Jul 4, 2006

அவியல்

1. இணையத்தில் இருந்து முதல் முறையாக முழுத் திரைப்படத்தையும் இறக்கிப்பார்த்தேன் - படம் மீண்டும் கோகிலா. நீண்ட இடைவேளைக்குப்பிறகு பார்த்தாலும் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பின் அருமையையும், இயல்பான அளவான வசனங்களையும், தெளிவான திரைக்கதையையும் பொருத்தமான பின்னணி இசையையும் பொதுவாகத் தெரிந்த ஒரு நாடகபாணியை மீறி ரசிக்க முடிந்தது. மிகவும் பிடித்தது க்ளைமாக்ஸ் வசனங்கள். சபல புத்திக் கணவனை வைத்துக்கொண்டே சினிமா நடிகையை "அடிக்கடி ஆத்துக்கு வந்து போங்கோ" என்று "அவ மேல இருக்க நம்பிக்கை"யால் சொல்வது வசனங்களால் நிரப்பப்பட்ட அப்போதைய படங்களிடையே நிச்சயம் புதுமை. இப்படம் வெற்றி பெற்றதா?

2. ஷா ருக் கானின் ரசிகனாக கொஞ்ச நாள் இருந்திருக்கிறேன், இருந்தாலும் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்தே பஹேலி பார்த்தேன். டுபாக்கூர். ராஜஸ்தானி கிராமத்துக் கர்ணபரம்பரைக் கதையை படமாக்கும்போது உடைகளுக்கும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தே ஆகவேண்டிய ரிச் லுக்குக்கும் செலவழித்ததில் கொஞ்சமாவது திரைக்கதை அமைப்பதில் காட்டியிருக்கலாம். ஷா ருக் ஏற்ற ஆவி கதாபாத்திரத்தால் எப்படிப்பட்ட மாயாஜாலங்கள் முடியும், எது முடியாது என்பதையே தெளிவாகச் சொல்லாமல் மூன்று மணிநேர இழுவை. இந்திப்படம் பார்க்கும் முன் ரொம்ப யோசிக்க வேண்டும். பனா வெற்றியாமே? என்னதான் இருக்கிறது வெற்றிக்கு?

3. என்ன ஆச்சு சன் டிவிக்கு? திருந்திவிட்டதா? ராடானின் தங்கவேட்டை புதுப்பொலிவுடன், செல்வி முடியும் கதையாகக் காணோம், போதாக்குறைக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் போட்டாலும், ஹீரோ விக்ரமைவிட கெஸ்ட் ரோல் சரத்குமாருக்கு விளம்பரத்தில் அதிக நேரம், அதே நேரத்தில் மற்ற விஷயங்களில் அப்படியேதான் இருக்கிறது - துள்ளித்திரிந்த காலம் விளம்ப்ரத்தில் நாயகி குஷ்பூவிற்கு கெஸ்ட் ரோல் ரோஷ்ணிக்கு அடுத்த இடம்தான்.. என்னமோ குக்கிங்.

4. கால்பந்தில் பிரேசில் தோற்றதற்கு ஒரே காரணம் - எனக்கு கால்பந்தில் ஆர்வம் இல்லை என்பதால்தானோ?

5. தமிழில் வரும் விளம்பரங்களின் தர வளர்ச்சி அதிசயமாக இருக்கிறது. லேட்டஸ்ட் பேவரைட் - ப்ரூ காபியில் சின்னக்கப்பில் காபி கொடுத்து தகவல் சொல்லும் இளம் மனைவி - ஒளிப்பதிவு, கான்சப்ட், ஆக்கம் - எல்லாம் அபாரம்.

6. நிறைய பேர் இப்படி அவியல் போடுகிறார்களே என்று பினாத்தலும் போட்டுவிட்டான். மேட்டர் ஒண்ணும் பெரிசா சிக்கலை. யாரும் மறந்துரக்கூடாது பாருங்க!

0 பின்னூட்டங்கள்:

 

blogger templates | Make Money Online