Jul 25, 2006

மீண்டும் அவியல் (25 Jul 2006)

தமிழ் வலைப்பதிவுகளின் குணம், தலைப்புச் செய்திகள், ஊடகங்களின்
முக்கியத்துவங்களை மறுதலிப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன். இப்போதும் நமக்கு லெபனானோ, 50 அடி கிணற்றில் விழுந்த சிறுவனோ,
தமிழக பட்ஜெட்டோ, இரட்டைப்பதவி மசோதாவோ முக்கியமான பேசுபொருளாய் இல்லை. சிதம்பரத்திலேயே நொண்டியடிக்கிறது வலைப்பதிவுகள்.

நான் இவை எதையுமே பற்றி எழுதவில்லை, விஷயங்கள் தெளிவாகத் தெரிய இன்னும் கொஞ்சம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உந்துவதால், செய்திகளைப்பற்றி பெரும்பாலும் எழுதுபவனும் இல்லை. இருந்தாலும்..

1. அலுவலகத்தில் புதியதாகச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வாயாடி என்ற பெயர் பெற்றவன். எந்தப்பிரச்சினையையும் சிரிப்போடும் எள்ளலோடும்
அணுகி கிண்டலாகவே பேசுபவன், நேற்று அமைதியாக இருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. விசாரித்தேன்.

"அடுத்த வாரம் ஊருக்கு வெகேஷனில் போகிறேன்"

"மகிழ்ச்சியான விஷயம்தானே, அதற்கு ஏன் சோகமாக இருக்கிறாய்?"

"ஊர்! நான் பார்த்து, பழகி, புழங்கிய இடங்கள் அனைத்தையும் கடந்த வாரம்
டிவியில் பார்த்துவிட்டேன். இப்போது எதுவும் இல்லை. என் வீடு இருக்கிறதா எனத் தெரியவில்லை! 12 நாள் குண்டுவீச்சில் 25 வருடங்கள்
பின்னோக்கிச் சென்றுவிட்டது என் நாடு" அழவே தொடங்கிவிட்டான் அந்த
லெபனான் பட்டதாரி.

யார் முதல், யார் பின்னால், எவன் தவறிழைத்தவன், எவன் வெறியன் என்ற கேள்விகளுக்கு அவன் அழுகைக்கு முன் எந்த அர்த்தமும் இல்லை. சம்மந்தப்பட்ட விஷயங்களைத் தேடி, படித்து, தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என் ஆவல் வெறும் Academic ஆகத்தான் இருக்கப்போகிறது. என்ன பிரயோஜனம்?

2. நம்பிக்கையை அளித்ததாம் 60 அடிக்கிணற்றுச் சிறுவன் மீட்பு. குண்டுவெடிப்பு, போர், அரசியலாரின் அக்கப்போர் ஆகிய நம்பிக்கை இழக்க வைக்கும் தினசரி நிகழ்வுகளுக்கிடையே, ஊடகத்துக்கு சமீபகாலத்தில்
கிடைத்த மனித ஆர்வக் கதை (Human Interest Story என்பதை இப்படி மொழி
பெயர்க்கலாமா?)- விடுவார்களா? கிணற்றுக்குள் கவரேஜ், பிரார்த்தனைகளுக்கான வழிமுறைகள், சுற்றி இருந்தவர்கள்
இல்லாதவர்களிடம் பேட்டிகள் என்று அமர்க்களப்படுத்தி
விட்டார்கள். நிகழ்வு முடிந்ததும் எனக்குத் தோன்றிய ஆறுதல் ராணுவம்
மற்றும் தீயணைப்பு வீரர்கள் பற்றியது! ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால்
கிழிகிழியெனக் கிழித்திருப்பார்கள். The press giveth and the press taketh away!

3. தமிழில் படத்துக்குப் பெயர் வைத்தால் வரிவிலக்காம். "மாமனாரின் இன்ப வெறி"க்கும் வரிவிலக்கு உண்டா?

4. இந்த இரட்டைப்பதவி விவகாரத்தில் காட்டுகின்ற ஒற்றுமையை நம் கட்சிகள் மற்ற விஷயங்களிலும் காட்டியிருந்தால்!

முக்கியத்தகவல்

எனக்கு ஒரு மாதம் விடுமுறை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தாய்த் தமிழ் நாட்டு மண்ணை மிதிக்கப்போகிறேன். வரவேற்பு வளையங்கள் எல்லாம் வேண்டாம். சென்னையில் இருந்து 1 ரூபாய் தொலைபேசியில் அழைக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் (காஷ்மீர் வரைக்கும் தானே?)
அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். தங்கள் தொடர்பு
எண்ணை sudamini AT gmail DOT com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால்
நிச்சயம் தொடர்பு கொள்வேன். முடிந்தால் நேரிலும் சந்திப்பேன்.

பினாத்தலுக்கு முழு விடுமுறை என்று சொல்லிவிட முடியாது. ஆயிரம் ப்ரௌஸிங் மையங்கள்! எல்லாவற்றிலும் கலப்பை இல்லாவிட்டாலும்
சுரதா உதவ முடிந்தவரை தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டேதான் இருப்பேன்!

25 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

நல்லா ஊர் சுத்திட்டு வாரும். இத சாக்கு வெச்சு நம்ம பதிவுக்கு வராம இருந்திறாதேயும்.

(இந்த தருணத்திலே நம் லேட்டஸ்ட் அட்லாஸ் பதிவில் உம்மைக் காணவில்லை என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.)

VSK said...

அருமையான பதிவு!
அந்த 3-ம் 4-ம்.....
..... பளார்!

╬அதி. அழகு╬ said...

ம்... இப்பவாவது மனசு வந்ததே!

ஒரு மாசம் நாங்க நிம்மதியா இருக்கலாம். ஆனா, அதுக்கும் பெனாத்தப் போகும் ப்ரவ்ஸிங் செண்டர்களில் ப்ளாக்ஸ்பாட் வேலை செய்யாமல் இருக்க வேண்டும்.

எங்க நிம்மதி எவ்வளவு காலம் நீடிக்குமோ தெரியலியே!

Hariharan # 03985177737685368452 said...

பினாத்தலாரே,

மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துக்கள். நானும் விடுமுறைக்கு சென்னைக்குச் செல்கிறேன் ஆகஸ்டில். சென்னையில்தான் இருப்பீர்களா?
harimakeshATgmailDOTcom எனது மின் முகவரி.

முத்துகுமரன் said...

மகிழ்ச்சியான செய்தி. நானும் அடுத்த மாதம் ஊருக்கு செல்கிறேன். முடிந்தால் சந்திப்போம். கை பேசியில் அழைக்கிறேன்

Anonymous said...

kavithai naallaairukku :-)

Boston Bala said...

bon voyage

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க இலவசம்! ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இருக்கணும்னு உங்களைத்தான் சொல்வாங்க போல இருக்கு!

(டிஸ்கி: ஆரிய என்ற பதம் பழமொழியிலிருந்து எடுத்தாளப்பட்டது, யாரையும் குறிப்பதில்லை!)

-L-L-D-a-s-u said...

-b-o-n- -v-o-y-a-g-e--

பினாத்தல் சுரேஷ் said...

Sk, நீங்க ஒருத்தராவது பதிவைப்பத்தி கமெண்டு சொன்னீங்களே. நன்றி!

அழகு, ரொம்பப் பெரிய மனசு சார் உங்களுக்கு.. உங்களைப் பழி வாங்கவே, ஒரு நாளைக்கு மூணு பதிவு போட அந்தக்கடவுள் அருளப்போறாரு பாருங்க!

நன்றி ஹரி, மெயில் அனுப்புகிறேன்.

நன்றி முத்துகுமரன். இன்னும் இரண்டு நாள் இருக்கிறேன். நானும் அழைக்க முயற்சிக்கிறேன்.

நன்றி பாபா!

அனானி, எதோ, முதல் முறையா ஹாட்மெயில் மூலமா மெயில் போஸ்ட் பண்ணேன், அது என்னவோ வரிகளைக் கடித்துக் குதறிவிட, கவிதையாகிவிட்டது:-)) இந்தக்கவிதையையும் ரசிக்கும் ரசிகமணியே, தங்கள் பெயரைச் சொல்லுங்களேன்!

நாகை சிவா said...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

LL Dasu, என்ன இதையும் எழுதி மேலே தார் அடிச்சிட்டீங்களா என்ன?

நன்றி!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகை சிவா!

கப்பி | Kappi said...

அருமையான அவியல்!!

//சம்மந்தப்பட்ட விஷயங்களைத் தேடி, படித்து, தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என் ஆவல் வெறும் Academic ஆகத்தான் இருக்கப்போகிறது. என்ன பிரயோஜனம்?
//

buen viaje!!!

Anonymous said...

you are welcome mr.suresh.....
thamizh mannilirundhu ungalai varaverkirom......unga sondha oor edhu sir? ippo eppadi irukkunnu marakkaama ezhudhunga..sariya....

payanam inidhe amaiya vaazhthukkal !!(appada...namma quota mudinjadhu)

கதிர் said...

பினாத்தலாரே,

சந்தோஷமா ஊர்க்காத்து வாங்கிட்டு வாங்க.

என்ன சொல்லி வச்ச மாதிரி ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா ஊருக்கு போறிங்க.
அங்க எதாவது வலைப்பதிவர் மாநாடா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கப்பி பய! என்ன மொழியிலே திட்றீங்க?

அனுராஜேஷ், நான் வேலூர்.. சென்னையிலே நாலஞ்சு நாளாவது இருப்பேன்.

நன்றி தம்பி.. என்ன துபாயிலே ரொம்பக் குளிருது இல்லியா அதான்!

பொன்ஸ்~~Poorna said...

// எனக்கு ஒரு மாதம் விடுமுறை. //
அப்பாடா...

//சுரதா உதவ முடிந்தவரை தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டேதான் இருப்பேன்!//
அச்சிச்சோ!!!!

மாத நடுவில் நானும் வந்து விடுவேன்.. பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.. முடிந்தால் பேசுவோம்..

ஆகஸ்டில் என்ன அமீரகம் முழுக்க லீவா? எல்லாரும் வரேன், வந்துருவேன்ன்னு பயம் காட்டறீங்க?!! :)

பாலசந்தர் கணேசன். said...

தமிழில் படத்துக்குப் பெயர் வைத்தால் வரிவிலக்காம். "மாமனாரின் இன்ப வெறி"க்கும் வரிவிலக்கு உண்டா?

தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிக்கும் முயற்சி. இதை குதர்க்கமாக கிண்டலடிக்க வேண்ட்டாம். மற்ற மொழிகளில் பெயர் வைத்தால் கூடுதல் வரி என்று போட்டிருந்தாலும் அனைவரும் பெயர் மாற்றம் செய்திருப்பார்கள். வரிவிலக்கு கொடுத்திருக்க வேண்டாம்.

இந்த இரட்டைப்பதவி விவகாரத்தில் காட்டுகின்ற ஒற்றுமையை நம் கட்சிகள் மற்ற விஷயங்களிலும் காட்டியிருந்தால்

இந்த விஷயத்தில் எல்லாருக்கும் மிக கடுமையான டேமேஜ் என்பதால் ஒற்றுமை வந்து விட்டது. இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை. பதவி போய்விடும் என்பதால் சேர்ந்த கூட்டம்.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க பொன்ஸக்கா.. சந்திக்க முயற்சி செய்வோம்.. தனிமடல் போடுங்க.

ஜூலையும் ஆகஸ்ட்டும் இங்கே பள்ளிகள் விடுமுறை, அப்பா அம்மாக்களுக்கு வேறு எப்போது லீவெடுக்க முடியும்?

பா க, இந்தத் திட்டத்தை விட குதர்க்கம் என் கமெண்ட் இல்லை என்றே கருதுகிறேன். உள்ளடக்கத்தைப் பற்றி எந்தக்கவலையும் இன்றி வெறும் பெயரை வைத்து வரிவிலக்கு அளித்தால், இது போன்ற படங்களும் பயன்பெறும் என்பதை மறுக்க முடியுமா?

வரிவிலக்கு என்ற சலுகையை அளிப்பது, சமூகக் கண்ணோட்டத்தோடு எடுக்கப்படும் படங்களுக்கு என்றால் ஒப்புக்கொள்ளலாம்.. சாதாரண, லாபத்தைக் குறிவைத்து எடுக்கப்படும் படங்களுக்கு வரிவிலக்கு என்பது, வரிகட்டும் சாமான்யனை முட்டாளாக்கும் செயல்!

Anonymous said...

// விஷயங்கள் தெளிவாகத் தெரிய இன்னும் கொஞ்சம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உந்துவதால், செய்திகளைப்பற்றி பெரும்பாலும் எழுதுபவனும் இல்லை

This is very obvious, atleast in my case ;)

Enjoy ur holidays :)

I'm interested to meet u and if its possible for you lets meet in chennai. I'll mail u my contact no.

Happy Journey :)-

பினாத்தல் சுரேஷ் said...

சந்திச்சிடலாம் விக்னேஷ்!

╬அதி. அழகு╬ said...

இருகோடுகள் தெரியுமல்லவா? அதான் பெரியகோடு-சின்னக்கோடு.

நீங்க ஊருக்குப் போற பெரியகோடு இறுதியில் இடப்பட்டதால் முதல் கோடான அந்த லெபனான் பையன் (இல்லாத) ஊருக்குப் போற விஷயம் சின்னக்கோடு ஆயிட்டது. யாருமே கண்டுக்கல, பாத்தீங்களா?

இலவசக்கொத்தனார் said...

இன்னுமா கிளம்பலை? ;)

பினாத்தல் சுரேஷ் said...

அழகு,

பெரிய கோடு சின்ன கோடு எல்லாம் சரிதான்! உங்களுக்கே மகிழ்ச்சிதானே முதல்லே வந்தது!

இலவசம்,

மூட்டை கட்டற வரைக்கும் விட மாட்டீங்க போல!

அனுராஜேஷ்,

ஊர் பார்ட்டியா நீங்க? நான் காந்திநகர். ஆற்றைக்கடந்தால் உங்க வீடு:-)) உங்கள் வலைப்பதிவு பார்த்தேன். மெயில் போடுங்க, வலைப்பதியறது, தமிழ் பத்தி எல்லாம் எழுதறேன், கொஞ்சம் ப்ரீயானவுடன்.

 

blogger templates | Make Money Online