May 26, 2006

நன்றி! (26 May 2006)

பொதுவாக என் மனசு தங்கம்..
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

இணையத்தில், வலைப்பதிவுகளில் நான் கலந்து கொண்டதே மூன்று போட்டிகள்தான்.. அவை மூன்றிலும் (வெங்கட் நாராயணனின் 'நம்பிக்கை" கவிதைப்போட்டி, முகமூடியின் சிறுகதைப்போட்டி மற்றும் தேன்கூடு-தமிழோவியத்தின் தேர்தல்-2060 போட்டி) நானே முதல் பரிசு பெற்றிருப்பதை நினைத்தால்..

மன்னியுங்க.. அடங்குடா மவனேக்கு இன்னிக்கு லீவு:-))

44 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

கலக்குங்க தலைவா!! வ.வா.ச பத்தி நீங்க என்ன தான் எழுதினாலும், ஒரு தன்னிகரில்லாத தலைமையை உடைய எங்க கட்சி உங்களுக்கு முதல் வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறது!! :)

ramachandranusha(உஷா) said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் !அப்படியே தேன் கூட்டுல விசாரிச்சி சொல்லுங்க, நானே போட்டுக்கிட்ட ஓட்டு அல்லாம வேற ஓட்டு ஏதாச்சும் எனக்கு விழுந்துதான்னு - ஹீம்! (இது பெமூச்சுங்ங்க)

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா, ரெண்டே கமேண்டு இருந்தாலும் மகளிர் ஆதரவு அமோகமா இருக்குடா பினாத்தல் உனக்கு:-)

நன்றி பொன்ஸக்கா.. அது எப்படி மத்தவங்களை பாராட்டினாலும் விளம்பரத்தை மறக்க மாட்டேங்கறீங்க்:-)

நன்றி உஷா அக்கா, நானும் போட்டேனே!

பினாத்தல் சுரேஷ் said...

thanks jojo

மதுமிதா said...

போட்டி நடந்ததே இப்ப தான்
இந்த பதிவைப் பார்த்த பிறகுதான் தெரியும்.

இங்கே வர ஒரு மாதத்துக்கு மேலானதால தெரியல.

மனமார்ந்த வாழ்த்துகள் சுரேஷ்.

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.... உங்களுக்கு பரிசு கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுக்க முடியும்?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மதுமிதா.

நன்றி லக்கிலுக்.

பட்டணத்து ராசா said...

வாழ்த்துகள் சுரேஷ்.

Geetha Sambasivam said...

சுரேஷ்,
ஏற்கெனவே எங்க கொ.ப.செ. வாழ்த்திட்டாங்க எங்க சங்க சார்பிலே. நானும் வாழ்த்திடறேன் நிரந்தரத் தலைவலிங்கற முறையிலே.

Prabu Raja said...

பரிசு எல்லாம் கொடுக்கறாங்க.. ஆனா கஷ்டப்பட்டு பதிவு எழுதினா பின்னூட்டம்தான் போட மாட்டேங்கிறாங்க.

பெனாத்தலார் வருத்தம் யாருக்கு புரியுது?

நீங்க மனச தளர விடாதீங்க சுரேஷ். ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த ப்ளாக் உலகத்தில் அதிக பின்னூட்டம் பெறப்போவது நீங்கள்தான்.

மணியன் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன ?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பட்டணத்து ராசா..

நன்றி நிரந்தரத் தலைவலி.. ஆனா நீங்க இன்னும் அந்தக்கதையில் உங்கள் கமெண்ட்டோட அர்த்தம் சொல்லவே இல்லையே??

நன்றி கேவிஆர். உங்கள் ரிக்ஸா பிரசாரத்துக்கும் சேர்த்து:-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் சுரேஷ்.

பினாத்தல் சுரேஷ் said...

பிரபுராஜா, மணியன், நன்றி.

நான் இப்போது எழுதி பெரும் வரவேற்பைப்பெற்ற பல விஷயங்கள் 10 - 15 ஆண்டுகள் முன்பு நடந்தவை. அன்று எழுதியதை இன்று என்னாலேயே, பினாத்தலிலேயே பப்ளிஷ் செய்ய முடியாது.

ஆனால் இன்று ஓரளவு படிக்கும் படி எழுத முடிகிறதென்றால் அதற்குக்காரணம், பின்னூட்டங்கள் மூலம் வாசகர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப எழுத முயலுவதுதான்.

எனவே பின்னூட்டங்களீன் எண்ணிக்கையை அல்ல, பின்னூட்டங்களின் தரத்தை அதிகமாக விரும்புகிறேன். உங்கள் வாழ்த்து பலித்தால் நல்லதுதான்.

மணியன், வெற்றியின் ரகசியம் - எனக்கே ரகசியமா இருக்கே:-))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரன்.

லதா said...

// தேன்கூடு-தமிழோவியத்தின் தேர்தல்-2060 போட்டி) நானே முதல் பரிசு பெற்றிருப்பதை நினைத்தால்.. //

வாழ்த்துகள் சுரேஷ்

இலவசக்கொத்தனார் said...

தலீவா,

ட்ரீட் எங்க? மீன்கொத்தியும் தங்ககழுகும் உண்டுதானே?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லதா..

நன்றி கொத்தனார்.. ட்ரீட் எங்கே வெச்சுக்கலாம்? சைபர்ஸ்பேஸ்லேதானே?

Geetha Sambasivam said...

அதுல பாருங்க சுரேஷ், சமீப காலங்களில பழைய கதையே சொல்லிக்கிட்டு இருக்கேனா? எந்தக் கதை? என்ன கமெண்ட்டுனு சொன்னாப் புண்ணியமாப் போகும். வயசாகுது பாருங்க, மறந்து போயிடும். இப்போதான் 22-ம் தேதி என்னோட 16வது பிறந்த நாளை 100வது முறையாக் கொண்டாடினேன்.

ilavanji said...

வாழ்த்துக்கள் சுரேஷ்! :)

Boston Bala said...

கையக் கொடுங்க சுரேஷ் :-)

Sivabalan said...

சுரேஷ்,

வாழ்த்துக்கள் !!

பினாத்தல் சுரேஷ் said...

கீதா,

தேர்தல் 2060 பதிவுலே, old is gold nu cryptic-ஆ ஒரு கமெண்ட் போட்டிருந்தீங்க, அதைப்பத்திக்கேட்டேன்.

இளவஞ்சி, நன்றி.

பாஸ்டன் பாலா, நன்றி. என்னுடைய முதல் பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்கள் சுருக்கமாகவும் புள்ளியை நோக்கியதாகவும் (to the pointங்க:-)) இருப்பதைக்கண்டதும் என் inspirationகளில் ஒன்று.

நன்றி சிவபாலன்.

சிறில் அலெக்ஸ் said...

நிஜமாவே எல்லாத்திலேயும் முதலா?
நம்பவே ...

வாழ்த்துக்கள் சுரேஷ். கலக்கிட்டீங்க. வெற்றியின் இரகசியத்த நமக்கு தனி மடல்ல தெரிவிக்கவும்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிறில் அலெக்ஸ்.

ரகசியத்தை ஏற்கனவே மணியனுக்குக் கொடுத்த பதில்லே ஒப்பனா சொல்லிட்டேனே:-))

Anonymous said...

peenaaththal,

congrates.

முகமூடி said...

வாழ்த்து, வாழ்த்துகள், வாழ்த்துக்கள் (எப்பிடிய்யா இது...)

ஓகை said...

வாழ்த்துக்கள் நண்பரே!

இப்னு ஹம்துன் said...

சுரேஷ்,
அன்பான வாழ்த்துக்கள்.
நல்லவேளை, நான் கலந்துக்கலை:-)))!

Geetha Sambasivam said...

old is always GOLD.
No change in it.
Evergreen leader of va.vaa.sangam.

பொன்ஸ்~~Poorna said...

தேன் கூட்டின் இன்றைய பதிவாளர் ஆனதற்கும் வாழ்த்து :)

//மத்தவங்களை பாராட்டினாலும் விளம்பரத்தை//
விளம்பரத்தை நம்ம தானே பண்ணனும்.. வேற யாரு பண்ணுவாங்க?!!

பினாத்தல் சுரேஷ் said...

அனானி அண்ணா, வாழ்த்தறதுக்காவது பேர் சொல்லப்படாதா?

முகமூடி தல, நன்றி, நன்றிகள், நன்றிக்கள்!

நன்றி ஓகை, முதலிலேயே பாராட்டியவர்களில் முக்கியமானவர் அல்லவா நீர்..

இப்னு ஹம்துன், நீங்க கலந்துக்காத்தலே நான் ஜெயிச்சேன்னு சொல்லணும் சார்.. பந்தா முதல்லே, பணிவு எல்லாம் அப்பாலே:-)

கீதா, மறுபடியும் cryptic-ஆ பதில் சொன்னதோட மட்டும் அல்லாம, விளம்பரத்தை வேற சேத்துக்கிட்டீங்களா? இது என்ன வ வா ச வோட Orientations-லேயே உண்டா?

பொன்ஸ், நன்றீ..

தருமி said...

ட்ரீட் எங்க? மீன்கொத்தியும் தங்ககழுகும் உண்டுதானே?//

என்ன கொத்ஸ், சும்மா மறுபடியும் மறுபடியும் அதே மீன்கொத்தியும் தங்ககழுகும் தானா? மாத்துங்கப்பா ...

சுரேஷ் - வாழ்த்துக்கள்

பொன்ஸ்~~Poorna said...

//இது என்ன வ வா ச வோட orientation-லேயே உண்டா?//
கண்டனங்கள்.. இது தானாச் சேர்ந்த கூட்டம்.. என்னவோ நாங்களா ஒவ்வொருத்தருக்கும் ட்ரெய்னிங் கொடுத்து சேர்த்தா மாதிரி இல்லை சொல்றீங்க?!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தருமி..

பினாத்தல் சுரேஷ் said...

//தானாச் சேர்ந்த கூட்டம்//

ஆமா! தலைவனைக் காணாம,

தானாச் சோர்ந்த கூட்டம் கூட!

Unknown said...

Congrats Penathal!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி துபாய்வாசி, நீங்கதான் அந்தக்கதைக்கு முதல் பின்னூட்டம்:-) போணி சூப்பர்!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் சுரேஷ்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வாழ்த்துக்கள் நண்பா..மேலும் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அட பொறாமையா இருக்குப்பா.. :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிபி, எங்கே ஆளையே காணோம்?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஞானியார்..

Anonymous said...

Apologies for the delay

CONGRAJULATIONS

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானிமஸ்..

தாமதத்துக்கெல்லாம் மன்னிப்பு கேக்கறீங்க, பேர் சொல்லப்படாதா?

 

blogger templates | Make Money Online