Nov 30, 2006

பிரம்மாண்ட பினாத்தல் கருத்து கணிப்பு

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறேன் என நினைத்தாலும் சரி, ரொம்பநாளா நினைப்பில் இருந்த ஒரு கருத்துக் கணிப்பை இப்போது நடத்திவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். இப்போது போடுவதால் அதிகப் பேரால் கவனிக்கப்படலாம் என ஒரு நப்பாசைதான்!

பொதுவாக கருத்துக் கணிப்புகள் எப்படிப்பட்ட முடிவைத்தரவேண்டும் என நடத்துபவர் எதிர்பார்க்கிறார் என்பதை தெரிவுகளின் மூலமே கண்டுகொள்ளலாம். நான் அடிக்கடி நடத்தும் ஸ்டண்ட்தான் இது:-)

உதாரணம் - என் வகுப்பு எப்படி இருந்தது?

அ - நன்றாக ஆ - மிக நன்றாக இ - அற்புதம்!

இப்போது, கணிப்புக்கு போகலாமா?


பினாத்தல் கருத்துக் கணிப்புபினாத்தலார் கருத்துக் கணிப்பு நடத்தலாமா?


காசா பணமா - நடத்தேன்!
உனக்கு என்ன தகுதி?
இதெல்லாம் ஒரு கேள்வி!
யாருடா இதை ஆரம்பிச்சது?

Current Resultsஎப்படி பதிவுகளின் போதே வேறு அவ்சர வேலைகளால் உள்ளே நுழைய முடியவில்லை! இப்ப மாட்டினீங்களா?

19 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ரொம்ப முக்கியம் இப்போ!

நடத்தித் தொலையேன்

- கருத்துக் கணிப்புகளை வெறுப்பவன்!

பினாத்தல் சுரேஷ் said...

அடாடா!

இது ஒரு ஆப்ஷன் விட்டுப்போச்சா?

சாரி திரு க க வெ!

செந்தில் குமரன் said...

///
காசா பணமா - நடத்தேன்!

உனக்கு என்ன தகுதி?

இதெல்லாம் ஒரு கேள்வி!

இதெல்லாம் ஒரு கேள்வி!
///

:-DDDDDDDDDDDDDDDDDDDDDDDD

G.Ragavan said...

ஓட்டுப் போட்டாசுங்க. சன"நாய"க உரிமைன்னு சொல்றாங்களே..அது இதுதான்னா அத விட்டுக் குடுக்க முடியுங்களா! :-)))))))))))))))))

தேவ் | Dev said...

யப்பா சாமீ இது ஓலக மகா கருத்து கணிப்புப்பா நல்லா நடத்துங்க

இலவசக்கொத்தனார் said...

என் கடமையை (சரியா படிங்க, மடமைன்னு படிச்சிட போறீங்க)நிறைவேத்தியாச்சு.

ஆன்லைன் ஆவிகள் said...

இன்னொரு ஆப்ஷன் விட்டுப் போயிற்று!

நீர் நடத்தினால் நாங்க வந்து ஓட்டுப் போட்டுடணுமா? எவ்ளோ தருவீர் ஒரு ஓட்டுக்கு?

ஆன்லைன் ஆவிகள் said...

Two More Options To Be Added.

1. All The Above
2. None Of the Above

ஆன்லைன் ஆவிகள் said...

2. வெடிவேலு!

பினாத்தல் சுரேஷ் said...

செந்தில் குமரன் - ரெண்டு முறை காபி பேஸ்ட் பண்ணியிருக்கிறதுதான் உங்க கருத்துன்னு வலையுலகம் எடுத்துக்கலாமா?

ராகவன், தப்பான இடத்தில மேற்கோள் போட்டுட்டீங்க அது சன"நாயக".. எங்கே சொல்லுங்க - சன"நாயக".. சன"நாயக":-))

தேவ், எதுக்கு ஒட்டுப்போட்டீங்கன்னு நேரடியாவே கேட்டுடட்டுமா இல்ல தேவ் எதற்கு ஓட்டுப்போட்டிருப்பாருன்னு ஒரு கருத்துக்கணிப்பு ஆரம்பிக்கட்டுமா;-))

கொத்தனாரே! கடமையில சிங்கமே! எங்கள் தங்கமே -- வாழ்க நீ பல்லாண்டு!

பினாத்தல் சுரேஷ் said...

ஆவி,

காதோட வைச்சுக்குங்க, ஒரு தொழில் நுணுக்கம். இந்த all of the above, none of the above எல்லாம் இருந்தால் பெரும்பாலானவர் உடனே தேர்ந்தெடுப்பது அதைத்தானாம். Multiple Choiceகேள்வித்தாளா இருந்தா, இந்த ரெண்டு சாய்ஸும் இருந்தா, 95% சரியான விடை இதுல ஒண்ணுதானாம்.

இன்னொரு தொழில்நுணுக்கமும் சொல்லிடறேன். யாராவது amateur கேள்வித்தாள் தயார் பண்ணா, multiple Choice கேள்விகள் பெரும்பாலும் (85%) ஆப்ஷன் சிதான் சரியா இருக்குமாம்.
விடை ஷ்யூராத் தெரியாதப்போ "சி"யைத் தேர்ந்தெடுப்பது உத்தமமாம்!

ஏன் உங்ககிட்டே சொல்றேன்னு கேக்கறீங்களா? நீங்க எங்கே இனிமே எக்ஸாமா எழுதப்போறீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

ஓட்டுக்கு எவ்ளோ தருவேன்னா கேக்கறீங்க? எவ்ளோ டிப்ஸு தந்திருக்கேன் பாருங்க!

பொன்ஸ்~~Poorna said...

//காதோட வைச்சுக்குங்க, ஒரு தொழில் நுணுக்கம். இந்த all of the above, none of the above எல்லாம் இருந்தால் பெரும்பாலானவர் உடனே தேர்ந்தெடுப்பது அதைத்தானாம். Multiple Choiceகேள்வித்தாளா இருந்தா, இந்த ரெண்டு சாய்ஸும் இருந்தா, 95% சரியான விடை இதுல ஒண்ணுதானாம்.

இன்னொரு தொழில்நுணுக்கமும் சொல்லிடறேன். யாராவது amateur கேள்வித்தாள் தயார் பண்ணா, multiple Choice கேள்விகள் பெரும்பாலும் (85%) ஆப்ஷன் சிதான் சரியா இருக்குமாம்.
விடை ஷ்யூராத் தெரியாதப்போ "சி"யைத் தேர்ந்தெடுப்பது உத்தமமாம்!
//

பதிவை விட உபயோகமான பின்னூட்டம்.. பின்னூட்டத்துக்கு நன்றி.. இன்னும் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் சின்னப் பெண்ணான(::))) எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

பினாத்தல் சுரேஷ் said...

//பதிவை விட உபயோகமான பின்னூட்டம்.. பின்னூட்டத்துக்கு நன்றி.//

என்ன! பதிவு உபயோகம் இல்லையா! என் கோடானுகோடி ரசிகர்கள் இதைப்பார்த்து கொத்திதெழும் முன்னர் அழித்தெழுது தோழி!

பினாத்தல் சுரேஷ் said...

என்னதிது? கமெண்ட் எண்14 அப்டேட் ஆகவே இல்லை?

மு.கார்த்திகேயன் said...

என்னது இது எங்கே போனாலும் இதே மாதிரி..

பெத்த ராயுடு said...

//என்னதிது? கமெண்ட் எண்14 அப்டேட் ஆகவே இல்லை?//

பதினாறாவது ஆவுதான்னு பாருங்க...

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கார்த்திகேயன்! அவங்கள் நிறுத்தச் சொல்லுங்க! நான் நிறுத்தறேன்.

பெத்த ராயுடு! தாங்க்ஸ்! ஆதே மாதிரி 116 கூட அப்டேட் ஆகலை;-))

தொழில்நுட்ப விரும்பி said...

//என்ன! பதிவு உபயோகம் இல்லையா! என் கோடானுகோடி ரசிகர்கள் இதைப்பார்த்து கொத்திதெழும் முன்னர் அழித்தெழுது தோழி!
//

உண்மையைச் சொன்னா இப்படித்தான்!

 

blogger templates | Make Money Online