May 7, 2006

தேர் நிலைக்கு வரட்டும் (07May06)

இன்னும் மிஞ்சிப்போனால் ஐந்து நாள், தேர்தல் சமாசாரங்கள் மூட்டை கட்டப்படும்.
 
ஆனால், பிறகும் நாம் ஆட்டத்தில்தான் இருப்போம், தேர்தல் அல்லாத அரசியல் அல்லாத பதிவுகளை இட்டுக்கொண்டு. (அப்பாடா எனச் சிலர் பெருமூச்சு விடுவது தெரிகிறது)
 
அந்த மாற்றத்துக்கு என்னைத் தயார் படுத்திக்கொள்ள வெள்ளோட்டமாய் இந்தப்பதிவு.
 
முத்துவின் கனவு காணும வாழ்க்கை எல்லாம்... பதிவில் பின்னூட்டமாக இந்தக்கவிதையைப் போட்டிருந்தேன்.
 
சில பின்னணித் தகவல்களையும் கூறி, தனிப்பதிவாக உயர்த்தினால் இன்னும் சற்றுக் கவனம் பெறும் என்பதால் இந்தப்பதிவு.
 
இப்போது, கீதாவும் ஜெர்மன் முத்துவும், நாமக்கல் சிபியும், தருமியும் என் படிமக்(?)கவிதையைப் படித்து, என் மனநிலையைப்பற்றித் தீவிர சந்தேகம் கொண்டிருப்பதால், நான் பொறவி படிமக்கவிஞன் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் இதை தற்போது வெளியிடுகிறேன்,
 
நானும் ஒன்றும் பிறவி கவிப்பகைவன் அல்ல - கவிதை என்ற பெயரில் வெளிவரும் வார்த்தை ஜாலங்கள், மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள், பார்வையாளனுக்குப் புரிவதைப்பற்றிக் கவலையே படாத சொல்லாடல்கள் - இவற்றையே கண்டு சுணங்குகிறேன் - கவிப்பகைவனும் அப்படித்தான் என்பது அவர் பதிவு வாயிலாகத் தெரிகிறது.
 
இந்தக்கவிதை (உங்கள் தீர்ப்புக்குப் பிறகு தேவைப்பட்டால் கவிதை என்பதைத் திருத்திவிடுகிறேன்:-)) எழுதியது 16 வருடங்களுக்கு முன்பு. எழுதும்போது வைத்த தலைப்பு - நானும் என் இரண்டு உலகங்களும் (பாத்தீங்களா அப்பவே இந்த உம் போடறதை ஆரம்பிச்சிட்டேன்.)
 
பீஹாரில் வேலைக்குச் சேர்ந்து, Project Siteக்கு தினமும் போக ஆறு கிமீ, வர ஆறு கிமீ என்று திணிக்கப்பட்ட உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது. சத்தியமாக அப்போது நவீன கவிதை, படிமக்கவிதை லொட்டு லொசுக்கு எல்லாம் எனக்குத் தெரியாது. (இப்போதும் தெரியாது என்பது வேறு கதை).
 
வளர்த்துவானேன், படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
 
நானும் என் இரண்டு உலகங்களும்
நாட்டைத் திருத்த
சட்டங்கள் செய்ததும்
விடியும் பொழுது.

கிளம்பும் பரபரப்பில்
சற்று ஓய்வு.

வெற்றியை எட்டியவனுடன்
எதிர்ப்பவனின் தோல்வியைப்
பேசி நடப்போம் வேலைக்கு.

யதார்த்தத்தின் பரிச்சயம் சற்று
வேலை நேரத்தில்.
நோபல் எழுத்தாளனும்
நோபாலில் சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேனும்
உடன்வரத் திரும்புவோம்.

அறைக்கதவடியில்
செய்தித்தாள்
என் சாதனைகளை
சாதித்தவனைப்பாராட்டும்.

நனவை மறக்க
மீண்டும் இரண்டாம் உலகில்
நான்.

5 பின்னூட்டங்கள்:

நாகை சிவா said...

அருமையான பினாத்தல்...............
அன்புடன்
நாகை சிவா

துளசி கோபால் said...

இதுக்குப் பின்னூட்டம் என்னன்னு போடறது? தெரியலையேப்பா!
ஆங்....தலைப்புக்குப் பின்னூட்டம் போட்டுறலாம்.
தேர் நிலைக்கு வரட்டும்.

ஆஹா... அருமையான தலைப்பு. படிச்சவுடனே அப்படியே அந்தக் காலத்துக்குப்
போயிட்டேன். கொசுவர்த்தி ஏத்திறட்டுமா?ம்ம்ம்ம்ம்ம்ம்

இன்னும் தேர்தல் பேச்சுங்க எல்லாம் தலைக்குள்ளெயே சுத்தறதாலே இதுக்கு மேலே
சிந்திக்க(!) முடியலைப்பா.

Geetha Sambasivam said...

திரு, பெனாத்தல்,
16 வருஷத்திற்கு முன்பே பெனாத்தல் தானா? இப்போது புதிது இல்லையா?ஆனாலும் நன்றாகவே பெனாத்துகிறீர்கள்.இன்னமும் வெயிலின் தாக்கம் பற்றிச் சந்தேகம்தான்.

Geetha Sambasivam said...

தேர்தலுக்குப் பின்னும் பெனாத்த விஷயம் வைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகை சிவா.

அக்கா, நன்றி, உங்களுக்கு கொசுவத்தி சுத்த மேட்டருக்கா பஞ்சம்?

கீதா, நான் பொறவிக்கவிஞன் இல்லைதான் - ஆனா பொறவிப் பினாத்தல்! பினாத்தறதுக்கு என்னிக்கு மேட்டர் பஞ்சம் வந்துருக்கு?

 

blogger templates | Make Money Online