Nov 13, 2006

வலைப்பதிவுகளில் Multiple Personality Disorder - என் இரண்டணா

So what! இதுதான் எனக்கு பெரும்பாலான "இவர்தான் அவர்" வகைப்பதிவுகளைப் படித்தவுடன் என் மனதில் எழும் எண்ணம்.

எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் சீஸனல் பதிவுகள் மட்டும் வந்தாலும், இப்படிப்பட்ட பதிவுகளுக்கு மட்டும் என்றுமே குறைச்சலே இருந்ததில்லை. சாம்பு ஆப்பு பார்டெண்டரில் தொடங்கி, சர்வ சமாதான வலைப்பதிவர்கள் (முத்து (தமிழினி)க்கு இப்பதத்துக்காக நன்றி) வரை இப்படிப்பட்ட பதிவுகளைப் போடுவதும், பின்னூட்டங்களில் ஆதாரங்கள் கேட்கப்படுவது, ஆதாரங்கள் அள்ளி வீசப்படுவது, மறுத்தல் பதிவுகள் என்று சம்மந்தப்பட்டவர்கள் பதிவிடுவது என்று ஜகஜோதியாக நடக்கும் இண்டஸ்ட்ரி இது!

முதலில் ஆதாரங்கள் - எனக்குத் தெரிந்த வரையில் ஐபி என்பது கம்ப்யூட்டரின் தனிப்பட்ட முகவரி என்கிறார்கள், பதிவுகளைப் பார்வையிடும் ஐபிகளைக் காட்டும் தளங்களும் நிரல்துண்டுகளும் ஏராளமாக உள்ளன, பின்னூட்டமிடுகையில் ஐபி காண்பிக்கும் வகையில் அடைப்பலகையை மாற்றவும் முடியும், சில வகை மின்னஞ்சல்களில் எங்கிருந்து வந்தது என்பதைக் காண்பித்து விடும் என்றெல்லாம் கூறப்பட்டாலும், இதை ஒரு முழுமையான ஆதாரமாகக் கொள்ள இயலாது என்பதும், இவை சம்மந்தமான பதிவுகளைப்படித்தே எனக்கு ஏற்பட்ட புரிதல்.

1. நண்பர்கள் மூலமாக வேறு ஐபியைக் காட்டவைக்க முடியும்.
2. பிராக்ஸி சர்வர்கள் மூலமாக ஐபியை மறைக்க முடியும்,
3. பயண நேரங்களில், வை-ஃபி ஹாட்ஸ்பாட்டுகளில் ஐபி மாறிக்கொண்டே இருக்கும்.
4. சில நிறுவனங்களில், தொழில் சார்ந்த காரணங்களுக்காக, வேறு நாட்டின் ஐபி கொண்ட இணையத் தொடர்பு இருக்கும். (நான் ஒருமுறை நடுக்கடல் எண்ணெய்க்கிணற்றுக்குச் சென்றபோது, நியூஸிலாந்து நாட்டு ஐபியில் இருந்தேன் - கிணறு கத்தாருக்கு அருகில் இருந்தது)
5. அமீரகம் போன்ற தேசங்களில் ஐபி நிரந்தரமாக மாறிக்கொண்டே இருக்கும்..

இப்படிப்பல காரணங்களால் ஐபி என்பதை சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவை எனக்கே (கம்ப்யூட்டர் கைநாட்டு (ட்ரேட்மார்க் துளசி அக்கா)) தெரிந்திருக்கையில், ஆதாரங்களை நோண்டித் தேடி எடுப்போருக்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், ஐபியை வைத்து "இவர்தான் அவர்" என்று சொல்ல அவர்களுடைய உறுதியான நம்பிக்கைகளும், "இந்தக் கருத்தை இவர்தான் கூறுவார்" என்ற முன்முடிவுகளும், பாதிக்கப்பட்டதற்கு பழிவாங்குதலும் காரணங்களாக இருக்கலாம்.

இதைத் தவறு என்று சொல்லவரவில்லை நான். இதன் மூலம் சாதிப்பது ஏதுமில்லை என்பதே நான் சொல்லவருவது. "இவர்தான் அவர்" என்ற சந்தேகம் உள்ளவர்கள் ஒத்துப்பாடலாம். சந்தேகம் இல்லாதவர் கூறியவர் மேல் கோபம் கொள்ளலாம். இரண்டுக்கும் இடையில் உள்ளோர் முதல்பக்கமோ இரண்டாம் பக்கமோ சாயலாம். ஆனால் மொத்தத்தில் வம்பு பேசியதைத் தவிர வேறெதுவும் சாதிக்கப்படவில்லை.

கீழ்த்தரமான தனிநபர் தாக்கு விமர்சனங்கள், ஆபாசப் புகைப்படங்கள்-விவரணங்கள் இருந்தாலே ஒழிய சைபர்கிரைம் இதில் தலையிடப்போவதில்லை. சட்டங்கள் இணையம் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் பல நாடுகளில் இன்னும் உருவாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன,முழுமை அடையவில்லை. அடையாளத்திருட்டும் ஆபாசமும் சம்மந்தப்பட்ட இடங்களிலேயே பலநாடுகள் சம்மந்தப்பட்டதாய் இருப்பதால் சட்டம் பெரிதாக எதையும் செய்யமுடியவில்லை என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மற்றபடி "இவர்தான் அவர்" என்று சொன்னவரும் சரி "இப்படிச்சொன்னதால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று சொன்னவரும் சரி, அந்தச் சவடால்களைத் தாண்டிப்பயணித்ததாக எனக்குத் தெரியவில்லை. (இன்றைய நிகழ்ச்சியைப்பற்றி மட்டும் கூறவில்லை, பழையவற்றையும் சேர்த்தே சொல்கிறேன்)

இரு பெயர்களில் பதியவேண்டிய அவசியம்?

பல காரணங்கள் இருக்கலாம். முதல் பெயரின் புனித பிம்பத்துவத்தைக் காப்பாற்ற இருக்கலாம். தன் கருத்து தாக்கப்படுவதைப் பொறுக்காமல் அதே நேரத்தில் பெயரையும் கெடுத்துக்கொள்ள விரும்பாததால் இருக்கலாம், உள்மன விகாரங்களை வெளிப்படுத்த இருக்கலாம், பழிவாங்க இருக்கலாம் - எதுவாக இருந்தாலும், அது அந்தத் தனிநபரின் பொறுப்பு. இரண்டு புனைபெயர்களை வைத்துக்கொண்டு இரு வேறு தொனிகளிலும் மொழிநடைகளிலும் பேசிக்கொண்டிருப்பவர்கள் புதிய விஷயமல்ல - கல்கி-கர்நாடகம்-எமன், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்-சுஜாதா, புஷ்பா தங்கதுரை-ஸ்ரீவேணுகோபாலன் என்று தமிழ் வெகுஜன எழுத்திலேயே உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. என்னைப்பொறுத்தவரை, தனிநபர் தாக்குதல், ஆபாசம் போன்ற எல்லைகள் மீறப்படாதவரையில் இதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டு பெயர்களை வெளிப்படுத்துவதும் வெளிப்படுத்தாததும் அவரவர் சொந்த முடிவுக்கு விட்டுவிடப்படுதலே நன்று.

ஆனால், ஆதாரங்களுடன் இவற்றை வெளிப்படுத்துவோர் பலர் முன்முடிவுகளோடே இருப்பதைப் பார்க்க முடிகிறது.

(ஒரு உதாரணத்துக்குச் சில பெயர்களைப் பயன்படுத்துகிறேன் - அவர்கள் கோபிக்கவேண்டாம்)

எங்கே பிராம்மணீய ஆதரவுக்கருத்து இருந்தாலும் திருமலை,(இவரை சில பின்னூட்டங்கள் தவிர வேறெங்கேயும் நான் படித்ததில்லை!) மாயவரத்தான் உள்ளிட்ட சில பெயர்களே முன்வைக்கப்படுகின்றன. அதேபோல எங்கே பார்ப்பன எதிர்ப்புக் கருத்து இருந்தாலும் போலி டோண்டு உள்ளிட்ட சில பெயர்களே.

இவர்களைத் தவிர அந்தந்தக் கருத்து கொண்டவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது என்பது எவ்வளவு அபத்தம்? அதுவும் முழுக்க நம்ப முடியாத ஐபி, வார்த்தைக்கோர்வைகள் போன்ற ஆதாரங்களை முன்வைத்து எனும்போது?

மற்றபடி இவற்றை விவாதிப்பதால் நமது வம்பு பேசும் மனப்பான்மைக்கு பொழுதுபோகிறதே ஒழிய வேறு பிரயோஜனம் இல்லை.

வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா?

37 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் said...

//ஒருமுறை நடுக்கடல் எண்ணெய்க்கிணற்றுக்குச் சென்றபோது,
நியூஸிலாந்து நாட்டு ஐபியில் இருந்தேன் - கிணறு கத்தாருக்கு அருகில் இருந்தது) //

அட! இவ்வளவு தூரம் வந்துட்டு(!!!) ஒரு வார்த்தையும் சொல்லாமப் போயிருக்கீங்க? :-)))))
அடுத்தமுறை வரும்போது கண்டுக்கிணு போகணும், ஆமா:-))))

பொன்ஸ்~~Poorna said...

//என்னைப்பொறுத்தவரை, தனிநபர் தாக்குதல், ஆபாசம் போன்ற எல்லைகள் மீறப்படாதவரையில் இதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டு பெயர்களை வெளிப்படுத்துவதும் வெளிப்படுத்தாததும் அவரவர் சொந்த முடிவுக்கு விட்டுவிடப்படுதலே நன்று.//

அவ்வளவுதாங்க சுரேஷ், சரியாச் சொன்னீங்க.. இதே தான் என் எண்ணமும்..

//ஆனால் மொத்தத்தில் வம்பு பேசியதைத் தவிர வேறெதுவும் சாதிக்கப்படவில்லை//
வர வர வலைப்பதிவுகளே வம்புமடங்களாப் போய்கிட்டிருக்கு!

இவர் தான் அவர், அவர் தான் இவர்னு பதிவு போடுறவங்களையும் குறை சொல்ல முடியாது. அப்படித் தானே ஹிட்ஸ், பின்னூட்டம் அதிகப்படுத்த முடியுது இப்போவெல்லாம்! எழுத வேற எதுவும் கிடைக்கலைன்னா ஜல்லி தான்.. (ஆமா, நீங்க தான் இட்லிவடைன்னு யாரோ சொன்னாங்க! அதனால தான் அவர் பெயரை லிஸ்ட்ல சொல்லாம விட்டுட்டீங்களா? ;) )

Anonymous said...

//வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா?//

வம்பு பேசுறதை விட வேற வேலை உமக்கு என்னய்யா இருக்கு?

சாத்தான்குளத்தான்

பினாத்தல் சுரேஷ் said...

அக்கா.. அந்தக்கடலுக்குப் பக்கத்திலேயா நீங்க இருக்கீங்க? தெரிஞ்சிருந்தா நீஞ்சியாவது வந்திருப்பேனே!

பொன்ஸ்.. இட்லிவடை நான் தான்னு புதுசா ஒரு வம்பைக் கொளுத்திப் போடறீங்களா?

குரு!. தொழில் ரகசியத்தை வெளிய சொல்லலாமா?

பினாத்தல் சுரேஷ் said...

தலைப்பை மாத்தினா புதுசா தமிழ்மணத்திலே வருதுங்கண்ணா.. முன்னூட்டக்கயமைன்னு இதைச் சொல்லலாமா?

லக்கிலுக் said...

//இட்லிவடை நான் தான்னு புதுசா ஒரு வம்பைக் கொளுத்திப் போடறீங்களா?//

அது பழைய வம்பு தான் :-)

பினாத்தல் சுரேஷ் said...

லக்கி.. வாங்க வாங்க..

//பழைய வம்புதான்// அப்போ நான் தான் அவுட் டேட்டடா? இப்படியெல்லாம் யாருப்பா கிளப்பி வுடறது?

லக்கிலுக் said...

//தலைப்பை மாத்தினா புதுசா தமிழ்மணத்திலே வருதுங்கண்ணா.. முன்னூட்டக்கயமைன்னு இதைச் சொல்லலாமா?//

அப்படியா மேட்டரு. இனிமே பூந்து வெளையாடிர்றோம்

Anonymous said...

:)

Ellam Saridhaan...

But innaikku matter-ae vera.

3-m orae aaludhangiradhukku valuvaana aadhaaram irukku. adhu sambanthappatta aalukkum theriyum

பினாத்தல் சுரேஷ் said...

ஷார்ப்பா இருக்காங்கப்பா! கண்டுபிடிக்கறது நானாம், காபிரைட் இல்லாம உபயோகப்படுத்தறது இவங்களாம்!

இந்த மெத்தடை உப்யோகிப்பவர்கள், பினாத்தலில் இரண்டு பின்னூட்டம் தண்டம் கட்டிவிட்டுச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

வலுவான ஆதாரத்தையெல்லாம் வச்சுகிட்டு என்னதான் பண்ணப்போறீங்க? உங்க பேரையே சொல்ல மாட்டேங்கறீங்க!

இலவசக்கொத்தனார் said...

MPD அப்படின்னு பேரு வெச்சா ரெண்டு முறை தமிழ்மணத்தில கூட வருது!

//இந்த மெத்தடை உப்யோகிப்பவர்கள், பினாத்தலில் இரண்டு பின்னூட்டம் தண்டம் கட்டிவிட்டுச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.//

கேட்கறதுதான் கேட்கறீங்க. ரெண்டே ரெண்டு பின்னூட்டமா கேட்கறது? முதல்ல பெருசா சிந்திக்க கத்துக்கோங்கப்பா.

என்னது, பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்லலையா? ஆமாய்யா. நான் வாயைத் திறந்தாலே புனித பிம்பப், சமாதான இம்சை அப்படின்னு எல்லாம் பக்கத்துல நின்னு பேசிடறாங்க. அதான் எதுக்கு சொ.செ.சூ. அப்படின்னு....

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கொத்தனார்..

இரண்டே பெறுக, இனிமையாய் வாழ்க பிரச்சார காலத்தில் பிறந்தவன் நான்.

நீங்க இவ்வளவு பயந்த சுபாவமா:-)

Anonymous said...

பிறப்பு சான்றிதழ காட்டுன்னு அடையாளங்கேட்டுட்டு இங்க வந்து 'பேஷ்... பேஷ்.... ரொம்ப நன்னா இருக்கு'ன்னு சொல்றதுக்கு பேர்தான் multiple split personalityயா?

பினாத்தல் சுரேஷ் said...

கொட்டாங்கச்சி,

இங்கே யாரும் (இன்னும்) பேஷ் பேஷ் சொல்லவே இல்லையே..

நீங்க எதையோ தப்பா புரிஞ்சிகிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். சம்மந்தப்பட்ட பதிவுகளை இன்னொரு முறை படிச்சுப்பாருங்க.

Anonymous said...

அது வேற.... அதுக்கெல்லாம் உங்களுக்கு luck வேணும்.

பினாத்தல் சுரேஷ் said...

சரி கொட்டாங்கச்சி.. இதுவரை தனிநபர் தாக்குதல் இல்லைன்னு நினைக்கிறேன். இருக்கறதா சம்மந்தப்பட்டவங்க கருதினால் அழித்துவிடுவேன், தப்பா நெனச்சுக்காதீங்க!

Anonymous said...

No problem

Unknown said...

இதுல செம காமெடியான பதிவுகள் சில இருக்கு அதுல உங்களோட IPஜ போட்டு உங்க ஊரை போட்டு அங்க இருந்து வந்து இருக்கிங்க வாங்க அப்படின்னு போடுவாங்க. அவங்களுக்கு நாங்க எங்க இருந்து வருகிறோம் அப்படின்னு தெரிஞ்சி போச்சாம் நம்மளை பயமுறுத்துறாங்களாம் :)) ஓரே காமெடி தான் போங்க.

பினாத்தல் சுரேஷ் said...

புரிதலுக்கு நன்றி கொட்டாங்கச்சி.

சந்தோஷ், இது வந்து

"நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை" போலதானாமே! முதல்லே நான் கூட சர்தார்ஜி ஜோக்கு மாதிரி பயந்தேன்.

கால்கரி சிவா said...

எனக்கு புரியாத ஒன்று :

ஒருவரின் கருத்தை பிடிக்கவில்லையென்றால் எதிர் கருத்து வைக்கலாம். இல்லையேல் அவரை நேரடியாக திட்டலாம் சொந்தபெயரில். அதோட முடிந்தது கணக்கு. அதைவிட்டு பற்பல பெயரில் வந்து திட்டி அதை ஊதி ஊதி பெருசாக்கி எதை சாதிக்க போகிறார்கள். திட்டுபவர்களையும் திட்டு வாங்குபவர்களின் புலம்பல்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்

பினாத்தல் சுரேஷ் said...

நீங்க சொல்றதும் சரிதான் கால்கரி சிவா.

Anonymous said...

கல்காரி சிவா,
பிரச்சனையே சொந்தப் பெயர்னு எத சொல்றீங்கறதுதான். இப்ப நான் 'டொராண்டோ முருகன்னு' நீங்க இப்பதைக்கு காட்டுற அத்தன ஆதாரத்தையும் காமிக்க முடியாதா?

மத்தபடி நீங்க யார எங்க திட்டுறீங்க, திட்டு வாங்கறீங்கங்கற ஆட்டத்துக்குள்ள நான் வரல...

மு.கார்த்திகேயன் said...

சுரேஷ், எல்லாவற்றையும் ஆதரிக்க சில பேர் எப்பவும் இருப்பார்கள்.. ஆனால் அவர்கள் தங்கள் எண்ணத்தை வெளியில் சொல்வார்களா என்பது கஷ்டமே.. அதனால், மறைமுகமாக இந்த மாதிரி பெயர்களில் அவர்கள் தலை காட்டலாம்

ஞானவெட்டியான் said...

அன்பின் சுரேஷ்,
அவரவர் மானம் மரியாதை காக்கப்படவேண்டுமெனில் தமிழ்மணத்துக்குள் வராமல் இருந்தால்தான் முடியும் என்னும் நிலை வந்தாகிவிட்டது. என்ன செய்ய?

பினாத்தல் சுரேஷ் said...

நீங்கள் சொல்வது சரிதான் கார்த்திகேயன் முத்துராஜன். அந்த வசதி சில நேரங்களில் தேவைப்படுவது உண்மைதான். அத்துமீறியோ ஆபாசமாகவோ பயன்படுத்தாத வரை தவறில்லை என்றே நினைக்கிறேன்.

ஞானவெட்டியான், ஒன்றிரண்டு பூச்சிகளுக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா? அப்படியெல்லாம் நிலைமை மோசமில்லை என்றே நான் கருதுகிறேன்.

Anonymous said...

நீங்களா விருப்பப்பட்டு கொடுக்காட்டி உங்க மரியாதய யாராலும் ஒன்னும் செய்ய முடியாதுன்னு மோகன் தாஸ் சொல்லியிருக்காருங்க

பினாத்தல் சுரேஷ் said...

அப்படீங்களா கொட்டாங்கச்சி? எங்கே? லின்க் தரீங்களா?

Anonymous said...

இதுக்கெல்லாம் லிங்க் வச்சிகிட்டா அலையமுடியும். இதெல்லாம் ஞானம்.. தன்னால வந்து கொட்டனும்.
ஆனா நாஞ்சொல்றது உம்மதாங்க. வேணும்னா தேடிப்புடிச்சி படிச்சுக்குங்க...

கால்கரி சிவா said...

கொட்டங்கச்சி,

என்னை நேரில் பார்த்தவர்கள் பலர், என்னுடன் போனில் பேசியவர் பலர்.
ஒருவன் திருட்டு தொழில் செய்து பணக்காரன் ஆனால் அவனைப்பார்த்து எல்லாரும் திருடனாய் மாறனும் என்பது நியாயமில்லை

Anonymous said...

www.pinellas.k12.fl.us/SDFS/files/1BDEBCA632064CC9B5A1E4B4816BA7BF.pdf

Anonymous said...

Have you got the link?

பினாத்தல் சுரேஷ் said...

கொட்டாங்கச்சி.. ஆடிப்போயிட்டேன் உங்க லின்க்கைப் பாத்துட்டு. நான் வலைப்பதிவர் மோகன் தாஸுன்னுதான் நெனச்சேன்:-))

மீண்டும் வருகைக்கு நன்றி கால்கரி சிவா.

பொன்ஸ்~~Poorna said...

//கொட்டாங்கச்சி.. ஆடிப்போயிட்டேன் உங்க லின்க்கைப் பாத்துட்டு. //
நானும் ஆஆஆடிப் போய்ட்டேன் (நல்ல வேளை சுத்தி வரும் சுண்டெலி வாலிழையில் உயிர் தப்பியது. யாரும் கவலைப்பட வேண்டாம் ;) )

//நான் வலைப்பதிவர் மோகன் தாஸுன்னுதான் நெனச்சேன்:-))
//
நானும் அதே மாதிரி தான் நினைச்சேன்.. :))))
ஓஒகே..

*** வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா? ***

பினாத்தல் சுரேஷ் said...

ஆச்சரியம்தான் இல்லே, பொன்ஸ்?

தகடூர் கோபி(Gopi) said...

//வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா?//

சரியாச் சொன்னீங்க‌.

அது சரி, கொட்டாங்கச்சி கொடுத்த சுட்டியில கடைசி கருத்தை சொன்ன‌வரும் ஏறகுறைய அதே மாதிரி சொல்லியிருக்கிறார் பாத்தீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

அட! ஆமாம் கோபி.. பொதுவா இந்தப் பொன்மொழிகள் எல்லாம் உண்மைதானா இல்லை கட் & பேஸ்ட்டான்னு ரொம்ப நாளா சந்தேகம் எனக்கு.

 

blogger templates | Make Money Online