May 24, 2006

ஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24 May06)

வலைப்பதிவர் பெயர்: பினாத்தல் சுரேஷ்

வலைப்பூ பெயர் : பினாத்தல்கள்

உர்ல் : http://penathal.blogspot.com

ஊர்: ஷார்ஜா


நாடு: ஐக்கிய அரபு அமீரகம்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சுயம்பு. வலையில் தடுமாறி, தடம் மாறி இடம் தேடி இன்னும் அலைகிறேன்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 15, 2004


இது எத்தனையாவது பதிவு:150ஐத் தாண்டிக்கொண்டிருக்கிறது

இப்பதிவின் உர்ல்: http://penathal.blogspot.com/2006/05/24-may06.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை வெளியிட, என் திறமை(?1)யைப் பறைசாற்ற.


சந்தித்த அனுபவங்கள்: நிறைய!

பெற்ற நண்பர்கள்: நிறைய!

கற்றவை: பல இருந்தாலும், முக்கியமான ஒன்று மட்டும்: நான் அப்ப்டி ஒன்றும் பெரிய முட்டாளில்லை, புத்திசாலியாய் நினைத்தவர்கள் எந்நேரமும் புத்திசாலியும் இல்லை.


எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: வானளவு இருந்தாலும், அடுத்த ஆளுக்கும் அந்த வானத்தில் இட உரிமை இருப்பதை மதிக்கிறேன்.

இனி செய்ய நினைப்பவை: தொடர்வேன் என் பினாத்தலை.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: தமிழ்மணம் நட்சத்திரத்துக்காக எழுதியது இங்கே:

பெயர் இரா.சுரேஷ் பாபு

வயது பத்திலிருந்து ஐம்பது வரை - இடத்துக்கு ஏற்றவாறு மாறும்.

தொழில் கனரக வாகனங்கள் சார்ந்த பொறியியல் - உபயோகிப்போருக்கும் பராமரிப்போருக்கும் அவற்றின் தொழில்நுட்பம் பற்றி விளக்கும் ஆசிரியர்.

வலைப்பதிவு பினாத்தல்கள

அனுபவச் சிதறல்கள் என எழுத ஆசைதான் - ஆனால் அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!

ஏன் வலைப்பதிகிறேன்? எனக்குப் பெரியதாக எந்தக் கொள்கையும் கிடையாது - அப்படியே இருந்தாலும் அவற்றோடு காதலும் கிடையாது.

அனுபவஸ்தர்கள் லாஜிக்கோடு கூறினால் எதையும் ஏற்றுக்கொள்வேன் - இதனாலேயே கேட்டுக்கொள்வதில் என் தகுதி அதிகமாகி, நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. என் கருத்துக்களை நான் எங்கேதான் கொண்டு கொட்டுவது?

இலக்கற்று வலை மேய்ந்த காலத்தில் ஏதொ ஒரு கீவேர்ட் (தெய்வ சித்தம்?) என்னை காசியின்"என் கோடு உன்கோடு யூனி கோடு" தொடருக்குள் கொண்டு சேர்த்தது.. தமிழில் எழுதுவது அவ்வளவு கஷ்டம் இல்லை என அத்தொடர் உணர வைக்க..மற்றவை வரலாறு..(இப்படி பெரிய எழுத்தாளர்கள் மட்டும்தான் பீலா விடலாமா என்ன?)


3 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

//அனுபவஸ்தர்கள் லாஜிக்கோடு கூறினால் எதையும் ஏற்றுக்கொள்வேன் - இதனாலேயே கேட்டுக்கொள்வதில் என் தகுதி அதிகமாகி, நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. என் கருத்துக்களை நான் எங்கேதான் கொண்டு கொட்டுவது? //

:))))

மணியன் said...

என்னங்க, ராஞ்சியில் நடந்ததென்ன என்று தலை வெடித்துவிடும் போல இருக்கிறதே ?

பினாத்தல் சுரேஷ் said...

ஹாய் பொன்ஸக்கா, அமெரிக்கா எப்படி இருக்கு?

மணியன், உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி. இப்போது போட்டுவிட்டேன்.

 

blogger templates | Make Money Online