Nov 18, 2006

வல்லவன் -- விமர்சனம் (18 Nov 06)

இந்த விமர்சனம் பார்க்கச் சாதாரணமான விமர்சனம் போலத் தோன்றினாலும், வலைப்பதிவுலக வரலாற்றில் ஒரு மைல்கல்.


அம்பானி பொண்ணைக் கல்யாணம் செய்வது பெரியதா, அம்பானியாக ஆவது பெரியதா என்ற கேள்விக்கு விடை ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது. L-I-T-T-L-E- S-U-P-E-R-S-T-A-R என்று எழுத்துக்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. டி ராஜேந்தர் படத்தில் டி ராஜேந்தர் கொடுத்த பட்டம்! பட்டங்களுக்குத் தமிழ்நாடு கொடுக்கும் மரியாதை இவ்வளவு குறைவா?

பழைய படங்களைக் கொஞ்சம் கூட கூசாமல் காப்பி அடித்திருக்கிறார் சிம்பு. கல்யாணராமன் கமல் மேக்கப் மட்டுமன்றி பாடலும், இவருடைய மானசீகக் குரு எஸ் ஜே சூர்யாவின் படத்திலிருந்து காட்சிகள் (தெரியாமல் போய்விடக்கூடாது எனப் பெயர் சொல்லியே), பார்த்தேன் ரசித்தேன் சிம்ரன் போல ரீமா சென், படையப்பா போல கிளைமாக்ஸ்! அடுத்த கமல் நான் தான், அடுத்த ஷங்கர் நான் தான் என்பதைவிட அடுத்த லொள்ளு சபா ஹீரோ நான் தான் என்றால் அது நடக்கக்கூடிய நம்பக்கூடிய விஷயம்.பஞ்ச் டயலாக்குகளுக்குக் குறைவே இல்லை. ஆக்ஷன் ஹீரோக்களைவிட, பஞ்ச் டயலாக்களை காமடியன்கள்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதுவும் இன்னொரு சான்று.

அஜித் போல பேட்டிகள் மூலமும், ஹீரோ ஹீரோயின் காதல் வதந்திகள் மூலம், தயாரிப்பாளருடன் சண்டை என்று பரபரப்பு கிளப்பி படத்தைப் பேசவைக்கத் தெரிந்த அளவிற்கு படத்தை நன்றாக எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. விகடன் கொடுத்த 37 மார்க்கே அதிகம்.

யுவன் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

இந்த விமர்சனம் பார்க்கச் சாதாரணமான விமர்சனம் போலத் தோன்றினாலும், வலைப்பதிவுலக வரலாற்றில் ஒரு மைல்கல்.

காரணம்..

ஊகிப்பவர் பின்னூட்டுங்கள் பார்க்கலாம்?

44 பின்னூட்டங்கள்:

செந்தழல் ரவி said...

Without watchin the movie - vimarsanam ??

Anonymous said...

லொள்ளு சபா ஹீரோவை இப்படி நீங்கள் அநியாயத்துக்கு கேவலப்படுத்தி இருக்க வேண்டாம் ;-)
மல்லி

இலவசக்கொத்தனார் said...

இதைப் பார்த்தால் போகாத ஊருக்கு வழி சொல்ல வந்தா மாதிரி இருக்கு, அதான் இது மைல்கல்.

யோவ், உருப்படியா எதனாச்சும் பதிவு போடய்யா.

பொன்ஸ்~~Poorna said...

நீங்க முதல் முதலா எழுதும் 'தமிழ்' சினிமா விமர்சனம்?

சந்தோஷ் aka Santhosh said...

பினாத்தலாரே சொல்லுங்க என்ன சிறப்புன்னு?

துளசி கோபால் said...

'படம் சொதப்பல்'ன்னு எங்களையே 'யூகிக்க' விட்டதாலா? :-)))

Anonymous said...

yenna ithuthan unga kadaisi pathivu.Innaiku nightu neenga thukku matika poringa!
-Avi No 234156432 ( from Sorgam,vallavan spl relief camp)
(Yenna vallavan padam parthalae yella pavangalukum panishment over.Directa sorgam than)

பினாத்தல் சுரேஷ் said...

செந்தழல் ரவி!

அப்பிடிப்போடுங்க! அதுதான் பாயிண்டு!

பினாத்தல் சுரேஷ் said...

மல்லி,

நீங்க சொல்றதும் சரிதான் போல இருக்கு.

பினாத்தல் சுரேஷ் said...

அப்படி இல்ல கொத்தனார்.. போகக்கூடாத ஊருக்கு போனவங்க கிட்டே கேட்டுத் தெரிஞ்சுகிட்டு இப்படிப்போகக்கூடாதுன்னு சொல்ற மைல்கல்;-) விசு ரேஞ்சு வந்துடிச்சா?

பினாத்தல் சுரேஷ் said...

என்ன பொன்ஸ், எத்தனை தமிழ் படத்துக்கு எழுதியிருக்கேன்! ம்ஹூம்.. ஹோம்வொர்க் சரியா பண்ரதேயில்லை போல!

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா,

நானே "யூகிச்சது"தான்!

பினாத்தல் சுரேஷ் said...

சந்தோஷ்,

தெரிஞ்சுகிட்டீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

அடப்பாவி ஆவி!

இந்தப்படத்தைப் பார்க்காமலே விமர்சனம் எழுதினா சொர்க்கமா நரகமா? ஒரேயடியா 200ஓட என்னை மூடப்பாக்கறீங்களே!

ஆன்லைன் ஆவிகள் said...

//(Yenna vallavan padam parthalae yella pavangalukum panishment over.Directa sorgam than) //

ஆமாம்! ஒரு ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு பல முறை தண்டனைகள் கிடையாது! முற்பிறவிப் பாவங்களுக்கும் இந்தப் படம் பார்த்தே ஊழ்வினைகளை அனுபவித்து விடுவதால் உமக்கு மறுபிறப்பும் கிடையாது.

தயாராக இருக்கவும்.

(எங்க ஊருக்கு புதுசா யாரு வந்தாலும் ராகிங்க் உண்டு. இந்தப் படம் பார்த்தவர்களுக்கு அது கூட கிடையாது)

ஆன்லைன் ஆவிகள் said...

உமக்கு இது 200 வது பதிவா? வாழ்த்துக்கள்!

தம்பி said...

அய்யோ பாவம்!

நான் இன்னும் முழுசா பாக்கல, பாக்கறதாவும் ஐடியா இல்ல ஏன்னா பாதி பாத்ததுக்கே டரியல் ஆகிட்டேன்!

Anonymous said...

நானும் வருவேன்! உம்மை அழைத்துச் செல்ல!

கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம்... எல்லாம் உண்டு!

(ரெக்கார்ட் டான்ஸ் எல்லாக் கேக்கப்பிடாது. சொல்லிட்டேன். அப்புறம் இன்னும் இருமுறை வல்லவன் பார்க்க நேரிடும்)

பினாத்தல் சுரேஷ் said...

என்னப்பா இது திடீர்னு ஆவி முற்றுகை அதிகமா இருக்கு? ஒருவழி பண்ணாம விடமாட்டீங்க போல!

வல்லவன் படம் ஆவிகள் உலகத்தில் ஏற்படுத்திய ஜன்நெரிசலை எதிர்த்து பெரும்போராட்டம் நடத்துங்களேன், பார்க்கும் எங்களுக்கும் பொழுதுபோகும்:-)

தம்பி.. முழுசாப்பாத்தா ஒரு அம்பாஸடர் கார் தர்றாங்களாம்.. எக்ஸார்ஸிஸ்ட்டுக்கு தந்த மாதிரி..

ஆன்லைன் ஆவிகள் said...

வல்லவன் - விழாக்காலச் சலுகை!

கொள்ளிவாய்ப்பிசாசு said...

எங்களை விரட்ட எங்கள் ஏரியாவில் வல்லவன் திரைப்படத்தை திரையிட முயற்சி செய்துவரும் விஷமிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

ரத்தக் காட்டேறி said...

எங்களை விட இந்தப் படம் பயங்கரமானதா? எப்படி?

manasu said...

சிகப்பு ரோஜாக்கள் உல்டா பண்ணி மன்மதன் ஓடிடுச்சு அந்த நெனப்பு தான் போல. பேரு தான் லிட்டில் சூப்ப்ர் ஸ்டார் பண்ற பந்தா எல்லாம் ரியல் மிஞ்சிற மாதிரி இருக்கு....

ramachandranusha said...

என்னடா, பினாத்தலார் இவ்வளவு தைரியசாலியா என்று
ஏமாந்துட்டேன் :-)

Anonymous said...

FLASH NEWS: Vallavan padam fulla parthal front row la Ramba and manaka dance sorgathil.Pathi partha mid row.Padame parkama vimarsanam eluthuna kadaisi rowthan.Grab the offer.(Sureshu sekiram padatha parthuttu vaa.Unakku front row la oru elumbu pottu vaikiren)(Varampothu Anjapar restarunt la irunthu blood poriyal vanginu vaa.)
ps : vALLAVAN PADAM RENDU THADAVI PARTHA U CAN DANCE WITH RAMBA!!
--Avi 234156432 (Vallavan special senior camp,dharmapuri camp arugil)

பினாத்தல் சுரேஷ் said...

ஆவி அண்ணாச்சி, ரத்தக்காட்டேறி, கொள்ளிவாய்ப்பிசாசு! எப்பா, இன்னிக்கு ராத்திரி தூக்கம் வராது போல இருக்கே.. இதுலே கவர்ச்சிகரமான ஆபர் வேற!

மனசு, பேட்டி படிச்சே கடுப்பேறுது! மன்மதன் பாக்கவே பாத்தேன்:-((

உஷா.. இந்தப்படத்தைப்பாக்கத் தேவை தைரியம் இல்லை - தற்கொலை மனப்பான்மை!

மக்கள்ஸ், உங்களையெல்லாம் புரிஞ்சிக்கவே முடியலே.. இப்படி டுபாக்கூரா போஸ்ட் போட்டா இத்தனை கமெண்டு வருது.. பின்னூட்டத்துலே கேள்வி கேட்டு 200ஆவது போஸ்ட் போட்டா:-((

Anonymous said...

//இன்னிக்கு ராத்திரி தூக்கம் வராது போல இருக்கே.. //

நான் வேணா தாலாட்டுப் பாடட்டா!

காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பையன் நீதானோ!

கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ!

நீயா படம் பார்த்தே! அதைத்தான் ஏன் பார்த்தே!

இலவசக்கொத்தனார் said...

//மக்கள்ஸ், உங்களையெல்லாம் புரிஞ்சிக்கவே முடியலே.. இப்படி டுபாக்கூரா போஸ்ட் போட்டா இத்தனை கமெண்டு வருது.. பின்னூட்டத்துலே கேள்வி கேட்டு 200ஆவது போஸ்ட் போட்டா:-((//

அட போய்யா, வந்தாலும் அலுத்துக்கற, வரலைன்னா ஊரக் கூட்டி ஒப்பாரி வைக்கற. இப்போ என்னதான் பண்ணுறது?

பினாத்தல் சுரேஷ் said...

நல்லவேளை ஆவி அம்மணி, காலையிலேதான் பாத்தேன்.. அப்போவும் BGM ஓட பயமுறுத்துதே உங்க தாலாட்டு..

இலவசம் அண்ணா, கோபம் ஏன்ணா? சீரியஸா எழுதினா பின்னூட்டம் வரலைன்னு ஒரு ஆதங்கம்.. நகைச்சுவையா எழுதினாகூட பரவாயில்ல.. இப்படி ஒரு டுபாக்கூருக்கு பின்னூட்டம் கொட்டுறது என்ன டிஸைன்னே தெரியாம உரக்கக் குழப்பப்பட்டுட்டேன். இதுக்குப்போயி கோபமா?

அய்யாக்களே, அம்மாக்களே, ஆவிகளே.. எதோ தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிட்டு, அடுத்த போஸ்ட்டுக்கு ஆஜராயிடுங்க சாமிங்களா..

குட்டிச்சாத்தான்ஸ் கிளப் said...

//அய்யாக்களே, அம்மாக்களே, ஆவிகளே.. எதோ தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிட்டு, அடுத்த போஸ்ட்டுக்கு ஆஜராயிடுங்க சாமிங்களா..
//

நாங்களும் வரலாமில்லையா!

Anonymous said...

//அப்போவும் BGM ஓட பயமுறுத்துதே உங்க தாலாட்டு..//

அடப் பாவமே! அப்போ ஸ்பெஷலா இன்னொரு பாட்டு இருக்கு!

வேறென்ன சிம்புவுக்கு பாடுனா பாட்டுதான்.

தோள் மீது தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு!
ஆவி வந்து தாலாட்ட என் செல்லமே நீ தூங்கு!

எலும்பைக் கேட்டா உடைச்சித் தருவான் என் அண்ணன்!
இரத்தம் கேட்டா புடிச்சித் தருவான் என் அண்ணன்!

தோள் மீது தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு!
ஆவி வந்து தாலாட்ட என் செல்லமே நீ தூங்கு!

Anonymous said...

தோள் மீது தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு!
ஆவி வந்து தாலாட்ட என் செல்லமே நீ தூங்கு!

புளிய மரத்தில் படுக்கை தருவான் என் அண்ணன்!

முருங்கை மரத்தில் தொட்டில் தருவான் என் அண்ணன்!

தோள் மீது தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு!
ஆவி வந்து தாலாட்ட என் செல்லமே நீ தூங்கு!

செருப்பால் அடித்துக் கொண்டவன் said...

என்னங்க இது! படத்தைப் பார்க்காமலேயே இப்படி எழுதினா எப்படி?

போய் பார்த்துட்டு வாங்க! சூப்பரா இருக்கு! நான் நேத்துதான் போனேன்!

பினாத்தல் சுரேஷ் said...

நான் உயிரோட இருக்கனா இல்லையான்னே தெரியலையே..சுத்தி ஆவிங்களா வந்து கும்மி, தாலாட்டு.. போஸ்ட்டைத் திறந்தாலே மல்லிகைப்பூ வாசம் வேற வீசுது..

குட்டிச்சாத்தான்ஸ்.. வாங்க.. உங்களுக்கு இல்லாததா..

செ அ கொ, உங்கள் விமரிசனம் எல்லாம் சரிதான்.. பேருதான் இடிக்குது..

பூசாரி பொன்னைய்ய நம்பூதிரி said...

நீ ஒண்ணும் பேடிக்கண்டா மோனே! இவ்விடத்தில் வல்லியதோர் தாயத்து உண்டு.

இதைக் கட்டிக் கொண்டாங்கியாகில் சகல பிசாசுகளும் ஒதுங்கிக்கொள்ளும் கண்டோ!

மோகினிப் பிசாசு said...

நாங்களே இப்பத்தான வரோம்! அதுக்குள்ளே எப்படி மல்லிகைப் பூ வாசம்!

தலைவா! நம்ம காதுலயே பூ சுத்துறே!
இரு இரு! உம்ம வீட்டு தங்கமணிகிட்டே வந்து வத்தி வெக்கிறோம்!

பினாத்தல் சுரேஷ் said...

அய்யா பூசாரி, பித்தானந்தா ட்ர்ரெட்மார்க்கை நீங்க எப்படி உபயோகப்படுத்தலாம்? எதோ தெரியுதே..

அம்மா மோகினி.. நல்லவேளை தங்கமணிய ஞாபகப்படுத்தினீங்க.. இனிமே நான் ஏன் வேறபேயை எல்லாம் பார்த்து பயப்படணும்??

Anonymous said...

Romba nalla irukku. Padam parthalum ipdithan vimarsanam irukkum.

கசாப்புக் கடை ஆவி said...

இங்கு பினாத்தலார் 65 கிடைக்கும்.

200 கிராம் வாங்கினால் 50 கிராம் இலவசம்(!?)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானி.. ஏன் பாக்கணும் கஷ்டப்படணும் சொல்லுங்க:-))

கசாப்புக் கடை ஆவி, நான் என்ன பாவம்பா பண்ணினேன்? அவ்ளோ டேஸ்ட்டா எல்லாம் இருக்க மாட்டேன்பா நானு!

ஆச்சி கரம் மசாலா said...

//அவ்ளோ டேஸ்ட்டா எல்லாம் இருக்க மாட்டேன்பா நானு!
//

கவலையே படாதீங்க! அதுக்குதான் இருக்குது ஆச்சி கரம் மசாலா!

சுவைக்க மணக்க ஆச்சி கரம் மசாலா!

கசாப்பு கஸ்டமர் ஆவி said...

//அவ்ளோ டேஸ்ட்டா எல்லாம் இருக்க மாட்டேன்பா நானு! //

அதை திண்ணு பார்த்துட்டு நாங்கதான் சொல்லுவோம்!

போட்டி கசாப்புக் கடை ஆவி said...

இங்கு பினாத்தலார் போன்லெஸ் 65 கிடைக்கும்.

150 கிராம் வாங்கினால் 100 கிராம் இலவசம்.

பினாத்தல் சுரேஷ் said...

அய்யா பேய்களா, ஆவிகளா, போதுமய்யா உங்க அன்பு! கொஞ்சம் டைம் கொடுங்க, உங்களுக்காகவே ஒரு போஸ்ட்டு போடறேன், அங்கே வச்சுக்கலாம்.

 

blogger templates | Make Money Online