May 3, 2006

நானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்

வேலை கொடுத்தவர் மேலதிகாரியாக இருந்தால் அவரிடம் விதிமுறைகளைக்காட்டித் தப்பித்திருக்கலாம்.
 
எதிரியாக இருந்திருந்தால் பொருதிருக்கலாம். இரண்டில் ஒன்று பார்த்திருக்கலாம்.
 
சமநிலைத் தோழனாக இருந்திருந்தால் புரியவைத்திருக்கலாம்.
 
ஆனால், அந்தகோ! என்ன செய்வேன்.. என்னைப்பணித்தது என் ஆசான் அல்லவா!
 
சாத்தான்குளத்து வித்தகன், அமீரகத்து ஆசான், எங்கள் கவிமடத் தலைவன் முத்துவின் கவிதையைப் பார்த்து, மக்களுக்குக் கவிபயில்விக்கும் காலம் கனிந்ததெனக் கண்டான்.  கவியின் வகையும் தொகையும் அவன் சிகைக்குள் அடக்கம்! அவன் பகைக்கு நடுங்கும்!
 
அவன் என்னைப்பணித்தான் - முத்துவின் நாய் துயரத்தில் இருக்கிறது அத்துயரை நீ ஒரு நீள்கவிதையாய் பதிவு செய் என்று.
 
ஆசானே, ஏற்கனவே உலகம் நம்மைக் கவி வெறுக்கும் பாசிச கும்பலென்று தூற்றுகிறதே, அதையும் தாங்கலாம் - அறிவுஜீவியென்று ஏளனம் செய்கிறதே - என்றேன். நான் எந்த வசையையும் ஏற்பேன் -அறிவுஜீவியென்ற வசையைத் தவிர!
 
எனினும், என் இதயத்தைக் கல்லாக்கி, குருவின் பாதாரவிந்தங்கள் பணிந்து, இக்கவியை சமர்ப்பிக்கிறேன்.
 
யாராரோ கேட்டிருக்கும் என்குரல்
 
பிரபஞ்சத்தின் மூலையின் தெருவோரத்தில்
பிறிதொரு நாள் கழித்திட்ட
குப்பைகள்
என் தினத் தூக்கத்தின்
கட்டியம் சொல்லும்.
 
என் எல்லை நானறிவேன் -
அறியாத பதர்களுக்கு
உரத்து உரைப்பேன்.
 
வெறும் சத்தத்தாலே
எங்கள் சமர்கள் முடிக்கப்படும்.
வலுக்க உரைத்தவனே வல்லான்,
குறைவாய்க் குரைத்தவன் குறுகிப்போவான்.
 
குரலே என் ஆயுதம்.
என் உணவைத் தட்டிப்பறிக்க
மெக்ஸிகோ வரைபடமாய் வாய்பிளந்து நிற்கும்
பன்றிகள் இவ்வாயுதத்தின்
வீரியத்தின் வழிதவறி ஓடும்
காட்சி உண்ட களைப்பையே கூட
தந்ததுண்டு.
 
உணரப்பட்ட கோடுகளைத் தாண்டும்
துரோகிகளுக்கும்,
புணர வேறிடம் தேடும்
ஜோடிகளுக்கும்
என் குரல் நடுக்கம் தரும்.
 
துரத்தப்பட்ட நேரங்களில்
தூரம் சென்று
எதிரி இல்லாத இடம் தரும்
இதத்தில்
திரும்பிக் குரைக்கும்
குணம் என்னிடத்தில்
இருந்ததில்லை -
 
மனிதர்கள் என்னும் மரபணுக்குழப்பம்
நடந்திடாத வரையில்.
 
வளைகுடா வேங்கை கவிதைக்கோன்ஐஸ் பினாத்தல் (இளவஞ்சிக்கு நன்றியுடன்)
 

21 பின்னூட்டங்கள்:

Muthu said...

சிங்கங்கள்
உலவும் கானகத்தில்
சிறுநரி
நுழைந்து அடிபட்டு
பட்டு
வெளிவர வழிதேடி
உள்குத்துப்பட்டு
தடுமாறுகிறதே...
அய்யகோ..

மீண்டும் வருவேன்.

Anonymous said...

குருவைப் போற்றினார் கைவிடப்படார்.

மெச்சத்தகுந்த கவிதையை
உன் கவி
எச்சத்தால்
உச்சத்திற்குயர்த்தி
மெச்சத்தகுந்தவ்னாய் உயர்ந்தாய் சீடா!

நாய்படாத பாடுபடுகிறது
கவிதை
உன் கைகளில்

உன்னால் வாழுமோ
கவிதையினி
போடா!!


கவிமடத்தலைவன்
கவிப்பகைவன்

பொன்ஸ்~~Poorna said...

பினாத்தல்,
ஜுனூன் பாஷைல எழுத சொன்னாருங்க.. அந்த இலக்கணம் மிஸ்ஸிங்!!!
கொஞ்சம் புரியுது.. அதுனால, முதல் லெவல் கவிதன்னு வச்சிக்கலாமா?

Muthu said...

பினாத்தல்,
தலைப்பை தவறாகப் படித்துவிட்டு ஓடிவந்தேன், அப்படி என்ன தவறாய்ப் படித்தேன் என்கிறீர்களா? "..நானும் கவிப்பகைவனும் மற்றும் முத்து நாயும்..". ஒரு வேளை என்னைத்தான் திட்டியிருக்கிறீர்களோ என்று ஒரு கணம் நினைத்துவிட்டேன். :-)).

ramachandranusha(உஷா) said...

முத்து வீட்டுக்குப் போயி எங்கங்க உங்க நாயீ என்றுக் கேட்கிற அளவு முத்துவின் நாய் பிரபலம் அடைந்து விட்டதே !!!!!!!!!!!!!!!

பினாத்தலாரே! அது என்ன "மெக்சிகோ வரைப்படம் போல" அங்கிட்டு, தென் அமெரிக்கா சரிப்பட்டு வராது
:-))))))))))))))))

முத்து, ஐ மீன் ஆர்டினரி முத்து, தலைப்பு "முத்து நாய்" என்றிருந்ததா? ""முத்துவின் நாய்""
என்றிருந்ததா? அது சரி உங்க வீட்டுல நாய் இருக்கா :-))))))))))))))))

பொன்ஸ்~~Poorna said...

//முத்து, ஐ மீன் ஆர்டினரி முத்து, //

:))))))

//அது சரி உங்க வீட்டுல நாய் இருக்கா //

:-)))))))))))))))))))))

இலவசக்கொத்தனார் said...

யோவ் தமிழினி.

சும்மா இருக்காம ஒரு நாய் மேல கல்லெறிஞ்சு இன்னிக்கு தமிழ்மணம் பூரா ஒரு வாசம் வீசுதேய்யா.

இப்படி பண்ணிட்டீரே..

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க முத்து,

பயப்படாதீங்க! சிறுநரின்னெல்லாம் பயந்தா கானகத்துல வாழ முடியுமா?

மீண்டும் வாங்க, இந்தக்கவிதை தந்த அதிர்ச்சியிலே இருந்து மீண்டு வாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

குருவே!

வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி கிடைத்த மகிழ்ச்சி.

//உன்னால் வாழுமோ
கவிதையினி
போடா!!//

அதென்ன சந்தேகமாய் வாழுமோ எனக்கேட்கிறீர்கள்? வாழும் எனத் தைரியமாய் சொல்லுங்கள் ஆசான்.

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ் -

முதல் லெவலா?

எல்லா லெவலையும் தாண்டிய புனிதம் இது. உங்களுக்கு அர்த்தம் புரிகிறதா? அர்த்தங்களூக்குள் உள்ள அர்த்தங்களின் அர்த்தத்தையும் அறிந்துவிட்டீர்களா?

பினாத்தல் சுரேஷ் said...

ஜெர்மன் முத்து,

தெளிவா முத்துவின் நாய்னு இருக்கே தலைப்பில்! கவிதை புரிஞ்சுதா?

பினாத்தல் சுரேஷ் said...

உஷா,

நீங்கள் இரண்டு க்ளாஸ் வராததால் அந்த முக்கியமான பாடத்தைத் தவற விட்டுவிட்டீர்கள். மெக்ஸிகோ தான் பிளந்த வாய். தென் அமெரிக்காவை தொங்கும் நாக்குக்கு வேண்டுமானால் ஒப்பிடலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ்,

உஷாவுக்கு இந்த அளவுக்கு வெறிபிடித்த ரசிகையா நீங்கள்? தொடர்ந்து வந்து புகழாரம் சூட்டுகிறீர்களே:-))

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

இது மாதிரியெல்லாம் சொல்லி எனக்குள்ளே இருக்கிற கவிஞனை உசுப்பி விட்டுடாதீங்க. ஏற்கனவே பட்ட பாடு போதாதா?

நாய் மேல் விழுந்த கல்
நாளெல்லாம்
கவிதைகளாய் -னு ஹைக்கூ பாட ஆரம்பிச்சுடுவேன் - உஷார்!

VSK said...

உங்களுக்குள் ஒளிந்திருந்து ஒவ்வொன்றாய் வெளிவரும் திறமைகளைப் பார்க்க, கேட்க, படிக்க, மகிழ்வாய், பிரமிப்பாய் இருக்கிறது!

தமிழ்மணத்தில், நாய்மண[ன]ம் நன்றாகவே மணக்கிறது!

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா எஸ் கே!

எனக்குள்ளே திறமை வேற இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கீங்களே! அணுவுக்குள்ளே ஆற்றல் இருக்குன்ற கண்டுபிடிப்புக்கு எந்த விதத்திலும் குறையாத கண்டுபிடிப்பு சார் இது!

Geetha Sambasivam said...

ஆனாலும் வெயில் ஜாஸ்திதான். இருந்தாலும் இப்படியா? பாவங்க, நீங்க, வீட்டிலே பயந்துக்கப் போறாங்க.

Muthu said...

///முத்து, ஐ மீன் ஆர்டினரி முத்து, தலைப்பு "முத்து நாய்" என்றிருந்ததா? ""முத்துவின் நாய்""
என்றிருந்ததா? அது சரி உங்க வீட்டுல நாய் இருக்கா :-)))))))))))))))) ///

உஷா,
பின்னூட்டம் இட நினைத்துத் தனிப்பதிவாகவே பதிந்துவிட்டேன். ஆர்டினடி முத்து அப்படின்னு என்னைச் சலவைத்துணி ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே :-)).

நாமக்கல் சிபி said...

ஒண்ணுமே புரியலை உலகத்துல!

தருமி said...

இப்படியே போனா என்ன ஆகும்னு தெரியலையே...பாவம்..flash அது இதுன்னு கலக்கிக்கிட்டு இருந்த மனுஷன்... என்னத்த சொல்றது :-)

பினாத்தல் சுரேஷ் said...

என் மனநிலைக்கு கவலைப்பட்ட தருமி, கீதா, சிபி - நன்றீ.. ஆனால், இப்படிப்பட்ட கவிதைகளையே முழுநேரம் எழுதறாங்களே, அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்:-)

முத்து (ஜெர்மன் முத்துன்னு சொல்லணுமா, ஆர்டினரி முத்துன்னு சொல்லணுமா?) , உங்களுக்கு ஒரு சூப்பர் பதிவுக்கு மேட்டர் கிடைச்சுதா?

 

blogger templates | Make Money Online