டால் உயிர்கொடுப்பேன், மதமென்று சண்டைவந்தால் உயிரெடுப்பேன்
திறமைக்குப் பல முகம்: கடற்கரைக் காலையில் ஆயிரம் திறமைகள் - சுனாமிக்குத் தெரியுமா?
மகளிர் தினச் சிறப்புச் சிறுகதை: பெண்ணிடம் தோற்றால் ஜெயிப்பது சுலபம் - பரப்பிடு வதந்தி.
தேர்தல் 2060: கணினி யுகத்திலும் தேர்ந்தெடுக்கக் குழப்பம் - எடுத்தான் நாணயத்தை
சீட்டு மாளிகை: விபத்தின் கவலை இருப்பவன் படுவான் - இறந்தவன் இருந்தால்?
அசைவு: மாளிகை வாழ்வு ராஜபோகம் - ஆட்சிமாறினால் அடிமையாகவும் வாய்ப்பு.
எப்படி இருக்கு?
Jul 22, 2006
ஆறு வார்த்தையில் கதைகள் - என் முயற்சி (22 Jul 2006)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை புனைவு
Subscribe to:
Post Comments (Atom)
24 பின்னூட்டங்கள்:
//எப்படி இருக்கு? //
வழக்கம்போலதான்.
என்னய்யா சொல்ல வறீங்க..
நீங்க கொஞ்சம் நல்ல மாதிரி கமெண்ட் எழுதிகிட்டிருந்தீங்களே! வழக்கம்போல மோசமா? வழக்கம்போல சூப்பரா? க்ளியர் செய்யுங்கப்பா.. எனக்குத் தெரியும், மக்களுக்குத் தெரிய வேணாமா?
கதையெல்லாம் ஆறு வார்த்தையில்
சிலது மட்டும் ஊனமாய்.
Therthal 2060 pidithu irunthathu.
- PK Sivakumar
இலவசம், எனக்கே தெரிஞ்சுது, சில கதைகள்ல ஆறுக்காக சுறுக்கி விரித்ததிலே வார்த்தைகள் ஊனமானது. இப்படி விமர்சனம் இல்லாட்டி எப்படித்தான் ஒரு எழுத்தாளன் வளருவான்? (பத்துப்பதிவு போட்டுட்டா மட்டும் போதுமா?)
பி கே எஸ், என் பதிவுக்கு உங்கள் முதல் பின்னூட்டம் (வருகையுமா என்று தெரியவில்லை!). நன்றி.
என் சார்பா 6 வார்த்தை கதை ஒன்னு...
எப்படி இருக்கு? வழக்கம்போலதான். என்னய்யா சொல்ல வறீங்க..?
:)))
உங்க கதைகளை எடுத்துக்காம, வேற மாதிரி யோசிச்சிருந்தீங்கன்னா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்! :) மத்தபடி முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
//எப்படி இருக்கு? வழக்கம்போலதான். என்னய்யா சொல்ல வறீங்க..?//
இளவஞ்சி--இது கதையல்ல நிஜம்:-))
என் கதைகளையே எடுத்துகிட்டதுக்கு வார்த்தை சிக்கனம்ன்ற ஒரு காரணமும், புதுசா யோசிச்சா, எல்லாமே ஹைக்கூ மாதிரியே வருதுன்றதும் காரணம்.. (ஹைக்கூவா அது? பொய்க்கூ)
அப்பாலே, நான் உங்க பதிவுலே பின்னூட்டம் விட்டுட்ட் திரும்பரேன், இங்கே நீங்க! ஒரே நேரத்துலே ரெண்டு பேரும் டைப்படிச்சுகிட்டிருந்திருக்கோம்!
// ஒரே நேரத்துலே ரெண்டு பேரும் டைப்படிச்சுகிட்டிருந்திருக்கோம்! //
அதான் பாருங்களேன்! :)
நான் சொல்ல வந்ததை தெளிவாச் சொல்லலைன்னு ஒரு எண்ணம்!
உங்க கதைகளையெல்லாம் ஏற்கனவே படிச்சிருக்கறதால இப்ப 6 வார்த்தைகளா படிக்கும்போது "எப்படி சுருக்கியிருக்கீங்க?"ன்னுதான் புத்தி போகுதே தவிர புதிய கதைன்னு அனுபவிக்க முடியலை! மற்றவர்களுடையதை படித்தபோது கிடைத்த புதிதாக ஒன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வு கிடைக்கவில்லை!
அதைத்தாங்க சொல்ல வந்தேன்! :)
சுரேஷ்,
உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். பெரும்பாலும் இப்போதெல்லாம் படிப்பதோடு சரி. ஒரு காரணம், போலி பிரச்சினை. இன்னொரு காரணம். என் நண்பர்கள் என்னிடம் நகைச்சுவையாகச் சொல்வார்கள். நான் பின்னூட்டமிட்டால் அந்தப் பதிவில் பின்னூட்டம் குறைந்துவிடுமாம். :-) உங்களுக்கும் இது தேவையா?
:-)
பிற்சேர்க்கையாக இன்னும் இரண்டு கதைகள் போட்டிருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்லவும்.
அன்புடன், பி.கே. சிவகுமார்
//எப்படி சுருக்கியிருக்கீங்க?"ன்னுதான் புத்தி போகுதே தவிர //
அதானே.. கொஞ்சம் உத்துப்பாத்தா, என் கதைகளுக்கு டேக் லைன் மாதிரிதான் இருக்கு:-((
சரி, எல்லா நேரமும் எல்லாம் நல்லா அமைஞ்சுட்டா, அடங்குடா மவனே தூங்கப்போயிடுவான்:-))
நான் எழுதிய புத்தம் புதிய ஆறு வார்த்தை சிறுகதை இது.. எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க ::
அனுபவச் சிதறல்னுதான் சொல்லணும்.. அடங்குடா மவனேன்னுதே மனசு...
நன்றி பி கே எஸ்.
//நான் பின்னூட்டமிட்டால் அந்தப் பதிவில் பின்னூட்டம் குறைந்துவிடுமாம். :-) // ஆஹா, இது ஐதீகமா, Statistically Proven-ஆ அல்லது வெற்று மூட நம்பிக்கையா?
முகமூடி வாங்க!
என்ன எல்லாரும் என்னையே ரவுண்டு கட்டி அடிக்கறீங்க!
சரி உங்க கதைக்கு எசப்பாட்டு படிச்சுடறேன்..
மனசு சொல்லும் ஆயிரம்.. மூளை சொல்லும் அடங்கமட்டும்!
சுரேஷ்: ஆஹா, இது ஐதீகமா, Statistically Proven-ஆ அல்லது வெற்று மூட நம்பிக்கையா?
என்னவென்று உங்கள் பதிவில் சோதித்து அறிந்துவிடலாமா! :-)
அன்புடன், பி.கே. சிவகுமார்
பி கே எஸ்.. அதனால எல்லாம் பெரிய மாறுதல் பினாத்தல்களுக்கு ஏற்பட்டுவிடாது.. எனக்கு சராசரியா 10 - 20 கமெண்டுதான் தான் வரும்.
இன்னும் ஒருத்தர் இருக்கார் - அவருக்கு குறைந்தபட்சமே 150 கமெண்ட்டுதான்.. அங்கே போயி பரீட்சார்த்தம் செஞ்சு பார்க்கலாமா?
// என்ன எல்லாரும் என்னையே ரவுண்டு கட்டி அடிக்கறீங்க!
எல்லோரும் ரவுண்டு கட்டி அடித்துவிட்டதால் No Comments ;)-
விக்னேஷ்..
இது சரியில்ல! மத்தவங்க சொல்லிட்டாங்கன்னு நீங்க சொல்லாமப் போறதும் நியாயமா!
ஐய்யா பெனாத்தலாரே!
ஆறு வார்த்தைக் கத எழுதச் சொன்னா அதிக்கு நாலு வார்த்தை தலைப்பு வைச்ச மொதோ ஆளு நீங்கதான்பா... :-)
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
பின்னூட்டப்பெட்டி ஈயடித்தது; பிகேஎஸ் பின்னூட்டம் சப்தமின்றி சிரித்தது.
இதுக்கு பொருத்தமா ஆறு வார்த்தைகள்ல நீங்களே ஒரு தலைப்பு வைச்சுக்குங்க...
:-)
அய்யா குசும்பய்யா!
என்ன வாராதவங்க எல்லாம் வந்திருக்கீங்க!
தலைப்புதானே, வெச்சுட்டா போச்சி..
குசும்பனும் பின்னூட்ட உள்குத்து விளையாட்டுகளும், பாவம் பினாத்தலும் -னு உம்ம்மா உம்மம்மான்னு சொல்லிடலாமா?;-))
என்னய்யா சொல்ல வறீங்க..
//நீங்க கொஞ்சம் நல்ல மாதிரி கமெண்ட் எழுதிகிட்டிருந்தீங்களே! வழக்கம்போல மோசமா? வழக்கம்போல சூப்பரா? க்ளியர் செய்யுங்கப்பா.. எனக்குத் தெரியும், மக்களுக்குத் தெரிய வேணாமா? //
என்னங்க உங்க மேல உங்களுக்கே டவுட்டா?. வழக்கம்போலவே உங்க முத்திரைய பதிச்சிட்டிங்கனு தான் சொல்றேன்.
//வார்த்தைச் சிக்கனத்தில் ஆசை கொண்டவன் நான்//
அதனாலதான் ஒரே வார்த்தைல பின்னூட்டம் போட்டேன்.
உங்க பதிவு எப்பவுமே சூப்பர்தாங்க.
அன்புடன்
தம்பி
சுரேஷ்,
Nice try !
Looks good, as I have read the stories you are referring :)
நன்றி தம்பி.. க்ளியர் பண்ணிட்டீங்க, தேங்க்ஸ்!
பாலா, நன்றி, இன்னும் உங்க போன் னம்பர் மெயில் வரவே இல்லையே:-(
சுரேஷ்,
இவற்றில் கொஞ்சம் கவிதைதனம் கலந்து விட்டதால், கதை என்று நினைக்க முடியவில்லை.
நன்றி யோசிப்பவர். ஆமாம். கொஞ்சம் போலித்தனம் தெரிகிறதுதான் - எனக்கே :-)
Post a Comment