Nov 28, 2006

விழித்தெழுந்தது தூங்கிய சிங்கம் (28 Nov 06)

போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு பாட்டுப் பாடின சிங்கம், கொஞ்ச நாளா தூங்கப் போயிடிச்சு. அதுக்காக போட்டியில கலந்துக்கலையான்னு கேக்காதீங்க! ஒரு முறை தவிர, எல்லா தேன்கூடு போட்டியிலையும் கலந்துகிட்டது என்னமோ உண்மைதான். அது தவிரவும் தடாலடி அது இதுன்னு எங்கே போட்டி நடந்தாலும் தன் மூக்கை நுழைச்சதும் உண்மைதான், அந்த மூக்கு (கொஞ்சம் நீளம் அதிகமான மூக்கு) பலமுறை உடைபட்டதும் உண்மைதான். சிங்கம் கொஞ்சம் அமைதியா உக்காந்து யோசிச்சுப் பாத்துது.

"உனக்கு ஒரு மூணு போட்டியில முதல் பரிசு கிடைச்சுதுன்னா அதுக்கு என்ன காரணம்?

போட்டியெல்லாம் புதுசா இருந்த காலம், நெறையபேர் கலந்துக்கலைன்றது முக்கிய காரணம்.
யதேச்சையா உனக்குத் தோணின விஷயங்கள் போட்டி கருத்துக்கு ஒத்துப்போன அதிர்ஷ்டம் ஒரு காரணம்.
போட்டிகளோட ரீச் பெரிசா வராத நேரம், பெரிய பெரிய பார்ட்டிங்க எல்லாம் அப்பால பாத்துக்கலாம்னு வழிவிட்டுட்டது ஒரு காரணம்.

இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோ, தெளிஞ்சுக்கோ (விக்கிப் பசங்க டேக்லைன் - இதைத்தான் இன்லைன் அட்வர்டைஸ்மெண்டுன்னு சொல்வாங்களோ?). அடங்கி வாழு!"

இப்படி அந்த சிங்கம் அடங்கி வாழ முயற்சி பண்ணாலும், போட்டியில கலந்துக்கறதை மட்டும் கைவிடல! மறுபடி அந்தப் பொற்காலம் (ரசிகர்களுக்கு போதாத காலம்) வாராதான்னு எல்லா முடிவுகளையும் பார்த்துப் பெருமூச்சு விடறதோட சரின்னு இருந்துது.

விடாமுயற்சியைப் பாராட்டி ஒரு பரிசு கொடுக்கவே கொடுத்துட்டாங்க.

தேர்ந்தெடுத்த வலைப்பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சிறப்பு நடுவர்களுக்கு என் நன்றி.


--
With Best Regards,

R Suresh Babu

6 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.. இன்னும் உங்க கதை படிக்கலை.. படிக்கணும்.. அதைப் படிச்சிட்டு திரும்ப வர்றேன்..

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!

Anonymous said...

நடுவர் பத்மா அரவிந்த் அவர்களின் கருத்துக்கள்:

அவ்வளவு சிறப்பானதாக பெரும்பான்மையான ஆக்கங்கள் படவில்லை. - தேன்கூடு.

- படித்தீரா, இந்தக் கருத்தை. வாசகர் செலக்க்ஷனுக்கும், வலைப்பதிவர் செலக்க்ஷனுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த முறை உங்களது பதிவும், சுமார்தான். இதுல போயி சிங்கம்..அசிங்கம்னு பாடிட்டு இருக்க வேண்டாம்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பொன்ஸ், படித்து விடுங்கள்:-)

நன்றி சிபி, உங்களுக்கும் வாழ்த்துகள்.

லொடுக்குவின் வாழ்த்து, நீக்கப்பட்டுவிட்ட இன்னொரு பிரதிக்குச் சென்றுவிட்டது, நன்றி லொடுக்கு.

அருண்குமார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முதலில் சிங்கம் அசிங்கம் என்று பாடியது - அது என்னை நானே அடித்துக்கொண்ட கிண்டல். சில மாதங்களுக்கு முன், போட்டிகள் பிரபலமடையாத நேரத்தில் பெற்ற வெற்றிகளை வைத்து "போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்"னு அளவுக்கு மீறி ஆடியிருந்தேன் (என் வழக்கத்துக்கு மாறாக). சிங்கம்(?!) தோற்ற தருணங்களை எடுத்துக்காட்டி அடங்குடா எனச்சொன்ன பதிவுதான் இது. சுமார்தான் என்ற உங்கள் கருத்தை மதிக்கிறேன்.

வாசகர் பட்டியலுக்கும் நடுவர் பட்டியலுக்கும் சம்மந்தமில்லாதது பற்றி:

தேன்கூடு போட்டிகளைச் சற்று கவனித்தீர்கள் என்றால் ஒவ்வொரு மாதமும் அதன் பார்மட்டில் சில வித்தியாசங்கள், மேம்பாடுகள் இருப்பதைக் காணலாம். பெரும்பான்மையான மேம்பாடுகள் பதிவர்கள் சொன்னவை என்பது அவர்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையைக் காட்டுகிறது என நம்புகிறேன். (எனக்கும் தேன்கூட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்:-))

அங்கே இதைச் சொன்னால் அடுத்த போட்டி மேம்படலாம்.

மீண்டும் உங்கள் கருத்துக்கு நன்றி.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கப்பி பய@!

 

blogger templates | Make Money Online