நிறைய நாட்களாய் யோசித்து, விடை தெரியாமல் இன்னும் தவிக்கும் மூன்று கேள்விகளை தெரிந்தவர் முன் வைத்தால் பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதுவதால் இந்தப்பதிவை இடுகிறேன்.
பல வலைத்தளங்களுக்குச் சென்றும் பார்த்துவிட்டேன்,
வலைப்பதிவுகளிலும் இந்தக்கேள்விகளுக்கு விடை எங்கும் அளிக்கப்படவில்லை.
Reservation-இன் வசதியை சில வேளை நான் அனுபவித்திருந்தாலும், பல வேளைகளில் மறுக்கப்பட்டிருக்கிறேன். இல்லாததால் பல பிரச்சினைகளையும் அனுபவித்திருக்கிறேன்.
இதைப்படிப்பவர்கள் திறந்த மனதோடு அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாவிட்டாலும், தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து பதியும் சில பதிவர்களுக்கு விடை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இதோ என் கேள்விகள்:
1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை?
2. Reservation குறித்த முக்கியமான கேள்வி: என்று ஆரம்பிக்கிறது?
3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்?
பி கு: அடிக்க வராதீர்கள் - கொஞ்ச நாட்களாய் வெறும் சீரியஸ் பதிவே போட்டு அலுத்துவிட்டது:-))
31 பின்னூட்டங்கள்:
டென்சன் ஆக்கிட்டப்பா.... ஆர்வமா வந்தா கவுத்துட்டீயே!...
Suresh,
Is there no limit at all for your "kusumbu" :)
migavum rasiththeen !!!!
But, I don't know the answers for your questions (just like Kamal !!)
enRenRum anbudan,
BALA
ஆமாம். எங்களுக்கு சீரியஸ் பதிவு படித்து அலுத்து விட்டது. வாங்க வாத்தியாரே. ஆனா உங்க முதல் கேள்விக்கு எனக்கு பதில் தெரிஞ்சே ஆகணும். கொஞ்சம் மறக்காம கேட்டுச் சொல்லுங்க.
Tamizhil eppadi marumozhi alipathu enbathu theriyathu...eninum...
Mama blog romba supera irukku...naanum vettaiyadu velaiyadukagha than waiting! 2nd june nu solrangha!!theliva theriyale..
அட, நான் இரயில் ரிசர்வேஷனோ என்று நினைத்து விட்டேன். மும்பையிலிருந்து சென்னை செல்ல ரிசர்வேஷன் கிடைக்கவில்லை, சுரேஷ் :))
ஏமாந்தபின் என் முகத்தில் பூத்த நகைக்காக என் நன்றி.
ரெம்ப முக்கியம்????
ஆமா எப்ப ரிலீஸ் ஆகுது:-)))))))
நானும் சீரியஸாகவே பதில் சொல்கிறேன்.
1. ஜூன் 15
2. ஒரு வாரத்திற்கு முன்னால்.
3. ஓவர்சீஸ் ரைட்ஸ் உண்டெனில் அன்றே. இல்லையெனில் இணையத்தில் ஒரு வாரத்திற்குள்.
//1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை? //
கமல் சாரிடம் கேட்டிருக்கின்றேன். போன் பண்ணுவதான கூறினார்
//3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்? //
சிடியிலா ? தியேட்டரிலா? :)
1. வேட்டையாடு விளையாடு படம் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் ஏன் ரிலீஸ் செய்யப்படவில்லை?
படம் ரிலீஸ் செய்யப்படும் முன்பே மாணிக்கம் நாராயணனுக்கு மூன்றரை கோடி நஷ்டமாம்.... கடன் கொடுத்தவர்கள் எல்லாம் Settle செய்துவிட்டு ரிலீஸ் பண்ணு என கழுத்தைப் பிடிக்கிறார்களாம்....
2. Reservation குறித்த முக்கியமான கேள்வி: என்று ஆரம்பிக்கிறது?
படம் ரிலீஸ் ஆவதற்கு மூன்று நாள் முன்னால் ஆரம்பிக்கும்...
3. துபாயில் ரிலீஸ் என்று ஆகும்?
துபாயில் தியேட்டர் இருந்தால் ரிலீஸ் ஆகும்... இல்லை இங்கே ரிலீஸ் ஆகும் அதே நாளில் உங்களுக்கு விசிடி கிடைக்கும்....
அப்படின்னா இவ்வளவு நாளா நீங்க எழுதிக்கிட்டிருந்ததெல்லாம் serious பதிவா? :-)
இனிமேலாவது நேரத்தோட சொல்லுங்கடே!
சாத்தான்குளத்தான்
##பின்னூட்டியவர்:ஆசிப் மீரான் : மே 30, 2006 9:52 AM
என் கைக்கு எப்போ 'ஒரிஜனல்' சிடி கிடைக்குதோ, அப்ப இங்கே ரிலீஸ் ஆகும்:-)))))
##பின்னூட்டியவர்:துளசி கோபால் : மே 30, 2006 9:56 AM
மண்டை காய வெச்சிட்டீங்களே பெனாத்தல்!!!
:-(
ஏமாந்துதான் போய்ட்டேன்.
ஆனா இந்த கேள்வியும் நியாயமானதுதான்.
நானும் ரொம்ப நாளா எதிர் பாத்துகிட்டு இருக்கேன். எப்ப Reservation starting???
##பின்னூட்டியவர்:பிரபு ராஜா : மே 30, 2006 10:56 AM
:-)))))))))))))))))))))
##பின்னூட்டியவர்:குமரன் (Kumaran) : மே 30, 2006 3:13 PM
ரெண்டு பதிவையும் ஒண்ணா ஆக்கினதால, பின்னூட்டங்கள் என் பெயர்ல்லே வந்திருக்கு.
சந்திப்பு - வருகைக்கு நன்றி:-))
நன்றி பாலா.. எப்பவும் சீரியஸாவே இருக்க முடியுமா?
இலவசம்,
கீழே கேவிஆரும் பாலாஜியும் சொல்லியிருக்காங்அ (முரண்பாடு இருந்தாலும்:-))
பாலாஜி, எப்படி இருக்கே? சுதாமினி@ஜிமெயில்.காம் -கு மெயில் போடு!
மணியன், அருமையன டாபிக், இட ஒதுக்கீடுன்னே போடலாம்.. வுட்டுட்டீங்களே!
நன்றி ஓகை
நன்றி மனசு.. ரெம்ப முக்கியம் போலத்தான் தெரியுது:_)))
நன்றி கேவிஆர்.. நீங்க ஒருத்தராவது சீரியஸா பதில் சொல்றீங்க! இந்தக் கொசபேட்ட அண்ணாத்தே ரொம்ப மோசம்!
//கமல் சாரிடம் கேட்டிருக்கின்றேன். போன் பண்ணுவதான கூறினார்//
நிலவுக்கே நண்பன்.. பெரிய ஆளுதான் சார் நீங்க!
லக்கிலுக், தகவல் சுரங்கமா இருக்கீங்க!
நன்றி. (டா வின்சி கோட் கருத்துவிலிருந்து டவுன்லோடு பண்ணிக்கொண்டேன், அதற்கும் சேர்த்து நன்றி)
:-)
சாத்தான்குளத்தாரே..
இப்போ கொஞ்ச நாள்னுதானேங்க சொன்னேன்.. சீரியஸா எழுதியா "பினாத்தல்"னு கவித்துவமா பேர் வைப்பேன்??
துளசி அக்கா, படம் நல்ல இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்.. "உங்க விமர்சனத்துக்கு"த் தகுதியா வராதுன்னு நம்பறேன்!
பிரபுராஜா, ஏமாந்ததை நீங்களாவது ஒத்துகிட்டீங்களே:-)) நன்றி
குமரன், எங்கேயோ ஒரு இடத்துலெ :-)ன்னு போட்டா படிச்சேன்னு அர்த்தம்னு சொல்லி இருக்கீங்க..
இங்கே :_)))))))))))))))னு போட்டதுக்கு ரொம்பப்படிச்சீங்கன்னு எடுத்துக்கலாமா?
நன்றி கோபி!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம், இந்த முதல் பரிசு கிடச்சதுல இந்த மாதிரி ஷாக் ஆகிட்டீங்கனு நினைக்கிறேன். அடுத்த பதிவு கொஞ்சம் பரவாயில்லை. தெளிஞ்சுக்கிட்டு வருது.
Evergreen leader of Va.Vaa.Sa.
Post a Comment