Jul 18, 2006

ப்ளாக்ஸ்பாட் தடை - தாண்டுவது எப்படி? அனுபவஸ்தனின் Tips

ஒண்ணும் பெரிய பிரச்சினையில்லை, நான் ரொம்ப நாளாவே இந்தப்பிரச்சினையில அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதுனால எல்லாம் பதிவுதான் போடாம விட்டுட்டேனா, இல்லை உங்களை கஷ்டப்படுத்தாமதான் சும்மா இருக்கேனா?

பதிவுகளைப் படிக்க:

1.எனக்கு இந்தப் பிரச்சினை ஆரம்பிச்ச உடனே நான் முதல்லெ பார்க்க ஆரம்பித்தது, தமிழ்மணம் PDF சேவையைத்தான். இடுகைகள் பிரிவுக்குப் போய், சென்ற நாட்கள் என்று தெரிவுசெய்து, தேவையான பதிவுகளைப் பிடித்து, மென் நூலாக்குக என்று கட்டளையிட்டால் PDF கோப்பு கிடைக்கும்.

இதில ரெண்டு பிரச்சினை - பின்னூட்டங்கள் PDFஇல் வராது. (பெரும்பாலான பதிவுகளை விட, பின்னூட்டம்தானே சுவாரஸ்யம்!), ரெண்டாவது, பல பதிவுகளில் PDF Creation Not enabled னு வரும். அவர்கள் அடைப்பலகையை மாற்ற மாட்டேன்னு ஒரே அடம்!

2. அடுத்து எனக்கு பேருதவியாக இருப்பது தேன்கூட்டின் டைனமிக் பாண்ட் சேவை. ஒவ்வொரு இடுகைக்கு பக்கத்திலேயும் A+ என்று ஒரு Zoom படத்துடன் ஒரு குறியீடு தெரியும். அதைக்கிளிக்கினால் எல்லாப் பதிவுகளையும், பின்னூட்டங்களோடு பார்த்துவிடலாம். அருமையான சேவை, பெரும்பாலான தமிழ்ப்பதிவுகள் தேன்கூட்டில் திரட்டப்படுவதால் எல்லாவற்றையும் படித்துவிட முடிகிறது.

3. அன்னியலோகம் அளிக்கும் freedom காலத்தின் தேவைக்காக உடனடியாகச் செய்த சேவை. சில பதிவுகள் தெரிவதில்லை என்பது குறைதான் என்றாலும், ரமணி அதையும் சரி செய்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுலேயும் பின்னூட்டம் தெரியறதில்லை:-(

4. Google Translate பக்கத்தை Favoutites-இல் சேமித்துக்கொள்ளுங்கள், அங்கே german to English என்று Translate செய்தால், தமிழ் தமிழாகவே தெரிகிறது. ஆனால், formatting ஒரு கடி. நீளமான வாக்கியங்களை எலிக்குட்டியால் தொடர்ந்து ஓடுவதற்குள் மூச்சிறத்துவிடுகிறது. இளவஞ்சி எதாவது பதிவு போட்டால் ஒரு வரி ஐந்து ஸ்க்ரோல் (Horizontal) வரும்:-))

எனவே படிப்பதில் பிரச்சினை கிடையாது.

பதிவுகளை இட:

ஒரே வழிதான். உங்கள் பிளாக்கர் செட்டிங்கில் மெயில் என்ற தெரிவில், உங்கள் யூஸர்னேமுடன், ஒரு குறியீட்டைச் சேர்த்து ஒரு மெயில் ID உருவாக்கலாம்.(உதாரணம்: penathal.suresh@blogger.com ) எந்த மெயில் சேவை மூலமும், அந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் பதிவாகிவிடும். கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. மெயில் ஐடி உருவாக்கும் இடத்தில் Publish என்ரு ஒரு Check Box இருக்கும். அது செக் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அனுப்பும் பதிவு Drafts-இல் போய் அமர்ந்துகொள்ளும்.
2. FW, Re போன்ற பதங்கள் உங்கள் Subject Line-ல் இருந்தாலும் பதிவாகாது.
3.படங்கள், பிளாஷ் போன்றவை இட முடியாது.

பின்னூட்டமிட:

Blogger.com தடை செய்யபடாவிட்டால், பின்னூட்டத்தின் லின்க்கை தேன்கூடு / Translate சேவை மூலம் பெற்று, அதை தனி ஜன்னலில் திறந்து செய்யலாம். இந்த லின்க், தமிழ்மணத்தில் இன்றிலிருந்து வந்துள்ள புதிய 'அ' - அன்னியலோகம் லின்க்கிலும் கிடைக்கிறது, Blogger.com தடுக்கப்பட்டிருந்தால் வேறு வழியில்லை, மெயில் மூலம் அனுப்பலாம், நம்பகமான நண்பர்களுக்கு மட்டும்.

பின்னூட்ட மட்டுறுத்தல்

அன்னியலோகம் சேவையை Blogger.com தடை செய்யப்பட்டிருக்காவிடில் உப்யோகப்படுத்தலாம். Blogger.com தடுக்கப்பட்டிருந்தால் வேறு வழியில்லை. இதனால் நான் படும் பாடு கொஞ்சமா நஞ்சமா!

எல்லாமே கஷ்டமாக இருந்தால், படிக்காமல் விட்ட புத்தகங்களையும், குழந்தைகளின் வீட்டுப்பாடங்களையும் கவனிக்கலாம். வெளிநாட்டுத்தமிழர்கள் போடும் சண்டைகளை கொஞ்ச நாள் கழித்து, பிரச்சினைகள் தீர்ந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம்.

பி கு: நான் கூட தொழில்நுட்பப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை:-))

17 பின்னூட்டங்கள்:

Venkataramani said...

தேன்கூடு யோசனை அருமை. அப்புறம், அந்நியலோகம் கருவியிலும் இப்போது பின்னூட்டமிட லிங்க் உள்ளது என்று சேர்த்துவிடுகிறீர்களா? நன்றி.

முத்துகுமரன் said...

//பி கு: நான் கூட தொழில்நுட்பப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை:-))//

:-)) நானும்தான்

Venkataramani said...

சுரேஷ், என்ன பின்னூட்டங்கள் உங்களுக்கு கிடைக்குதா இல்லையா? என் கருவி இப்போது பத்ரி, மூக்கு சுந்தர் ஆகியோர் பதிவுகளுடனும் வேலை செய்கிறது.

KVR said...

இதை விட சுலுவான வழிகள் இருக்கு. எதுனா ஒரு ப்ராக்ஸி சாஃப்ட்வேர் உபயோகிக்கலாம். மல்டிப்ராக்ஸி நல்லா இருக்கும்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வெங்கடரமணி. பதிவில் இப்போதுதான் மாற்ற முடியும். மாற்றிவிடுகிறேன்.

நன்றி முத்துக்குமரன். உங்கள் கனவில் நீங்கள் என்னைப்பற்றி நினைத்தீர்களா என்ன?

நன்றி கேவிஆர். கொஞ்சம் பிராக்ஸி உபயோகப்படுத்தறத்ப்பத்தி டிப்ஸ் அள்ளி வுடறது..

முத்துகுமரன் said...

//நன்றி முத்துக்குமரன். உங்கள் கனவில் நீங்கள் என்னைப்பற்றி நினைத்தீர்களா என்ன?//

ஒன்னும் விளங்கிலியே சாமி :-)

பினாத்தல் சுரேஷ் said...

அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை முத்து.. நான் கனவிலும் நினைத்ததில்லைன்னு சொல்ல, நானும்தான்ன்னு சொன்னீங்களே, நான் எப்போ உங்க கனவுலே வந்தேன்னு கேட்டேன்:-))

முத்துகுமரன் said...

:-)))

இலவசக்கொத்தனார் said...

என்ன சொல்லறீரோ. ஒரு எழவும் புரியலை. நல்லா இருந்தா சரி.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

பிளாக்ஸ்பாட்டும் பிளாக்கரும் தடை செய்யப்பட்டு கஷ்டப்படறவனுக்கு மட்டும்தான் இது புரியும். புதரகம் தரும் சொகுசில் வாழும் ஏகாதிபத்தியவாதிகளின் சிறுமதியில் இவை ஏறா!

இலவசக்கொத்தனார் said...

எறாவா? அது தெரியுமே. இந்த எறா புட்டு சுறா புட்டு எல்லாம் சொல்லுவாங்களே! அதானே!

ஓ! ஏறாவா. சரி இருந்துட்டுப் போகட்டும் விடுங்க.

மனதின் ஓசை said...

//எல்லாமே கஷ்டமாக இருந்தால், படிக்காமல் விட்ட புத்தகங்களையும், குழந்தைகளின் வீட்டுப்பாடங்களையும் கவனிக்கலாம். வெளிநாட்டுத்தமிழர்கள் போடும் சண்டைகளை கொஞ்ச நாள் கழித்து, பிரச்சினைகள் தீர்ந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம்.//

:-)

Venkataramani said...

சுரேஷ், குமரன் எண்ணம் பதிவைப்பாருங்கள். proxylord வழியாக ப்ளாக்கரில் லாகின் செய்து அதன் வழியாகவே தமிழ்மணத்தையும் பார்க்க முயற்சி செய்யுங்கள்.

செந்தில் குமரன் said...

வெங்கட்ரமணி உங்ககிட்ட சொல்லச் சொன்னார்... சொல்லீட்டேன்...

ப்ளாக்கர் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு எளிய தீர்வு ப்ராக்ஸி வலைப் பதித்தல். கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத் தள முகவரிக்கு சென்று இங்குள்ள பெட்டியில் URL இட்டால் நீங்கள் எந்த வலைப் பதிவை வேண்டுமானாலும் பார்க்கலாம் அது தடை செய்யப் பட்டிருந்தாலும். வேலை செய்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள். நான் இந்த வலைப் பதிவை பதித்ததே இப்படித்தான்.

http://www.proxylord.com

Venkataramani said...
குமரன், இது blogger.comஐயே பார்க்க முடியாதவர்களுக்கு நல்ல தீர்வு. proxylord வேகமாகவும் இருக்கிறது. பெனாத்தல் சுரேஷூக்கு தெரிவியுங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மனதின் ஓசை.

நன்றி ரமணி & குமரன் எண்ணம். என் கம்பெனி கம்ப்யூட்டர் டிப்பர்ட்மெண்ட் ஆளுங்க ரொம்பத் துடி. அதையும் சேர்த்தே ப்ளாக்கிட்டாங்க:-(

ஆனா, படிக்கறதுக்கு pkblogs ரொம்ப யூஸ்புல்லா இருக்கு. இப்போதைக்கு இதே போதும். உங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி.

கோபி(Gopi) said...

இன்னும் பல வழிகள் உள்ளன.

பார்க்க:
http://labnol.blogspot.com/2005/12/how-to-access-blocked-websites.html
http://labnol.blogspot.com/2006/07/bypass-internet-censorship-how-to.html

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி. ஆனால், நீங்கள் கொடுத்திருப்பதே Blogspot Address ஆக இருக்கிறதே:-))

இப்போது pkblogs, anniyalogamனு பல புதிய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அப்படியே யாராவது எனக்கு blogger.comலே பின்னூட்டம் போடவும் வழி பண்ணீங்கன்னா என் சார்பா கோடிக்கணக்கான என் ரசிகர்கள் நன்றி சொல்வார்கள்:-))

 

blogger templates | Make Money Online