Nov 5, 2006

இலவசம்? (தேன்கூடு போட்டிக்காக- 05 Nov 06)

வெண்ணெய் மாதிரி வழுக்கிக்கொண்டு ஓடியது கார். ஆறு சாரிகள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை நேரான சாலை, கண்ணுக்கழகாய் இரண்டு பக்கமும் மஞ்சள் பூப்பூத்த மரங்கள். இந்தியாவைவிட்டு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் ஒப்பிடுதலை இன்னும்கூட தவிர்க்க முடிவதில்லை.

எக்ஸிட் 164தானே சொன்னான்? 164 கண்ணில் பட்டதும் படிப்படியாக வல்து எல்லைக்கு வந்து குறுஞ்சாலைக்குள் புகுந்ததில் "Geoffrey Smith" பலகை கண்ணில் பட, வீட்டுச்சாலைக்குள் திருப்பினேன்.

ஜெஃப்பின் வீட்டுக்கு முதல் முறையாகப் போகிறேன். வாழ்கிறான் மனுஷன்! நகரத்தில் இருந்து இருபதே நிமிட ட்ரைவில் விஸ்தாரமான பெண்ட் ஹவுஸ். ஆள் படை அம்பு! காரை பார்க் செய்து உள்ளே நுழைந்தவுடன் பட்லர் வந்து வரவேற்பரைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான். "நீங்கள் எதிர்பார்க்கப் படுகிறீர்கள். இன்னும் சில நிமிடங்களில் திரு ஜெப்ரி ஸ்மித் உங்களுடன் பேசுவார்". அதெப்படி ரெகார்டட் செய்தி போலவே நேரில் உள்ளவரிடமும் இவனால் பேச முடிகிறது?

விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. ஜோக்குகளில் வருவது போல நல்ல செய்தி கெட்ட செய்தி எது வேண்டும் என ஆரம்பிக்கலாமா? எனக்கு விஷயத்தைச் சொன்ன ஃப்ரான்ஸிஸ் அப்படித்தானே ஆரம்பித்தான்..

"பாஸ் ஒரு செய்தி.. நல்லதா கெட்டதா எது முதலில் வேண்டும்?"

"கெட்டதையே சொல்லு" அப்போதுதான் நல்லது வரும்போது மனசுக்கு ஆறுதலாய் இருக்கும்.

"போர்ட்டிலிருந்து மேக் போன் செய்தான். எப்படியும் நம்ம கன்ஸைன்மெண்ட் கிளியர் ஆக ஒரு வாரம் ஆகிவிடுமாம்."

"என்ன விளையாடுகிறார்களா? ஒரு வாரம்! போர்ட் அதிகாரிகளுக்குத் தெரியாதா நம்ம கன்ஸைன்மெண்ட் பெரிஷபிள் கூட்ஸ் என்று. ஒரு வாரத்துக்குள் எல்லாம் நாசமாப் போயிடுமே.. என்ன பண்றான் மேக்? இதைக் கூட கன்வின்ஸ் பண்ண முடியாதாமா அவனால்?"

"மேக் எவ்வளவோ ட்ரை பண்ணான். போர்ட் ஸ்ட்ரைக்லே மாட்டியிருக்கு. கஸ்டம்ஸ் ஆளுங்க ஹெல்ப் பண்ணலாம். ஆனா அவங்க நாம போன முறை பண்ண அண்டர் வேல்யூ தில்லுமுல்லுலே ரொம்பக் கடுப்பா இருக்கானுங்களாம்."

20 மில்லியன் டாலர் சரக்கு! எக்ஸ்பயரி தேதி தாண்டிவிட்டால் ஒன்றுமே செய்ய இயலாது. கடலில் கரைக்கலாம்.

"ப்ராடக்ட் டீடெயில்ஸ் இருக்கா?" எதையாவது விற்க முடியுமா பார்க்கலாம்.

"எல்லாமே சீஸ் மட்டும்தான்."

"சரியாப்போச்சு! ஒண்ணுமே பண்ண முடியாது! இன்ஷ்யூரன்ஸ்?"

"வழக்கம்போல அண்டர் வேல்யூதான். 20% கூட கிடைக்காது"

"பெண்டிங் ஆர்டர் எதாவது இருக்கா?"

"அங்கேதான் நான் சொன்ன குட் நியூஸ் வருது. வால்மார்ட்டிலே இருந்து மார்மலேடுக்கு ஒரு பெரிய ஆர்டர் இருக்கு. டெலிவரி இன்னும் ஒரு வாரம் கழிச்சு. ஒரு அவசர் பேக்கேஜிங் பண்ணி, மார்மலேடோட இந்த சீஸையும் இலவச இணைப்பா பண்ணிட்டா என்ன? FDA ரூல்ஸ்படி மெயின் ஐட்டத்துக்கு மட்டும்தான் எக்ஸ்பயரி பாப்பாங்க. இதைப் பிரமோஷனா ஆக்கிட்டோமுன்னா டேக்ஸ் ரிபேட்லே ஒரு 50%கிட்டே சால்வேஜ் பண்ணிடலாம் இல்லையா?"

"நாட் அ பேட் ஐடியா! பிகர்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் பண்ணிட்டயா?"

"இதோ இங்கே இருக்கு. ஆனா ஒரு சிக்கல்!"

"என்ன?"

"அக்கவுண்ட்ஸ்லே சொல்றாங்க, பெரியவர் அப்ரூவல் இல்லாம இதைச் செய்ய முடியாதாம். வேல்யூ 5M க்கு மேலே போகுதே."

"பெரியவர் எங்கே இருக்கார்? இப்பல்லாம் ஆபீஸுக்கு வர்றதே இல்லையே"

"அவர் பெண்ட் ஹவுஸிலேதான் இருப்பார். நீங்க நேரிலே போனா கன்வின்ஸ் பண்ணிடலாம்."

எனவே, நான் இங்கே இருக்கிறேன்.

ஸ்மித் வந்துகொண்டிருந்தார்.

"ஹாய் ப்ரேஸத்! ஹவ் டூ யூ டூ?" மரபை மீறாத பிரிட்டிஷ் வரவேற்பு.

"உங்களுடன் 20 வருடமாக இருக்கிறேன். என் பெயர் பிரஸாத் என்று உங்களால் இன்னும் சொல்ல முடியவில்லை" என்றேன் சிரித்துக்கொண்டே.

"உன் பெயரை உச்சரிக்கத் தெரிந்துவிட்டால் உன்னை வேலையிலிருந்து நீக்கி விடுவேன்"

"உடம்பு எப்படி இருக்கிறது? என்ன ஆயிற்று?"

"என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. அம்மாவுக்குத் தான் ரொம்ப மோசமாகிவிட்டது. கடைசி நாட்கள் நெருங்கிவிட்டது. இப்போது கூட இருந்தால்தான் உண்டு."

"என்ன அம்மாவுக்கு?"

"வா, நீயே பாரேன்"

படுக்கையறை ஒரு ஆஸ்பத்திரியின் சுத்தத்தோடும் நாற்றத்தோடும் இருந்தது. மலர்க்கொத்துகள், ராஜாராணி படுக்கை, பளிச்சிடும் வெள்ளைச் சுவர்கள் - இந்த அலங்காரங்களுக்குச் சம்மந்தமில்லாமல் வீல்சேரில் குப்பைபோல அமர்ந்திருந்த ஸ்மித்தின் அம்மா.

"ஹலோ" என்றேன் தயக்கத்தோடு.

குரல் வந்த திசையை நோக்கி கண்கள் மட்டும் திரும்பின. ஸ்மித் சொன்னது சரிதான். உயிர் வெளியேறிவிட்ட வெளிறிய கண்கள். திரும்பியதோடு சரி. ஒரு புது ஜீவன் வந்திருப்பதை வேறெந்த விதத்திலும் அங்கீகரிக்கவில்லை.

"கேட்கிறதா?" ஸ்மித்தைப் பார்த்துக் கேட்டேன்.

"கேட்கிறது என்றுதான் டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால்தான் உன்னைத் தைரியமாக உள்ளே அழைத்துவந்தேன்."

குழப்பமாகப் பார்த்தேன்.

"இரண்டு வாரங்களுக்கு முன்புகூட உணர்வு இருந்தது. அப்போது நீ உள்ளே வந்திருந்தாயானால், கையில் கிடைப்பதை உன்மேல் தூக்கி வீசி எறிந்திருப்பாள். ரொம்ப வயலெண்டாக நடந்துகொண்டிருப்பாள். காயங்களுடன் தான் நீ திரும்பியிருப்பாய்"

"ஏன்? ...." கேள்வியை வடிவமைக்க முடியாமல் திணறினேன்.

"ஆம். அவளுக்கு ஷிசோப்ரினியா... என்னுடைய காயங்களுக்கு இப்போது அர்த்தம் புரிந்ததா?"

அலுவலகத்தில் ஸ்மித்தின் காயங்கள் ஒரு தொடர் வதந்தி. குடித்துவிட்டு ரோடில் கவிழ்ந்திருப்பார், எந்தப் பெண்ணையாவது வம்பிழுத்திருப்பார் எனப் பல ஹேஷ்யங்கள் உலாவின.

"எவ்வளவு நாளாக இப்படி?"

"1960இலிருந்து"

"அப்படியென்றால்!"

"எனக்கு ஐந்து வயதிலிருந்து. இவளைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் நான் பேச்சிலராகவே தொடர்கிறேன்." தொண்டை கரகரக்கிறது. மனிதர் உள்ளே உடைந்து போயிருக்கிறார். துக்கத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பல நாள் ரகசியங்கள் வெளியேறுவதைப்பற்றிய கவலைகளைத் துரத்தி விட்டிருக்கிறது.

"எப்படி ஆயிற்று?"

"என் தந்தை! காதல் மனைவி மார்னிங் சிக்னஸில் தவிப்பதைப் பொறுக்க முடியாத தந்தை!" வார்த்தைகள் உடைந்து உடைந்துதான் வெளியேறுகிறது.

"அவர் ஒரு மெடிகல் சேல்ஸ்மேன். புது மருந்துக்குக் கிடைத்த இலவச சாம்பிள்களை மனைவி மீதே பிரயோகித்தார். "முழுக்கப் பரிசோதனை செய்யப்பட்டது" என்ற கம்பெனியின் வார்த்தைகளை நம்பினார்."

"அம்மாவுக்கு பெண் குழந்தை ஆசை. பிறந்தது! ஒரு வெஜிடபிளாக."

"தாலிடோமைட்?*"

"ஆம்! அம்மா அப்பாவை மன்னிக்கவேயில்லை. அந்தக் குழந்தையையும் காப்பாற்றப் போராடினாள். ஒரு வருடம் உயிரோடு .. வெறும் உயிரோடு மட்டும் இருந்து இறந்தாள் என் தங்கை. அப்பா தற்கொலை செய்து கொண்டார். அம்மா இப்படி ஆகிவிட்டாள்" இப்போது குரலில் அழுகை தெளிவாகவே தெரிந்தது.

டாக்டர் உள்ளே நுழைவதைக் கவனித்தவுடன் சுதாரித்துக் கொண்டார்.

குறிப்பறிந்து "நான் வரவேற்பரையில் இருக்கிறேன்" என்றேன்.

ஐந்து நிமிடங்களில் டாக்டரும் அவரும் ஒன்றாக வெளியே வந்தபோது இயல்பு நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.

"ப்ரேஸத்.. நீ வந்த விஷயம் என்ன?"

"அது வந்து... நம்முடைய சீஸ் கன்ஸைன்மெண்ட் ஒன்று போர்ட்டிலிருந்து கிளியர் ஆகவில்லை. ஸ்ட்ரைக்கில் மாட்டிக்கொண்டுவிட்டது. எக்ஸ்பயரி டேட் தாண்டிவிடும்போல் தோன்றுகிறது."

"என்ன செய்வதாக உத்தேசம்?"

ஒரு முடிவுக்கு வந்தேன். தொடர்ந்தேன்.

"அண்டர் வேல்யூக்குதான் இன்ஷ்யூர் பண்ணியிருக்கோம். அதனால, நஷ்டத்தை ஏற்க வேண்டியதுதான்"

_______________________
குறிப்பு * :மசக்கைத் தொல்லை (Morning Sickness) ஐ குறைக்க என்று விளம்பரப்படுத்தப்பட்ட Thalidomide 1950 - 60 களில் ஏராளமான அமெரிக்கப்பெண்களால் உபயோகப்படுத்தப்பட்ட மருந்து.
FDA - (Foods & Drugs Agency) வாலும் மருந்துக்கம்பெனியாலும் முழுமையாகச் சோதிக்கப்படாமலேயே அறிமுகமான இம்மருந்து கொடிய பல பக்கவிளைவுகளை - குறிப்பாக கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படுத்தி மருந்து வரலாற்றில் ஒரு கரும்பக்கமாகவே விளங்குகிறது.
கருச்சிதைவு, உணர்வற்ற குழந்தைகள், இந்தக்கதையில் வருவது போல் பைத்தியம் பிடித்த தாய்மார்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என ஒரு கோரத்தாண்டவம் ஆடிய மருந்து இது. கர்ப்பிணிப்பெண்களுக்கு எந்த மருந்துமே தரக்கூடாது என்ற கொள்கைக்கும் சில டாக்டர்கள் வந்ததற்கான காரணம் இது.

53 பின்னூட்டங்கள்:

நாமக்கல் சிபி said...

நல்லா இருக்குங்க....

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

ramachandranusha(உஷா) said...

கடைசி வரியை, தாயின் வியாதியைப் பற்றி சொல்லும்பொழுதே உகித்துவிட்டேன் என்றாலும், நன்றாக இருக்கிறது. ஆனாலும்
உங்களிடமிருந்து இத்தகைய கதையை எதிர்ப்பார்க்கவில்லை :-)

Arunkumar said...

nalla irukku suresh unga kadhai.

vetri pera vaazthukkal.

அனுசுயா said...

இலவசமா கிடைச்சா பினாயில் கூட குடிக்க தயாராயிருக்காங்க மக்கள். அதனால ஏற்படற பாதிப்ப யாரும் யோசிக்கறதில்ல. உங்க கதை நல்லாயிருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

நல்ல ஐடியா. சமூக சிந்தனையோட நல்ல சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Leo Suresh said...

சுரேஷ், எதிர்பார்த்த முடிவுதான், வெற்றி பெற வாழ்த்துக்கள்.
லியோ சுரேஷ்
துபாய்

இன்பா (Inbaa) said...

மிக நெகிழ்சியான பின்புலம், கதை மிக அருமையாக வந்துள்ளது.... வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வெட்டிப்பயல்

நன்றி உஷா. எத்தகைய கதையை எதிர்பார்த்தீர்கள்:-) இது வசவா வாழ்த்தா?

நன்றி அருண்குமார்.

நன்றி அனுசுயா. இலவசமா கிடைக்கறதனுடைய தரமும் முக்கியம்.. இல்லையா?

நன்றி சிறில்.

நன்றி லியோ சுரேஷ். உங்களுக்கெல்லாம் எதிர்பாராததை எதிர்பார்க்கறதே வேலையாப்போச்சு:-))

நன்றி இன்பா.

கதிர் said...

நல்ல வேகமா இருக்கு வித்தியாசமாவும் இருக்கு இந்த கதை. நம்ம ஊரு டாக்டருங்க கூட (எங்க ஊரு) சாம்பிள் மருந்தை கொடுக்கறத நானே பாத்துருக்கேன்.

கஸ்டம்ஸ், க்ளீயரிங், போர்ட் அப்படின்னு வந்தவுடனே நான் ஏதோ ஆபிஸ் மேட்டர் மாதிரி இருக்குமோன்னு பயந்துட்டேன் நல்லவேளை செண்டிமெண்டா போச்சு!

வாழ்த்துக்கள் சுரேஷ்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தம்பி.

//கஸ்டம்ஸ், க்ளீயரிங், போர்ட் அப்படின்னு வந்தவுடனே நான் ஏதோ ஆபிஸ் மேட்டர் மாதிரி இருக்குமோன்னு பயந்துட்டேன் // அதுலே பயப்பட என்ன இருக்கு;-)

murali said...

கதை ஓட்டம் நன்றாக இருந்தது. ஆனால் இந்த மெடிக்கல் சம்பந்தமான வார்த்தைகள் புரியவில்லை
"அம்மாவுக்கு பெண் குழந்தை ஆசை. பிறந்தது! ஒரு வெஜிடபிளாக." "தாலிடோமைட்?" "ஆம்!
முடிந்தால் இது என்னவென்று விளக்குவீர்களா.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பா முரளிதரன்.

மசக்கைத் தொல்லை (Morning Sickness) ஐ குறைக்க என்று விளம்பரப்படுத்தப்பட்ட Thalidomide 1950 - 60 களில் ஏராளமான அமெரிக்கப்பெண்களால் உபயோகப்படுத்தப்பட்ட மருந்து.

FDA - (Foods & Drugs Agency) வாலும் மருந்துக்கம்பெனியாலும் முழுமையாகச் சோதிக்கப்படாமலேயே அறிமுகமான இம்மருந்து கொடிய பல பக்கவிளைவுகளை - குறிப்பாக கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படுத்தி மருந்து வரலாற்றில் ஒரு கரும்பக்கமாகவே விளங்குகிறது. கருச்சிதைவு, உணர்வற்ற குழந்தைகள், இந்தக்கதையில் வருவது போல் பைத்தியம் பிடித்த தாய்மார்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என ஒரு கோரத்தாண்டவம் ஆடிய மருந்து இது. கர்ப்பிணிப்பெண்களுக்கு எந்த மருந்துமே தரக்கூடாது என்ற கொள்கைக்கும் சில டாக்டர்கள் வந்ததற்கான காரணம் இது.

ராம்குமார் அமுதன் said...

அன்பின் சுரேஷ்.... நல்ல கதை... முடிவை முன்பே யூகிக்க முடிகிறது.... நடையும் வேகமும் பட்டாசு..... வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

லக்கிலுக் said...

நல்ல படைப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அமுதன்.

நன்றி லக்கிலுக்.

Anonymous said...

Vetri pera vaashthukkal, nalla kathai :)

ரவி said...

அய்யா நீர் எழுத்தாளன்..!!! சொக்கா சொக்கா...பிரைசு உமக்கே கிடைக்க வாழ்த்துக்கள்..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி C M Haniff

நன்றி செந்தழல் ரவி. என் பூவுக்கு முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன். கூச்சமா இருக்கு சார் உங்க புகழ்ச்சி:-))

கப்பி | Kappi said...

அருமையான கதை! நல்ல கதையோட்டம்!!

வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!!

பினாத்தல் சுரேஷ் said...

THANKS கப்பி பய!

rv said...

கதை நல்லாருக்கு பெனாத்தலார். வெற்றி பெற வாழ்த்துகள். எல்லாரும் இலவசமா விக்கிறீங்களா இப்போ?

---
பை தி வே, பமக வின் முழு பலத்தோட இறங்கி ஒரு கலக்கு கலக்கிடுவோமா?

நிர்மல் said...

செண்டிமென்ட் கதை சுரேஷ்.

//FDA ரூல்ஸ்படி மெயின் ஐட்டத்துக்கு மட்டும்தான் எக்ஸ்பயரி பாப்பாங்க. இதைப் பிரமோஷனா ஆக்கிட்டோமுன்னா டேக்ஸ் ரிபேட்லே ஒரு 50%கிட்டே சால்வேஜ் பண்ணிடலாம் இல்லையா//

இவ்வளவு வீக்காவா FDA இன்ஷ்பெக்ஷன் இருக்கு?

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க டாக்டர், நன்றி.

தாலிடோமைடைப்பத்தி அந்தக்காலத்துலே ஒரு கதையிலே படிச்சேன், அப்புறம் கதைக்கு ஐடியா வந்ததும் விக்கிபீடியாவுலே பாத்தேன் (விக்கிப்பசங்க இல்ல சாமி.) அந்த மேட்டர் கரெக்டா சொல்லுங்க டாக்டர்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நிர்மல் உங்கள் கருத்துக்கு.

அமெரிக்காவின் FDA ரூல்ஸ் கொஞ்சம் கூகுள் பண்ணிப்பாத்தேன், இவ்வளவு டெக்னிகலா விஷயம் தெரியல. ஆனா, வேற ஒரு நாட்டுலே பாதிக்கப்பட்டேன், (இலவசப்பொருள் எக்ஸ்பயரி தாண்டி இருந்தது) அப்போ விசாரிச்சதிலே தெரிந்த தகவல்தான் இது.

murali said...

"தாலிடோமைட்" பற்றிய விளக்கத்திற்கு மிக நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

இலவசக்கொத்தனார் said...

இலவசமுன்னா நல்ல ஐயிட்டம் கிடைக்காதுன்னு நம்மளை வார முடிவு செஞ்சிட்டீங்க. :)

ஷைலஜா said...

நல்ல கதைபடித்த திருப்தி.பரிசினை வெல்ல வாழ்த்துகள்!
ஷைலஜா

பினாத்தல் சுரேஷ் said...

மீண்டும் நன்றி முரளி.

இலவசமாக் கிடைக்கறது எல்லாமே மோசம்னு சொல்லி பின்னூட்டத்துக்கே மோசம் செய்துப்பனா நான்? விக்கிலே வேற கூடவே காலம் தள்ளவேண்டியிருக்கு;-)

நன்றி ஷைலஜா.

ஓகை said...

ஐயா பினாத்தல்,
நல்ல சேதி சொன்ன நல்ல கதை.

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஓகை.

Anonymous said...

சுரேஷ்,

முடிவை யூகிக்க முடிந்தாலும் வித்தியாசமான கதைக்களத்தில், பிரம்மாண்டமாய், சமூக சிந்தனையோடு (ஷங்கர் படம் போல) இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

G.Ragavan said...

அம்மாவுக்கு என்ன ஆச்சென்று சொன்னதுமே ஊகிக்க முடிந்த முடிவுதான் என்றாலும் ரசித்த கதை. ஊகித்த முடிவுதான் வரவேண்டும் என்ற விருப்பம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை சுரேஷ்.

போட்டியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி விக்கி.. ஷங்கரா.. கொஞ்சம் டூ மச்சாத் தெரியல?;-)

ராகவன், நன்றி. ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம பக்கம் வந்திருக்கீங்க!

பழூர் கார்த்தி said...

வாழ்த்துக்கள் பினாத்தலாரே, கலக்கி இருக்கிறீர்கள் !!

<<>>

பின்னூட்டங்களை படித்த பிறகே தாலிடோமைட் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. முடிந்தால் கதையில் தாலிடோமைட் பக்கத்தில் ஒரு * (ஸ்டார்) போட்டு விட்டு, கீழே அந்த பின்னூட்ட விளக்கத்தை கொடுத்து விடுங்களேன்...

<<>>

வித்தியாசமான கதைக்களத்திற்காகவும், அதை அருமையாக தலைப்புடன் இணைத்ததற்காகவும், போட்டியில் வெற்றி பெற போவதற்காகவும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் !!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பழூர் கார்த்தி, உங்கள் விமரிசனத்துக்கும் ஆலோசனைக்கும். ஆலோசனையை அமல்படுத்திவிட்டேன்.

Anonymous said...

Good job. Nice story and the explanation about the drug was great. For more information

http://en.wikipedia.org/wiki/Thalidomide

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி prasams

Divya said...

An informative post, All the best to win the contest.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி திவ்யா.

பினாத்தல் சுரேஷ் said...

படியுங்கள்.. படியுங்கள்.. ஓட்டுப்போடுங்கள். தோழர்களே..

ரவி said...

ஓட்டை போட்டாச்சு (வெளிய சொல்லலாமா கூடாதா ?)

:))))))))))))

பினாத்தல் சுரேஷ் said...

என்ன கேக்கறீங்க ரவி? இதைச் சொல்லணும்! எல்லார்கிட்டயும் சொல்லணும்..உங்க ரசிகர் மன்றத்துக்கும் சொல்லணும்..சொல்லிகிட்டே இருக்கணும்..

பத்மா அர்விந்த் said...

சுரேஷ்
சீஷொபிரினியா இத்தனை வன்முறை காயங்கள் ஏற்படுவது இல்லை. தவறாமல் மருந்து எடுத்து கொள்ளும்போது அது ஒருவகையில் கட்டுப்பாடில் இருக்கும். அதுவும் அத்தனை பெரிய பணக்காரர் வீட்டில் மருந்து வாங்க முடியும். இன்னும் சிலர் பொது இடங்களில் பணியாற்றுவதும் உண்டு அவரவர் நோயின் தீவிரம் பற்றியது அது.
அமெரிக்க FDA சில மருந்துகள் குறுகிய காலத்தில் அனுமதிக்கப்பட்டு பக்கவிளைவுகள் கண்டு திரும்ப பெறப்படுவதும் உண்டு. நல்ல எழுத்து நடை.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மா. இந்தக்கதை எழுத ஆரம்பித்தவுடனே உங்களிடம் சில மேல்விவரங்கள் கேட்கலாம் என நினைத்தது உண்மை (உங்கள் பதிவுக்ள் வாயிலாக உங்களுக்கு FDA பற்றித் தெரிந்திருக்கும் என ஒரு நம்பிக்கை). ஆனால், கதையின் ஓட்டத்தில் மறந்துவிட்டேன்.

சிஷோப்ரினியா பற்றிய தகவலுக்கும் நன்றி. ஆனால், கதைப்படி, 40 - 50 வருடங்கள் பாதிக்கப்பட்ட நோயாளி, என்னதான் மருந்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், சில நேரங்களில் அத்துமீற வாய்ப்பு உண்டு எனக் கற்பனைச் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

FDA வின் மிகப்பெரிய சறுக்கல் தலிடோமைட் என்பது மறுக்க முடியாத உண்மைதானே?

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.

ஷைலஜா said...

வெற்றிக்கு வாழ்த்து சுரேஷ்.
ஷைலஜா

பத்மா அர்விந்த் said...

சுரேஷ்
வாழ்த்துக்கள். தலிடோமைட் சறுக்கல் என்பது உண்மைதான். இப்போதெல்லாம் உணவு துரை மூலம் வரும் நிறைய சக்தி மருந்துகளால் நிறைய குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். விளக்கமாக பிறகு பேசுவோம்.
நேற்று ஒருகதைக்கான கரு (உண்மை நிகழ்ச்சி) கிடைத்தபோது உங்களை நினைத்துக் கொண்டேனிதை எப்படி எழுதுவீர்கள் என்று. தனிமடலில் நிகழ்ச்சியை அனுப்புகிறேன். மின்மட்ல முகவரி தாருங்கள்.padma.arvind@gmail.com.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிறில், உங்களுக்கும் வாழ்த்துகள்.

ஷைலஜா, நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்.

பத்மா, நன்றி. என் முகவரி sudamini AT gmail DOT com.

Anonymous said...

வாவ்!! ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!!
பரிசு பெற்றதற்காக வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சரவ்.

ILA (a) இளா said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!

ராசுக்குட்டி said...

நல்ல கதைக்களம் நல்ல கருத்தும் கூட

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சுரேஷ்!

மதுமிதா said...

வாழ்த்துகள் சுரேஷ்

 

blogger templates | Make Money Online